Saturday, May 30, 2009

++ இரகசியமாக கண்காணிக்க புதிய வயர்லஸ் கமரா....!


இப்போது நீங்கள் யாரையாவது ரகசியமாக அவருக்கு தெரியாமல் அவருடை நடவடிக்கையை கண்காணிக்க வேண்டுமா? இதோ வந்துவிட்டது ஒயர்லெஸ் வீடியோ கேமரா. இதன் மூலம் நீங்கள் எங்கிருந்தபடியும் கண்காணிக்கலாம். தேவைப்பட்ட இடத்தில் பசை போட்டு, இந்த கேமராவை ஒட்டி விட்டால் மட்டுமே போதுமானது.

நெட்வொர்க் வசதி மூலம், எங்கிருந்தும் வீடியோவில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க முடியும். நவேடாவில் உள்ள லாஸ் வேகாசில் நடந்த நுகர்வோர் எலக்ட்ரானிக் கண்காட்சியில், இந்த நவீன வீடியோ கேமரா காட்சிக்கு வைக்கப்பட்டது.

இந்த கேமராவைப் பயன்படுத்துவோர், எங்கிருந்தபடியும், தங்கள் குடும்பத்தில், நிறுவனத்தில் நடப்பவற்றை கண்காணிக்க முடியும். தற்போது, சோதனை முறையில் பரிசோதிக்கப்பட்டு வரும் இந்த கேமரா, இன்னும் ஆறு மாதத்தில் வர்த்தக ரீதியாக விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

இந்த கேமராவின் தொழில் நுட்ப முறை, 'அவாக்' என்று அழைக்கப்படுகிறது. இந்த கேமரா மிகவும் சிறிய வடிவிலானது; பேட்டரியில் செயல்படக் கூடியது. ஒயர்லெஸ் வீடியோ கேமராவாகவும், புகைப்படக் கருவியாகவும் இதை பயன்படுத்தலாம். இதை சுவர்களிலோ, வேறு இடங்களிலோ பசை போட்டு ஒட்டி வைத்து விட்டால் போதுமானது.

இணைய தளத்தின் அடிப்படையில், இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளைக் கண்காணிக்க முடியும். இதை தினமும், 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும் என்பது இன்னொரு சிறப்பம்சம். இதை பொருத்துவது மிக மிக எளிதானது. இதை பொருத்துவதற்கு ஒயர்கள் தேவையில்லை; புதிதாக சாப்ட்வேர் இணைக்கத் தேவையில்லை.

++ எப்போ வரும் விண்டோஸ் 7...?


அதோ இதோ என்று பலமுறை ஒத்தி போடப்பட்ட மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் இந்த ஆண்டில் நிச்சயம் வர இருக்கிறது. சோதனைக்கு அனுப்பப்பட்ட இதன் சில பதிப்புகளை இயக்கிப் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. தற்போது நடைமுறையில் உள்ளதாகக் கருதப்படும் விண்டோஸ் விஸ்டா பல நிலைகளில் தோல்வியைச் சந்தித்ததனால் அதன் குறைகளை நிவர்த்தி செய்திடுமா என்ற நோக்கிலேயே விண்டோஸ் 7 இயக்கிப் பார்க்கப்பட்டது. இருப்பினும் விண்டோஸ் 7 தொகுப்பின் இறுதிப் பதிப்பு இன்னும் கிடைக்கவில்லை என்பதால் இதன் புதிய பரிமாணங்கள் சிலவற்றை மட்டும் இங்கு பார்க்கலாம்.

ஒரு பக்கம் விண்டோஸ் விஸ்டாவின் குறைகள். இன்னொரு பக்கம் நாள் தோறும் ஏதேனும் புதிய வசதிகளைத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் லினக்ஸ்சிஸ்டம் என்ற நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் விண்டோஸ் 7 தொகுப்பை மிகச் சிரமப்பட்டு பல கூடுதல் வசதிகளைத் தர முயற்சித்திருப்பது நன்கு தெரிகிறது.

முதலில் நமக்கு வித்தியாசமாகத் தெரிவது விண்டோஸ் டாஸ்க்பார் தான். இதனை முழுவதுமாக மாற்றி இருக்கிறார்கள். இதில் தற்போது எந்த டெக்ஸ்ட்டும் காணக் கிடைக்காது. ஒரு அப்ளிகேஷன் புரோகிராமின் ஐகானை இங்கு நிறுத்தி வைக்கலாம். இந்த புரோகிராம் இயங்காத நிலையிலும் இது காட்டப்படுகிறது. இதனைக் கிளிக் செய்து புரோகிராம் மற்றும் அதன் டாகுமெண்ட்களைப் பெறலாம். இதைத் தானே குயிக் லாஞ்ச் பார் செய்கிறது. பின் ஏன் இந்த வசதி டாஸ்க் பாரில் தரப்பட்டுள்ளது? ஆம், இது சற்று குழப்பத்தினையே தருகிறது. ஏனென்றால் குயிக் லாஞ்ச் பாரும் வலக்கம்போல் இடது பக்கத்தில் இதே வகையில் செயல்படுகிறது.

டாஸ்க் பார் அருகே கர்சரைக் கொண்டு சென்றால் இயங்கும் புரோகிராம்களின் தம்ப் நெயில் படங்கள் காட்டப்படுகின்றன. இந்த வகையில் காட்டப்படும் பிரிவியூ காட்சிகள் நமக்கு வழி காட்டுகின்றன. ஆனால் சில வேளைகளில் ஒரு சிறிய பைலை இயக்க திரை முழுவதும் சுற்றி வர வேண்டியுள்ளது. அடுத்த மாற்றம் நோட்டிபிகேஷன் ஏரியாவில் தரப்பட்டுள்ளது.

முன்பு இங்கு இயங்கும் அப்ளிகேஷன்களின் அனைத்து ஐகான்களும் காட்டப்பட்டு வந்தது. ஆனால் இப்போது நீங்கள் அனுமதிக்கும் ஐகான்கள் மட்டுமே காட்டப்படும். மேலும் இங்கிருந்தே நெட்வொர்க் கனெக்ஷன்களை எளிதாக நிர்வகிக்க முடிகிறது. விண்டோ ஒன்றினை மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக இழுத்தாலே அது மினிமைஸ் ஆகிறது. பக்க வாட்டில் இழுத்தால் அது பெரிய செவ்வகமாக திரையில் நிற்கிறது. விண்டோவின் டைட்டில் பாரினை ஷேக் செய்து மினிமைஸ் மற்றும் ரெஸ்டோர் செய்திடலாம்.

அப்ளிகேஷன் ஒன்றின் ஷார்ட் கட் ஐகானின் அம்புக்குறியைக் கிளிக் செய்தால் அதற்கென ஒரு ஜம்ப் லிஸ்ட் கிடைக்கிறது. இதிலிருந்து அண்மையில் பயன்படுத்தப்பட்ட அந்த அப்ளிகேஷனின் பைல்களுக்கு ஜம்ப் செய்து போகலாம். பயன்படுத்திய போல்டர்களுக்கும் செல்லலாம். வெகுநாட்களாக எந்தவித மாற்றமும் இல்லாமல் நமக்குக் காட்டப்பட்டு வந்த கால்குலேட்டரில் தற்போது பல்வேறு மாற்றங்கள் தரப்படுகின்றன.

யூனிட் கன்வெர்டர், புள்ளிவிவரங்கள் அமைப்பு, லோன் திரும்ப செலுத்துதலைக் கணக்கிடுதல், எரிபொருள் கணக்கிடுதல், சம்பளத்தினை மணிக்கணக்கில் கணக்கிட்டுப் பார்த்தல், இரண்டு தேதிகளுக்கு இடையே எத்தனை நாட்கள் எனக் கணக்கிடுதல் எனப் பல்வேறு புதிய பயனுள்ள அம்சங்கள் கொண்டு வருகிறது. எனவே கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் இதனை எப்போதும் இயக்கிய நிலையில் மினிமைஸ் செய்து தயாராய் வைத்தே கம்ப்யூட்டரை இயக்குவார்கள் என்பதில் மாற்றமில்லை.

விண்டோஸ் எக்ஸ்புளோரரில் நிறைய மாற்றங்கள் தெரிகிறது. இதன் பக்கவாட்டு பார்கள் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளன. டாகுமெண்ட் போல்டருக்குப் பதிலாக லைப்ரரீஸ் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட வகையில் (டைப் – வேர்ட், ஜேபெக், எம்பி3 ..போல) அமைக்கப்பட்ட பைல்கள் அனைத்தையும் வரிசையாகக் காணலாம். அதே போல ஒரு பைலை உருவாக்கியவர், தேதி, ரெசல்யூசன் போன்றவற்றின் அடிப்படையிலும் வகைப்படுத்திக் காணலாம்.

கண்ட்ரோல் பேனலும் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. புதிய வகையில் ஒரு ஆர்டர் தெரிகிறது. ஆனால் தற்போது அனைத்து அப்ளிகேஷன்களும் காட்டப்படுவதால் லிஸ்ட்டில் ஒன்றை தேடிச் செல்வது சிறிய பயணம் போல் அமைகிறது.விண்டோஸ் மீடியா பிளேயர் தன் பதிப்பு 12க்கு இதன் மூலம் செல்கிறது. ஊடுறுவிச் செல்லும் திரை போல நமக்கு இதன் செயல்பாடு காட்டப்படுகிறது. நெட்வொர்க் இணைப்பிலும் சிறப்பாகச் செயல்படுகிறது. மொத்ததில் மல்ட்டிமீடியா பிரியர்களைக் கவரும் பல அம்சங்கள் இதில் உள்ளன.

சோதனைப் பதிப்பு என்பதால் முழுமையாக உள்ளே சென்று இதன் அம்சங்களைக் காண முடியவில்லை. இருப்பினும் மேலும் சில புதிய அம்சங்களை இங்கு சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன்.

* புளு ரே டிஸ்க்குகளில் எழுதவும் படிக்கவும் வசதி தரப்பட்டுள்ளது.

* புளுடூத் 2.1 சாதனங்களுக்கு ஆடியோ வினை மாற்றும் வசதி

* ரிமோட் கம்ப்யூட்டிங் வசதி அதிகரிக்கப்பட்டுள்ளது; எளிமையாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தும் உங்கள் கம்ப்யூட்டரின் டெஸ்க் டாப்பினை நீங்கள் பார்வையிட்டு இயக்கலாம்.

* கம்ப்யூட்டர் பூட் செய்வதும் ஷட் டவுண் செய்வதும் மிகவும் குறைந்த நேரத்தில் அமைகிறது. இது நிச்சயமாய்ப் பலருக்கு சந்தோஷத்தினைத் தரும்.

*அதே போல யூசர் அக்கவுண்ட்டினை இயக்குவதும் எளிதாக்கப்பட்டுள்ளது.

* விண்டோஸ் கீயுடன் ப்ளஸ் கீயை அழுத்த அழுத்த மேக்னிபையர் கிடைத்து விண்டோஸ் விரிகிறது.

* பென்டிரைவ், கேமரா போன்ற இணைத்து எடுத்துவிடுகின்ற சாதனங்களை கம்ப்யூட் டரிலிருந்து எடுப்பதற்கு டிவைஸ் ஸ்டேஜ் என்று ஒரு தளம் தரப்படுகிறது. இதன் மூலம் இவற்றை எடுப்பது எளிதாக்கப்பட்டுள்ளது.

* ஜி.பி.எஸ். சென்சாருக்கு சப்போர்ட் தரும் வகையில் தொழில் நுட்பம் அமைந்துள்ளது.

* பேக்கப் மற்றும் ரெஸ்டோர் விஷயங்களில் மேலும் மெருகூட்டப்பட்டுள்ளது.

* விர்ச்சுவல் ஹார்ட் டிரைவ் சப்போர்ட் தரப்படுகிறது.

++ விளம்பரத்தில் நடிக்கும் தமிழ் சினிமா நடிகைகளின் சம்பளம்!!!

விளம்பர படங்களுக்கென்று தனி நடிகைகள் இருந்த காலம் மாறி, சினிமா நடிகைகளை பயன்படுத்தும் வழக்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. அடிக்கடி தொலைக்காட்சியில் இடம் பெறும் வாய்ப்பு, குறைந்த நாள் வேலை, தொடர்ந்து டி.வியில் ஒளிபரப்பாவதால் மக்கள் மனதில் தங்கள் முகம் பதியும் என்ற நிலை இவற்றால் ஆரம்ப காலத்தில் நடிகைகள் விளம்பர படங்களில் நடிக்கத் தொடங்கினார்கள்.


இதனால் அவர்களுக்கு ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை கூடுதல் வருமானமும் கிடைத்தது. ஆனால் இப்போது விளம்பர படங்களில் நடிப்பது வருமானத்தை பெருக்கும் வழியாக மாறியிருக்கிறது. இதனால் முன்னணியில் இருக்கும் நடிகைகள் காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளும் வகையில் அதிக விளம்பர படங்களில் நடித்து வருமானத்தை பெருக்க ஆர்வமாக இருக்கிறார்கள்.

சினிமாவில் நடிகர்கள் மட்டுமே கோடி கணக்கில் சம்பளம் பெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு முதல் நடிகைகளும் கோடிக் கணக்கில் சம்பளம் பெறுகிறார்கள். அசின், நயன்தாரா, இலியானா ஆகியோர் தற்போது கோடியை தாண்டி சம்பளம் பெறும் தமிழ் நடிகைகள்.

திரைப்படங்களில் நடிக்க சம்பளத்தை உயர்த்தியதைப் போலவே விளம்பர படங்களில் நடிக்கவும் தற்போது சம்பளத்தை உயர்த்தி விட்டார்கள். ஒரு விளம்பர படத்தில் 3 நாட்கள் வரை நடித்து கொடுக்க ஸ்ரேயா, சினேகா ஆகியோர் ரூ.20 லட்சம் வரையும், பிரியாமணி, லட்சுமிராய், மீரா ஜாஸ்மின் ஆகியோர் ரூ. 10 லட்சத்திலிருந்து 15 லட்சம் வரையும் கார்த்திகா, கீரத், சமிக்ஷா, சந்தியா, சாயாசிங், ஜோதிர்மயி போன்றவர்கள் ரூ. 3 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரையிலும் சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது.

விளம்பரம் தயாரிக்கும் நிறுவனத்தின் மதிப்பு, நடிகையின் தற்போதை மார்க்கெட், சினிமாவுக்கு வாங்கும் சம்பளம், இவற்றை பொறுத்தே சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. இதில் நயன்தாரவுக்கு, ஜவுளி கடை விளம்பரம் ஒன்றில் நடிக்க, 2 நாள் ஷ¨ட்டிங்கிற்கு ரூ. 50 லட்சம் வரை தர முன்வந்தார்கள்.ஆனால், மறுத்துவிட்டார் நயன்தாரா.


இரண்டு மற்றும் மூன்றாவது வரிசையில் உள்ள நடிகைகள் மட்டுமே தனி விளம்பரங்களில் நடிக்கிறார்கள். முன்னணியில் இருக்கும் நடிகைகள் தேசிய அளவிலான நிறுவனங்களின் விளம்பர அம்பாசிடர்களாக இருக்கவே விரும்புகிறார்கள். ஒரு வருடம் விளம்பர அம்பாசிடராக இருக்க ரூ. 75 லட்சம் முதல் ஒரு கோடி வரை சம்பளம் பெறுகிறார்கள். இந்த காலகட்டத்தில் அவர்கள் வேறெந்த விளம்பர படத்திலும் நடிக்க மாட்டார்கள்.

வருடத்துக்கு மூன்று அல்லது நான்கு முறை அவர்களை பயன்படுத்தி விளம்பர படங்களோ, புகைப்படங்களோ எடுத்துக் கொள்ளலாம். அறிமுக விழாக்களில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள வைக்கலாம் என்பது மாதிரியான விதிமுறைகளை வகுத்துக் கொள்கிறார்கள்.

அசின், த்ரிஷா, தமன்னா, சினேகா ஆகியோர் விளம்பர அம்பாசிடர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களது வருட சம்பளம் அசின் ரூ. 1.25 கோடி, த்ரிஷா, தமன்னா ரூ. 75 லட்சம் என்கிறார்கள்.

அதாவது வருடத்தில் மூன்று நாட்கள் விளம்பரங்களின் ஷ¨ட்டிங்கிற்காக கலந்து கொள்வார்கள். தங்களது சினிமா சம்பளத்துக்கு ஏற்ப அவ்வப்போது அம்பாசிடர்களுக்கான சம்பளத்தையும் உயர்த்திக் கொள்வார்கள்.

விளம்பர உலகத்தை நடிகைகளே ஆக்கிரமித்துக் கொள்வதால் மாடல்கள் விளம்பர படங்கள் பக்கம் வருவது குறைந்து வருகிறது.

முன்பு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சம்பளம் பெற்ற மாடல்கள் தற்போது ரூ.25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சம்பளம் கேட்பதாகவும் கூறப்படுகிறது. சினிமாவில் நடிகர்களுக்கு சம்பளம் அதிகம். விளம்பரத்தை பொறுத்தவரை நடிகைகளுக்கே சம்பளம் அதிகம்!

** மொபைல் போன் : பத்து பயனுள்ள தகவல்கள்

மொபைல் போன் வாங்கியவுடன் அதன் முழுப் பயனை மட்டுமல்ல அதனை ஒரு ஸ்டைலான போனாக அமைப்பதும் உங்கள் கையில் உள்ளது. அதற்கான பத்து அம்சங்களை இங்கே காணலாம்.

1. வால் பேப்பர் மற்றும் பேக் கிரவுண்ட்:

மொபைல் திரையில் வால் பேப்பர் என்பது அதன் தோற்றக் காட்சியாகும். இக்காட்சிப் படத்தின் மீதுதான் உங்களுக்கான தகவல்கள் காட்டப்படுகின்றன. பழைய கருப்பு வெள்ளை போனில் கூட இந்த வால் பேப்பரை அமைக்கலாம். போனில் தரப்பட்டுள்ள வால் பேப்பர்களைத்தான் நீங்கள் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை. நீங்களே உங்களுக்குப் பிடித்தமான வால் பேப்பரை உருவாக்கி அமைக்கலாம். போட்டோஷாப் போன்ற படங்களை எடிட் செய்திடும் சாப்ட்வேர் புரோகிராம்களில் உங்களுக்குப் பிடித்த படத்தை எடிட் செய்து போன் திரைக்கேற்றவகையில் மாற்றி போனில் காப்பி செய்து வால்பேப்பர் மற்றும் பேக்கிரவுண்ட் காட்சியாகப் பயன்படுத்தலாம். இது உங்கள் போனுக்கு ஒரு தனித்தன்மையையும் உங்களுக்கு உங்கள் போன் உங்கள் வாழ்க்கையின் அங்கம் என்ற அடையாளத்தையும் கொடுக்கும்.

2. ஸ்கிரீன் சேவர்:

இதனைப் பொறுத்தவரை ஒன்று சொல்லியாக வேண்டும். ஸ்கிரீன் சேவர் அமைப்பது நல்லதாகத் தெரிந்தாலும் அது உங்கள் பேட்டரியின் திறனைத் தின்றுவிடும் என்பதே உண்மை. அதுவும் ஏதேனும் அனிமேஷன் உள்ளதாக இருந்தால் இன்னும் மோசம். இருந்தாலும் எல்லாரும் ஸ்கிரீன் சேவரை அமைத்துக் கொள்கின்றனர். பயனுள்ளதாக வேண்டும் என்றால் நேரம் மற்றும் தேதியினை அமைத்துக் கொண்டால் தன் ஓய்வு நேரத்தில் உங்களுக்கு நேரத்தைக் காட்டும் சாதனமாக மொபைல் அமைந்துவிடும். .GIF போன்ற அனிமேட்டட் பைல்களை இதற்குப் பயன்படுத்தலாம்.

3. தீம்ஸ்:

வண்ணங்கள் மற்றும் டிசைன்களை திரையில் காட்ட இந்த தீம்கள் பயன்படுகின்றன. தற்போது வெளியாகும் போன்களில் தீம்ஸ் இருந்தால் வால் பேப்பர் மற்றும் ஸ்கிரீன் சேவர்களுக்கான தேவை இல்லாமல் போய்விடுகிறது. சிம்பியன் சாப்ட்வேர் பயன்படுத்தப்படும் நோக்கியா மற்றும் சோனி போன்களுக்காகவே நிறைய தீம்கள் பலரால் உருவாக்கப்பட்டு பல இணையதளங்களில் கிடைக்கின்றன. இவற்றை இறக்கிப் பயன்படுத்தலாம்.

OwnSkin.com மற்றும் mobile9.com போன்ற தளங்கள் உங்களுடைய சொந்த தீம்ஸ்களை உருவாக்கிப் பயன்படுத்த உதவுகின்றன. மேலும் உங்கள் விருப்பத்திற்கிணங்க ஐகான்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம்.

4. ரிங்டோன்ஸ்:

சில நேரம் சிரிப்பு வரும் வகையிலும் சில நேரம் எரிச்சல் வரும் வகையிலும் மொபைல் போனை அமைத்திடலாம் என்றால் அது ரிங் டோன்ஸ் மூலம் தான். உங்கள் போனில் நிறைய மெமரி இடம் இருந்து எம்பி3 பாடல் பைல்களும் நிறைய இருந்தால் உங்களுக்குக் கொண்டாட்டம்; போனுக்குத் திண்டாட்டம். ஏனென்றால் இந்த பாடல்கள் நிறைய இடத்தைப் பிடித்துக் கொள்ளும் சமாச்சாரங்களாகும்.எனவே அடாசிட்டி போன்ற பாடலை எளிதாக எடிட் செய்திடும் சாப்ட்வேர் மூலமாக உங்களுக்குப் பிடித்த வரிகளை எடிட் செய்து சிறிய பைலாக மாற்றி ரிங் டோன்களாகப் பயன்படுத்துங்கள். www.freeringtones. uk.com என்ற தளத்தில் ரிங்டோன்கள் மட்டுமின்றி நீங்களே கம்போஸ் செய்திடவும் வசதி தரப்பட்டுள்ளது.

5. கேம்ஸ்:

அநேகமாக 99% போன்கள் ஏதாவது சில கேம்ஸ் களுடன் தான் வருகின்றன. தனியே இருக்கையில் அல்லது பயணம் மேற்கொள்கையில் மொபைலில் இருக்கிற கேம்ஸ் உங்கள் பொழுதைப் போக்க உதவும். ஆனாலும் கவனமாக இருக்க வேண்டும். பேட்டரி காலியானால் சிரமம்தான். எனவே அளவோடு பயன்படுத்த வேண்டும். ஒரு சில கேம்ஸ் ஜாய்ஸ்டிக் அதிகம் பயன்படுத்தும் வகையில் இருக்கும். இதனால் அதன் பயன்பாடு அதிகம் ஆனால் விரைவில் ரிப்பேர் ஆவது அந்த கீயாகத்தான் இருக்கும். எனவே அளவோடு விளையாடுவது நல்லது.

6. அப்ளிகேஷன்ஸ்:

ஒரு சில போன்களில் நிறைய அப்ளிகேஷன்களை லோட் செய்திடும் வசதி உண்டு. தீம்ஸ் மற்றும் கேம்ஸ் போக கேமராவிற்கான படங்கள் மற்றும் வீடியோக்களை எடிட் செய்திடும் வசதி தரும் அப்ளிகேஷன்கள், ஸ்டார் மூவி பிளேயர் போன்ற வீடியோ அப்ளிகேஷன்கள் ஆகியவை இவற்றில் சில. இவற்றில் சில காசு கொடுத்தால் மட்டுமே கிடைக்கும். எவற்றை வாங்கினால் உங்களால் பயன்படுத்த முடியும் என முடிவு செய்து அவற்றை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தவும்.

7. மொபைல் பேனல்கள்:

ஒரு சில மாதங்கள் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் விலையில் அநேகமாக அனைத்து போன்களுக்கும் பேனல்கள் கிடைக்கின்றன. கிறிஸ்டல் பேனல்கள் உங்களின் மொபைல் போன் அழகை வெளிச்சம் போட்டுக் காட்டுவதுடன் நன்றாகப் பாதுகாக்கவும் செய்கின்றன. உங்கள் மாடல் போனுக்கானதை மட்டுமே வாங்கிப் பயன்படுத்தவும். ரூ.40 விலை சொல்லப்படும் ஒரு கிறிஸ்டல் பேனலை எதிர்கடையில் ரூ.8க்கு வாங்கினேன். எனவே நன்றாக விலை விசாரித்து வாங்கவும். அதே போல திரைக்கு ஸ்கிராட்ச் ஆகாமல் இருக்க ஸ்டிக்கர்கள் விற்பனையாகின்றன. அவற்றையும் வாங்கிப் பயன்படுத்தலாம். திரை சேதமாகாமல் இருக்கும்.

8. கேர் பவுச் மற்றும் பர்ஸ்கள்:

கிறிஸ்டல் பேனல்கள் நன்றாகவும் பாதுகாப்பாகவும் இருந்தாலும் பலர் இடுப்பு பெல்ட்களில் மாட்டும் வகையிலான பவுச், கழுத்தில் தொங்கவிடும் பவுச், பெண்கள் விரும்பும் வகையில் எம்பிராய்டரி செய்யப்பட்ட பவுச்கள் எனப் பல இருக்கின்றன. இவற்றில் எந்தவகையான மேக்னடைஸ்டு சமாச்சாரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். காந்த சக்தி சிறிது இருந்தாலும் அவை உங்கள் போனின் திரைக் காட்சியை சிதைப்பதுடன் பேட்டரியையும் சாப்பிட்டுவிடும்.

9. மற்ற கவர்ச்சி ஒட்டுகள்:

உங்கள் போனுக்கு அழைப்பு வந்தால் சிறிய வெளிச்சத்தை அழகாகக் காட்டி அழைக்கும் தொடுப்புகள் நிறைய மார்க்கட்டில் உள்ளன. ரூ.10 முதல் ரூ.30 வரை இவை கிடைக்கின்றன. சிலவற்றை போனின் பின்புறத்தில் ஒட்டி வைத்துக் கொள்ளலாம். கையில் பிடித்துச் செல்ல ஏதுவாக சில தொடுப்புகள் சிறிய கயிறுகளாகக் கிடைக்கின்றன. இவையும் பயனளிக்கும்.

10. புளுடூத் ஹெட்செட்:

உங்கள் போனில் புளுடூத் வசதி இருந்து அதிலிருந்து கிடைக்கும் ஆடி யோ சிக்னல்களும் அதற்கான ஸ்டீரியோ ஹெட்செட்டை அடையும் எனத் தெரிந்தால் புளுடூத் ஹெட்செட்டை வாங்கலாம். இந்த விஷயத்தில் கம்பெனிகள் அளிக்கும் ஹெட்செட்களையே வாங்கிப் பயன்படுத்துங்கள்.

** டிஸ்க் டிரைவின் பெயர், எழுத்தை மாற்றலாம்

கம்ப்யூட்டர்களை செட் செய்திடுகையில் வழக்கமாக முக்கிய டிரைவ் C ஆகவும் மற்றவை அதனைத் தொடர்ந்தும் அமைக்கப்படுகின்றன. இணைத்து எடுக்கக் கூடிய பென் டிரைவ் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தும் போது கம்ப்யூட்டரில் உள்ள இயக்கத் தொகுப்பு தானாகவே ஒரு எழுத்துப் பெயரை சூட்டிக் கொண்டு பின் அதனை எடுத்தவுடன் நீக்கி விடுகிறது. ஆனால் A முதல் Z வரை இந்த டிரைவ்களுக்குப் பெயர் சூட்டலாம், அதுவும் நீங்களே சூட்டலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள டிஸ்க் மேனேஜ்மென்ட் ஸ்நாப் இன் (Disk Management snapin) என்ற சாப்ட்வேர் சாதனம் இந்த வசதியைத் தருகிறது.

உங்களுடைய கம்ப்யூட்டரில் பிளாப்பி டிரைவ்களுக்கு A மற்றும் F எழுத்துக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஹார்ட் டிரைவின் இயக்கத் தொகுப்பின் செயல் பகுதி இக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டரில் பிளாப்பி டிரைவ் இல்லை என்றால் A மற்றும் F எழுத்துக்களையும் நீங்கள் விரும்பும் டிரைவிற்குப் பயன்படுத்தலாம். ஆனால் ஏதேனும் ஒரு நாளில் பிளாப்பி டிரைவ் இணைக்கையில் இந்த எழுத்துக்கள் தேவை என்பதால் அவற்றை நீக்கி மற்ற எழுத்துக்களை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம். டிரைவ் அல்லது அதில் உள்ள ஒரு பிரிவு அல்லது வால்யூம் ஆகியவற்றிற்கு நீங்கள் விரும்பும் உங்களுக்குப் பிடித்தமான எழுத்தை முதல் முதலாக எப்படி அதன் பெயராக அமைக்கக் கீழ்க்கண்டவாறு செயல்படுங்கள். முதலில் வழக்கம் போல உங்கள் கம்ப்யூட்டர் பயனாளராக கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்குங்கள்.

1. பின் Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக்கிடவும்.
(குறிப்பு: கண்ட்ரோல் பேனலில் category view என்ற வகைப் பிரிவில் மட்டுமே இந்த வசதி தரப்பட்டிருக்கும். எனவே அந்த வகையை முதலில் திறந்து கொள்ள வேண்டும்.)

2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பற்குச் சென்று கிளிக் செய்திடவும்.

3. இதில் நீங்கள் எழுத்து அமைத்திட விரும்பும் டிரைவில் அல்லது பிரிவில் ரைட் கிளிக் செய்திடவும். அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.

4. கிடைப்பதில் Add என்பதைக் கிளிக்கிடுக.

5. இப்போது “Assign the following drive letter” என்பதில் கம்ப்யூட்டர் ஏற்கனவே தேர்ந்தெடுத்து காட்டும் எழுத்து உங்களுக்குப் பிடித்திருந் தால் அதனையே தேர்ந்தெடுக்கவும். இல்லையேல் உங்களுக்குப் பிடித்தமான எழுத்தைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

டிரைவ் ஒன்றுக்கு அல்லது அதன் பிரிவிற்கு ஒரு எழுத்து ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தால் அதனை எப்படி மாற்றி, விரும்பும் எழுத்தை அமைப்பது என்று பார்ப்போம்.

1. Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடுக.

2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பதற்குச் சென்று கிளிக் செய்திடவும்.

3. எழுத்து மாற்ற விரும்பும் டிரைவில் அல்லது அதன் பிரிவில் ரைட் கிளிக் செய்திடுக. அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.

4. இப்போது கவனமாக Change என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.

5. “Assign the following drive letter” என்ற பிரிவில் நீங்கள் விரும்பும் எழுத்தைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.

6. எழுத்து மாற்றத்தை ஏற்படுத்தவா என்று செய்தி கிடைக்கையில் கவனமாக ஙுஞுண் என்பதில் கிளிக் செய்திடுங்கள். இனி நீங்கள் மாற்றம் செய்த பிரிவு அல்லது டிரைவில் அதற்கான பெயர் எழுத்து வழக்கமாகக் காட்டப்படும் இடங்களில் எல்லாம் தென்படும்.

ஏற்கனவே கொடுத்த எழுத்தை நீக்குவதற்கு கீழ்க்குறிப்பிட்டுள்ள படி செயல்படுங்கள்.

1. Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடுக.

2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பதற்குச் சென்று கிளிக் செய்திடவும்.

3. எழுத்து மாற்ற விரும்பும் டிரைவில் அல்லது அதன் பிரிவில் ரைட் கிளிக் செய்திடுக. அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.

4. இப்போது கவனமாக Remove என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.

5. இந்நிலையில் எழுத்தை நீக்கவா என்ற எச்சரிக்கைச் செய்தி கிடைக்கும். இப்போது ஙுஞுண் என்பதில் கிளிக் செய்திடவும். இந்நிலையில் அந்த பகுதிக்கு அளிக்கப்பட்ட பெயர் எழுத்து நீக்கப்பட்டுவிட்டது.

இவ்வாறு தேவைப்படும் எழுத்தினை உங்கள் டிரைவிற்குக் கொடுத்து பார்க்கலாம்.

எழுதியவர் : கார்த்திக்

Friday, May 29, 2009

** டேட்டா ஸ்டோரேஜ் புதிய கண்டுபிடிப்பு

அமெரிக்காவில் இயங்கும் ஜெனரல் எலக்ட்ரிக் (GE) நிறுவனத்தின் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு டேட்டா ஸ்டோரேஜ் தொழில் நுட்பத்தில் புதிய வழி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இதன்படி நாம் கற்பனையில் எண்ண முடியாத அளவிலான டேட்டாவினை ஒரு சிடியில் பதிந்து எடுத்துச் செல்ல முடியும். இதனை holographic storage technology என இந்நிறுவனம் அழைக்கிறது.


இதன் மூலம் 100 டிவிடிக்களில் உள்ள டேட்டாவினை ஒரு டிஸ்க்கில் பதிய முடியும். இந்தக் கணக்கின் படி ஒரு டிஸ்க்கில் 470 ஜிபி அளவில் டேட்டாவினை எழுத முடியும். இது ஏறத்தாழ அரை டெரா பைட் ஆகும். இந்த ஆண்டிலேயே மக்களுக்குக் கிடைக்க இருக்கும் இந்த அரிய தொழில் நுட்பம் இன்னும் பல சோதனைகளுக்குட் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அனைத்து சோதனைகளையும் தாண்டிய பின்னரே இதற்கு அங்கீகாரமும் அனுமதியும் வழங்கப்படும்.



ஹோலோகிராபிக் ஸ்டோரேஜ் என்னும் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இது செயல்படுகிறது என ஜி.இ. நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தொழில் நுட்பம் குறித்து மேலும் அறிய http://en.wikipedia.org/wiki/Holographic_memory என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.

இந்த தொழில் நுட்பம் மூலம் ஒரு முறை எழுதிய இடத்திலேயே மேலும் மேலும் டேட்டாவினை எழுதும் வழிகளை இது அமைத்துத் தருகிறது. தற்போது உள்ள சிடி, டிவிடிக்களில் லேயர் லேயராகத்தான் டேட்டாக்கள் திணிக்கப்படுகின்றன. ஒன்றின் மேலாக ஒன்று எழுதப்படுவதில்லை. 1960 ஆம் ஆண்டிலேயே இந்த தொழில் நுட்பம் குறித்துப் பேசப்பட்டாலும் இப்போதுதான் மக்களுக்குப் பயன் தரும் வகையில் இது வெளிவருகிறது.

** தமிழ்ப் படங்களுக்கு ஆஸ்கர் கிடைக்காதது ஏன்?

சிவகிரி’.படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.இவ்விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் வி.சி.குகநாதன்,

‘’தமிழ்ப் படங்களுக்கு ஏன் ஆஸ்கர் விருது கிடைப்பதில்லை என்கிறார்கள். ‘தமிழ்நாட்டில் தமிழ்ப் படங்களே எடுப்பதில்லை. அதனால்தான் கிடைப்பதில்லை’ என்று ஒருவர் சொன்னார்.

இது எவ்வளவு வேதனையான செய்தி. ஜப்பான் நாட்டில் படம் எடுத்தால், அவர்கள் ஆங்கிலப் படம் எடுப்பது இல்லை. ஜப்பான் கலாசாரத்தை பிரதிபலிக்கும் படத்தையே எடுப்பார்கள்.

அதேபோல் சீனாவிலும், மற்ற சில நாடுகளிலும் அந்தந்த நாட்டின் கலாசாரம் மற்றும் பண்பாட்டை சொல்லும் கதை கொண்ட படங்களையே எடுக்கிறார்கள். அதுபோல் இந்திய, தமிழக கலாசாரத்தை பிரதிபலிக்கும் படங்களை உருவாக்க முன்வர வேண்டும்.

தமிழ்ப் படவுலகில் தொழில்நுட்பங்கள் வளர்ந்திருக்கிறது. ஆனால், நல்ல கதை, அருமையான திரைக்கதை, இவற்றுக்கெல்லாம் ஈடாக வசனம் எழுதுபவர்கள் குறைவு. ‘சொந்த புத்தி இருந்தால் கண்டுபிடி. மந்தபுத்தி இருந்தால் காப்பியடி’ என்ற மந்திரத்தைச் சொன்னவர், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன். நாம் சொந்தமாக யோசித்து செயல்பட வேண்டும்’’என்று பேசினார்.

நன்றி :: நக்கீரன்.in

** தனித்தன்மை மிக்க தனியா

ஒவ்வொரு வீட்டின் சமையலறையும் ஒரு மருத்துவச் சோலையாக இருக்க வேண்டும் என்பதே நமது முன்னோர்களின் கனவு. அதனால்தான் உணவே மருந்து என்ற கோட்பாட்டை கடைபிடித்தார்கள். உணவின் மூலமே நோயின் தாக்குதலிலிருந்து விடுபட வைத்தனர். வரும் முன் காப்பதில் நம் முன்னோர்க்கு ஈடு இணை இல்லை.

அந்த வகையில் நம் வீட்டு சமையல் அறையிலுள்ள அஞ்சரைப்பெட்டிகளில் நீங்காத இடத்தைப் பெற்றிருக்கும் தனியா என்று அழைக்கப்படும் கொத்தமல்லியின் மருத்துவக் குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

தனியாவின் மருத்துவத் தன்மை தனிச்சிறப்பு வாய்ந்தது. உடலை சமநிலைப்படுத்தும் வாத, பித்த, கபத்தின் நிலைகளை சீர்ப்படுத்துவதில் தனியாவின் பங்கு அதிகம்.

இதனை உருள் அரிசி என்றும் அழைப்பர்.

Tamil - Kothamalli vidhai, Dhaniya

English - Coriander Seeds

Malayalam - Kottam palar

Sanskrit - Dhanyaka

Botanical Name - Coriandrum sativum

இதன் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது. இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. இது சிறு செடி வகையைச் சார்ந்தது.

சமையலில் தினமும் தனியா சேர்க்காமல் சாப்பிடுபவர்கள் இருக்க முடியாது. மசலா பொடியில் தனியாவையும் சேர்த்து அரைப்பார்கள். இது நறுமணத்தையும் சுவையையும் தருவதோடு சீரண சக்தியையும் தூண்டுகிறது.

சீரண சக்தியை அதிகரிக்க

நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆகாமல் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றில் உள்ள அபான வாயு சீற்றமாகி மேல் நோக்கி எழும்பி தலைவலியை உண்டாக்குகிறது. சில சமயங்களில் கீழ்நோக்கி சென்று மூலப்பகுதியைத் தாக்கி புண்களை ஏற்படுத்துகிறது. சீரண சக்தி நன்றாக இருந்தால்தான் மலச்சிக்கல், வயிறு மந்தம் போன்றவை ஏற்படாது. நாம் எத்தகைய கடினமான அதாவது எளிதில் சீரணமாகாத உணவுகளை சாப்பிட்டாலும் அதனுடன் மல்லி விதை பொடியையும் சேர்த்துக்கொண்டால் உணவு எளிதில் சீரணமாகும்.

வாய் துர்நாற்றம் நீங்க

பல் இடுக்குகளில் உள்ள கிருமிகளாலும், குடல் அல்லது வயிற்றுப் புண்களாலும் சிலருக்கு வாய் துர்நாற்றம் வீசும். இவர்கள் மல்லி விதையை வாயில் வைத்து மெதுவாக மென்று உமிழ்நீரை இறக்கினால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

இதயம் பலப்பட

ஒரு நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி விரியும் இதயம் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். இதயத்தின் சுருங்கி விரியும் தன்மையை பொறுத்தே உடலின் இரத்த ஓட்டம் சீர்பெறும். இதயம் பலப்பட அடிக்கடி உணவில் மல்லியைச் சேர்த்துக்கொள்வது அவசியம்.

புளித்த ஏப்பம் நீங்க

சிலருக்கு சிறிது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகாமல் ஏப்பம் வந்துகொண்டே இருக்கும். சில சமயங்களில் இது புளித்த ஏப்பமாகவும் மாறும். இதனைப் போக்க தனியாவுடன் சிறிது சோம்பு சேர்த்து வாயில் போட்டு மென்று சாறு இறக்கினால் சில நிமிடங்களில் நிவாரணம் கிடைக்கும்.

கண்கள் பலப்பட

கண்கள்தான் உயிரின் பிரதான உறுப்பாகும். கண்களை பாதுகாப்பது ஒவ்வொருவரின் முக்கிய கடமையாகும்.

ஆனால் இன்று உடலைவிட கண்களுக்கே அதிக வேலை கொடுக்கிறோம். 12 மணி நேரம் கம்ப்யூட்டர் முன் வேலை செய்து பின் தொலைக்காட்சி முன் அமர்பவர்களும் உண்டு. கண்கள் சோர்வடையும் போது உடலும், மனமும் எளிதில் சோர்வடையும். இரவு வேலை செய்பவர்களுக்கும், வெப்ப ஒளி உள்ள இடங்களில் வேலை செய்பவர்களுக்கும் கண்கள் எளிதில் பாதிப்படையும். இவர்கள் மல்லி விதையை நீரில் இட்டு கொதிக்க வைத்து ஆறியபின் அந்த நீரில் கண்களை கழுவி வந்தால் கண்கள் புத்துணர்வு பெறும்.

பித்த தலைவலி நீங்க

பித்தத் தலைவலி உள்ளவர்கள் சந்தனத்துடன் மல்லியை அரைத்து பற்றுபோட்டால் பித்தம் தணிந்து தலைவலி குணமாகும்.

ஜலதோஷம் பிடித்திருந்தாலும் சிலருக்கு தலைவலி உண்டாகும். இவர்கள் மல்லி விதையை அரைத்து நெற்றியில் பற்று போட்டால் கபால சூலைநீர் நீங்கி தலைவலி, மூக்கடைப்பு குணமாகும்.

தலைச்சுற்றல் நீங்க

கொத்தமல்லி விதை, சந்தனம், நெல்லி வற்றல் இவற்றை நீரில் நன்றாக ஊறவைத்து வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் தலைச்சுற்றல், கிறுகிறுப்பு குறையும்.

பித்தம் குறைய

சுக்கு மல்லி இவற்றை சம அளவு எடுத்து இடித்து வைத்துக் கொண்டு, ஒரு கப் தண்ணீரில் 1 ஸ்பூன் பொடியைப் போட்டு கஷாயம் போல் செய்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து மாலை வேளையில் அருந்தி வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.

நாள்பட்ட புண்கள் ஆற

மல்லி விதையை நன்றாக நீர்விட்டு அரைத்து நாள்பட்ட புண்கள் மீது பற்று போட்டால் புண்கள் விரைவில் ஆறும்.

நன்றி :: நக்கீரன்

++ அனைத்து முக்கிய தளங்களும் ஒரே இடத்தில்

பல இணைய தளங்கள் நாம் அன்றாடம் செல்லும் இணைய தளங்களாக அமைகின்றன. இவற்றில் இமெயில், புதிய தகவல்கள், உறவுகளுக்கு கடிதங்கள், கேள்விகளுக்குப் பதில்கள் எனப் பலவகையான செயல்களை மேற்கொள்கிறோம்.

இந்த தளங்கள் அன்றாடம் செல்ல வேண்டிய தளங்களாக இருந்தாலும் ஒவ்வொரு முறையும் இவற்றை அடைய இந்த தளங்களின் முகவரிகளை டைப் செய்திட வேண்டும். அல்லது அதன் தொடக்க எழுத்துக்களையாவது அமைக்க வேண்டும். இதற்குப் பதிலாக இது போன்ற அடிக்கடி அனைவரும் பயன்படும் தளங்களுக்கு பைல்களின் ஐகான்களைக் கிளிக் செய்வது போல லிங்க்குகளை ஒரே தளத்தில் அமைத்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

இதில் முக்கிய தளங்களைத் தொடர்பு கொள்ள லிங்க்ஸ் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் ஒருமுறை கிளிக் செய்தால் போதும். முகவரியில் எந்த எழுத்துக்களையும் டைப் செய்திடத் தேவையில்லை. இந்த தளத்தை உங்கள் ஹோ ம் பேஜாக வைத்துக் கொண்டால் இணையத்தைத் திறந்தவுடன் உங்களுடைய அனைத்து தளங்களும் உங்கள் கண் முன்னால் டெஸ்க் டாப்பில் நீங்கள் கிளிக் செய்வதற்காகக் காத்திருக்கும்.

அனைவரும் எப்படியும் செல்ல வேண்டிய தளங்களுக்கென (Most Visited Websites) ஒரு தனிப் பிரிவு அமைத்து அதில் : yahoo, google, orkut, hotmail, rediff, facebook, youtube போன்ற தளங்களுக்கான லிங்க்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் உங்களை உற்சாகப் படுத்தி சிந்திக்க வைத்திட சான்றோரின் பொன்மொழிகள் தரப்படுகின்றன. இவற்றுடன் இனிமையான மியூசிக் இசைக்கப்படுகிறது. பாடல் ஒலிக்கிறது. இந்த தளத்தில் உள்ள பிரிவுகளைப் படித்தால் உங்களுக்கு என்ன என்ன தளங்கள் இதில் அடுக்கப்பட்டுள்ளன என்று தெரியவரும்.

•Top Emailing Websites
•Search Engines /Photos & Wallpapers
•Social Networking Websites
•Google Tools
•Finance
•Downloads
•Office Productivity
•Health Conscious
•Mind Power & Spirituality
•Technical Paradise
•Entertainment
இவற்றில் ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தது 7 தளங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

நிச்சயம் நீங்கள் இதுவரை பார்க்காத தளங்களும் இந்த பட்டியலில் இருக்கும். இந்த தளங்களைப் பெறுவதற்குக் கிளிக் செய்திடும் முன் கர்சரை இதன் அருகே கொண்டு சென்றவுடனேயே அதன் தம்ப் நெயில் படம் பெரிதாகத் தெரிகிறது. எடுத்துக் காட்டாக யாஹூ இமெயில் தளம் சென்றவுடன் அத்தளத்தின் முகப்புப் பக்கம் தெரியும். தவறுதலாக யாஹூ வின் முதன்மைப் பக்கத்திற்குப் பதிலாக இதனைக் கிளிக் செய்வது இதனால் தடுக்கப்படுகிறது. ஒவ்வொரு முறை இந்த தளத்தை ரெப்ரெஷ் செய்தால் பொன்மொழிகள் மாறுகின்றன. பாட்டு தரப்பட்டிருக்கும் இடத்தில் கிளிக் செய்தால் அருமையான பாட்டு ஒன்று டவுண்லோட் ஆகி இசைக்கப்படுகிறது.

நீங்கள் எந்த தளத்தை யேனும் அனைவருக்கும் பயனுள்ள தளம் என்று எண்ணினால் அது குறித்து இவர்களுக்கு எழுதலாம். இந்த முயற்சி எல்லாருக்கும் நல்ல விஷயங்கள் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அமைக்கப் பட்டது என்றும் அதனால் இத்தகைய தளம் இருப்பதை அனைவருக்கும் சொல்லுங் கள் என்று வேண்டுகோளும் இந்த தளத்தில் விடுக்கப்பட்டுள்ளது. ஒரு முறை பார்த்தால் இதனை நீங்கள் விரும்பி பார்ப்பீர்கள் என்பது உறுதி. ஏனென்றால் நம்முடைய பொன்னான நேரத்தை இது அதிகம் மிச்சப்படுத்துகிறது.
தள முகவரி : இங்கே கிளிக் செய்யுங்கள்

எழுதியவர் : கார்த்திக்

Thursday, May 28, 2009

++ பயர்வால்கள் (Firewalls) எப்படி செயல்படுகின்றன?

உங்களுக்கும் இன்டர்நெட்டுக்கும் இடையே ஒரு பாதுகாப்பு அரணாக இயங்க வேண்டுவதே பயர்வால் தொகுப்பின் தன்மையாகும். இது உங்கள் கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிக்கும் வைரஸ்களை தடுக்கும் செயலை முழுமையாக மேற்கொள்ளவில்லை. குறிப்பிட்ட சில போர்ட்டுகள் மூலம் வரும் வைரஸ்களை மட்டுமே இதனால் தடுக்க முடியும்.

இன்டர்நெட்டில் நம் கம்ப்யூட்டரை இணைத்து செயல்படுகையில் அது பல்லாயிரக்கணக்கான கம்ப்யூட்டர்கள் இணைந்த நெட் வொர்க்குடன் இணைந்து செயல்படுகிறது. இதனால் இந்த நெட்வொர்க்கில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களில் இருந்தும் உங்கள் கம்ப்யூட்டரைத் தொடர்பு கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்தித்தான் பல விஷமிகள் நம் கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களைத் திருட முயற்சிக்கிறார்கள். அல்லது வைரஸ் புரோகிராம்களை அனுப்பி நம் கம்ப்யூட்டரில் நாசம் விளைவிக்கிறார்கள். இந்த முயற்சியில் ஈடுபடுவோர் எப்போதும் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல தொடர்ந்து செயல்படுகின்றனர்.


இவர்களிடமிருந்து நம் கம்ப்யூட்டரை மூன்று வழிகளில் பாதுகாக்கிறோம்.

1. வைரஸை அண்டவிடாமலும் அப்படி வந்துவிட்டால் அவற்றை நீக்கும் செயலையும் மேற்கொள்ளும் ஆண்டி வைரஸ் எனப்படும் புரோகிராம்கள்.

2. உள்ளே இது போன்ற எந்த நாசம் விளைவிக்கும் புரோகிராமினையும் புகவிடாமல் தடுக்கும் பயர்வால் புரோகிராம்கள்.

3.ஸ்பைவேர் அழித்தல்.

இந்த மூன்று வகை புரோகிராம்களும் இன்றைக்கு ஒரு கம்ப்யூட்டருக்குத் தேவை. இதன் முக்கியத்துவம் ஒன்றுக்கொன்று வேறுபடலாம். இங்கு பயர்வால்கள் என்ன செய்கின்றன என்று பார்க்கலாம்

உங்களுக்கும் இன்டர் நெட்டுக்கும் இடையே ஒரு பாதுகாப்பு அரணாக இயங்க வேண்டுவதே பயர்வால் தொகுப்பின் தன்மையாகும். இது உங்கள் கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிக்கும் வைரஸ்களை தடுக்கும் செயலை முழுமையாக மேற்கொள்ளவில்லை. குறிப்பிட்ட சில போர்ட்டுகள் மூலம் வரும் வைரஸ்களை மட்டுமே இதனால் தடுக்க முடியும்.


பயர்வால் தொகுப்பைப் பொறுத்தவரை இரண்டு வகை உண்டு:ஹார்ட்வேர் பயர்வால் மற்றும் சாப்ட்வேர் பயர்வால்.


அதிகம் புழங்கப்படும் ஹார்ட்வேர் பயர்வால் ரௌட்டராகும் (router).ஒரு சிறிய நெட்வொர்க்கில் இது கம்ப்யூட்டருக்கும் மோடத்திற்கும் இடையே இணைக்கப்படும். உங்களுக்கு இன்டர்நெட் தொடர்பினைத் தரும் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் நிறுவனம் உங்கள் கம்ப்யூட்டருக்கென ஒரு ஐ.பி. முகவரியினைத் தரும். இது தெரிந்தால் யாரும் இதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டருக்குள் புகுந்து தகவல்களைத் திருட முடியும். இந்த ரௌட்டர் அதனை மற்றவர்களிடமிருந்து மறைத்து வேறு ஒரு முகவரியை இணைக்கப்பட்ட கம்ப்யூட்டருக்குத் தருகிறது. இதன் மூலம் கம்ப்யூட்டரில் எளிதாக நுழையக் கூடிய போர்ட்களை ரௌட்டர் மூடிவிடுகிறது.

சாப்ட்வேர் பயர்வால் சிறிது மாறாகச் செயல்படுகிறது. இதில் சில நன்மைகளும் உள்ளன; பிரச்னைகளும் உள்ளன. ஹார்ட்வேர் பயர்வால் கம்ப்யூட்டருக்கு வெளியே அமைக்கப்படும் சாதனம். சாப்ட்வேர் பயர்வால் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்படும் புரோகிராம். எது எப்படி இருந்தாலும் உங்கள் கம்ப்யூட்டருக்கு ஏதாவது ஒரு பயர்வால் கட்டாயம் தேவை.

சாப்ட்வேர் பயர்வால் உங்கள் கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு போல ஒரு அப்ளிகேஷன் புரோகிராமாக இயங்குகிறது. இதனால் நீங்கள் இன்டர்நெட் தொடர்பில் இருக்கையில் புராசசர் வேகம் சற்று குறையலாம். சாப்ட்வேர் பயர்வால் ரௌட்டர் செய்வது போல ஐ.பி.முகவரி மாற்றம் எதனையும் மேற்கொள்ளாது. சாப்ட்வேர் பயர்வால் செயல்படுவது ஒரு நண்பரை வாட்ச்மேனாக வைத்திருப்பது போல.

இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்கையில் எந்த புரோகிராமினை நாம் இன்டர்நெட்டில் தொடர்பு கொண்டாலும் உடனே சிறிய பாக்ஸ் ஒன்றை உருவாக்கி இந்த ஐ.பி. முகவரியிலிருந்து இந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் நுழைந்திட முயற்சிக்கிறது. இதனை அனுப்பவா? என்று கேட்கும். நீங்கள் அனுமதித்தால் தான் அதனை அனுமதிக்கும்.

இது கெடுதலான புரோகிராமிற்கு மட்டுமல்ல. நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் அனைத்து புரோகிராம்களுக்கும் இந்த செய்தி கிடைக்கும். ஒரு முறை ஒரு புரோகிராமினை அறிந்து கொண்டு அதனை நீங்கள் அனுமதிப்பதையும் பதிந்து கொண்டு அடுத்த முறை அதே வெப் சைட்டை நீங்கள் தொடர்பு கொள்கையில் உங்களைக் கேட்காமலேயே அனுமதிக்கும்படியும் இதனை செட் செய்திடலாம்.


வேறு எவராவது அவர்களின் புரோகிராம் மூலம் உங்கள் கம்ப்யூட்டருக்குள் திருட்டுத் தனமாக நுழைய முயற்சிக்கையில் இந்த ஐ.பி. முகவரியிலிருந்து ஒருவர் உங்கள் கம்ப்யூட்டருக்குள் முயற்சிக்கிறார் என்று எச்சரிக்கைச் செய்தியினை பயர்வால் வழங்கும். அப்படிப்பட்ட நேரத்தில் அதனைக் குறித்து வைத்துக் கொண்டு உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு இந்த முகவரியிலிருந்து ஒருவர் என்னுடைய கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிக்கிறார் என நீங்கள் தெரிவிக்கலாம்.

பயர்வால் என்பது இன்டர்நெட் பயன்படுத்தும் அனைவருக்கும் தேவயான ஒன்று. எனவே இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் பயர்வால் ஒன்றை டவுண்லோட் செய்து பயன்படுத்துவது நல்லது. அல்லது நிறுவனங்கள் விற்பனை செய்திடும் பயர்வால் ஒன்றை வாங்கிப் பயன்படுத்தலாம். விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்பில் பயர்வால் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது ஒரு சிறிய அளவில் தான் இயங்குகிறது.

எழுதியவர் : கார்த்திக்

Wednesday, May 27, 2009

++ காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொள்வது சிறப்பான காதலின் அடையாளம்


காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொள்வதை சிறப்பான காதலின் அடையாளமாகப் பார்க்கும் போக்கும் இன்று பரவி வருகிறது. தாய்லாந்தில் காதலர் தினத்தன்று திருமணப் பதிவு அலுவலகங்கள் நிரம்பி வழிகின்றன. காதலர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து திருமணம் செய்து கொள்கின்றனர்.


வாழ்த்து அட்டை தயாரிக்கும் ஹால்மார்க் போன்ற நிறுவனங்களுக்கு இது வேட்டை நாள். ஏதேனும் நான்கு காதல் வரிகளைப் போட்டு ஒரு அம்பை இதயத்தில் சொருகி விட்டால் அவர்களுடைய விற்பனை சூடு பிடித்துவிடும்.



தனக்குக் காதலி இருப்பதைப் பிரகடனப் படுத்திக் கொள்ளவும், பழைய காதலர்கள் தங்கள் உடைந்து போன காதலை நினைத்து டாஸ்மார்க் கடைகளில் தாடி தடவவும், மற்றவர்கள் ஐயோ நமக்கு யாரும் இல்லையே என நினைத்து தனிமையில் புலம்பவும் ஒரு நாள் தேவை தானா என்பதை இளைஞர்கள் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும்.


வாழ்த்து அட்டைகள், பரிசுகள், பூங்கொத்துகள் என வர்த்தக வளாகத்தைச் சூடுபிடிக்கச் செய்யும் இந்த காதலர் தினம் உண்மையில் எதைத் தான் தருகிறது ?. காதலை வெளிப்படுத்தவும் கொண்டாடவும் 364 நாட்கள் வலுவற்றவையாகி ஒரே ஒரு நாள் பட்டுமே பலமுடையதாகிறதா ? காதல் என்பது மைல் கல்லா பயணமா ? சிந்திப்போம். வர்த்தக வலையில் விழுந்து விடாமலும், சதிகாரர்களின் சதுரங்கத்தில் வெட்டுப்படாமலும் நம்மைக் காத்துக் கொள்வோம்

++ ஐ போன் புதிய ஓ.எஸ். தரம் எக்கச்சக்க வசதிகள்

ஆப்பிள் நிறுவனம் தன் ஐ–போனுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பினை வெளியிட்டுள்ளது. iPhone OS 3.o என அழைக்கப்படும் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் நூற்றுக் கணக்கான புதிய பல வசதிகளைத் தருவதாக ஆப்பிள் பட்டியலிட்டுள்ளது. அவற்றை மக்களுக்குக் காட்டவும் செய்துள்ளது. இந்த புதிய வசதிகள் ஐ–போன் மற்றும் ஐ–பாட் டச் சாதனங்களுக்கானவை என ஆப்பிள் அறிவித்துள்ளது. இந்த புதிய ஓ.எஸ். ஐ–போன் பயன்படுத்துபவர்களுக்கு இலவசமாகவும் ஐ–பாட் டச் வைத்திருப்பவர்களுக்கு ஏறத்தாழ ரூ.500 கட்டணமாகப் பெற்றுக் கொண்டு தர உள்ளது. இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் தந்துள்ளவற்றில் முக்கிய சில வசதிகளை இங்கு காணலாம். அவை தர மறந்து போன சிலவற்றையும் இங்கு குறிப்பிடலாம்.



1. Cut Copy – Paste: ஐ–போன் வந்த நாள் முதலாய் இந்த வசதியினைத் தான் இதன் வாடிக்கையாளர்கள் கேட்டு வந்தனர். திரையில் இருமுறை தட்டி டெக்ஸ்ட்டை காப்பி செய்திடலாம்; பின் பேஸ்ட் செய்திடலாம். படங்களைக் கூட செலக்ட் செய்து பின் காப்பி செய்து பின் பேஸ்ட் செய்திடலாம்.


2. மேம்படுத்தப்பட்ட எஸ்.எம்.எஸ்.: சென்ற ஜூலை 2007ல் ஐ–போன் வந்ததிலிருந்து எஸ்.எம்.எஸ். செய்திகளை பார்வேர்ட் செய்வதும் டெலீட் செய்வதும் முடியாததாக இருந்தது. இப்போது வந்துள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் இந்த வசதியினை வழங்குகிறது. அத்துடன் எஸ்.எம்.எஸ். செய்திகளை அமைக்க மற்றும் படிக்க லேண்ட்ஸ்கேப் தோற்றத்தில் திரையினை அமைத்துக் கொள்ளலாம்.


3. MMS: Multimedia Messaging Service. இந்த வசதி 3ஜி ஐ–போன் களுக்கு மட்டும் கிடைக்கும் வகையில் ஓ.எஸ். அமைக்கப்பட்டுள்ளது. இனி எம்.எம்.எஸ். வழியில் இந்த வசதியைப் பயன்படுத்தி படங்கள், பைல்கள், மற்றவர் தொடர்பு எண்கள், முகவரிகள் ஆகியவற்றை அனுப்பலாம். வீடியோ பைல்கள் அனுப்ப முடியுமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.


4. Voice Memo: இது முற்றிலும் புதியதொரு வசதி. ஐ–போனில் உள்ளாக அமைக்கப்பட்டுள்ள மைக் மற்றும் ஐ–பாட் டச் சாதனத்தில் இணைக்கப்பட்டுள்ள மைக்கினைப் பயன்படுத்தி நம் ஒலியைப் பதிவு செய்திடலாம். பின் அதனை எம்.எம்.எஸ். அல்லது இமெயில் மூலம் அனுப்ப பைலைச் சுருக்கலாம். இந்த் வசதியும் வாய்ஸ் மெமோ ரெகார்டர் வசதியும் சென்ற ஆண்டு முதல் ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கிறது.


5. Calendar: மேக் ஓ.எஸ். மற்றும் ஐ–கால் புரோகிராம்களில் உள்ள தரப்படுத்தப்பட்ட காலண்டர் கூகுள், யாஹூ, ஆரக்கிள் மற்றும் பலரால் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது ஐ–போனுடன் இது தரப்படுவதால் ஸ்போர்ட்ஸ், தேசிய விடுமுறை நாட்கள் மற்றும் பல விடுமுறை மற்றும் பணி நாட்களை நினைவு படுத்தும் வகையில் செட் செய்திடலாம். இவை ics பார்மட்டில் அமையும்.

6. ஸ்பாட் லைட் சர்ச் (Spotlight Search): மேக் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் இதனை அறிந்திருப்பார்கள்.அதில் பயன்படுத்தப்படும் Spotlight Searchதொழில் நுட்பத்தினை ஆப்பிள் நிறுவனம் இப்போது தன் ஐ–போனுக்குக் கொண்டு வந்துள்ளது. போனில் உள்ள காண்டாக்ட், மெயில், ஐபாட் அப்ளிகேஷன், காலண்டர் மற்றும் நோட்ஸ் ஆகியவற்றில் தேடுதலை இந்த வசதி அளிக்கிறது.

7. சிம்ஸ் 3 கேம்ஸ் (The Sims 3):: ஐ–போன் மற்றும் ஐபாட் சாதனங்களில் இந்த கேம்ஸ் விளையாடும் வசதி இப்போது தரப்படுகிறது. ஆப்பிள் ஸ்டோர் மூலம் இதனை கட்டணம் செலுத்தி (ரூ.50) டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.

8. லைப் ஸ்கேன்: ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் துணைப் பிரிவான லைப் ஸ்கேன் நிறுவனம் ஒன் டச் என்னும் அப்ளிகேஷனை நீரிழிவு நோயாளிகளுக்காக வழங்கியுள்ளது. இதன் மூலம் இந்த நோயாளிகள் தங்கள் நோய் குறித்த தகவல்களைப் பதிவு செய்து அவற்றை சார்ட்ஸ் மூலம் காட்டலாம். முந்தைய மற்றும் தற்போதைய ரத்த சர்க்கரை அளவுகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.


மேலும் சில வசதிகளை இங்கு பட்டியலிடலாம். தனி மெசேஜ்களை பார்வேர்ட் மற்றும் டெலீட் செய்திடும் வசதி, ஸ்டீரியோ புளுடூத், டெக்ஸ்ட் அன்ட் நோட்ஸ், சபாரி பிரவுசருக்கு லாக் இன் பாஸ்வேர்ட், போனை அசைத்து அதன் மூலம் அடுத்த பாடல் அல்லது படம் இயக்குவது, யு–ட்யூப் அக்கவுண்ட் மற்றும் சப்ஸ்கிரிப்ஷன், டிவி காட்சிகளுக்கு கட்டுப்பாடு, ஆப்பிள் ஸ்டோரிலிருந்து திரைப்படங்கள் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்களை பெறல், வை–பி இணைப்புள்ள இடங்களில் தானாக இணைப்பு பெறுதல், வாய்ஸ் மெமோ அமைத்தல், வீடி யோ மற்றும் ஆடியோ ஸ்ட்ரீமிங், பிஷ்ஷிங் மெயில்களிலிருந்து பாதுகாப்பு, பலரும் எதிர்பார்த்து ஆனால் ஆப்பிள் தராத சில வசதிகளும் உள்ளன. அவற்றை இங்கு பட்டியலிடலாம்.


ஐ–போனில் பிளாஷ் சப்போர்ட் வசதியினை அனைவரும் எதிர்பார்த்தனர். ஏனென்றால் பிளாஷ் அடிப்படையில் இயங்கும் பல இணையப் பக்கங்களை ஐ–போனில் காண இயலவில்லை. கடந்த ஆண்டு இது குறித்து தெரிவிக்கையில் ஆப்பிள் இது குறித்து முயற்சிகளை எடுத்து வருவதாக அறிவித்தது. ஆனால் அந்த வசதி இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இல்லை. பிளாஷ் வசதிக்குப் போட்டியாகத் தன் சில்வர் லைட் வசதியை மைக்ரோசாப்ட் நிறுவனம் முன்னிறுத்துவதால் பிளாஷ் வசதியினை ஆப்பிள் தன் சாதனங்களில் தரும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.


ஒரு அப்ளிகேஷன் இயக்கத்தில் இருக்கையில் இன்னொரு அப்ளிகேஷனை இயக்கும் வசதியினை ஆப்பிள் தர விரும்பவில்லை. ஆனால் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆப்பிள் இது பேட்டரியின் சக்தியை வீணாக்கும் என அறிவித்துள்ளது. ஆப்பிள் இன்னும் தன் சாதனங்களில் வீடியோ ரெகார்டிங் வசதியைத் தரவில்லை. இது ஒரு குறையே. ( ஆனால் பல வாடிக்கையாளர்கள் இந்த தடையை உடைத்து சைகார்டர் (Cycorder) என்னும் அப்ளிகேஷனைப் புகுத்திப் பயன்படுத்தி வருகின்றனர்.)

ஐ–பாட் டச் மற்றும் ஐ–போனில் இயக்கப்படும் சபாரி பிரவுசரில் தேடுதல் வசதியை அனைவரும் எதிர்பார்த்தனர். இது தரப்படவில்லை. சாதாரண தொடக்கநிலை போன்களில் உள்ள வாய்ஸ் டயலிங் ஆப்பிள் சாதனங்களில் இல்லாததும் பெரிய குறையே. மற்றபடி புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய வசதிகளைத் தந்துள்ளது. மேலே குறிப்பிட்டவை அவற்றில் சிலவே. ஆப்பிள் வாடிக்கையாளர்கள் வெகுநாள் எதிர்பார்த்த பல விஷயங்கள் இதில் தரப்பட்டுள்ளன. தற்போது ஆப்பிள் சிஸ்டத்தின் அடிப்படையில் இயங்கும் டெவலப்பர்களுக்கு மட்டும் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. விரைவில் ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் என அறிவிக்கப்பட் டுள்ளது.

++ வர இருக்கும் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் M.O.S

மொபைல் போன் நிறுவனங்கள் பல கூடுதல் வசதிகளை மேலும் தரும் வகையில் பல மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை வடிவமைத்து வருவதாக அறிவித்துள்ளன. அவை எப்படி இருக்கும்; என்ன என்ன வசதிகள் தரும் என்பன குறித்து இங்கு காணலாம்.


ஆப்பிள் ஐ–போன் ஓ.எஸ்.3.0:இந்த ஆண்டு வெளியான அறிவிப்புகளில் அனைவரும் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்பது ஆப்பிள் நிறுவனத்தின் ஓ.எஸ். 3.0 தான். ஐ– போன் மற்றும் ஐ–பாட் டச் சாதனங்களுக்கு ஏறத்தாழ 100 புதிய வசதிகளைத் தர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட், காப்பி மற்றும் பேஸ்ட், அ2ஈக இணைந்த புளுடூத் இவற்றில் முக்கியமானவை ஆகும். தரப்பட இருக்கும் எம்.எம்.எஸ் வசதி மூலம் போட்டோ, போன் புக் குறிப்புகள், ஆடியோ மற்றும் இடக் குறிப்புகளுடன் கூடிய வீடியோ ஆகியவற்றை அனுப்பலாம்.

மெயில்களுக்குள்ளாகவும் ஐ–பாட் பைல்களிலும் தேடல் வசதி, புதிய ஸ்பாட் லைட் சர்ச் மூலம் சொல் கொடுத்து தேடல் ஆகிய வசதிகள் தரப்பட உள்ளன. மேலும் சிஸ்டம் வைட் லேண்ட்ஸ்கேப் கீ போர்டு, சபாரி தொகுப்பிற்கான பாஸ்வேர்ட் பாதுகாப்புடன் கூடிய வசதி, வை–பி இணைப்புள்ள இடங்களில் தானாக இணைப்பு பெறும் வசதி, அசைத்து பைல் மாற்றும் வசதி ஆகியவையும் தரப்படும். ஆப்பிள் நியூ மேப் இன்டர்பேஸ் பயன்படுத்தி கூகுள் மொபைல் மேப் சேவையினை இணைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்.


விண்டோஸ் மொபைல் 6.5 ஓ.எஸ்:
இந்த தொகுப்பு போனை இயக்கும் நம் விரல்களுக்கு பல வசதிகளைத் தரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதியதாக மை போன் (My Phone) என்ற வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. மொபைல் போனில் உள்ள தகவல்களை பாஸ்வேர்ட் மூலம் பாதுகாத்து இணைய தளத்தில் வைத்திடும் வசதி இது. எனவே நீங்கள் புதிய போனுக்கு மாறினால் இணைய தளத்திலிருந்து நொடிப் பொழுதில் உங்கள் பழைய போன் தகவல்கள் அனைத்தையும் ஏற்றிக் கொள்ளலாம். உங்களுடைய விண்டோஸ் லைவ் ஐ.டி. மூலம் மை –போன் வசதியைப் பயன்படுத்தி இணைய தள வசதியைப் பெறலாம். இந்த தளத்தினைப் போனில் பெற்று போனில் உள்ள பைல்கள் அல்லது பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களைக் கையாளலாம்.

இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் விண்டோஸ் லைவ் சர்வீசஸ் தருகின்ற லைவ் சர்ச், லைவ் மெசஞ்சர் ஆகிய வசதிகளைப் பெறலாம். இந்த சிஸ்டத்தில் டச் ஸ்கிரீன் வசதிகள் கூடுத லாக்கப்பட்டுள்ளன. போனை அசைத்து மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை இதில் மேற்கொள்ளலாம். போன் லாக் செய்யப்பட்டிருந்தாலும் ஸ்கிரீனுக்கான லாக் ஸ்கிரீனைத் திறந்து அதில் உள்ள வசதிகளைப் பயன்படுத்தலாம். இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இன்டர்நெட் மொபைல் பிரவுசர் ஒன்று இணைக்கப்படவுள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இதன் மூலம் டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் ஒன்றில் கிடைக்கும் இணைய மற்றும் கம்ப்யூட்டர் அனுபவம் கிடைக்கும்.

பாம் தரும் வெப் ஓ.எஸ்:


பாம் (palm) நிறுவனம் அண்மையில் தந்துள்ள பாம் பிரி டச் ஸ்கிரீன் ஸ்லைடர் போனில் அதன் வெப் ஓ.எஸ். இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் பல்வேறு பயன்பாடுகளை ஒருங்கிணைத்துத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மல்ட்டி டச் வசதி தரப்பட்டுள்ளது. வழக்கம்போல மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் தரும் ஜி.பி.எஸ்., வை–பி, அ2ஈக இணைந்த புளுடூத் ஆகியவையும் இதில் தரப்பட்டுள்ளன.

ஆண்ட்ராய்ட் ஓ.எஸ்:

ஓப்பன் ஹேண்ட்செட் அலையன்ஸ் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு ஆண்ட்ராய்ட் ஓ.எஸ். வெளிவந்தது. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வடிவமைப்பு தொழில் நுட்பங்கள் மற்ற டெவலப்பர்களுக்கு வழங்கப்படுகிறது.இதனால் பல இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்து செயல்பட பல புரோகிராம்கள் வெளிவர இருக்கின்றன. எந்த புதிய டெக்னாலஜி வந்தாலும் அதனுடன் இணையும் அளவிற்கு இது வளைந்து கொடுக்கக் கூடிய ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும்.


பிழைகள் திருத்தும் வசதி, எம்.எம்.எஸ். இணைப்புகளையும் சேவ் செய்திடும் வசதி, புதிய ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் இணைந்த செயல்பாடு, கட்டிங் அண்ட் பேஸ்டிங், தேடுதல் வசதியான பைண்ட் வசதி, கேமராவிற்கான வீடியோ ரெகார்டிங் ஆகியவையும் அளிக்கப்பட்டுள்ளன. பேசுவதைப் புரிந்து கொள்ளும் வசதியும் வர இருக்கிறது. டவுண்லோட் செய்வதில் இடை இடையே நிறுத்தி பின் விட்ட இடத்தில் இருந்து தொடரும் வசதியும் தரப்பட்டுள்ளது. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் அனைத்தும் தொடர்ந்து வடிவமைக்கப்பட்டு சீரமைக்கப்பட்டு வருகின்றன. இவை விரைவில் இந்திய போன்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

** "எந்திரன் தி ரோபோ " - படத்தின் முன்விமர்சனம் + கதை. { ROBOT }

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் `எந்திரன்' படக்கதை என்ன? என்பது வெளியே தெரிந்து விட்டது.

டைரக்டர் ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி- ஐஸ்வர்யாராய் நடிக்கும் `எந்திரன்' படப்பிடிப்பு மள, மள வென நடந்து வருகிறது.

இந்தியாவின் அதிக பட்ச, பிரமாண்ட பட்ஜெட் படமான `எந்திரன்' படக் கதையை எவ்வளவோ ரகசியமாக பாதுகாத்து வந்தும் விஷயம் வெளியே கசிந்து விட்டது.

`எந்திரன்' படக்கதை இது தான்!

ரஜினி ஒரு விஞ்ஞானி. அவர் புதுவகையான ஒரு `ரோபோ'வை கண்டு பிடிக்கும் முயற்சியில் இருக் கிறார்.

வரும் 2,200ம் ஆண்டில் `ரோபோ' எப்படி இருக்கும்ப அது என்னவெல்லாம் செய்யும் என்பதை கற் பனையாக வைத்து, முடி வில் அவர் ஒரு எந்திர மனிதனை பிரமிக்கும் வகையில் கண்டு பிடித்து விடுகிறார்.

இதன் மூலம் அவர் உலகிலேயே மிகவும் தலை சிறந்த விஞ்ஞானி என்ற பட்டத்தை பெறுகிறார்.

ரஜினி கண்டுபிடித்த `ரோபோ' எந்திரமும் ரஜினி போலவே உருவம் கொண் டது என்பது படத்தின் விசேஷ அம்சமாகும்.

இதன் மூலம் உலக நாடுகளில் ரோபோ தயாரிப்பு விஞ்ஞானிகளில் ரஜினி தவிர்க்க முடியாத மாபெரும் விஞ்ஞானியாக புகழ் பெற்று விடுகிறார்.

இதற்கிடையே ரஜினி- ஐஸ்வர்யாராய் இடையே காதல் மலர்கிறது. இருவரும் ஆடிப்பாடி மகிழ் கின்றனர். இந்த நிலையில் ரஜினி கண்டு பிடித்த `ரோபோ' வாலேயே அவரது காதலுக்கு பிரச்சினை ஏற்படுகிறது.

ஆமாம்! அந்த அரிய வகை ரோபோவை ஒரு வில்லன் கடத்திக் கொண்டு போய் விடுகிறான்.

வில்லன் கையில் சிக்கிய `ரோபோ' அவன் இஷ்டப்படி நடக்க ஆரம்பித்து விடுகிறது. ரஜினி பேச்சை கேட்க மறுத்து விடுகிறது.

இதன் மூலம் ஐஸ்வர்யாராய் காதல் உள்பட ரஜினி வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சினையாகி விடு கிறது.

ஒரு வழியாகப் போராடி, முடிவில் அந்த ரோபோவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப் புள்ளி வைக்கிறார் ரஜினி.

இந்தப் படத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் சந்திப்பு மற்றும் காதல் காட்சிகள் மட்டுமே `அவுட்டோர்' படப்பிடிப்புகளில் நடத்தப் படுகிறது.

எந்திரனின் `ரோபோ' ஏற்கெனவே தயாராகி விட்ட நிலையில் அதனை மும்பையில் ஒரு பங்களாவுக்குள் ரகசியமாக அடைத்து வைத்திருக்கிறார்கள்.

`ரோபோ'வுக்கு `அவுட் டோர்' சூட்டிங் கிடையாது. இந்த `ரோபோ' சிறியவர் முதல் பெரியவர் வரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் பல வகை அட்டகாசங்களைச் செய் கிறது.

`ரோபோ' வில்லன் கையில் கிடைக்கும் போது `இடைவேளை' விடுகிறார்கள். இதன் பின்னர் வில்லன் சொல் படி ஆடும் `ரோபோ' ஒவ்வொரு காட்சியிலும் ஏகப்பட்ட காமெடி ரகளை பண்ணுகிறது.

ரோபோவும், ஐஸ்வர்யாராயும் ஆடிப் பாடும் ஒரு காதல் காட்சி `கம்ப்ïட்டர் கிராபிக்ஸ்' யுக்தியில் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கப்போகிறது.

இந்தப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இது வரைஇல்லாத அளவுக்கு இசையில் `காமெடி' கலந்து பல புதுமையான டிïன்களை உருவாக்கி உள்ளார்.

இதற்கிடையே எண்ணூர் துறை முகத்தில் ஐஸ்வர் யாராயை ரோபோ காதலிக்கும் காமடி காட்சி கள் படமாக்கப்பட்டு உள் ளன. `ரோபோ' வின் காதல் தொல்லை பற்றி விஞ்ஞானி ரஜினியிடம் ஐஸ்வர்யா ராய் புகார் செய்கிறார். உடனே ரஜினி ரோபோவிடம் ஒழுங்காக இரு இல்லா விட்டால் பிரிச்சு போட்டுருவேன் என்று எச்சரிக்கப்பட்டது போன்று அக் காட்சிகள் எடுக்கப்பட்டன.

குலுமனாலியில் ரஜினி- ஐஸ்வர்யாராய் காரில் காதல் செய்வது போல் காட்சிகள் விரைவில் படமாக்கப்படுகின்றன. இதற்காக ரூ.90 லட்சம் செலவில் புதிய `பென்ஸ்' கார் வாங்கப்பட்டு உள்ளது.

எந்திரன் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் உருவாகிறது. `ரோபோ' செய்யும் சேஷ்டைகளுக்கு மொழியே தேவையில்லை என்பதால் உலக அளவில் இந்தப்படம் மிகப் பெரிய வசூல் சாதனையை ஏற் படுத்தும் என தெரிகிறது.

`எந்திரன்' அடுத்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாத வாக்கில் ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் உருவாகி வருகிறான்.எழுதியவர் : கார்த்திக்

Tuesday, May 26, 2009

** Wi-Fi தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல்கள்!


"ஒயர்லெஸ் ஃபிடெலிடி" என்ற தொழில் நுட்பம்தான் Wi-Fi தொழில் நுட்பம் என்றுஅழைக்கப்படுகிறது. லோக்கல் ஏரியா நெட்வொர்க் (LAN)) என்று அழைக்கப்படும்நெட்வொர்க்குகளின் ஒரு சில வகைகள் Wi-Fi தொழில் நுட்பம் என்றுஅழைக்கப்படுகிறது. அதாவது நெட்வொர்க்குகளுக்கும், கணினி, இணையதளஇணைப்புகளுக்குமான கம்பிவட தொழில் நுட்பத்திற்கு அடுத்தகட்டமாக இந்தகம்பியற்ற இணைப்புத் தொழில்நுட்பம் தற்போது வெகு வேகமாகபரவலாகிவருகிறது.

முறையான பாதுகாப்பு, தடுப்பு ஏற்பாடுகள் இல்லையெனில், Wi-Fi நெட்வொர்க்கை யார் வேண்டுமானாலும் அனுமதியின்றி பயன்படுத்தி எந்தவிதமான நாசவேளைகளிலும் ஈடுபடலாம் என்பதே தற்போது எழுந்துள்ள அச்சம்.


இந்தியா தற்போது தகவல் தொடர்பியலில் புரட்சியை எதிகொண்டு வருகிறது. மிகப்பெரிய செல்பேசி சந்தையாக இந்தியா வளர்ந்து வரும் நிலையில் இந்ததொழில் நுட்பமும் இந்தியாவில் அதிக வளர்ச்சியை பெறும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வர்த்தகத் துறைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், இதனால் மக்கள்வாழ்முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றால் கணினிகள், லேப்டாப்கள், அடுத்த தலைமுறை அதி தொழில் நுட்ப ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும்பிற கைவழி பயன்பாட்டு மின்னணுக் கருவிகளின் தேவை கணிசமாக பெருகிவருகிறது. இதனுடன் சேர்ந்து 24 மணி நேர இணைப்புச் சேவை, பரவலானவிரிவலை (பேண்ட்வித்) ஆகியவற்றிற்குமான தேவைகளும் கூடி வருகிறது.

இந்த மாற்றங்களுக்கு ஈடுகொடுக்ககூடிய ஒரு தொழில் நுட்பமான Wi-Fi தொழில்நுட்பம் தற்போது இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வீடுகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில்விரும்பத்தகுந்த ஒரு இணைப்புத் தொழில்நுட்பமாக அசுர வளர்ச்சி கண்டுள்ளது.இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கிய Wi-Fi அலையன்ஸ் நிறுவனத்தின்கணிப்பின்படி தற்போது Wi-Fi தொழில் நுட்பத்திற்கான இந்திய சந்தை 270 மில்லியன் டாலர்கள். 2011-12ஆம் ஆண்டுவாக்கில் இது 900 மில்லியன் டாலர்கள்சந்தையாக வளர்ச்சியடையும்.

ஆனால்... இந்த தொழில் நுட்பம் பல பாதுகாப்பு கவலைகளையும், அச்சுறுத்தல்களையும் அளிக்க துவங்கியுள்ளது. சமீபத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு குறித்து விசாரணை மேற்கொள்கையில், பாதுகாப்பு நிறுவனங்கள், இதற்கு காரணமான ஒரு மின்னஞ்சலை கண்டுபிடித்துள்ளது. அதனை பின்பற்றிச்செல்கையில் கென் ஹேவுட் என்ற அமெரிக்க குடிமகனின் கணினிக்குஇட்டுச் சென்றுள்ளது.

அதாவது அந்த அமெரிக்கக் குடிமகனின் கணினி ஹேக் செய்யப்பட்டு அதன்வழியாக இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், இந்த தொழில் நுட்பம்நம்மிடையே சில கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.



அதாவது சரியாக கண்காணிக்கவில்லையெனில், Wi-Fi நெட்வொர்க்கில் உள்ளகுறைபாடுகளினால் ஹேக்கர்கள் எந்த ஒரு கணினி நெட்வொர்க்கிலும் புகுந்துநாச வேலைகளில் ஈடுபடமுடியும். இதனால் இதன் பயனாளர்களுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டிய கட்டாயம் பிறந்துள்ளது .



இதற்காக, வெள்ளை அறிக்கை ஒன்றையும் மஹிந்திரா ஸ்பெசல் சர்வீசஸ்குழுமம் (MSSG) வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்: "சிறப்பான பாதுகாப்பு செயல்முறைகள் - Wi-Fi -யின் அபாயங்கள் என்று அந்தவெள்ளை அறிக்கை தலைப்பிடப்பட்டுள்ளது.

Wi-Fi தொழில் நுட்பத்தினால் இணையதளம் உள்ளிட்ட இணைப்புகளில்நடந்துள்ள புரட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்கள் முதல் வீடுகள் வரை அதன் மீது ஈர்ப்பை அதிகரித்துள்ளது. அதன் பயனும், திறனும் மற்ற கம்பிவட இணைப்பு நெட்வொர்க்குகளை விட அதிகமானது. ஆனால் இது எவ்வளவு பயனுள்ளதோ அந்த அளவிற்கு பாதுகாப்பு அபாயங்கள் நிறைந்தது. எனவே இந்த குறிப்புகள் சிறந்த தடுப்பு உத்திகளை மேற்கொள்ள பயனுள்ளதாக அமையும்.

கம்பியற்ற இணைப்பு உங்கள் நெட்வொர்க்கை அடைய ஒரு பின்வாசல் வழி!

ஒயர்லெஸ் ஆக்சஸ் கார்டுகளின் மூலம் இயங்கும் லேப் டாப்கள், தானியங்கி இணைப்பு அமைப்புகள் ஆகியவை தற்போது பெருகி வருகிறது. அதாவது ஒயர்லெஸ் இணைப்பு பெற்றுள்ளவர்கள் தகவல்களை வான்வழியாக அனுப்புவதால், அதனை ஹேக் செய்வது சுலபம், அதாவது யார்வேன்டுமானாலும் அதனை பார்க்க முடியும். இதானல் ஹேக்கர்கள் எங்கிருந்தபடி வேண்டுமானாலும் நிறுவனங்களின் நெட்வொர்க்குகள் மட்டுமல்லாது ஒரு நாட்டின் பாதுகாப்பை தீர்மானிக்கும் ராணுவ சம்பந்தமான விஷயங்களையும் தகவல்களையும் வெளியிலிருந்தே அணுக முடியும்.

என்ன தவறு ஏற்பட முடியும்?

எதேச்சையாக அணுகுதல், அதாவது இதில் ஒரு பயனாளர் அடுத்ததாக உள்ளஒரு நிறுவனத்தின் ஊடுருவும் ஒயர்லெஸ் நெட்வொர்க் மூலம் ஒயர்லெஸ்அணுகல் புள்ளியைக் கைப்பற்றி அங்கிருந்து தகவல்களை திருடி என்னவேண்டுமானாலும் செய்யலாம்.

கெட்ட நோக்கத்துடன் அணுகுதல், இதில், ஹேக்கர்கள் ஒரு பொய்யானஅணுகல் இடங்களிலிருந்து தாங்கள் உருவாக்கிய ஒயர்லெஸ் கருவிகள் மூலம்எந்த ஒரு நெட்வொர்க்கையும் ஆட்கொண்டு, அதன் வழி செல்லும் தகவல்களைதிருடுவது.

தற்காலிக நெட்வொர்க்குகள், இதில் ஒயர்லெஸ் கணினிகளுக்கிடையே இணைப்பை ஏற்படுத்துவது, அதாவது ஒயர்லெஸ் அணுகல் இடம் என்ற ஒன்றுஇல்லாமலேயே.

உங்கள் ஒயர்லெஸ் அணுகல் புள்ளி ஒரு குறிப்பிட்ட பகுதியை பரவலாகக்கொண்டு இயங்குவதால் நீங்கள் ஒயர் மூலம் அனுப்பும் செய்திகள் மற்றும்கார்ப்பரேட் தரவுகளை (datas) தொலைதூரத்திலிருந்தே அணுக முடிவது.

இதனைத் தடுக்க உடனடியாக செய்ய வேண்டியது என்ன?

•ஒயர்லெஸ் கருவி அட்மினிஸ்ட்ரேட்டர் தான்தோன்றி கடவுச்சொல்லைஉடனடியாக மாற்றவும். உதாரணமாக ரீ செட் 123 அல்லது அது போன்ற பிறபொதுவான கடவுச்சொல் தானாகவே உங்கள் கணினியில் இருந்தால் அதனைஉடனடியாக மாற்றி வேறு கடவுச்சொல்லை வைக்கவும்.
•உங்கள் ஒயர்லெஸ் கருவி பயன்படுத்தக்கூடிய WPA/WEP பாதுகாப்புகுறியேற்றங்களை எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்கவும்.

பயனில் இல்லாத போது Wi-Fi மீடியாவின் இயக்கத்தை நிறுத்தி வைப்பது நல்லது. அல்லது பிளக்கை பிடிங்கி வைப்பதும் சிறந்தது.


•MAC முகவரி வடிக்கட்டி அமைப்பை ஏற்படுத்தி அதிகாரபூர்வ கருவிகளுக்குமட்டுமே இணைப்பை அனுமதிக்கவும்.


தானாகவே உள்ள சர்வீஸ் செட் ஐடென்டிஃபையர் (எஸ்.எஸ்.ஐ.டி.)ஐ உடனடியாகமாற்றவும்.


•தேவையில்லை என்றால் எஸ்.எஸ்.ஐ.டி. ஒலிபரப்புகளை நிறுத்தி விடுங்கள்.

திறந்த Wi-Fi நெட்வொர்க்குகளை தானாகவே இணைக்கும் அமைப்பின்இயக்கத்தை நிறுத்தி வைக்கவேண்டும்.


•உங்கள் ஒயர்லெஸ் பாதைகள் அனைத்திலும் ஃப்யர்வால்களை (Firewalls) உருவாக்கவும்.


•உங்கள் வளாகத்தின் மையப்பகுதியில் உங்கள் ஒயர்லெஸ் அணுகள் இடத்தைவையுங்கள். சுவற்றிலோ மூலைகளிலோ வைத்தால் கசிவுகள் ஏற்படும்.

இந்த குறிப்புகள், தனிப்பட்ட பயனர்களுக்கு ஓரளவிற்கு பொருந்தகூடியது. நிறுவனஙளும், அமைப்புகளும் இதனை பரந்துபட்ட அளவில்மேற்கொள்ளவேண்டியிருக்கும். ஒரே படித்தான பாதுகாப்பு முறைகளை இவைகடைபிடிக்க வேண்டும்.

என்ன தொழில் நுட்பத்தை கண்டுபிடித்தாலும், அதனை உடைத்து உள் நுழையும்தொழில் நுட்பத்தை இந்த தொழில் நுட்பங்களிலிருந்தே கண்டுபிடித்துவிடமுடிகிறது என்பதே இதன் மையப் பிரச்சனை. என்று தணியும் இந்தவலைப்பின்னல் பாதுகாப்பு தாகம்?

** தற்காலிக இமெயில் முகவரிகள்


நமக்கு தொல்லை தரும் வகையில் தொடர்பே இல்லாமல் பல இமெயில்கள் வருகின்றன. அதற்காக நாம் விரும்பும் புரோகிராம்களை டவுண்லோட் செய்திட முயற்சிக்கையில், பொருள்களை ஆன்லைனில் வாங்கிட விரும்புகையில், பயணங்களுக்கான டிக்கட்களை புக் செய்திட எண்ணுகையில் இமெயில் முகவரிகளைத் தராமல் இருக்க முடியாது.

அடிக்கடி இன்டர்நெட் சைட்டுகளில் உங்கள் இமெயில் முகவரிகளைத் தருகிறீர்களா? பொருட்கள் வாங்குகையில், ஏதேனும் புரோகிராம்களை டவுண்லோட் செய்து இறக்குகையில் அந்த செயல்பாட்டை முடித்துவைக்க நிச்சயமாய் உங்கள் இமெயில் முகவரி கேட்கப்படும். பின் அந்த முகவரிக்கு ஒரு லிங்க் அனுப்பப்பட்டு அதனைப் பெற்று நீங்கள் கிளிக் செய்தாலே அப்போது மேற்கொண்ட செயல்பாடு முற்றுப் பெறும். எனவேதான் நாம் நம் இமெயில் முகவரிகளைத் தர வேண்டியுள்ளது. இதனால் நம்முடைய இமெயில் முகவரிகள் பல தளங்களில் பதியப்படுகிறது. ஒரு சிலர் இது போல இமெயில் முகவரிகளைப் பெற்று வர்த்தக ரீதியாகச் செயல்பட்டு ஸ்பேம் மெயில் அனுப்பும் நிறுவனங்களுக்கு விற்றுவிடுகின்றனர்.

இதனால் நமக்கு தொல்லை தரும் வகையில் தொடர்பே இல்லாமல் பல இமெயில்கள் வருகின்றன. அதற்காக நாம் விரும்பும் புரோகிராம்களை டவுண்லோட் செய்திட முயற்சிக்கையில், பொருள்களை ஆன்லைனில் வாங்கிட விரும்புகையில், பயணங்களுக்கான டிக்கட்களை புக் செய்திட எண்ணுகையில் இமெயில் முகவரிகளைத் தராமல் இருக்க முடியாது. இந்த சிக்கலுக்கு என்னதான் தீர்வு? தற்காலிகமாக இமெயில் முகவரிகளை அமைத்துக் கொள்வதுதான். இதற்கென்றே சில தளங்கள் உள்ளன. இந்த தளங்களை கூகுள் சர்ச் இஞ்சின் மூலம் தேடிக் கண்டுபிடித்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். நான் தேடிய போது சில தள முகவரிகள் கிடைத்தன.

இவற்றில் ஒரு தளத்திற்குச் சென்றால் அவை தற்காலிக இமெயில் முகவரியைத்தரும். சிறிது காலம் பயன்படுத்திய பின்னர் விட்டுவிடலாம். அல்லது இந்த தளத்தில் இமெயில் முகவரியை உருவாக்கி அதற்கு வரும் மெயில்களை உங்கள் நிரந்தர இமெயில் முகவரிகளுக்கு பார்வேர்ட் செய்திடும் பணியையும் இந்த தளங்கள் மேற்கொள்கின்றன. இதனால் ஸ்பேம் போன்ற கூட்ட மெயில்களிலிருந்து நாம் தப்பிக்கலாம்.

அவற்றின் முகவரிகள் :

1. Mytrashmail

2. ExplodeMail

3. Mailinator

4. Temporaryinbox

5. Maileater

** விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக்

கம்ப்யூட்டரில் பைல்களைத் தொடர்ந்து எழுதுவதும் அழிப்பதுவுமாக இருக்கையில் அவை தொடர்ச்சியாக ஹார்ட் டிஸ்க்கில் எழுதப்படுவதில்லை. ஏனென்றால் அவ்வப்போது பைல்களை அழிக்கையில் ஏற்படும் வெற்றிடங்கள் தொடர்ச்சியாக அடுத்த பைலுக்குக் கிடைப்பதில்லை. இதனைச் சரி செய்திடத்தான் விண்டோஸ் நமக்கு டிபிராக் (‘Defrag’) என்னும் புரோகிராமினைத் தந்துள்ளது.

இதன் மூலம் துண்டு துண்டாக ஹார்ட் டிஸ்க்கில் எழுதப்படும் புரோகிராம்கள் மீண்டும் ஓரளவிற்குத் தொடர்ச்சியாக எழுதப்படுகின்றன. இவ்வாறு எழுதப்பட்ட பின் இந்த பைல்களை ஹார்ட் டிஸ்க்கில் இருந்து படிப்பது விரைவாக நடக்கிறது. எனவே இந்த டிபிராக் செயல்பாட்டினை நாம் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் ஹார்ட் டிஸ்க்கில் வெற்றிடங்கள் சிதறலாக இல்லாமல் தொடர்ச்சியாக நமக்குக் கிடைக்கிறது. ஆனால் ஒரு முறை டிபிராக் செய்திட கம்ப்யூட்டர் பிராசசரின் வேகம் மற்றும் ஏற்கனவே பைல்கள் ஹார்ட் டிஸ்க்கில் எழுதப்பட்ட விதம் ஆகியவற்றின் அடிப்படையில் நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இது சில வேளைகளில் நம் பொறுமையைச் சோதிக்கும் வகையில் இருக்கும். அந்நேரத்தில் நம்மால் வேறு எந்த வேலையையும் கம்ப்யூட்டரில் மேற்கொள்ள முடியாது.

இவ்வாறு இல்லாமல், எப்போதெல்லாம் கம்ப்யூட்டரில் எந்த செயல்பாடும் மேற்கொள்ளப்படாமல், பைல்கள் எதுவும் எழுதப்படாமல் இருக்கும் நேரத்தில், பின்னணியில் இந்த டிபிராக் செயல்பாடு தானாகவே மேற்கொள்ளப்பட்டால் எப்படி இருக்கும். முதலில் நமக்கு நேரம் மிச்சமாகும். இரண்டாவதாக டிபிராக் உடனுடக்குடன் செய்யப்படுவதால் புரோகிராம்களையும் பைல்களையும் இயக்குவது வேகமாகவும் எளிதாகவும் மேற்கொள்ளப்படும்.

இந்த வேலையைத்தான் Smart Defrag செய்கிறது. இது ஒரு இலவசமாக டவுண்லோட் செய்யப்படக் கூடிய புரோகிராம். இதனைப் பதிந்துவிட்டால் எப்போதெல்லாம் உங்கள் கம்ப்யூட்டர் ஒன்றுமே செய்யாமல் சும்மா இருக்கிறதோ அப்போதெல்லாம் ஸ்மார்ட் டிபிராக் செயல்பட்டு ஹார்ட் டிஸ்க்கை ஒழுங்கு செய்கிறது. மீண்டும் நீங்கள் கம்ப்யூட்டரில் பணியாற்றத் தொடங்கியவுடன் தற்காலிகமாகத் தன் செயல்பாட்டினை நிறுத்தி வைக்கிறது. நீங்கள் உங்கள் வேலையை நிறுத்தும் வரை காத்திருக்கிறது.

பின் மீண்டும் நீங்கள் வேலையை நிறுத்தியவுடன் தன் பணியை விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறது. இதனால் நாம் கம்ப்யூட்டரை டிபிராக் செய்வது குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. இந்த புரோகிராமை பின்னணியில் இயங்கச் செய்துவிட்டு நம் இஷ்டப்படி கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டிருக்கலாம். நம் சிஸ்டமும் ட்யூன் செய்யப்பட்டு எப்போதும் விரைவாகவும் எளிதாகவும் இயங்கும்.

இந்த மென்பொருளை இலவசமாக டவுண்லோட் செய்ய இங்கே கிளிக்செய்யுங்கள்

Saturday, May 23, 2009

** {MOBILE} மொபைல் போன் பாதுகாப்பு வழிகள்

1. மொபைல் போன்களுக்குள் திரவங்கள் செல்வது வெகு எளிது. இதனைத் தடுப்பது மிக மிகக் கடினம். தண்ணீர், எண்ணெய், பால், டீ, கூல் ட்ரிங்க், ஷேவிங் கிரீம் என எது வேண்டுமானாலும் மொபைல் உள்ளே செல்லலாம். எனவே இவற்றிலிருந்து கூடுதல் கவனத்துடன் தள்ளி இருக்க வேண்டும். ஈரப்பதத்தினால் போன் கெட்டுப் போனால் அதனைச் சரி செய்வது கடினம். அப்படிக் கெட்டுப் போனால் போனை விற்பனை செய்தவர் போன் வாரண்டி காலத்தில் இருந்தாலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்.

2. திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம்.

3. சூரிய ஒளியில் மொபைல் போன்களை அதிகம் வெளிக் காட்டக் கூடாது. இதன் மூலம் போனின் பளபளப்பு மற்றும் வண்ணம் மாறும் வாய்ப்புண்டு. சூரிய ஒளியினைத் தடுப்பதிலும் சிறிய பைகள் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் உதவுகின்றன.

4. ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம்.

5. எலக்ட்ரானிக் சாதனங்கள் அனைத்துமே தூசியினால் கெட்டுப் போகும் வாய்ப்புள்ளவை. எனவே நல்ல கவர் போட்டு மூடியவாறே பயன்படுத்துவது நல்லது.

6. உங்கள் மொபைல் போனில் ஏதேனும் ஒரு ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பைப் பதிந்து வைப்பது நல்லது.

7. விரலால் கீ பேடினை இயக்கவும். விரல் நகங்கள் மற்றும் கூர்மையான சாதனங்கள் கீ பேடிற்குத் தீங்கு விளைவிக்கும்.

8. வெகு காலத்திற்கு மொபைலைப் பயன்படுத்தப்போவது இல்லை என்றால் பேட்டரியினைக் கழற்றி வைக்கவும்.

9. மொபைல் போனுடன் எந்த துணைச் சாதனத்தை அல்லது பேட்டரியைப் பயன்படுத்துவதாக இருந்தாலும் மொபைலைத் தயாரித்த நிறுவனம் அங்கீகரித்த சாதனங்களை மட்டுமே பயன்படுத்தவும்.

10. சிறிய மொபைல் போனில் எக்கச்சக்க வசதிகளைத் தருவதில் இன்றைய மொபைல் நிறுவனங்கள் முயற்சித்து வடிவமைத்து வருகின்றன. இதற்கேற்ற வகையில் மொபைலில் பயன்படுத்தப்படும் சர்க்யூட் போர்டுகள் பல லேயர்களாக அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சிறிய தள வரிசைகளாக நிற்க வைக்கப்பட்டுள்ளதால் சிறிய அதிர்ச்சி கூட இவற்றின் செயல்பாட்டினை முடக்கும். இவற்றைத் தடுப்பதிலும் சிறிய போம் பைகள் அல்லது கவர்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும் இத்தகைய வழிகளில் சேதம் ஏற்பட்டாலும் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

11. அடிக்கடி சார்ஜ் செய்யப்படும் மொபைல் பேட்டரிகள் விரைவில் வீணாகும் வாய்ப்பு உண்டு. எனவே பேட்டரி சார்ஜர்களை எடுத்துச் சென்று தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தவும்.

12. நோக்கியா போன்கள் ரிசர்வ் பேட்டரியுடனேயே வருகின்றன. எனவே பேட்டரி சார்ஜ் தீருகையில் *3370# என்ற எண்ணைப் பயன்படுத்தவும். இந்த எண்ணை அழுத்தினால் ரிசர்வ் பேட்டரி செயல்படுத்தப்பட்டு மொபைலின் பேட்டரி திறன் 50% கூடுவதைக் காணலாம்.

13. மொபைல் போனுடன் வரும் மேனுவல் என்னும் பயன்படுத்துவதற்கான குறிப்பு புத்தகத்தினை படித்து தெரிந்து கொண்டு மொபைலைப் பயன்படுத்தவும்.

14. உங்கள் நெட்வொர்க்கினைத் தாண்டி விட்டீர்களா? மொபைல் போனை ஆப் செய்வது நல்லது. இல்லையேல் பேட்டரி பவர் வீணாகும்.

15. பேட்டரியை மொபைல் போனிலிருந்து வெளியே எடுக்கப் போகிறீர்களா? முதலில் மொபைலை ஆப் செய்துவிட்டு பின் எடுங்கள்.

16. தேவைப்படும்போது மட்டும் புளுடூத் வசதியை இயக்கவும். மற்ற நேரங்களில் அதனை ஆப் செய்து வைப்பது பேட்டரி மற்றும் உங்கள் மொபைல் போனுக்கு நல்லது.

Friday, May 22, 2009

++ நோக்கியா மொபைல் சில டிப்ஸ்

#7780# – பல செட்டிங்ஸ் அமைப்புகளை மாற்றி நீங்கள் விருப்பப்படும் வகையில் போன் செட்டிங்ஸை மாற்றிவிட்டீர்கள். ஒரு கட்டத்தில் பழைய பேக்டரி செட்டிங்ஸே இருந்தால் நல்லது என்று எண்ணுகிறீர்கள். அப்போது மொபைல் போனின் பேக்டரி அமைப்புகளை மீண்டும் கொண்டு வர இந்த கீகளை அழுத்த வேண்டும்.


#3283# – உங்கள் மொபைல் செட் எப்போது தயாரிக்கப்பட்டது என்று அந்த நாளை அறிய.

#746025625# – சிம் மூலம் ஓடிக் கொண்டிருக்கின்ற கடிகாரத்தினை நிறுத்த.

#67705646# – மொபைல் ஆப்பரேட்டரின் லோகோ திரையில் தோன்றுகிறதா? அதனை நீக்க விரும்புகிறீர்களா? இந்த கோட் எண்களை அமைத்து அழுத்தவும்.

#73# – விளையாடிக் கொண்டிருக்கும் கேம்ஸில் பெற்ற ஸ்கோர்களை புதியதாக செட் செய்திடவும் போன் டைமரை மாற்றவும் இது பயன்படும்.

#0000# – அல்லது * #9999# – உங்கள் மொபைல் போனில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பினை அறிய.

#06# – மொபைலின் அடையாள தனி எண்ணை அறிந்து கொள்ள.

#92702689# – மொபைல் போனின் வாரண்டி குறித்த தகவல்களை (சீரியல் எண், வாங்கிய நாள், ரிப்பேர் செய்த நாள், இதுவரை இயங்கிய லைப் டைம் ) அறிய இந்த கீகளை அழுத்தவும்.

#7760# – தயாரிப்பு வரிசை எண்ணை அறிய

#bta0# புளுடூத் மேக் அட்ரஸ் தெரிந்து கொள்ள.

#147# – நீங்கள் நோக்கியா மொபைல் போனில் வோடபோன் சர்வீஸ் பயன்படுத்துபவராக இருந்தால் இறுதியாகப் பயன்படுத்திய போன் எண்ணை அறிந்து கொள்ள.

#2640# – மொபைல் போனின் செக்யூரிட்டி கோட் குறித்து அறிய.

#7328748263373738# – போனில் பதிந்து தரப்பட்டிருக்கும் டிபால்ட் செக்யூரிட்டி கோட் குறித்து அறிந்து கொள்ள.

#43# – கால் வெயிட்டிங் நிலை குறித்து அறிய.

#2820# – புளுடூத் தகவல் தெரிந்து கொள்ள.

#7370# – மொபைல் போன் மெமரியை பார்மட் செய்திட .

#delset# # – ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இமெயில் செட்டிங்ஸ் அமைப்பினை அழித்திட.

#pw+1234567890+1# – மொபைல் செட்டின் லாக் ஸ்டேட்டஸ் குறித்து தெரிந்து கொள்ள.

#pw+1234567890+4# – உங்கள் சிம் கார்டின் லாக் ஸ்டேட்டஸ் குறித்துத் தெரிந்து கொள்ள.

++ இலவச தரவிறக்க மென்பொருட்கள்

இன்டர்நெட் பயன்பாடும் தகவல் பரிமாற்றமும் பெருகி வரும் இந்நாளில் எளிதான வேகமான டவுண்லோட் செய்திடும் புரோகிராம்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. இன்டர்நெட் இணைப்பு வழங்கும் வேகத்தைப் பயன்படுத்தி நாம் டவுண்லோட் செய்திடும் பைல்களை எந்த சிக்கலுமின்றி வேகமாக இறக்கித் தர நமக்கு டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்கள் தேவைப்படுகின்றன.

அவ்வகையில் இணையத்தில் பல இலவச புரோகிராம்கள் நமக்கு கிடைக்கின்றன. பயர்பாக்ஸ் தொகுப்புடன் இத்தகைய வசதி இணைந்தே இருந்தாலும் டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்கள் தரும் பல வசதிகள் அதில் இல்லை.

ஒரே பைலுக்கான பல டவுண்லோட் இணைப்புகள், பிரிவு பிரிவாக டவுண்லோட் செய்திடும் வசதி, பல பைல்களை ஒரே முறை கிளிக் செய்து டவுண்லோட் செய்திடும் வசதி போன்ற பல வசதிகளை இந்த டவுண்லோட் மேனேஜர்கள் தருகின்றன. பொதுவாக இந்த கூடுதல் வசதிகள் எல்லாம் இத்தகைய புரோகிராம்களில் கட்டணம் செலுத்திப் பெறும் பதிப்புகளில் மட்டுமே கிடைக்கும். ஆனால் இலவச புரோகிராம்கள் அதிகமான எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டு கிடைக் கும் இந்நாளில் மேல் குறிப்பிட்ட வசதிகள் இலவசமாகக் கிடைக்கும் புரோகிராம்களிலேயே தரப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு சில டவுண்லோட் மேனேஜர்களில் அதிகமான எண்ணிக்கையில் இந்த வசதிகள் தரப்பட்டிருப்பது இன்னும் சிறப்பாகும். அவற்றில் மிகச் சிறந்த மூன்று டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்கள் குறித்து இங்கு தகவல்கள் தரப்படுகின்றன.

Free Download Manager

1. புரோகிராம் பெயர் : FreeDownload Manager

2. வழங்குபவர் : FreeDownload Manager.org

3. தரவிறக்க தள முகவரி: இங்கே கிளிக் செய்யவும்

4. பைல் அளவு: 5754 கேபி.

இது ஒரு ஓப்பன் சோர்ஸ் சாப்ட் வேர் தொகுப்பு. இதன் பெயருக்கேற்ற வகையில் சிறப்பான பல வசதிகளை இந்த புரோகிராம் தருகிறது. அனைத்து பிரவுசர் தொகுப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது. மிக அழகாக வடிவமைக்கப்பட்ட இன்டர்பேஸ் இயங்குகிறது. எப்.டி.பி. மற்றும் எச்.டி.டி.பி. வகைகளுக்குத் தனித்தனியே கிளையண்ட் புரோகிராம்கள் இணைக்கப்பட்டுள்ளன.

டவுண்லோட் செய்யப்பட வேண்டிய புரோகிராம்களை பகுதி பகுதிகளாகப் பிரித்து ஒரே நேரத்தில் வேகமாக டவுண்லோட் செய்து தருகிறது. டவுண்லோட் செய்திடும் நேரத்தில் இன்டர்நெட் தொடர்பு விட்டுப் போனாலோ அல்லது கம்ப்யூட்டர் முடங்கிப் போனாலோ அடுத்த முறை விட்டுப்போன இடத்திலிருந்து பைலை டவுண்லோட் செய்து இணைத்து தரும் திறன் கொண்டது. வீடியோ தளங்களிலிருந்து டவுண்லோட் செய்வதுடன் பார்மட்டுகளையும் மாற்றி தருகிறது. இதனுடன் இணைத்துத் தரப்பட்டுள்ள அப்லோட் மேனேஜர் புரோகிராம் பைல்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள அப்லோட் செய்திடும் வசதியைத் தருகிறது. ஒரு பைலை பல்வேறு லிங்க்குகளிலிருந்து ஒரே நேரத்தில் டவுண்லோட் செய்து தரும் திறன் கொண்டது. டவுண்லோட் செய்யப்படும் பைல்களை அதன் வகைகளுக்கிணங்க சேவ் செய்து நிர்வகிக்க உதவிடுகிறது.

ஒரு பைலை டவுண்லோட் செய்திடும் முன் அந்த பைல் குறித்து மற்றவர்கள் என்ன கருத்து தெரிவித்துள்ளார்கள் என்று காட்டப்படுகிறது. அதே போல நீங்களும் உங்கள் கருத்தைப் பதிவு செய்திடலாம். இதனால் கெடுதல் விளைவிக்கும் பைல்களை டவுண்லோட் செய்திடுவதனைத் தவிர்க்கலாம். மற்றவர்களுக்கும் எச்சரிக்கை செய்திடலாம்.

முழு இணையதளத்தையும் அப்படியே டவுண்லோட் செய்திடும் திறன் கொண்டது. இதற்கென எச்.டி.எம்.எல். ஸ்பைடர் என ஒரு புரோகிராம் பிரிவு தரப்படுகிறது. அதனால் தான் இதனை சைட் ரிப்பர் (‘site ripper’) என அழைக்கின்றனர்.

Orbit Downloader

1. புரோகிராம் பெயர் : OrbitDownloader

2. வழங்குபவர் : OrbitDownloader.com

3. தரவிறக்க தள முகவரி: இங்கே கிளிக் செய்யவும்

4. பைல் அளவு: 2217 கேபி.

டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்களின் லீடர் என இது செல்லமாக அழைக்கப்படுகிறது. ஆடியோ மற்றும் வீடியோ பைல்களை டவுண்லோட் செய்திட துணை புரியும் நோக் கத்துடன் இந்த புரோகிராம் உருவாக்கப்பட்டதாக தெரிகிறது. புதிய சில அம்சங்களுடன் வழக்கம்போலான இ.எக்ஸ்.இ. மற்றும் காம் பைல்கள் மட்டுமின்றி ஸ்ட்ரீமிங் மீடியா வகையைச் சேர்ந்த ஆடியோ மற்றும் வீடியோ பைல் களை டவுண்லோட் செய்திடுகிறது. யு–ட்யூப் மற்றும் மை ஸ்பேஸ் போன்ற சில தளங்களிலிருந்து நேரடியாக டவுண் லோட் செய்திடும் வசதியைத் தருகிறது. இன்றைக்குக் கிடைக்கும் சிறந்த டவுண் லோட் மேனேஜர் புரோகிராம்களில் ஒன்று எனப் பலராலும் பாராட்டுப் பெற்றது.

இதனைப் பயன்படுத்த எந்தவிதமான ரெஜிஸ்ட்ரேஷனும் தேவையில்லை. விளம்பரங்களோ அல்லது ஸ்பை வேர் புரோகிராம்களோ இல்லை என சான்று பெற்றது. யு–ட்யூப் வீடியோக்களை டவுண்லோட் செய்திட இது மிக உகந்தது என பாராட்டுப் பெற்றது. தற்போதைய பதிப்பு 2.7.3.

Flash Get

1. புரோகிராம் பெயர் : FlashGet

2. வழங்குபவர் : Trend Media

3. தரவிறக்க தள முகவரி: இங்கே கிளிக் செய்யவும்

4. பைல் அளவு: 4520கேபி.

இன்டர்நெட்டில் மிக அதிகமான எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைக் கொண் டுள்ள புரோகிராமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. டவுண் லோட் செய்கையில் நாம் பொதுவாக எதிர்நோக்கும் இரண்டு பிரச்னைகளை இது எளிதாக தீர்த்து வைக்கிறது. முதலாவது வேகம்; இரண்டாவது டவுண்லோட் செய்யப் பட்ட பைல்களைக் கையாளும் முறை; அவற்றை சோதனை செய்துவகைப்படுத்தும் வழிகள்.

இந்த புரோகிராம் முதலில் சீன சொல்லை ஒட்டி ஜெட் கார் என அழைக்கப் பட்டது. இதன் புதிய பதிப்பு 1.9.6. இதில் மல்ட்டி சர்வர் ஹைபர் த்ரெடிங் டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது. இதனால் பல்வேறு புரோடோகால் முறைகளை இதில் பயன்படுத்தி டவுண் லோட் செய்திடலாம். இறக்கப் படும் பைலின் அளவிற்கேற்ப பைல் இறக்கப் படும் வேகம் 6 முதல் 10 முறை அதிகரிக்கப்படுகிறது.

டவுண்லோட் செய்யப் படும் பைலை பகுதிகளாகப் பிரித்து ஒரே நேரத்தில் இந்த பகுதிகளை டவுண்லோட் செய்து பின் இணைத்துத் தருகிறது. ஒரு பைல் மட்டுமல்ல, ஒரே நேரத்தில் பல பைல்களை இது போல பிரிவுகளாகப் பிரித்து டவுண்லோட் செய்கிறது. அத்துடன் எந்த நேரத்தில் எந்த பைலை டவுண்லோட் செய்திட வேண்டும் என வரையறை செய்திடலாம். இதனால் நம் இன்டர் நெட் இணைப்பு வேகத்தினை ஒட்டியும் நம் தேவையை பொறுத்தும் டவுண் லோட் செய்திட முடிகிறது.

இந்த புரோகிராமைப் பயன்படுத்துகையில் எந்த அட்–வேர் புரோகிராமும் குறுக்கிடாது. எந்தவிதமான ஸ்பைவேர் புரோகிராமும் இல்லை என்று பலராலும் கணிக்கப்பட்டுள்ளது. மிகக் குறைவான ராம் மெமரியைப் பயன்படுத்துவதால் டவுண்லோட் செய்திடுகையில் நம்முடைய வேலையை கம்ப்யூட் டரில் தொடர்ந்து மேற் கொள்ளலாம். டவுண்லோட் முடிந்தவுடன் தானாக கம்ப்யூட்டரில் உள்ள ஆண்டி வைரஸ் தொகுப்பினை இயக்கி டவுண்லோட் செய்யப் பட்ட பைலில் வைரஸ் எதுவும் இருக்கிறதா என்று சோதனை செய்கிறது.

ஒரே பைலுக்கான பல டவுண்லோட் இணைப்புகள், பிரிவு பிரிவாக டவுண்லோட் செய்திடும் வசதி, பல பைல்களை ஒரே முறை டவுண்லோட் செய்திடும் வசதிபோன்ற பல வசதிகளை இந்த டவுண்லோட் மேனேஜர்கள் தருகின்றன. அவற்றில் மிகச் சிறந்த மூன்று டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்கள் குறித்து இங்கு தகவல்கள் தரப்படுகின்றன. டவுண்லோட் செய்கையில் நாம் பொதுவாக எதிர்நோக்கும் இரண்டு பிரச்னைகளை இது தீர்த்து வைக்கிறது. முதலாவது வேகம்; இரண்டாவது டவுண்லோட் செய்யப்பட்ட பைல்களைக் கையாளும் முறை; அவற்றை சோதனை செய்து வகைப்படுத்தும் வழிகள்.


எழுதியவர் : கார்த்திக்

++ வைரஸ் புரோகிராமை பயன்படுத்துவது எப்படி?

ஆண்டி வைரஸ் புரோகிராம் பதிந்து வைத்திருக்கும் பலர் திடீரென என் ஆண்டி வைரஸ் புரோகிராமினையும் மீறி சில வைரஸ்கள் வந்து என் பொழைப்பையே கெடுத்துருச்சே! என்று அங்கலாய்ப்பார்கள். இந்த ஆண்டி வைரஸ் புரோகிராம்களே இப்படித்தான். வைரஸ்களை எதிர்த்து திடீரென வேலை செய்யாது என்று புலம்புவார்கள். நப்பாசையில் ஆண்டி வைரஸ் புரோகிராமினைப் பயன்படுத்தி ஸ்கேன் ஓடவிட்டுப் பார்ப்பார்கள்.

எந்த வைரஸும் இல்லை என்று செய்தி வந்தவுடன் நம் தலைவிதி அவ்வளவுதான் என்று கூறி டெக்னீஷியன் மூலம் வைரஸ்களைக் காலி செய்வார்கள் அல்லது இந்த புரோகிராம் சரியில்லை என்று வேறு ஒரு ஆண்டி வைரஸ் புரோகிராமிற்குத் தாவுவார்கள். இது எதனால் ஏற்படுகிறது? என்று சற்றுப் பார்ப்போம். நீங்கள் என்ன செய்கிறீர்கள். நீங்களே அல்லது யார் மூலமாவது ஒரு ஆண்டி வைரஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்கிறீர்கள். அதுவும் அவ்வப்போது நீங்கள் இன்டர்நெட்டில் உலா வருகையில், இமெயில் இறக்குகையில், பிளாஷ் டிரைவ் பயன்படுத்துகையில் சிகப்பு கட்டத்தைக் காட்டி இதில் வைரஸ் இருந்தது. நான் கிளீன் செய்துவிட்டேன் என்று காட்டுகிறது. உங்களுக்கு சந்தோஷமோ சந்தோஷம்.

ஆனால் சிறிது நாட்கள் கழித்து கம்ப்யூட்டரில் வைரஸ் இருக்கிறது என்று தெரிகிறது. அப்போது தான் முதல் பத்தியில் சொல்லப்பட்ட நிலைக்கு நீங்கள் தள்ளப்படுகிறீர்கள். இங்கு நீங்கள் செய்யத் தவறிய சில செயல்களையும் அதற்கான பரிகாரங்களையும் பார்ப்போம்.

1. ஆண்டி வைரஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்தவுடன் அதை மறந்துவிடக் கூடாது. அவ்வப்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் அதனை அப்டேட் செய்திட வேண்டும். அப்போதுதான் அண்மைக் காலத்தில் வந்த வைரஸ்களைக் கண்டறிவ தற்கான புரோகிராம்கள் டவுண்லோட் செய்யப்பட்டு உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராம் மேம்படுத்தப்படும். எனவே நீங்கள் ஸ்கேன் செய்வதாக இருந்தால் முதலில் இன்டர்நெட் இணைப்பு பெற்று உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராம் தந்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று அப்டேட் செய்திடவும். அதன்பின் ஸ்கேன் செய்திடவும்.

2. முதலில் உங்கள் ஆண்டிவைரஸ் புரோகிராமினை எப்படி அமைத்திருக்கிறீர்கள் என்று பார்க்கலாம். வழக்கமாக டாஸ்க் பாரில் வலது ஓரத்தில் இதன் ஐகான் இருக்கும். இதனை டபுள் கிளிக் செய்தால் இந்த புரோகிராம் திறக்கப்படும். ஐகான் இல்லையா? ஸ்டார்ட் கிளிக் செய்து புரோகிராம்ஸ் தேர்ந்தெடுத்தால் கிடைக்கும் பட்டியலில் ஆண்டி வைரஸ் புரோகிராமைக் காணலாம். அங்கு கிளிக் செய்திடலாம்.

3. இது திறந்தவுடன் உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராமின் மெயின் பக்கத்தில் நீங்கள் இருப்பதைக் காணலாம். இதில் இந்த புரோகிராமின் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஏதுவான பிரிவுகள் இருக்கும். அனைத்தையும் பார்த்து ஸ்கேன் செய்வதற்கான பட்டனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும்.

4. ஸ்கேன் டேபைக் கிளிக் செய்தவுடன் குறிப்பிட்ட டிரைவ் அல்லது அனைத்து டிரைவ்களையுமா எனத் தேர்ந்தெடுக்கும் வசதி கிடைக்கும். அனைத்து டிரைவ்களையும் அல்லது முழு கம்ப்யூட்டரையும் ஸ்கேன் செய்திடும் வசதியினைத் தேர்ந்தெடுக்கவும். உடனே ரிபோர்ட் விண்டோ ஒன்று திறக்கப்படும். ஸ்கேன் முடிந்தவுடன் ஸ்கேன் முடிந்ததாக அறிவிக்கப்பட்டு கண்டறியப்பட்ட வைரஸ்கள், அவை இருந்த பைல்கள், வைரஸ் அழிக்கப்பட்டுவிட்டதா, காப்பு இடத்தில் (குவாரண்டைன்) வைக்கப்பட்டுள்ளதா என்று காட்டப்படும்.

இவற்றை அழிப்பதற்கான ஆப்ஷன் உங்களிடமே விடப்படும். அதே மெயின் விண்டோவிலேயே தொடர்ந்து தானாகக் குறிப்பிட்ட கால அவகாசத்தில் தானாக ஸ்கேன் செய்திடும் பணியை செட் செய்திடவும் வாய்ப்பு தரப்படும். உங்கள் கம்ப்யூட்டர் ஸ்டார்ட் செய்யப்படும் போதெல்லாம் ஸ்கேன் செய்திடும் வகையிலோ அல்லது வாரம் ஒரு முறை மாதம் ஒரு முறையோ ஸ்கேன் செய்திட செட் செய்திடலாம்.

5. ஆட்டோமேடிக் ஸ்கேன் செய்திட எப்படி செட் செய்வது எனப் பார்ப்போம். முதலில் உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராமினைத் திறந்து கொள்ளுங்கள். அதன் பின் டூல்ஸ் (Tools) மெனு செல்லுங்கள். Scheduler என்பதைத் தேர்ந்தேடுங்கள். அதன்பின் Schedule Scan என்ற பிரிவிற்குச் செல்லுங்கள். (இந்த சொற்கள் சில ஆண்டி வைரஸ் புரோகிராமில் வேறு மாதிரியாக இருக்கலாம்) ஷெட்யூல் ஸ்கேன் தேர்ந்தெடுத்தவுடன் நியூ என்பதைத் தேர்ந்தெடுங்கள்.

இப்போது சில கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கும் வகையில் சில ஆப்ஷன்கள் காட்டப்படும். அவை Event Type, When To Do, How Often, Start Time எனப் பலவகைப்படும். இவற்றின் தன்மைக்கேற்ப உங்கள் முடிவுப்படி செட் செய்திடுங்கள். அனைத்தும் முடித்த பின் ஓகே கிளிக் செய்து வெளியேறுங்கள். இதன்பின் நீங்கள் செட் செய்த படி ஸ்கேன் தானாக நடைபெறும். கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

உங்கள் கம்ப்யூட்டர் வைரஸ் இல்லாமல் இயங்கிட எப்போதும் மேம்படுத்தப்பட்ட உயிர்த்துடிப்புள்ள ஆண்டி வைரஸ் புரோகிராம்களை வைத்திருக்கவும். நீங்கள் மறந்தாலும் அது தானாக இயங்கும்படி செட் செய்திடவும்.

Thursday, May 21, 2009

++ MGR ANIMATED {PURATCHI THALAIVAN} TRAILER VIDEO

video



உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி
உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி
உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி
புது விதியால் உலகை வெல்வோம்
புது விதியால் உலகை வெல்வோம்
புது விதியால் உலகை வெல்வோம்

++ IPL 2009 : அரை இறுதிக்கு அணிகள் தயார்


நாள்: மே 20

சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப்

சென்னை: 116 - 9
பஞ்சாப்: 92-8

ஆட்ட நாயகன்: முத்தையா முரளீதரன்


லீக் சுற்று ஆட்டங்கள் நாளையோடு முடிகின்றன. ஆனால் அரை இறுதியில் ஆடவிருக்கும் அணிகள் எவை என்பது இன்றைக்கே உறுதியாகிவிட்டது (டெல்லி, சென்னை, டெக்கான், பெங்களூர்). பஞ்சாப் அணி இன்று ஜெயித்திருந்தால் அது சென்னையை மூன்றாம் இடத்துக்குத் தள்ளிவிட்டு இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கும். அந்த அணி தோற்றதால் நாளைய ஆட்டங்கள் அரை இறுதிக்கான அணிகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்ற நிலை உருவாகியிருக்கிறது. டெக்கான் – பெங்களூர் போட்டியின் முடிவு இருவரில் யாருக்கு மூன்றாம் இடம் என்பதை மட்டுமே தீர்மானிக்கும்.

இன்றைய ஆட்டத்தில் டாஸை வென்ற சென்னை மட்டை பிடிக்கத் தீர்மானித்ததும் இரு தினங்களுக்கு முன்பு போலவே இப்போதும் மட்டையிலிருந்து வாண வேடிக்கைகள் நிகழும் என்று தோன்றியது.

முதல் 5 ஓவர்கள் மட்டையாளர்களுக்குச் சாதகமாகவே இருந்தன. 4.5 ஓவர்களில் 40 ரன் எடுத்திருந்தபோது ஜார்ஜ் பெய்லி ரன் அவுட் ஆனார். 32 ரன் எடுத்த பார்த்திவ் படேல் 7ஆம் ஓவரில் அவுட் ஆனார். 10ஆம் ஓவரில் பத்ரிநாத்தும் மகேந்திர சிங் தோனியும் அவுட் ஆனார்கள். 10 ஓவர் முடிவில் ஸ்கோர் 70-4.

ரன் வேகத்தைக் கூட்ட முடியாத அளவுக்குப் பஞ்சாபின் பந்து வீச்சு அமைந்தது. 14, 15 ஓவர்களில் முறையே சுரேஷ் ரைனாவும் (20) மன்ப்ரீத் சிங் கோனியும் (7) அவுட் ஆனார்கள். அதன் பிறகு ரன் வேகம் மிகவும் குறைந்தது. மொத்தம் 116 ரன்களுக்கு மேல் எடுக்க முடியவில்லை. சைமன் கேட்டிச், யுவராஜ் சிங், குமார சங்கக்காரா ஆகிய வலுவான மட்டையாளர்களைக் கொண்ட பஞ்சாப் அணி இந்த ரன்னை எளிதாக எடுத்துவிடும் என்றே தோன்றியது.

ஆனால் சென்னையின் பந்து வீச்சு இன்று மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக ஸ்பின்னர்கள் முத்தையா முரளீதரனும் ரைனாவும் ஆர். அஸ்வினும் அருமையாகப் பந்து வீசினார்கள். சன்னி சோஹல் தொடக்கத்திலேயே அவுட் ஆனாலும் கேட்ட்டிச்சும் லூக் போமர்பேஷும் கவனமாக ஆடினார்கள். ஏழாம் ஓவரில் முரளீதரன் கேட்டிச்சை அவுட் ஆக்கினார். அதன் பிறகு வந்த யுவராஜ் சிங் மிக மிக கவனத்தோடு ஆடினார். 10 ஓவர் முடிவில் 42-2.

12ஆம் ஓவரில் முரளீதரன் மீண்டும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த போமர்பேஷை (26) அவுட் ஆக்கினார். அடுத்த ஓவரில் ரைனா வீசிய ஒரு பந்து எதிர்பார்த்த அளவு எழும்பாமல் யுவராஜ் சிங்கின் மட்டைக்குக் கீழே சென்று ஸ்டெம்பை வீழ்த்தியது. 6 ரன்கள் மட்டுமே எடுத்து மிகுந்த ஏமாற்றத்துடன் வெளியேறியது பஞ்சாப் சிங்கம்.

அப்போதும் பஞ்சாபின் நம்பிக்கை உயிர்ப்புடன் இருந்தது. சங்கக்காரா, மோட்டா, இர்ஃபான் பத்தான், பிரெட் லீ ஆகியோர் இருந்தார்கள். 48 பந்துகளில் 68 எடுக்க வேண்டும். 15 ஓவர் முடிவில் 5 ஓவரில் 58 அடிக்க வேண்டிய நிலை. அடுத்த ஓவர், ஆட்ட நிலவரத்தைச் சென்னையின் பக்கம் திட்டவட்டமாகத் திருப்பியது. அஸ்வின் விசிய அந்த ஓவரில் இரண்டு விக்கெட்கள் விழுந்தன. அஸ்வினின் பந்தை அவர் தலைக்கு மேல் தூக்கி அடித்தார் சங்கக்காரா. உயரமான மனிதர் அஸ்வின் மேலும் உயர எழும்பி அந்தப் பந்தைப் பிடித்து சங்கக்காராவை வெளியேற்றினார். அதே ஓவரில் மோட்டாவும் அவுட்.

எடுக்க வேண்டிய ரன் விகிதம் அதிகரித்த நிலையில் ஆவேசமாக ஆடிய லீயின் விக்கெட்டை ரைனா வீழ்த்தினார். 17 ஆம் ஒவர் முடிவில் 18 பந்துகளில் 48 அடிக்க வேண்டிய நிலை. 18ஆம் ஓவரில்தான் பாலாஜியைப் பந்து வீச அழைத்தார் தோனி. அந்த ஓவரை அருமையாக வீசினார் பாலாஜி. பத்தான் கொடுத்த கேட்சை கோனி நழுவவிட்டார். அடுத்த ஓவரில் துஷாராவின் பந்தில் பத்தான் வீழ்ந்தார். கடைசி ஓவரில் 32 ரன் எடுக்க வேண்டும். களத்தில் பியுஷ் சாவ்லாவும் ரமேஷ் பொவாரும் இருந்தார்கள். பாலாஜி பந்து வீசினார். 7 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன. சென்னை வெற்றி பெற்றது.

ரன் எடுக்கக் கஷ்டமான இந்த ஆடுகளத்தில் ஸ்பின்னர்களை தோனி பயன்படுத்திய விதம் சிறப்பாக இருந்தது. இந்தத் தொடர் முழுவதும் ஓரிரு ஆட்டங்கள் தவிர சிறப்பாக ஆடாத யுவராஜ் சிங் இந்த மேட்சில் மிகவும் பொறுமையோடு ஆடியது அடுத்து வந்தவர்களின் சுமையைக் கூட்டிவிட்டது. ஒற்றை ரன்கள் எடுத்து ஸ்கோரைச் சீராக உயர்த்த அவரால் முடிந்திருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறாக இருந்திருக்கலாம்.

4 ஓவர்களில் 8 ரன் கொடுத்து 2 விக்கெட் எடுத்த முரளீதரன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். சென்னை 17 புள்ளிகளுடன் வசதியாக இரண்டாம் இடத்தில் உள்ளது.


Wednesday, May 20, 2009

** குழந்தை உருவ ரோபோ

ஐரோப்பிய விஞ்ஞானிகள் 3 வயது குழந்தையை மாடலாக வைத்து ஒரு அதிநவீன ரோபோவை உருவாக்கி சாதனை படைத்துள் ளனர். ஐரோப்பிய ஆணையத்தின் நிதி உதவி யுடன் ஐரோப்பாவில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள் 5 ஆண்டுகள் கூட்டாக இணைந்து இந்த ரோபோவை உருவாக்கி உள்ளன. இந்த ரோபோ ஊர்ந்து செல்லும். சுற்றிலும் நடப்பவற்றை பார்வையாலும், உணர்வாலும் உணரும். தனது இயந்திர கையால் பொருட்களை பற்றி வேலை செய்யும். மேலும் இந்த ஆண்டுக்குள் 20 பல்கலைக் கழகங்கள் தனித்தனியாக இதே போன்ற ரோபோவை உருவாக்க திட்டமிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

** உலகின் முதல் குளோனிங் ஒட்டகம்

ஓர் உயிரினத்தின் டி.என்.ஏ. செல்லை பயன்படுத்தி, அதே முகச்சாயல் கொண்ட மற்றொரு உயிரினத்தை உருவாக்குவதுதான் குளோனிங் முறையாகும். அந்த வகையில் உலகிலேயே குளோனிங் முறையிலான முதலாவது ஒட்டகக் குட்டியை துபையைச் சேர்ந்த ஒட்டக இனவிருத்தி மையம் அறிவித் துள்ளது. கடந்த மாதம் 8-ம் தேதி பிறந்த இந்தப் பெண் ஒட்டகக் குட்டிக்கு “இன்ஜாம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. பெண் ஒட்டகம் ஒன்றின் கருப்பையிலிருந்து எடுக்கப்பட்ட சினை முட்டைகளை செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்து, திரவ நைட்ரஜனை பயன் படுத்தி இந்த ஒட்டகம் உருவாக்கப்பட் டுள்ளது.

** செவ்வாய் கிரகத்தில் வசந்தகாலம்

செவ்வாயில் வசந்தகாலம் போன்ற அறிகுறிகள் காணப்படுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தற்போது நாசா விண்கலம் எடுத்து அனுப்பி உள்ள படங்களை வைத்து விஞ்ஞானிகள் இவ்வாறு தெரிவித் துள்ளனர். செவ்வாயின் மேற்பரப்பில் காலநிலை மாற்றங்களால், பனிக்கட்டிகளில் இருந்து கார்பன் டை-ஆக்சைடு வாயு நீராவி யாக வெளி வருகிறது. இந்த மாற்றங்களின் போது, பனிக்கட்டியில் உள்ள தூசுகளையும் அந்த வாயு வெளிக்கொண்டு வருகிறது. இந்த தூசுகள் பனிக்கட்டியின் மேற்பரப்பில் பஞ்சு வெடித்து சிதறியதுபோல் படிந்து ஒரு வினோதமான தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் இந்த தோற்றங்கள் நீடித்து இல்லாமல் மறைந்துவிடுவதும், பின்னர் வேறொரு இடத்தில் இதுபோன்ற தோற்றங்கள் ஏற்படுவதுமாக உள்ளது. இந்த மாற்றங்கள் பூமியில் நிகழும் பருவகால மாற்றங்கள் போல் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித் துள்ளனர்.

** மைக்ரோசாப்ட் சில்வர் லைட்


நீங்கள் இணையத்தில் அடிக்கடி பிரவுஸ் செய்து தகவல்களை டவுண்லோட் செய்திடும் பழக்கம் உள்ளவராக இருந்தால் அடோப் பிளாஷ், மேக்ரமீடியா பிளாஷ், அடோப் ஷாக்வேவ் மற்றும் மைக்ரோசாப்ட் சில்வர் லைட் குறித்த தகவல்களை அல்லது குறிப்புகளைத் தெரிந்திருப்பீர்கள். நீங்கள் சற்று திடுக்கிடுவது தெரிகிறது. முதலில் சொல்லப்பட்டிருப்பவை குறித்து படித்திருக்கிறோம்; அதென்ன சில்வர் லைட் என்று வியக்கிறீர்களா!

ஆம், இது அடிக்கடி கேள்விப்படாததுதான்; ஆனால் எளிதாகக் கிடைக்கக் கூடியதும் கூட. முதலில் இது என்ன சில்வர் லைட் என்று பார்ப்போம். அடிப்படையில் உங்களிடம் சில்வர் லைட் தொகுப்பு கம்ப்யூட்டரில் இல்லை என்றால் அதனை டவுண்லோட் செய்து பதித்திட வேண்டியதிருக்கும். பதியும் போது உங்கள் ஹார்ட் டிஸ்க்கின் இடத்தை அது எடுத்துக் கொள்ளும் தான். ஆனால் அதனால் பயன்களும் உண்டு. அடோப் பிளாஷ் மற்றும் ஷாக்வேவ் தொகுப்புகளுக்கு இணையான மைக்ரோசாப்ட் தொகுப்பாகும்.

முதலில் http://www.microsoft.com/silverlight என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திற்குச் செல்லுங்கள். தளத்தில் Install என்பதில் கிளிக் செய்திடுங்கள். அது தானாகப் பதிந்து முடித்தவுடன் கம்ப்யூட்டரை மீண்டும் ஸ்டார்ட் செய்திட வேண்டியதிருக்கும். மைக்ரோசாப்ட் சில வேளைகளில் இந்த தொகுப்பில் மட்டுமே இயங்கக் கூடிய சில பைல்களைத் தரும். அப்போது இந்த தொகுப்பின் பயன் கிடைக்கும். இல்லை என்றாலும் அடோபின் தொகுப்பிற்குப் பதிலாக இதனை இயக்கி பார்க்கலாம்.

நன்றி :: கார்த்திக்
உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.