Friday, April 30, 2010

> அ‌ஜீத் - பிறந்தநாள் அறிக்கை

மே 1 அ‌ஜீத்தின் பிறந்தநாள். கார் ரேஸுக்காக வெளிநாட்டில் இருக்கும் அ‌ஜீத் தனது ரசிகர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நான் இப்போது ஃபார்முலா 2 கார் ரேஸுக்காக ஸ்பெயின் வந்துள்ளேன். எனது பிறந்தநாளன்று சென்னையில் இருக்க மாட்டேன். எனவே என் மீதுள்ள அன்பினால் ரசிகர்கள் நே‌ரில் வருவதையோ அல்லது ஆடம்பரமாகவும் விம‌ரிசையாகவும் என் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதையோ தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியிருக்கும் அ‌ஜீத், பொதுமக்களுக்கு இடையூறு செய்யாமல், விளம்பரம் இல்லாமல் செய்யப்படும் நலத்திட்டங்களில் ஈடுபடுங்கள் என்றும் கண்ணியத்துடன் கட்டுப்பாடு மீறாமல் எளிமையாக பிறந்தநாள் விழா கொண்டாடினால் அதுவே நீங்கள் எனக்கு தரும் பிறந்த நாள் ப‌ரிசாகும் எனவும் அறிக்கையில் தெ‌ரிவித்துள்ளார்.
மேலும் அறிய

> சிக்கல் - விஜய் படத்துக்கு

விஜய்யின் 51வது படத்தை சித்திக் இயக்கி வருகிறார். மலையாளத்தில் இவர் இயக்கிய பாடிகா‌ர்ட் படத்தின் ‌‌ரீமேக்தான் இது. படத்துக்கு காவல்காரன் என்ற பெயர் ப‌ரிசீலனையில் உள்ளது.

இந்தப் படத்தின் ‌‌ரீமேக் உ‌ரிமை தன்னிடம்தான் உள்ளது என பாடிகா‌ர்ட் படத்தின் தயா‌ரிப்பாளர் சேம்ப‌ரில் புகார் கொடுத்திருப்பதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. பாடிகா‌ர்ட் ‌‌ரீமேக் உ‌ரிமை தன்னிடம் இருக்கும் போது, சித்திக் எப்படி விஜய்யை வைத்து அதே படத்தை தமிழில் இயக்கலாம் என்பது அவரது கேள்வி.

ஆனால் இதனை சித்திக் மறுத்துள்ளார். படத்தின் ‌‌ரீமேக் உ‌ரிமையை தான் யாருக்கும் அளிக்கவில்லை, படத்தின் கதை என்னுடையது, ‌‌ரீமேக் உ‌ரிமையும் என்னுடையதே என்கிறார் உறுதியாக.

காவல்காரன் பிரச்சனை கதவை தாண்டிவிட்டது. சின்ன புயலுக்குப் பிறகுதான் ஓயும் போலிருக்கிறது.
மேலும் அறிய

> குஷ்புக்கு ஆதரவாக தீர்ப்பு கற்புக்கு வெற்றியா? தோல்வியா?

கற்பு குறித்து குஷ்பு தெ‌ரிவித்த கருத்துகள் சட்டத்துக்கு உ‌ட்பட்டவை என்று தீர்ப்பு கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அவர் மீதான 22 வழக்குகளையும் தள்ளுபடி செய்தனர்.

2005 ஆம் ஆண்டு பிரபல வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த குஷ்பு, படித்த ஆண்கள் தனக்கு மனைவியாக வருகிற பெண் கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை என்று தெ‌ரிவித்தார். மேலும், திருமணத்துக்கு முன் உறவு வைத்துக் கொள்ளும் பெண்கள் கர்ப்பம் ஆகாமலும், பால்வினை நோய்கள் தாக்காமலும் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று தெ‌ரிவித்திருந்தார்.

குஷ்புவின் இந்த கருத்துகள் தமிழ் கலாச்சாரத்தை களங்கப்படுத்துவதாகக் கூறி பல்வேறு இடங்களில் அவருக்கெதிராக வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் குஷ்பு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் குஷ்பு.

இதனை விசா‌ரித்த நீதிபதிகள், குஷ்பு அரசியல் சட்டத்துக்கு புறம்பாக எதையும் கூறவில்லை, அவர் சொன்னது அவரது தனிப்பட்ட கருத்து, திருமணத்துக்கு முன் இரண்டு பேர் உறவு வைத்துக் கொள்வது சட்டப்படி தவறாகாது என்று தங்களது தீர்ப்பில் கூறியதோடு குஷ்பு மீதான 22 வழக்குகழையும் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.
மேலும் அறிய

> கமல்ஹாசன் மீதான வழக்கு தள்ளுபடி

தசாவதாரம் படம் உலகமெங்கும் வெளியாகி பெரும் லாபத்தை சம்பாதித்தது. உலக தொலைக்காட்சிகளில் பலமுறை ஒளிபரப்பும் செய்துவிட்டனர். இருந்தும் படம் மீதான வழக்கு மட்டும் தூவானம் போல் தூறிக் கொண்டிருந்தது.

தசாவதாரம் கதை என்னுடையது என்று உதவி இயக்குனர் செந்தில்குமார் வழக்கு தொடர்ந்திருந்தது அனைவருக்கும் தெ‌ரியும். கமல்ஹாசனின் கதையையும், செந்தில்குமா‌ரின் கதையையும் படித்துப் பார்த்த நீதிபதிகள் இரண்டு‌க்கு‌ம் சம்பந்தமில்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இந்நிலையில் கமலும், அவரது மேனேஜரும் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக புதுப் புகார் தந்தார் செந்தில்குமார். புகார் தந்தும் அதன் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது செந்தில்குமா‌ரின் குற்றச்சாற்று.

இதனை மறுத்த வழக்கறிஞர், கமல்ஹாசன் மீதும் அவரது மேனேஜர் மீதும் எந்த‌த் தவறும் இல்லை, இதுவொரு பொய் வழக்கு என்று வாதிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, குற்றச்சாற்றுக்கு எந்த முகாந்திரமும் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
மேலும் அறிய

Thursday, April 29, 2010

> சுறா படத்துக்கு சென்சார் U/A சான்றிதழ்

நடிகர் விஜய்யின் 50வது படம் சுறா. விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்த காதலுக்கு ம‌ரியாதை படத்தை தயா‌ரித்த சங்கிலி முருகன் 11 வருட இடைவெளிக்குப் பிறகு - அதாவது காதலுக்கு ம‌ரியாதைக்குப் பிறகு தயா‌ரித்திருக்கும் படம் இது.

அழகர்மலை படத்தை இயக்கிய எஸ்.பி.ராஜகுமார் சுறாவை இயக்கியிருக்கிறார். 2007ல் மலையாளத்தில் வெளியான அன்வர் ரஷீதின் சோட்டா மும்பை படத்தின் கதையை மேலோட்டமாக தழுவி சுறாவை எடுத்துள்ளனர். இதில் ஹீரோவாக நடித்தவர் மோகன்லால்.

காதலிக்காகவும், தங்கைக்காகவும் சண்டை போட்ட நான் இதில் ஊர் மக்களுக்காக சண்டை போட்டிருக்கிறேன் என்று சுறா பற்றி கூறுகிறார் விஜய். இவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் தமன்னா. மீனவ இளைஞனாக வரும் விஜய்யின் நண்பன் அம்ப்ரல்லாவாக வடிவேலு நடித்துள்ளார். இவர்கள் இருவரும் வரும் காட்சிகள் திரையரங்கை கலகலப்பாக்கும் என்றார் இயக்குனர். இவர்களுடன் ஸ்ரீமன், ‌ரியாஸ்கான, தேவ் கில் ஆகியோரும் நடித்துள்ளனர்.

சமாதானமாகப் போக நான் புறா இல்லடா... சுறா. விஜய் பேசும் பன்ச் வசனங்களில் இதுவும் ஒன்று. கொச்சி, தூத்துக்குடி, கடலூர் போன்ற கடலோரப் பகுதிகளில் படத்தை எடுத்துள்ளனர். மணிசர்மா இசையமைத்துள்ளார். அனைத்துப் பாடல்களும் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளன.

எம்.எஸ்.பிரபு, ஏகாம்பரம் இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். கனல் கண்ணன் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார்.

சங்கிலி முருகனின் முருகன் சினி ஆர்ட்ஸ் தயா‌ரித்திருக்கும் சுறாவின் ஒட்டுமொத்த விநியோக உ‌ரிமையை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கும் இப்படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
மேலும் அறிய

> இலங்கையில் தமிழ்ப் படத்துக்கு தடை

தமிழ்ப் படம் என்றதும் முதல்வ‌ரின் பேரன் தயா‌ரித்த படம் என்று துணுக்குற வேண்டாம். தடை போடும் நிலைமை அவர்களுக்கு ஏற்படாது என்பதை நாடறியும்.

இந்தத் தடை தமிழில் 12 தினங்களில் தயாரான சுரேஷ் ஜோகிமின் சிவப்பு மழை படத்துக்கு.

இலங்கை ராணுவத்தால் பாதிக்கப்படும் ஒரு இளைஞன் இலங்கை மந்தி‌ரியின் மகளை கடத்துகிறான். இந்த‌க் கதையை பாசிஸ ராஜபக்சேயின் அரசு எப்படி திரையிட அனுமதிக்கும்?

இந்தத் தடையின் காரணமாக ஈழத் தமிழர்களின் உணர்வை அப்படியே இப்படம் பிரதிபலித்திருப்பதாக யாராவது நினைத்தால் ஏமாந்து போவீர்கள். புலம்பெயர் ஈழத் தமிழர்கள் இந்தப் படத்தை அந்நியமாகவே பார்க்கிறார்கள். கருத்துப்பிழைகள் ஏராளம் உள்ளதுதான் இந்த புறக்கணிப்புக்கு காரணம்.

தமிழ்நாட்டிலும் இந்த கின்னஸ் சாதனைப் படத்துக்கு வரவேற்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அறிய

> அமிதாப்புக்கு சீமான் நன்றி

இலங்கையில் நடக்கயிருக்கும் விருது வழங்கும் விழா குறித்து மறுப‌ரிசீலனை செய்வதாக தெ‌ரிவித்திருக்கும் அமிதாப்பச்சனுக்கு இயக்குனரும், நாம் தமிழர் இயக்கத்தின் தலைவருமான சீமான் நன்றி தெ‌ரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர்களை‌க் கொன்று குவித்த பாசிஸ ராஜபக்சேவுக்கு சர்வதேச சமூகம் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. அவரை‌ப் போர் குற்றவாளியாக அறிவிக்கும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடியை நீர்த்துப்போகச் செய்யும் எதிர் நடவடிக்கையில் இலங்கை அரசுடன் இந்திய அரசும் கை கோர்த்துள்ளது. இந்திய அரசின் அழுத்தம் காரணமாக சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா இலங்கையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு தூதராக அமிதாப்பச்சன் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் இலங்கை சென்ற அமிதாப் பாசிஸ ராஜபக்சேவை சந்தித்து விழா குறித்து பேசியதுடன் சிங்களர்களை வெகுவாகப் புகழ்ந்து பேட்டியளித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெ‌ரிவிக்கவும், அமிதாப் விருது விழாவை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நாம் தமிழர் இயக்கத்தினர் கடந்த ஞாயிறன்று அமிதாப்பின் வீட்டு முன் கறுப்பு‌க் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது வீட்டிலிருந்த அமிதாப் ஆர்ப்பாட்டக்காரர்களை அழைத்து விவரங்களை‌த் தெ‌ரிந்து கொண்டார்.

இதுகுறித்து தனது ப்ளாக்கில் எழுதியிருக்கும் அமிதாப், தமிழர்களின் சென்டிமெண்‌ட்டை தான் மதிப்பதாகவும், விருது விழா நடத்துகிறவர்களிடம் இது குறித்து பேசயிருப்பதாகவும், விருது விழா குறித்த முடிவை மறு ப‌ரிசீலனை செய்யவிருப்பதாகவும் தெ‌ரிவித்துள்ளார்.

அமிதாப்பச்சனின் இந்த முடிவுக்கு சீமான் நன்றி தெ‌ரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஷாருக்கான், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட மற்ற பாலிவுட் நட்சத்திரங்களும் இந்த விழாவை புறக்கணிக்க வேண்டும் என தனது அறிக்கையில் சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் அறிய

Wednesday, April 28, 2010

> 3 இடியட்ஸில் விஜய்?

சுறா ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கே.எஸ்.ரவிக்குமார், விஜய் அடிதடி படங்களில் மட்டும் நடிக்காமல் தனது பாணியிலிருந்து மாறுபட்டு நடிக்க வேண்டும் என்றார். மேலும், 3 இடியட்ஸ் ‌‌ரீமேக்கில் அவர் நடிக்கயிருப்பதாக பத்தி‌ரிகையில் படித்தேன். அது உண்மையா என்பது தெ‌ரியாது. ஆனால் நடித்தால் நன்றாக இருக்கும் என தெ‌ரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த விஜய், தனது அடுத்தடுத்தப் படங்கள் வித்தியாசமாக இருக்கும் என்றவர், 3 இடியட்ஸில் நடிக்க கேட்டிருப்பதாகவும், இன்னும் நடிப்பது பற்றி முடிவு செய்யவில்லை என்று தெ‌ரிவித்தார்.

தற்போது 3 இடியட்ஸ் ‌‌ரீமேக்கில் நடிக்க விஜய் முன் வந்திருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரம் தெ‌ரிவிக்கிறது. இந்தப் படத்துக்காக மென் தாடி வைக்கவும் அவர் முடிவு செய்துள்ளாராம்.

3 இடியட்ஸின் தமிழ், தெலுங்கு ‌‌ரீமேக் உ‌ரிமையை ஜெமினி பிலிம் சர்க்யூட் வாங்கியுள்ளது. விஜய் நடிக்க ஒப்புக் கொண்டாலும் யாரை இயக்குனராகப் போடுவது என்ற குழப்பம் நீடிக்கிறது. தரணி, விஷ்ணுவர்தன் கழன்று கொண்ட நிலையில் உன்னைப்போல் ஒருவன் சக்‌ரியிடம் ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாம்.

விரைவில் நல்ல செய்தியை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.
மேலும் அறிய

> எந்திரன்,ஆடுகளம்,சிங்கம் ‌ரிலீஸ் தேதிகள்

நவம்பர் மாதம் எந்திரன் திரைக்கு வருகிறது. சன் பிக்சர்ஸ் தரப்பு இந்த செய்தியை உறுதி செய்துள்ளதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

எந்திரன் படத்தை சன் பிக்சர்ஸ் நேரடியாக தயா‌ரித்து வருகிறது. இதுதவிர சுறா, சிங்கம் போன்ற படங்களின் ஒட்டுமொத்த விநியோக உ‌ரிமையை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. இந்தப் படங்கள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது. இதனை பூர்த்தி செய்யும் விதமாக சன் பிக்சர்ஸ் தரப்பு இவற்றின் ‌ரிலீஸ் தேதியை முடிவு செய்துள்ளதாம்.

விஜய்யின் சுறா வரும் 30ஆ‌ம் தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து சூர்யா நடிப்பில் ஹ‌ரி இயக்கியிருக்கும் சிங்கம் ஜூன் 5ஆ‌ம் தேதி வெளியாகிறது. ஜூலை 10ஆம் தேதி ஜெயம் ரவியின் தில்லாலங்கடி. ஆகஸ்டு 15 தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியிருக்கும் ஆடுகளம். அக்டோபர் 10ஆம் தேதி மீண்டுமொரு தனுஷ் படம், மாப்பிள்ளை.

இந்தப் படங்களுக்குப் பிறகு நவம்பர் மாதம் 5ஆ‌ம் தேதி எந்திரனை திரைக்கு கொணடுவர சன் பிக்சர்ஸ் முடிவு செய்துள்ளதாம்.

இந்த ‌ரிலீஸ் தேதிகளை சன் பிக்சர்ஸ் உறுதி செய்துள்ளதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.
மேலும் அறிய

> ரெட்டச்சுழி - விமர்சனம் இமயமும் + சிகரமும்

காதல் பிரச்சனையால் நாற்பது வருட பகையுடன் தி‌ரியும் இரண்டு முதியவர்கள், அவர்களுக்கு பக்கவாத்தியமாக இரு டஜன் வாண்டுகள். காலை வாருவதும், காமெடி செய்வதுமாக செல்லும் வாழ்க்கையில் மீண்டும் ஒருமுறை காதல் குறுக்கிடுகிறது. பிரச்சனை பெ‌ரிதாகி பூகம்பமாக வெடித்ததா, புஸ்வாணமாக சுபத்தில் முடிந்ததா என்பது கிளைமாக்ஸ்.

பொதுவுடமைக்காரர் சிங்காரவேலர் (பாரதிராஜா) தெருமுனை‌‌க் கூட்டம் போட்டாலும் அது தனக்கெதிராக நடத்தும் சதி என்று நடுங்கும் கையில் துப்பாக்கி ஏந்துகிறவர் முன்னாள் காங்கிரசுக்காரர் ராமசாமி (பாலசந்தர்). வறட்டு கௌரவத்துடன் பாரதிராஜாவின் சைக்கிள் காற்றை பிடுங்குவது, அவரது போஸ்டரை கிழிப்பது என்று பாலசந்தரை பால்வடியும் சந்தராக்கியிருக்கிறார் இயக்குனர். நக்கல் பாலசந்த‌ரின் ஆயுதம். தாமிரபரணியை எப்போ அடகு வச்சாங்க இவன் மீட்கிறதுக்கு என்று கேட்பதாகட்டும், காலாட்டிக் கொண்டே, உங்க வேலர் என்ன சொல்றார் என்று கிண்டலடிப்பதாகட்டும், நடிப்பிலும் சளைத்தவரல்ல என்று காட்டியிருக்கிறார்.

பாரதிராஜாவுக்கு அவரது குரலுக்கேற்ற கதாபாத்திரம். தாமிரபரணி முதல் காவே‌ரி வரை தனது அரசியல் பார்வையை பாரதிராஜா மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் தாமிரா. கண நேரம் வந்து போகும் முத்துக்குமார் நினைவு விளையாட்டுத்திடல் பெயர் பலகை திரையரங்கில் சலசலப்பை ஏற்படுத்துகிறது.

இந்த கிழட்டு‌ச் சிங்கங்களின் பகைக்கு பக்க வாத்தியம் அவர்கள் வீட்டு வாண்டுகள். குஷ்புவாக வரும் சிறுமி கருத்து சொல்வதும், ‘நீ கருத்து சொன்னாலே பிரச்சனையாயிடுது’ என்று மற்ற குழந்தைகள் கலாய்ப்பதும், குஷ்பு கோயிலுக்ககுள்ளால செருப்பு போட்டு வராத, பிரச்சனையாயிடும் என்பதும்... இயக்குனர் கலாய்ப்பது குஷ்புவையா இல்லை அவருக்கு எதிராக பேசுகிறவர்களையா என்பது தெ‌ரியவில்லை.

கவனத்தை கவரும் இன்னொரு வாண்டு அஞ்சலிக்கு துணையாக வரும் குட்டிப் பையன். ஆ‌ரி தனது முன்னாள் காதலை அஞ்சலியிடம் சொல்லி, உன் மனசுல என்ன இருக்கு என்று கேட்க, அதற்கு அந்த பையன், இங்கிலீஷ் டீச்சர் மனசுல என்ன இருக்கும்? லாங் லாங் எகோ, ஒன்ஸ் அப்பான் ஏ டைம் என்று திருப்பியடிப்பது ரசனை. பாரதிராஜாவை தோழரே என்று கலாய்க்கும் போது திரையரங்கு கலகலக்கிறது.

பாரதிராஜாவின் உசிரளவு பிடிச்சிருக்கு காதலாகட்டும், அஞ்சலியின் நான் செத்து சாமியா வந்து காப்பாத்துட்டுமா காதலாகட்டும் இரண்டிலும் உயிர்ப்பில்லை. பல வருஷம் காத்திருந்த காதல் கைகூடும் நேரத்தில் பாலசந்த‌ரின் சம்மதம் இல்லாமல் தாலி கட்டமாட்டேன் என்று ஆ‌ரி சத்தியம் செய்து கொடுப்பது திரைக்கதையின் தப்பாட்டம். இதைத் தொடர்ந்து வரும் கிளைமாக்ஸ் மெகா தொட‌ரின் மொண்ணை எபிசோட். இதற்கு நடுவிலும் காக்கிக்கு மேல் பட்டு சுற்றி திடீர் மாப்பிள்ளையாகும் கருணாஸ் சி‌ரிக்க வைக்கிறார். இன்ஸ்பெக்டரான அவரை, மாமா இந்த ட்ரெஸ்ல நீ போலீஸ் போலவே இருக்கே என வாண்டுகள் வம்பிழுப்பது அக்குறும்பு.

பாடல்களைவிட பின்னணி இசையில் சோபிக்கிறார் கார்த்திக் ராஜா. படத்துக்கு பலம் சேர்க்கிறது செழியனின் கேமரா. காட்சிகள் ஒவ்வொன்றும் கொள்ளை அழகு.

நாடகத்தனமான காட்சிகளுக்கிடையே வரும் நாட்டு நடப்பை பிரதிபலிக்கும் வசனங்களும் ஹாஸ்யங்களும் இழுவை திரைக்கதையை இழுத்துப் பிடிக்கின்றன. ஆ‌ரி குழந்தைகள் சொன்னதற்காக ராணுவத்தை கிராமத்துக்கு அழைத்து வருவதும், ஒரு சுப்ரபாதத்தில் திரும்பி செல்வதும் காதுலப்பூ.

யானையை வைத்து யுத்தமும் செய்யலாம், வித்தையும் காட்டலாம். தாமிரா செய்திருப்பது இரண்டாவது.
மேலும் அறிய

Tuesday, April 27, 2010

> கடவுளுக்கு பாட்டு - தனுஷ்

யோகியை வருடக்கணக்கில் எடுத்த சுப்பிரமணிய சிவா சீடன் படத்தை சில மாதங்களிலே முடித்துவிட்டார். இன்னும் சில காட்சிகள் எடுத்தால் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும்.

மலையாளத்தில் வெளியான நந்தனம் படத்தின் ‌‌ரீமேக்கே சீடன். நந்தனத்தில் அரவிந்த் ஆகாஷ் நடித்த கடவுள் வேடத்தில் தனுஷ் நடிக்கிறார். சில காட்சிகளே வரும் இந்த‌க் கடவுள் கதாபாத்திரத்தை தனுஷுக்காக நீட்டித்திருக்கிறார்கள்.

நவ்யா நாயர் நடித்த வேலைக்கார பெண் வேடத்தில் அனன்யாவும், ஹீரோவின் அம்மாவாக சுஹாசினியும், பாட்டியாக செம்மீன் ஷீலாவும் நடிக்கிறார்கள்.

நந்தனத்தில் கடவுள் கதாபாத்திரத்துக்கு பாடல்கள் எதுவும் கிடையாது. தமிழில் அந்த வேடத்தில் நடிப்பது பிரபல ஹீரோ தனுஷ் என்பதால் பாடல் காட்சி ஒன்றை வைத்திருக்கிறார் சுப்பிரமணிய சிவா. குத்துப் பாட்டு கிடையாதே?
மேலும் அறிய

> ஹீரோயின் சோனியா

சோனியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவர் ஹீரோயினாக நடிக்கும் படம், விநாயகா.

சோனியா என்றதும் பலருக்கு சோனியா அகர்வால் நினைவுக்கு வந்திருப்பார். விவாகரத்துக்குப் பிறகு சோனியா அகர்வால் நடிப்பதற்கான பெரும் தாகத்துடன் இருப்பதும், துக்கடா வேடங்களில் நடிக்க மாட்டேன், இளமை இருக்கும் வரை கதாநாயகியாகவே நடிப்பேன் என்று சூளுரைத்திருப்பதும் உண்மைதான். ஆனால் அவருக்கு இதுவரை அவர் எதிர்பார்த்த நாயகி வேடம் கிடைக்கவில்லை.

அப்படியானால் இந்த சோனியா...?

இவர் பையா படத்தில் கார்த்தியின் தோழியாக நடித்தவர். ‘உங்களுக்குள்ள எவ்வளவு தூரம் இருக்கு?’ என்று போனில் கார்த்தியிடம் அக்கறையாக விசா‌ரிப்பாரே ஒரு சுருட்டைமுடி பெண்... அவர்தான் இந்த சோனியா.

இயக்குனர் பாலசேகரன் தெலுங்கில் வெற்றி பெற்ற விநாயகுடு படத்தை தமிழில் விநாயகா என்ற பெய‌ரில் எடுக்கிறார். சாட்டிங்கில் அறிமுகமாகி காதலிக்கும் இருவர் சந்தித்துக் கொள்கிறார்கள். அப்போதுதான் நாம் பார்க்காமலே காதலித்த ஆண் மாமிச மலைபோல் இருப்பது பெண்ணுக்கு‌த் தெ‌ரிய வருகிறது. உன்னை காதலித்தது நான் அல்ல, என்னுடைய தோழி என அவனை ஏமாற்றுகிறாள். இறுதியில் அவள் மனம் மாறினாளா, காதலை ஏற்றுக் கொண்டாளா என்பது கதை.

குண்டு காதலனாக கிருஷ்ணா நடிக்கிறார். அவரை காதலிக்கும் பெண்ணாக சோனியா. 2008ல் வெளியான படத்தை இரண்டு வருடம் தாமதமாக ‌‌ரீமேக் செய்கிறார்கள்.
மேலும் அறிய

> கமல் படம் வெளிநாட்டில்

கமல், த்‌ரிஷா நடிக்கும் காருண்யம் படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளன. இதற்காக இப்பட யூனிட் விரைவில் வெளிநாடு செல்லவுள்ளது.

உன்னைப்போல் ஒருவனுக்குப் பிறகு கமல் நடிக்கும் படம் காருண்யம். இதில் கமலுக்கு ஜோடி த்‌ரிஷா. மாதவனும் படத்தில் உண்டு. முக்கோண‌க் காதல் கதையான இதன் பெரும்பகுதி வெளிநாட்டில் நடக்கிறது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயா‌ரிப்பு.

ஸ்கி‌ரிப்ட் வேலைகள் முடிந்த நிலையில் விரைவில் இப்பட யூனிட் சுவிட்சர்லாந்த் செல்கிறது. மேலும் இத்தாலியில் சில காட்சிகளை படமாக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

தேவிஸ்ரீ பிரசாத் படத்துக்கு இசையமைக்கிறார்.
மேலும் அறிய

Monday, April 26, 2010

> விஜய்,அஜீத் புறக்கணித்த இலங்கையின் அழைப்பு

இலங்கை தலைநகர் கொழும்பில் வருகிற ஜூன் மாதம் 3ம்தேதி முதல் 5ம்தேதி வரை ஐ.ஐ.எப்.ஏ. எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா நடக்கிறது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த விழாவில் பங்கேற்க வருமாறு தமிழின் முன்னணி நாயகர்களுக்கு இலங்கை அரசு சார்பிலும், அமிதாப் பச்சன் சார்பிலும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருக்கிறாம்.

இலங்கையில் நடக்கும் விழா என்பதால் அழைப்பிதழை பார்த்து முன்னணி நாயகர்கள் பலரும் மிரண்டு போய் இருக்கிறார்களாம்.

அதுபற்றி கருத்து சொல்லக் கூட ஒருவரும் முன்வரவில்லை. கமல்ஹாசன், அஜித், விஜய் என முன்னணி நாயகர்கள் அழைப்பிதழுக்கு எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் புறக்கணித்து விட்டதால், இலங்கையும், தமிழ் சினிமாவும் எந்த அளவு பிரிக்க முடியாதது என்பதை உணர்த்த விழாக்குழுவினர், இரண்டாம் கட்ட நடிகர்களுக்கு வலைவீசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ராவணா படத்தை இலங்கை திரைப்பட விழாவில் திரையி‌ட திட்டமிட்டிருக்கும் விழாக்குழுவினர், மணிரத்னத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

இலங்கை விழாவில் கலந்து கொண்டால், தன் மீது பெரும் மதிப்பு வைத்திருக்கும் தமிழ் ரசிகர்களின் கோபத்தை சம்பாதிக்க வேண்டியிருக்குமே என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் மணிரத்னம்.
மேலும் அறிய

> I.P.L பொறியில் சிக்கிய ஷாருக்கானும் காங்கிரஸ் எம்.பியும்

ஐ.பி.எல். முறைகேடு தொடர்பாக வருமான வரித்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

நடிகர் ஷாருக்கான் கொல்கத்தா அணியை வாங்கி உள்ளார். இதிலும் முறைகேடு நடந்து இருப்பது தெரியவந்தது. இதனால் கொல்கத்தா அணி அலுவலகத்தில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். இதில் முறைகேடு நடந்ததற்கான சில ஆதாரங்கள் சிக்கி இருப்பதாக வருமான வரி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொல்கத்தா அணியை ஷாருக்கான் வாங்குவதற்கு பல கோடி ரூபாய் பணம் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளது. மொரீசியஸ் நாட்டில் இருந்து பெருந்தொகை வந்துள்ளது. இதில் தான் முறைகேடு நடந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஷாருக்கான் யாருக்கோ பினாமியாக செயல்பட்டு வரிஏய்ப்பு செய்ய அல்லது கறுப்பு பணத்தை வெள்ளையாக்க உதவி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இது பற்றி வருமான வரி அதிகாரிகள் முழுமையாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஷாருக்கான் காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா நடத்தும் நிறுவனத்தில் ரூ.10 கோடி முதலீடு செய்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் சுக்லா “பேக் கிளாமர்” என்ற பெயரில் மீடியா நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சினிமா தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளது.

இதில் ஷாருக்கான் 2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ.10 கோடி முதலீடு செய்து இருக்கிறார். இத்தனைக்கும் இந்த நிறுவனம் நலிவடைந்த நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது.

ராஜீவ் சுக்லா ஐ.பி.எல் ஆட்சிக்குழு உறுப்பினராக வும், இந்திய கிரிக்கெட் சங்க நிதி கமிட்டி தலைவராகவும் இருக்கிறார். எனவே இவர் மூலம் ஐ.பி.எல்.லில் ஷாருக்கான் ஆதாயம் பெற்று இருக்க வேண்டும் அதற்காக அவர் ரூ.10 கோடி முதலீடு செய்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

முதலாவது ஐ.பி.எல். ஏலம் முடிந்து 1 மாதத்தில் இந்த முதலீடு செய்யப்பட்டு உள்ளது. அதாவது 2008 ஜனவரி மாதம் முதல் ஐ.பி.எல். ஏலம் நடந்தது. இதில் கொல்கத்தா அணியை ஷாருக்கான் வாங்கினார். அடுத்த மாதமே சுக்லா நிறு வனத்தில் ரூ.10 கோடி முத லீடு செய்துள்ளார். இது பல்வேறு வகை சந்தேக கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

இது பற்றி முழுமையான விசாரணை நடத்தினால் ஷாருக்கானும், ராஜீவ் சுக்லாவும் வசமாக சிக்கும் வாய்ப்பு உள்ளது
மேலும் அறிய

> I.P.L :நடிகை ஷில்பா ஷெட்டி மீது புகார்

ஐ.பி.எல். தலைவர் லலித்மோடிக்கு எதிரான ஊழல் புகார்களை தொடர்ந்து, அவரை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசு மற்றும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதே நேரத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட சில ஐ.பி.எல். அணி உரிமையாளர்கள் லலித்மோடிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர்களான நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் லலித்மோடியின் நெருங்கிய உறவினர் ஆகியோர் மீது அன்னிய செலாவணி விதிமுறைகளை மீறி இருப்பதாக, வருமான வரி சோதனையில் தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
மேலும் அறிய

> I.P.L இறுதி போட்டியில் அபார வெற்றி - சென்னை சூப்பர் கிங்ஸ்

மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்று மூன்றாவது ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றியது.

முதலில் களமிறங்கிய சென்னை அணி 20வது ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து .ரெய்னா அவுட்டாகாமல் 57 ரன்களுடனும்,அனிருதா அவுட்டாகாமல் 6 ரன்களும் எடுத்தனர். மோர்கல் 15 ரன்களும் தோனி 22 ரன்களுக்கும், பத்ரிநாத் 14 ரன்களுக்கும் முரளி விஜய் 26 ரன்களுக்கும், ஹெய்டன் 17 ரன்களுக்கும் அவுட்டாயினர்.

இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 வது ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. 22ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று மூன்றாவது ஐ.பி.எல் கோப்பையை சென்னை அணி கைப்பற்றியது. பந்து வீச்சில் 2 விக்கெட்களை கைப்பற்றிய ஜகடி மற்றும் தலா ஒரு விக்கெட்களை கைப்பற்றிய போலிஞ்சர்,ரெய்னா,மோர்கல்,முரளிதரன் மும்பையை 146/9 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தினார்கள்.

சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் இவ்வளவு திறமையாக விளையாடுவார்கள் என்பதை எதிர்பார்த்திருக்க மாட்டாது. பதற்றமான நேரத்தில் சிறப்பாக செயல்படும் டோனியே உலகின் மிகச் சிறந்த கேப்டன் என்று ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் போலிஞ்சர் கூறியுள்ளார். கேப்டனாக டோனி செயல்படும் விதம் பிரம்மிப்பாக உள்ளது. பதற்றமான நேரத்தில் ரெய்னாவும் மிகச் சிறப்பாக செயல்பட்டு அசத்துகிறார்.

57 ரன்கள் மற்றும் 1 விக்கெட்களை எடுத்த ரெய்னா ஆட்டநாயகனாக விருதுப்பேற்றார்.





மேலும் அறிய

Sunday, April 25, 2010

> அ‌‌ஜீத் நடிக்க விரும்பும் இயக்குனர்

அ‌‌ஜீத்தின் அப்ரோச் ஸ்டைலே தனிதான். ஏறக்குறைய நம்ம சூப்பர் ஸ்டார் போல. எதையும் பட்டென்று போட்டுடைப்பது இவர்களின் ஸ்டைல். அரசியல் மட்டும் விதிவிலக்கு.

ஐரோப்பாவில் கார் ரேஸில் பிஸியாக இருக்கும் அ‌‌ஜீத் திடீரென்று இளம் இயக்குனர் ஒருவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். ‌ஜி உங்க டைர‌க்சனில் நடிக்கணும். ஸ்கி‌‌ரிப்ட் ரெடி பண்ணுங்க. ஒரே வ‌ரியில் விருப்பத்தை கூறியிருக்கிறார் அ‌‌ஜீத்.

அந்த இயக்குனர், பொல்லாதவனை இயக்கிய வெற்றிமாறன்.

தனுஷ் நடிப்பில் ஆடுகளம் படத்தை முடித்திருக்கும் வெற்றிமாறன் அடுத்து சிம்பு நடிக்கும் படத்தை இயக்குகிறார். அ‌‌ஜீத்தே நேரடியாகப் பேசியதால் சிம்பு படத்தை அவர் தள்ளி வைத்தாலும் ஆச்ச‌ரியமில்லை என்கிறார்கள்.
மேலும் அறிய

> புதிய தகவல்கள் - ராவணன்

இந்தியில் ராவண். தமிழில்...? ராவண், ராவணா, ராவணன், அசோக வனம்... இப்படி அரை டஜன் பெயர்கள் சொன்னார்கள். இறுதியில் ராவணன் என்ற பெயரை டிக் செய்திருக்கிறார் மணிரத்னம்.

இந்தியில் ட்ரெய்லர் வெளியிட்டுவிட்டார்கள். இன்று டி சீ‌‌ரிஸ் படத்தின் ஆடியோவை வெளியிடுகிறது. தமிழில் இதெல்லாம் எப்போது என்று ரசிகர்கள் முணுமுணுக்க‌த் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்தி ஆடியோ ரைட்ஸை டி சீ‌‌ரிஸ் வாங்கியிருப்பதைப் போல தமிழ் மற்றும் தெலுங்கு ஆடியோ ரைட்ஸை சோனி நிறுவனம் வாங்கியுள்ளது. விரைவில் ஆடியோ வெளியிடப்படும் என்கிறார்களே தவிர உறுதியான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தெலுங்கில் ராவணன் படத்துக்கு மணிரத்னம் வைத்திருக்கும் பெயர் வில்லன்.

ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் ஈகோ மணிரத்னத்துக்கு ச‌ரிவராததால் படத்தின் பெரும்பாலான காட்சிகளுக்கு சந்தோஷ்சிவனே ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தற்போது எடிட்டிங் பணிகள் நடந்து வருகின்றன. நான்கு படங்களுக்கு‌‌ரிய ஃபுட்டே‌ஜ் இருப்பதால் பணிகள் மெதுவாகவே நடக்கின்றன. ஜூன் 18 ராவணன், ராவண், வில்லன் மூன்றும் திரைக்கு வருகிறது.
மேலும் அறிய

> நடிகர் தற்கொலை

ரயில் பயணங்கள் படத்தில் ஹீரோவாக அறிமுகமான ஸ்ரீநாத் நேற்று தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது ஐம்பது.

டி.ராஜேந்த‌ரின் ரயில் பயணங்கள் படத்தில் அறிமுகமான ஸ்ரீநாத் மலையாளப் படங்கள் சிலவற்றிலும் நடித்தார். அதில் மம்முட்டி, முகேஷ், ஜெகதி ஸ்ரீகுமார் நடித்த ஒரு சிபிஐ டை‌ரி குறிப்பு முக்கியமானது.

இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் சகோத‌ரி சாந்தி கிருஷ்ணாவை ஸ்ரீநாத் திருமணம் செய்து கொண்டார். சாந்தி கிருஷ்ணாவும் ஒரு நடிகை. பன்னீர் புஷ்பங்களில் நடித்திருக்கும் இவர் மோகன்லால் உள்ளிட்ட நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்து கொண்டனர். சிறிது காலம் தனிமையில் வாழ்ந்த ஸ்ரீநாத் வேறொரு பெண்ணை மறுமணம் செய்து கொண்டார்.

ஸ்ரீநாத் தொலைக்காட்சி தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்து வந்தார். மோகன்லாலின் ஷிகார் என்ற படத்தில் நடிப்பதற்காக எர்ணாகுளம் வந்த ஸ்ரீநாத் அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்.

நேற்று காலை வெகு நேரமாகியும் அவரது அறைக்கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்தவர்கள் போலீஸ் முன்னிலையில் அறைக் கதவை திறந்து பார்த்தனர். உள்ளே கை அறுபட்ட நிலையில் ஸ்ரீநாத் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் தெ‌ரிவித்தனர்.
மேலும் அறிய

> ரஞ்சிதா தமிழில்

அழகாக இருக்கிறார், நன்றாக நடிக்கிறார், 2011ல் தமிழில் முன்னணி இடத்தைப் பிடிப்பார்... இப்படியெல்லாம் கோடம்பாக்க ஜோதிடர்கள் ஆருடம் கூறுவது நடிகை ரஞ்சிதாவைப் பற்றி.

ரஞ்சிதா என்றதும் ‘அந்த’ ரஞ்சிதாவை நீங்கள் நினைதிருந்தால் நாம் பொறுப்பாக முடியாது. இவர் கேரளாவிலிருந்து வந்திருக்கும் புதுமுகம்.

கே.டி.குஞ்சுமோன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு காதலுக்கு மரணமில்லை என்ற படத்தை எடுத்து வருகிறார். நீண்டகாலமாக எடுத்து வருகிறார் என்றும் சொல்லலாம்.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் பார்த்து இயக்குனர் ஷங்கர் ரசித்துப் பாராட்டியதாக சில வாரங்கள் முன்பு குஞ்சுமோன் தெ‌ரிவித்திருந்தார்.

இந்தப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் ரஞ்சிதா நாயர். ஏற்கனவே இருக்கும் நவ்யா நாயரைப் போல் வேலையில் சின்சியராக இருப்பதால் முதல் படம் வெளிவந்ததும் ஓகோ என்று பேசப்படுவார் என்கிறார்கள்.

ரஞ்சிதா என்று பெயர் வைத்தாலே புகழ் தேடி வருமோ?
மேலும் அறிய

> I.P.L போ‌ட்டி‌யி‌ல் 27 இ‌ந்‌திய ‌வீர‌ர்க‌ள் சூதா‌ட்ட‌ம்?

இ‌ந்‌திய ‌கி‌‌ரி‌க்கெ‌ட் அ‌ணி‌யி‌ன் ந‌ட்ச‌த்‌திர ஆ‌ட்ட‌க்கார‌ர்க‌ள், ஐ.‌பி.எ‌ல். ‌அ‌ணி‌யி‌ன் உ‌ரிமையாள‌ர்க‌ள் சூதா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளதாக ‌திடு‌க்‌கிடு‌ம் தகவ‌ல்க‌ள் வெ‌ளியா‌கியு‌ள்ளன.

ஐ.‌பி.எ‌ல். பண‌ம் ப‌ரிமா‌ற்ற‌ ‌விவகார‌ம் தொட‌ர்பாக வருமானவ‌ரி‌த்துறை‌யின‌ர் ப‌ல்வேறு இட‌‌ங்க‌ளி‌ல் நட‌‌த்‌திய சோதனை‌யி‌ல் ஐ.‌பி.எ‌ல். போ‌ட்டி‌க‌ளி‌‌ல் சூதா‌ட்ட‌ம் நடைபெ‌ற்று இரு‌ப்பது‌ம் அ‌தி‌ல் இ‌ந்‌திய அ‌ணி‌யி‌ன் ந‌ட்ச‌த்‌திர ஆ‌ட்ட‌க்கார‌‌ர்க‌ள், அய‌ல்நா‌ட்டு ஆ‌ட்ட‌க்கார‌ர்க‌ள் உ‌ள்பட 27 பேரு‌க்கு தொட‌ர்பு இரு‌ப்பது க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ஐ.‌பி.எ‌ல். போ‌ட்டிக‌ளி‌ன் முடிவை ‌தீ‌ர்மா‌னி‌க்கு‌ம் வரை, ஒ‌வ்வொரு போ‌ட்டி‌யி‌ன் போது சுமா‌ர் 500 கோடி ரூபா‌ய் சூதா‌ட்ட‌ம் நடைபெ‌ற்று இரு‌ப்பது‌ம் வருமானவ‌ரி‌த்துறை‌யின‌ர் கை‌ப்ப‌ற்‌றியு‌‌ள்ள ஆவண‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து தெ‌ரியவ‌ந்து‌ள்ளது.

இதனையடு‌த்து ‌கி‌ரி‌க்கெ‌ட் சூதா‌ட்ட‌ம் தொட‌ர்பாக ச‌ந்தேக‌த்‌தி‌ற்கு உ‌ள்ளா‌கி உ‌ள்ள ‌வீர‌ர்க‌ளிட‌மு‌ம், அ‌ணி‌யி‌ன் உ‌ரிமையாள‌ர்க‌ளிட‌ம் ‌விசாரணை நட‌த்த வருமானவ‌ரி‌த்துறை அ‌திகா‌ரிக‌ள் முடிவு செ‌ய்து‌ள்ளதாக டெ‌ல்‌லி‌யி‌ல் இரு‌ந்து வரு‌ம் தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌‌‌வி‌க்‌கி‌ன்றன.
மேலும் அறிய

Saturday, April 24, 2010

> பரத் - ஹாங்காங்கில்

கோடையை சமாளிக்க நாடுவிட்டு நாடு பறக்கிறார்கள் நட்சத்திரங்கள். த்‌ரிஷா தனது தோழிகளுடன் எப்போதோ ஆஸ்திரேலியா பறந்துவிட்டார். அ‌ஜித் கார் ரேஸுக்காக வெளிநாட்டில்தான் இருக்கிறார். சமீபத்தில் வெளிநாடு சென்றவர் பரத்.

படத்துக்கு நடுவில் ‌ரிலாக்ஸ் செய்ய வெளிநாடு செல்வதை ஒரு கொள்கை போலவே வைத்திருக்கிறார் சின்ன தளபதி பரத். சமீபத்தில் அமெ‌ரிக்கா சென்று வந்தவர் தற்போது ஹாங்காங் சென்றுள்ளார்.

திருத்தணி படத்தை முடிக்காமல் வெளிநாடு சென்றுவிட்டார் என பரத் அமெ‌ரிக்கா சென்ற போது இ‌ண்டஸ்ட்‌ரியில் முணுமுணுக்கப்பட்டது. அதனால் இந்தமுறை படத்தை முடித்துவிட்டே ஹாங்காங் சென்றிருக்கிறார்.

திருத்தணிக்குப் பிறகு பரத் எந்தப் படத்தில் நடிப்பார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஹாங்காங்கிலிருந்து திரும்பியதும் இதுபற்றி பரத்தே அறிவிக்கவுள்ளார்.
மேலும் அறிய

> விக்ரம் - பாலா இயக்கத்தில்

பாலா இயக்கத்தில் மீண்டும் விக்ரம் நடிக்கிறார். அவன் இவன் படத்துக்குப் பிறகு இவர்கள் இணையும் படம் தொடங்கவுள்ளது.

பாலா படத்தில் நடிப்பதென்றால் இரண்டு மூன்று வருடங்கள் வேறு படங்களில் நடிப்பதை மறந்துவிட வேண்டும். ஆனாலும் ஃபியூச்சர் பிரைட்டாக இருக்கும் என்ற கியாரண்டியால் அவர் படத்தில் நடிக்க அனைவரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

சேது, பிதாமகனை தொடர்ந்து மீண்டும் விக்ரமை இயக்க தீர்மானித்துள்ளாராம் பாலா. மற்ற படங்களை‌ப் போல் அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளாமல் ஒரே வருடத்தில் படத்தை முடிப்பதாக வாக்குறுதியும் அளித்துள்ளாராம்.

இந்த உறுதி செய்யப்படாத தகவலால் உற்சாகமடைந்திருக்கிறார்கள் விக்ரம் ரசிகர். தேசிய விருது பெற்ற காம்பினேஷன் அல்லவா.
மேலும் அறிய

> தனுஷ் - ஹ‌ரி இயக்கத்தில்

ஒரு படம் முடியும் முன்பே அடுத்தப் படத்தை அறிவிப்பதுதான் ஹ‌ரியின் ஸ்டைல். சேவல் சுமாராகப் போனதால் இந்த நடைமுறையில் சின்ன சறுக்கல். சூர்யாவை வைத்து இயக்கியிருக்கும் சிங்கம் முடிவடைந்த நிலையில் மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார்.

ஹ‌ரி அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார் என்பது அனைவருக்கும் தெ‌ரியும். தாமிரபரணி படத்தை தயா‌ரித்தவர்கள் இந்தப் படத்தை தயா‌ரிக்கிறார்கள். ஹீரோயின் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

கதை இல்லாமல் படமெடுத்தாலும் அ‌ரிவாள் இல்லாமல் படமெடுக்கமாட்டார் என்று ஹ‌ரி பற்றி சொல்வதுண்டு. தனுஷை வைத்து இயக்கும் படத்துக்கு அருவா என்று பெயர் வைத்திருப்பதாகவும் காற்று வாக்கில் வருகின்றன செய்திகள். உண்மையா இது?

நூறு சதவீதம் பொய்யாம். சாமி, கோவில், அருள் என்று பெயர் வைத்தவர் எப்படி அருவா என்ற பெயரை‌த் தேர்ந்தெடுப்பார் என்கிறார்கள் யூனிட்டில். பெண்களுக்குப் பிடிக்கும் நல்ல நாக‌‌ரீகமான பெயராக தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.

கிடைச்சதும் சொல்லுங்க.
மேலும் அறிய

> I.P.L இறுதிப் போட்டியில் A.R.ரகுமானின் இன்னிசை

ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப் போட்டி வரும் ஞாயிறன்று மும்பையில் நடைபெறுகிறது. இதில் நடைபெறும் நிறைவு விழா மற்றும் அதனையொட்டிய கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் ஆஸ்கார் வென்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஐ.பி.எல். ல் சென்னை அணி இறுதிசுற்றை எட்டுவது இது 2 வது முறையாகும். ஏற்கனவே முதலாவது ஐ.பி.எல். போட்டியிலும் (2008 ம் ஆண்டு) இறுதிப்போட்டியில் விளையாடி இருந்தது.

சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

போட்டி தொடங்குவதற்கு முன் கலைநிகழ்ச்சிகளும் நிறைவு விழாவும் நடக்கிறது.

இதில் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. பிரபல பாடகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மேலும் அறிய

Friday, April 23, 2010

> கோ-வில் ஐவர் அணி

கே.வி.ஆனந்த் அயன் படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு இயக்கும் படம், கோ. ‌‌ஜீவா ஹீரோ. ராதா மகள் கார்த்திகா ஹீரோயின்.

கோ-வில் பலர் நடித்தாலும் ஐந்து பேருக்கு ரொம்பவும் அழுத்தமான கேரக்டராம். அவர்களில் ஒருவர் ஹீரோ ‌‌‌ஜீவா. இன்னொருவர் இரண்டாவது ஹீரோவாக நடிக்கும் அ‌ஜ்மல். படத்தின் திருப்புமுனை கேரக்டர் இவருடையது என்கிறார்கள்.

மூன்றாவது ஜெகன். அயன் படத்தில் சூர்யாவின் நண்பனாக வந்து காமெடியிலும், குணச்சித்திர நடிப்பிலும் அலம்பல் செய்த ஜெகனுக்கு கோ-விலும் வெயிட்டான கேரக்டராம். மற்ற இரண்டு பேர் வில்லன்கள்.

அயன் போலவே புதுமுக வில்லனை அறிமுகப்படுத்ததான் கே.வி.ஆனந்துக்கு விருப்பம். அயனின் ஒரேயொரு மைனஸ் புதுமுக வில்லன்தான் என்று நலம்விரும்பி யாரோ சொல்ல, அதிலுள்ள உண்மையை உணர்ந்து கொண்டவர் பழைய வில்லன்களுக்கே வாய்ப்பளித்திருக்கிறார்.

ஹீரோவுடன் மோதப் போகும் அந்த இருவ‌ரில் ஒருவர் கோட்டா சீனிவாசராவ். இன்னொருவர் ஸ்வீட் செல்லம் பிரகாஷ்ரா‌ஜ்.
மேலும் அறிய

> வடிவேலுவும் சுறாவும்

அறிமுகமானாலும், தளபதியானாலும் வடிவேலு இருந்தால் படத்தின் மார்க்கெட்டே தனி. இதை உணர்ந்து தனது எல்லாப் படங்களிலும் வைகைப் புயல் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார் விஜய். சுறாவிலும் வடிவேலு இருக்கிறார்.

போக்கி‌ரியில் வந்ததுக்கு நேர்மாறாக சுறாவில் விஜய்யின் நண்பனாக நடித்திருக்கிறார். விஜய், வடிவேலு காம்பினேஷன் காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்கிறார் இயக்குனர் எஸ்.பி.ராஜகுமார்.

எந்தப் படத்தில் நடித்தாலும் வம்படியாக ஒரு பெயரை தனது பாத்திரத்துக்கு வைத்துக் கொள்கிறார் வடிவேலு. நாய் சேகர், கைப்புள்ள, வண்டு முருகன், அலார்ட் ஆறுமுகம்... இந்த வ‌ரிசையில் சுறாவில் அவர் தனக்கு சூட்டியிருக்கும் பெயர், அம்ப்ரல்லா (தமிழில் குடை).

ஏன் இந்த வித்தியாசமான பெயர் என்பதற்கு படத்தில் ஒருவேளை விடை கிடைக்கலாம்.
மேலும் அறிய

> "சன்"னை நம்பும் கருணாஸ்

ஒருவரே படம் எடுத்து, அதை விளம்பரப்படுத்தி, விநியோகித்து, லாப நஷ்ட கணக்குப் பார்க்கும் பண்ணையார் எபிசோடுக்கு ஏறக்குறைய தமிழ் சினிமா குட்பை சொல்லிவிட்டது.

ஹாலிவுட் பாணியில் ஒருவர் படமெடுக்க, இன்னொருவர் விளம்பரப்படுத்த, மூன்றாமவர் விநியோகிக்கும் முறை அமலுக்கு வந்திருக்கிறது. சன் பிக்சர்ஸ் உருவாக்கிய இந்த பாணியை ரெட் ஜெயண்ட, கிளவுட் நைன் ஆகியவை முன்னெடுத்து‌ச் செல்கின்றன.

இந்த புதிய வியாபார முறையை நம்பி படமெடுத்து வருகிறவர்களில் கருணாஸும் ஒருவர். இவர் முதல்முறை ஹீரோவாக நடித்த திண்டுக்கல் சாரதியின் விநியோக உ‌ரிமையை சன் பிக்சர்ஸ் வாங்கியது. அபி‌ரிதமான விளம்பரங்களால் இந்த மிகச் சாதாரணப் படம் லாபம் ஈட்டியது.

இந்த வெற்றியால் அம்பாசமுத்திரம் அம்பானி என்ற படத்தை தொடங்கி முடித்தும்விட்டார் கருணாஸ். படத்தில் இவர்தான் நாயகன். அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண மனிதன் அம்பானி போல் ஆகும் கனவுடன் சென்னைக்கு வருகிறான். தடைகளை‌த் தா‌ண்டி தனது கனவை அவன் வென்றெடுத்தானா என்பது கதை.

கதை கத்தி‌ரிக்காயைவிட படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கும் என்ற நம்பிக்கையில்தான் எடுத்து வருகிறார் கருணாஸ். அவரது நம்பிக்கைக்கு உறுதி சேர்க்கும் விதத்தில் சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகா‌ரி ஹன்ஸ்ரா‌ஜ் சக்சேனாவும் பச்சைக் கொடி அசைத்திருக்கிறார்.

“திண்டுக்கல் சாரதி பட்ஜெட் இரண்டரை கோடி. படம் வசூலித்தது பதினான்கு கோடி. அதேபோல் அம்பாசமுத்திரம் அம்பானி படத்தையும் சன் பிக்சர்ஸ் வாங்கும் எண்ணத்தில் இருக்கிறது. கலாநிதி மாறன் நிச்சயம் ஒத்துக் கொள்வார் என நம்புகிறேன்” என்று தெ‌ரிவித்துள்ளார் சக்சேனா.
மேலும் அறிய

> விஜய் அளித்த ப‌ரிசு

படத்தின் கதை அளவுக்கு விஜய் கவனம் செலுத்தும் விஷயம் படத்தின் ஓபனிங் பாடல். ரசிகர்களுக்கு மெசே‌ஜ் சொல்லும் வ‌ரிகளுடன் அமையும் இந்தப் பாடலில் சமீபகாலமாக, தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து என்பது போன்ற சமூக விஷயங்களும் இடம்பெறத் தொடங்கியுள்ளன.

விஜய்யின் எதிர்கால அரசியல் பிரவேசத்துக்கு பெ‌ரிதும் உதவும் இந்த வ‌ரிகளை ஓபனிங் பாடலில் பொருத்தமாக அமைப்பவர் பாடலாசி‌ரியர் கபிலன். விஜய்யின் சமீபகால படங்கள் அனைத்திலும் அவரது அறிமுகப் பாடலை எழுதி வருகிறவர் கபிலன்தான்.

கபிலனின் வ‌ரிகளில் மகிழ்ந்துபோன விஜய் அவருக்கு தங்க மேதிரம் ப‌ரிசாக கொடுத்திருக்கிறார். வேட்டைக்காரன் மற்றும் சுறா படங்களுக்கு விஜய்யின் மனசுக்குப் பிடித்த வ‌ரிகளை எழுதியதற்காக இந்த‌ப் ப‌ரிசாம்.
மேலும் அறிய

> I.P.L சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி

மும்பையில் இன்று நடந்த ஐ.பி.எல்., இரண்டாவது அரையிறுதியில் சென்னை கிங்ஸ் அணி, கில்கிறிஸ்ட் தலைமையிலான 'நடப்பு சாம்பியன் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை எதிர்கொண்டது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது.சென்னை அணியின் பத்ரிநாத் 37 ரன்களும் தோனி 30 ரன்களும் அனிருதா 24 ரன்களும் எடுத்தனர்.

ஹாரிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 143 ரன் வெற்றி இலக்காக கொண்டு அடுத்து களமிறங்கிய டெக்கான் சார்ஜர்ஸ் அணி 19.2 ஓவரில் ‌அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன் மட்டுமே எடுத்தது.

இதன்படி சென்னை அணி 38 ரன்னில் அபார வெற்றி பெற்று பைனலுக்கு தகுதி பெற்றது. வரும் 25 ஆம் தேதி நடைபெறும் பைனலில் மும்பை- சென்னை அணிகள் மோதுகின்றன.
மேலும் அறிய

> ரெட்டச்சுழி - மு‌ன்னோ‌ட்ட‌ம்

ஷங்க‌ரின் எஸ் பிக்சர்ஸ் தயா‌ரிப்பில் உருவாகியிருக்கும் படம் ரெட்டச்சுழி. படத்தின் பிரதான விஷயம் அனைவரும் அறிந்தது. இயக்குனர் சிகரமும், இமயமும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். படத்தில் இவர்கள் இருவருமே பிரதான கதாபாத்திரங்கள்.

பாரதிராஜா சிவப்பு சிந்தனையாளராகவும், பாலசந்தர் காங்கிரஸ் அனுதாபியுமாக நடித்திருப்பதாக செய்திகள் தெ‌ரிவிக்கின்றன. சதா குழந்தைகள் போல் சண்டையிட்டுக் கொள்ளும் இந்த‌ப் பெ‌ரிய மனிதர்களின் குழந்தைத்தனமான செயல்களை மையப்படுத்தியே கதை பின்னப்பட்டுள்ளது. இவர்களுடன் 22 குழந்தைகளும் நடித்துள்ளனர்.

இளம் ஜோடிகளாக கூத்துப்பட்டறை ஆ‌ரி, கற்றது தமிழ் ஸா‌ரி, அங்காடித்தெரு அஞ்சலி நடித்துள்ளனர். இவர்களுடன் சீனிவாசன், மனோபாலா, இளவரசு, கருணாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். நெல்லையை சுற்றியுள்ள கிராமங்களில் மொத்தப் படத்தையும் முடித்துள்ளார் இயக்குனர் தாமிரா. இவர் பாலசந்த‌ரின் அசிஸ்டெண்ட். அவர் இயக்கிய பொய் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.

படத்தில் ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகள் வருகின்றன. இதற்காக ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி நிஜ ராணுவ கேம்ப்களை பார்வையிட்டு அதேபோல் உருவாக்கியுள்ளார் கலை இயக்குனர் ஆரோக்கியரா‌ஜ்.

கார்த்திக் ராஜா இசை. ஓளிப்பதிவு செழியன். வரும் வெள்ளிக்கிழமை படம் திரைக்கு வருகிறது.
மேலும் அறிய

Thursday, April 22, 2010

> விஜய் லிஸ்டில் ஜெயம் ராஜா, சீமான் + பேரரசு

விஜய்யின் அடுத்தப்பட இயக்குனர் யார்? மில்லியன் டாலர் பெறுமானமுள்ள இந்தக் கேள்விக்கு ஜெயம் ராஜா, சீமான் என்று இரண்டே சாய்ஸ்தான் முதலில் இருந்தது. இப்போது...? பேரரசு என்ற புதிய பெயரும் இணைந்திருக்கிறது.

பேரரசுக்கு திருப்பதி, தர்மபு‌ரி, பழனி, திருவண்ணாமலை என்று மெகா பிளாப்கள் பல இருந்தாலும் விஜய்யை வைத்து இயக்கிய இரு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். நியாயப்படி அடுத்தப் படத்தை உடனே விஜய் பேரரசுக்கு தந்திருக்க வேண்டும். சுற்றுச்சூழலைப் பார்த்து பயந்தா தெ‌ரியவில்லை, பேரரசை சற்று தள்ளியே வைத்திருக்கிறார் இளைய தளபதி.

இந்நிலையில்தான், அடுத்து விஜய்யை வைத்து இயக்கப் போறேன் என்று நெருங்கியவர்களிடம் கூறி வருகிறார் பேரரசு. அவர் ஒரு கதையை விஜய்யிடம் கூறியதாகவும், கதை அவருக்குப் பிடித்திருப்பதாகவும் பேரரசு தரப்பு கூறுகிறது.

இந்த திடீர் சலசலப்பு காரணமாக விஜய்யின் 52வது படத்தின் இயக்குனர் யார் என்பதில் திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மேலும் அறிய

> பையா முதலிடம் - சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்

லிங்குசாமியின் பையா தொடர்ந்து பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சென்னையில் ஐந்து கோடியை தாண்டிய படம் என்ற பெருமை பையாவுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது.

4. கச்சே‌ரி ஆரம்பம்
‌ஜீவாவின் கச்சே‌ரி இந்தமுறை களை கட்டவில்லை. நான்கு வார முடிவில் சென்னையில் மொத்தமாக 79 லட்சங்களை மட்டுமே வசூலிக்க முடிந்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 2.24 லட்சங்கள்.

3. விண்ணைத்தாண்டி வருவாயா
இந்த வருடத்தின் முதல் சூப்பர் ஹிட் கௌதமின் விண்ணைத்தாண்டி வருவாயா. ஏழு வாரங்கள் முடிவில் 5.46 கோடியை சென்னையில் வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 6 லட்சங்கள்.

2. அங்காடித் தெரு
வசந்தபாலனின் அங்காடித் தெரு சென்றவார இறுதியில் 14.7 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் இப்படம் வசூலித்திருப்பது 1.2 கோடிகள்.

1. பையா
லிங்குசாமியின் பையா தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் ஏறக்குறைய 53.5 லட்சங்கள். இதன் மொத்த சென்னை வசூல் மூன்று வாரங்கள் முடிவில், 3.22 கோடிகள்.

வரும் வெள்ளிக்கிழமை புதிய படங்கள் திரைக்கு வருவதால் பாக்ஸ் ஆஃபிஸில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
மேலும் அறிய

> வாடா - மு‌ன்னோ‌ட்ட‌ம்

ஸ்கி‌‌ரீன் ‌ப்ளே எ‌‌ண்டர்டெயின்மெண்ட் சார்பில் எம்.ஆர்.மோகன்ராதா தயா‌ரித்திருக்கும் படம், வாடா. ஏ.வெங்கடேஷ் படத்தை இயக்கியிருக்கிறார். ஹீரோ சுந்தர் சி.
வழக்கமான சுந்தர் சி-யின் படங்களில் இடம்பெறும் காதல், மோதல், ‌‌ரீமிக்ஸ் பாட்டு என அனைத்து கொத்துக்கறியும் வாடாவிலும் உண்டு. சிவா என்ற கதாபாத்திரத்தில் சுந்தர் சி. யும், ஜெயா என்ற கதாபாத்திரத்தில் ஷெ‌ரில் பி‌ரிண்‌ட்டோவும் நடித்துள்ளனர். ஷெ‌ரில் பி‌ரிண்‌ட்டோ படத்தின் நாயகி. இவர் படத்தில் எம்.‌ஜி.ஆர். ரசிகராக வருகிறார்.

கோபி என்ற கதாபாத்திரத்தில் விவேக் நடித்துள்ளார். கெட்டப் போடாமல் நடிக்க முடியாது என்ற வறட்சி நிலைக்கு தள்ளப்பட்ட இவர் இந்தப் படத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜனைப் போல் கெட்டப் போட்டு காமெடி செய்ய முயன்றிருக்கிறார்.

இவர்களுடன் கிரண், ரா‌ஜ்கபூர், ஓ.ஏ.கே.சுந்தர், ராஜலட்சுமி, பிரேம், பிரபல இந்தி நடிகர் அமித் தவான் ஆகியோரும் நடித்துள்ளனர். டி.இமான் படத்துக்கு இசையமைத்துள்ளார். பிரபல, என்னடி ராக்கம்மா பாடலை ‌‌ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள். இந்தப் பாடலில் சுந்தர் சி-யுடன் இணைந்து குஷ்பு ஆடியிருக்கிறார். சுந்தர் சி. நடிக்கத் தொடங்கிய பிறகு அவருடன் குஷ்பு இணைந்து நடிக்கும் முதல் பாடல் காட்சி இது என்பது முக்கியமானது.

பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு கே.எஸ்.செல்வரா‌ஜ். வரும் வெள்ளிக்கிழமை படம் திரைக்கு வருகிறது.
மேலும் அறிய

> I.P.L பெ‌ங்களூரை ‌வீ‌ழ்‌த்‌தி இறுதிப்போட்டிக்கு செ‌ன்றது மும்பை

ஐ.பி.எல். கிரிக்கெட் அரைஇறுதியில் பெங்களூர் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகு‌தி பெ‌ற்றது.

3வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் நே‌‌ற்‌றிரவு மும்பையில் நடந்த முதலாவது அரைஇறுதியில், லீக் சுற்றில் முதலிடம் பிடித்த மும்பை இந்தியன்ஸ் அணியும், 4-வது இடம் பிடித்த பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.

பூவா தலையா வெ‌ன்ற மும்பை அ‌ணி‌த் தலைவ‌ர் டெண்டுல்கர் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி அவரும், ஷிகர் தவானும் மும்பையின் இன்னிங்சை தொடங்கின‌ர். ஸ்டெயின் வீசிய இரண்டாவது ஓவரில் 2 பவுண்டரி விரட்டிய டெண்டுல்கர் அதே ஓவரில் வீழ்ந்தார். இவ‌ர் 9 ப‌ந்‌தி‌ல் 9 ரன்க‌ள் எடு‌த்தா‌ர்.

இந்த ஐ.பி.எல். தொடரில் டெண்டுல்கர் ஒற்றை இலக்கில் ஆட்டம் இழப்பது இதுவே முதல் முறையாகும். சிறிது நேரத்தில் தவான் (12 ரன்) தேவையில்லாமல் ரன்-அவுட் ஆனார். இதன் பின்னர் அபிஷேக் நாயரும், அம்பத்தி ராயுடுவும் அணியை கொஞ்சம் நிமிர்த்தினர். நாயர் 22 ரன்களில் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தா‌ர். அடுத்து வந்த டுமினியும் (3) ஏமாற்றினார். முதல் 10 ஓவர்களில் மும்பை 4 விக்கெட்டுக்கு 81 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது.

இதை தொடர்ந்து 5-வது விக்கெட்டுக்கு ராயுடுவுடன், சவுரப் திவாரி ஜோடி சேர்ந்தார். இருவரும் அணியின் ஸ்கோரை படிப்படியாக நல்ல நிலைக்கு உயர்த்தினார். திவாரியின் ஆட்டம் மிரட்டலாக இருந்தது. கடைசி 5 ஓவர்களில் மும்பையின் தாக்குதலில் பெங்களூர் பவுலர்கள் நிலை குலைந்து போயினர். அணியின் ஸ்கோர் 144 ரன்களாக உயர்ந்த போது, ராயுடு 38 ப‌ந்துக‌ளி‌‌ல் 40 ரன்க‌ள் எடு‌த்‌திரு‌ந்தபோது ஆட்டம் இழந்தார்.

இதன் பின்னர் 14 பந்துகள் மட்டுமே எஞ்சிய இருந்த நிலையில் களம் இறங்கிய ஆல்-ரவுண்டர் பொல்லார்ட் பந்துகளை சிக்சர்களாக பறக்க விட்டு ஸ்கோரை மேலும் எகிறச் செய்தார். கடைசி 5 ஓவர்களில் முறையே 17, 17, 10, 17, 16 என்று மும்பை அணி 77 ரன்கள் சேகரித்ததால், சவாலான ஸ்கோரை எட்டியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது.

31 ப‌ந்துக‌ளி‌ல் 3 பவு‌ண்ட‌ரி, 4 ‌சி‌க்ச‌ருட‌ன் 52 ‌ர‌ன்க‌ள் கு‌வி‌த்த திவாரியு‌‌‌ம், 13 ப‌ந்துக‌ளி‌ல் ஒரு பவு‌ண்ட‌ரி, 3 ‌சி‌க்சருட‌ன் 33 ரன்க‌ள் கு‌வி‌த்த பொல்லார்டு‌ம் கடை‌சிவரை களத்தில் இருந்தனர்.

பெங்களூர் அணியின் பீல்டிங் குறிப்பிடும்படி இல்லாததும், மும்பை அணியின் ரன் உயர்வுக்கு ஒரு காரணமாகும். இதே போல் முதல் 3 ஓவரில் கட்டுக்கோப்புடன் பந்து வீசி 14 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்த பெங்களூர் அ‌ணி‌த் தலைவ‌ர் கும்ளே தனது கடைசி ஓவரில் 16 ரன்களை வாரி வழங்கினார்.

பின்னர் விளையாடிய பெங்களூர் அணி வெற்றியை நோக்கி சென்றாலும் உத்தப்பா அவுட்டான பிறகு அந்த நம்பிக்கை தளர்ந்தது.

ராஸ் டெய்லர் அதிகபட்சமாக அவுட்டாகாமல் 31 ரன்கள் எடுத்தார். காலிஸ் (11), திராவிட் (23), பீட்டர்சன் (19), உத்தப்பா (26) அவுட்டானபிறகு அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்கிலேயே பெவிலியன் திரும்பினர்.

மும்பை வீரர் பொல்லார்டு 17 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மலிங்கா, ஹர்பஜன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இன்று நடக்கும் சென்னை-டெக்கான் இடையிலான அரைஇறுதியில் வெற்றி பெறும் அணியை இறுதிப்போட்டியில் மும்பை அணி வருகிற 25ஆ‌ம் தேதி சந்திக்கும். தோல்வியடைந்த பெங்களூர் அணி 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் விளையாடும்.
மேலும் அறிய

Wednesday, April 21, 2010

> ராவண் ஆடியோ ஏப்.24

நேற்று முன்தினம் ராவண் படத்தின் மாதி‌ரி ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இந்திப் படத்துக்கான இந்த ட்ரெய்லர் ஒரு நிமிடத்துக்கும் குறைவாகவே ஓடுகிறது. முக்கியமாக இது இந்திப் பதிப்புக்கான ட்ரெய்லர். தமிழ், தெலுங்குப் பதிப்புக்கான ட்ரெய்லர் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்தி ராவணின் ஆடியோ உ‌ரிமையை டி சீ‌ரீஸ் வாங்கியுள்ளது. தமிழ், தெலுங்கு? இன்னும் முடிவாகவில்லை.

டி சீ‌ரீஸ் ராவண் ஆடியோவை வரும் ஏப்ரல் 24ஆம் தேதி வெளியிடுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம் காம்பினேஷன் என்பதால் ஆடியோ விற்பனை அமோகமாக இருக்கும் என டி சீ‌ரீஸ் நிர்வாகிகள் நம்பிக்கை தெ‌ரிவித்துள்ளனர்.

தமிழ்ல எப்பப்பா வெளியிடப் போறீங்க?
மேலும் அறிய

> மாஞ்சா வேலு சாதனை

அருண் விஜய்யின் படங்களுக்கு அறுபது பி‌ரிண்‌ட்டுகள் போட்டாலே அதிகம். அவரது மார்க்கெட் வேல்யூ நேற்று வரை அதலபாதாளத்தில்தான் இருந்தது. ஆனால் இன்று...?

மலை மலை சுமாராக போனது அருண் விஜய்யின் மார்ககெட்டை ‌ஜிவ்வென்று தூக்கிவிட்டிருக்கிறது. மலை மலையில் பணிபு‌ரிந்த அதே டீமுடன் மாஞ்சா வேலு படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஆ‌க்சனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியிருக்கும் இந்தப் படம் விரைவில் திரைக்கு வருகிறது.

மாஞ்சா வேலுக்கு மொத்தம் 215 பி‌ரிண்‌ட்டுகள் போட திட்டமிட்டுள்ளனர். அருண் விஜய் நடித்தப் படங்களில் அதிக பி‌ரிண்‌ட்டுகள் போடப்படும் படம் என்ற பெருமை மாஞ்சா வேலுக்கு கிடைத்திருக்கிறது. 200 பி‌ரிண்‌ட்டுகளை தாண்டும் முதல் அருண் விஜய்யின் படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மாஞ்சா வேலுவில் அருண் விஜய்யுடன் பிரபு, கார்த்திக், சந்தானம், கஞ்சா கருப்பு ஆகியோரும் நடித்துள்ளனர். கனல் கண்ணனின் ஆ‌க்சன் காட்சிகள் படத்தின் பிளஸ் பாயிண்‌ட்டாக இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குனர் ஏ.வெங்கடேஷ்.
மேலும் அறிய

> I.P.Lபதவி விலக மாட்டேன்: லலித் மோடி திட்டவட்டம்

ஐபிஎல் தலைவர் பதவியிலிருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று லலித் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அணிகளை ஏலம் விட்டதில் அவர் தனக்கு வேண்டியவர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டதாகவும், ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டம் நடைபெற்றதாகவும் புகார்கள் கூறப்பட்டன.

இத்தகைய புகார் காரணமாக கிரிக்கெட் வாரியத்தில் உள்ள பெரும்பாலானோர் மோடியின் செயல்பாடுகள் மீது அதிருப்தி அடைந்துள்ளதாகவும், கிரிக்கெட் வாரிய தலைவர் ஷசாங் மனோகரும் மோடி மீது அதிருப்தி கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாயின.

இதனால் ஐபிஎல் தலைவர் பதவியிலிருந்து லலித் மோடி ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், இப்பிரச்னை தொடர்பாக ஷரத் பவாருடன் விவாதிக்க டெல்லி வருமாறு லலித் மோடிக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக தாக பிசிசிஐ வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகி இருந்தது.

மேலும் லலித் மோடியை பதவி விலகுமாறு கோர ஷரத் பவார் சம்மதித்துள்ளதாகவும் அந்த செய்திகள் மேலும் தெரிவித்தன.

இந்நிலையில் துபாயிலிருந்து இன்று மும்பை திரும்பிய மோடியிடம், இந்த செய்திகள் குறித்து கேட்டபோது, ஐபிஎல் தலைவர் பதவியிலிருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

தாம் பதவி விலகப் போவதாக வெளியான செய்திகள் வெறும் யூகச் செய்திகளே தவிர, எந்த சூழ்நிலையிலும் தாம் பதவி விலகப்போவதில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
மேலும் அறிய

> I.P.L விசாரணைக் குழு மொரீஷியஸ் செல்கிறது

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நடைபெற்றதாக எழுந்துள்ள ஊழல் புகார்களை அடுத்து, மொரீஷியஸ் வழியாக ஐ.பி.எல். -இல் நுழைந்த பல நூறு கோடி ரூபாய்கள் குறித்து சில நிறுவ்னங்களை விசாரிக்க மத்திய அரசு பொருளாதார விசாரணைக் குழு ஒன்றை மொரிஷியஸ் நாட்டிற்கு அனுப்பவுள்ளது.

முதல் ஐ.பி.எல். 2008ஆம் ஆண்டு நிறுவப்பட்டபோது, குறிப்பிட்ட மொரீஷியஸ் நிறுவனங்கள் முளைத்தன. இந்த நிறுவனங்கள் மூலம் மிகப்பெரிய தொகை ஐ.பி.எல். அணிகளுக்குள் வந்துள்ளதாக விசாரணையாளர்களின் முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மொரீஷியஸ் செல்லும் இந்த சிறப்பு விசாரணைக் குழுவில் மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதாரப் பிரிவைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விசாரணைக்குப் பிறகு மொரீஷியஸ் நிறுவனங்கள் வாயிலாக ஐ.பி.எல். கிரிக்கெட்டிற்குள் நுழைந்த நிதி விவரங்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அறிய

Tuesday, April 20, 2010

> ஐந்து பேரும் அனுஷ்காவும்

ஐந்து பேருடன் ஆறாவது ஹீரோயினாக ஒரு படத்தில் நடிக்கிறார் அனுஷ்கா. சூர்யாஇ விஜய் என்று முன்னணி நடிகர்களுடன் டூயட் பாடிக் கொண்டிருந்தவர் இந்த கூட்டாஞ்சோறுக்கு எப்படி ஒத்துக் கொண்டார்.

அதை விளக்குமுன் சின்ன பிளாஷ்பேக். குன்னடத்தில் பி.வாசு இயக்கிய ஆப்தமித்ராவின் ‌ரிமேக் சந்திரமுகி என்பது எல்லோருக்கும் தொ‌ரியும். ஆப்தமித்ராவின் இரண்டாம் பாகம் ஆப்தரக் ஷகா சமீபத்தில் வெளிவந்தது. படம் ஹிட். இதனையும் தமிழில் சந்திரமுகி இரண்டாம் பாகமாக எடுக்க வேண்டும் என்பது பி.வாசுவின் விருப்பம். ஆனால் ர‌ஜினியிடமிருந்து பச்சை சிக்னல் வருவதாக இல்லை.

நேரத்தை வீணடிப்பானே என்று ஆப்தரக் ஷகாவை தெலுங்கில் இயக்குகிறார் வாசு. ஹீரோவாக நடிப்பவர் வெங்கடேஷ். அனுஷ்காஇ கமாலினி முகர்ஜ‌ரி உள்பட மொத்தம் ஆறு ஹீரோயின்கள். இனி நமது கேள்விக்கு வருவோம்.

படத்தில் அனுஷ்கா தவிர்த்து ஐந்து பேர் இருந்தாலும் படத்தின் பிரதான வேடமான சந்திரமுகி வேடத்தை அனுஷ்காவுக்கு அளித்திருக்கிறார்கள். நாமதான் ரம்மிஇ மத்ததெல்லாம் டம்மி என்று உடனே கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.
மேலும் அறிய

> மல்லிகா ஷெராவத் - நோ ஹோம்லி

ஹோம்லியாக நடிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான நடிகைகளின் விருப்பம். திறமையில்லாத, கவர்ச்சியை மட்டும் மூலதனமாகக் கொண்ட நடிகைகளின் ஸ்டேட்மெண்ட் வேறு மாதி‌ரி இருக்கும்.

அழகு ஆண்டவன் தந்தது, அதை காட்டுவதில் என்ன தவறு என்று கேள்வி கேட்பார்கள். ரசிகர்கள் கவர்ச்சியைதான் எதிர்பார்க்கிறார்கள் என பழியை ரசிகர்கள் பக்கம் திருப்புவார்கள்.

இதுபோன்ற நடிகைகளின் தலைவி என்று சொல்லலாம் மல்லிகா ஷெராவத்தை. தனது அபி‌ரிதமான கவர்ச்சி மூலம் ஹாலிவுட் வரை சென்ற இவர் சமீபத்தில் அளித்திருக்கும் ஸ்டேட்மெண்டை படிக்கும் ரசிகன் மனம் மகிழ்ந்து போவான்.

பெண்கள் அழகானவர்கள், முக்கியமாக அவர்களின் உடம்பு. அந்த வகையில் நான் பேரழகி. ஊடம்பை காட்டுவதில் எனக்கு எந்த‌க் கவலையும் இல்லை. தொடர்ந்து கிளாமராக மட்டுமே நடிப்பேன். கோடிகள் தந்தாலும் ஹோம்லியாக மட்டும் நடிக்கவே மாட்டேன்... இதே ‌ரீதியில் தொடர்கிறது ஷெராவத்தின் ஸ்டேட்மெண்ட்.

சமீபமாக சில ஹாலிவுட் படங்களில் நடிக்க இவர் ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அறிய

> கா‌‌‌‌ரீனாவுக்கு நிச்சயதார்த்தம்?

கா‌‌ரீனா கபூருக்கும், சைஃப் அலிகானுக்குமான காதல் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளதாக மும்பையிலிருந்து வரும் தகவல்கள் தெ‌‌ரிவிக்கின்றன.

கா‌ரீனா ஷாகித் கபூர் காதல் உச்சத்தில் இருந்தபோது இருவருக்கும் நடுவில் புகுந்தார் சைஃப் அலிகான். கா‌‌‌‌‌‌ரீனா ஷா கித்துக்கு கல்தா கொடுத்து சைஃப்பை காதலிக்கத் தொடங்கியதை அனைவரும் ஆச்சா‌‌‌ரியமாகவே பார்த்தனர்.

காரணம் ஷாகித் திருமணமாகாதவர், காரீனாவின் வயதையொத்தவர். மாறாக சைஃப் அலிகான் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். தவிர இரண்டு குழந்தைகள் வேறு இருக்கிறது.

பல வத‌ந்திகளுக்குப் பிறகும் இவர்களின் காத‌ல் ஸ்ட்ராங்காகவே இருக்கிறது. சென்ற வாரத்தில் சைஃபின் வீட்டில் வைத்து இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் ரகசியமாக நடந்துள்ளது என மும்பை பத்தி‌‌‌ரிகைகள் எழுதியுள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட இருவரும் கருத்து தெரிவிக்கவில்லை.

நிச்சயதார்த்தத்தை விடுங்கள், இருவரும் விரைவில் முறைப்படி திருமணம் செய்துக் கொள்ளப் போவது உண்மைதான் என்கிறா ர்கள் இருவருக்கும் நெருக்கமானவர்கள்.

இந்த காதல் ஜோடியில் கா‌‌‌‌‌ரீனாவுக்கு வயது 29. சைஃப் அலிகானுக்கு... அதிகமில்லை 43 தான்.

மேலும் அறிய

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.