Monday, May 31, 2010

> பிரசாந்த் தடகளப் போட்டியில் !

புதிய ‘மலையூர் மம்பட்டியான்’, ‘பொன்னர் சங்கர்’ ஆகிய இரண்டு படங்களைத் தவிர நடிகர் பிரசாந்துக்கு வேறு படங்கள் இல்லை. அதிலும் ‘மலையூர் மம்பட்டியான்’ தனது சொந்த தயாரிப்பு.

வழக்கு சம்பந்தமான காலங்களில் அடிக்கடி மீடியாவில் தென்பட்ட பிரசாந்த், தற்போது நடிப்பு ஒன்றையே குறிக்கோளாக‌‌க் கொண்டிருப்பதோடு, அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.

அடு‌த்த மாத‌ம் ஆசிய கிராண்ட்பி‌ரிக்ஸ் தடகள போட்டிக‌ள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் தொடங்க இருக்கின்றன. அந்த‌ப் போட்டிக்கான லோகோவை நடிகர் பிரசாந்த் வெளியிட்டு அறிமுகம் செய்து வைத்தார். நாற்பது நாடுகளைச் சேர்ந்த முன்னூறுக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாட இருக்கின்றனர்.

இவ்விழாவில் இப்போட்டிக்கான அமைப்புகுழு சேர்மன் தேவாரம், நீலசிவலிங்கம், வைத்தியநாதன் மற்றும் முன்னாள் தடகள வீராங்கனைகளான ஷைனி வில்சன், ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவுல கலந்துக்க அப்பா சொல்லி அனுப்பிச்சாரா... நீங்களா முடிவெடுத்து வந்தீங்களா பிரசாந்த்?
மேலும் அறிய

> மூவி எடிட்டிங் ஆன்லைனில் !

நீங்களாகவே தயாரித்த உங்களுடைய ஹோம் மூவீஸ்களுக்கு மெருகூட்ட திட்டமிடுகிறீர்களா? ஆன்லைனில் இந்த வேலைகளை மிக எளிதாக மேற்கொள்ள உதவுகிறது pixorial.com என்னும் இணைய தளம். எப்படி படங்களுக்கு அடோப் போட்டோ ஷாப் அல்லது அண்மைக் காலத்திய அப்ளிகேஷன் சி.எஸ். 4 உதவுகிறதோ, அதே போல பிக்ஸோரியல் என்னும் இந்த தளம் அனைத்து டூல்களையும் தருகிறது.

நம் வீடியோ பைல்களுக்கு இந்த தளம் 10 ஜிபி இடம் தருகிறது. 800 எம்பி வரையிலான அளவில் எந்த பார்மட்டிலும் வீடீயோ பைல்களை அனுப்பி மெருகூட்டலாம். AVI, FLV, MP4, MPEG, DV, மற்றும் WMV என அனைத்து வகை பார்மட் பைல்களையும் இந்த தளம் ஏற்றுக் கொள்கிறது.

உங்கள் வீடியோ பைலை இந்த தளத்தில் அப்லோட் செய்தவுடன், இந்த தளம் தரும் எளிய ஆன்லைன் எடிட்டரைப் பயன்படுத்தலாம். கிளிப் காட்சிகளை எப்படி இணைப்பது என்ற வரிசையைக் காட்டலாம். இதனை ஒரு ஸ்டோரிபோர்டாக அமைக்கலாம். பின்னர் ஒவ்வொன்றுக்கும் நேரம் அமைப்பது, தோன்றி மறைவது போன்ற எபக்டுகளைத் தரலாம். தலைப்புகளை அமைக்கலாம். மொத்தமாக அனைத்து முடிந்த பின்னர், மூவியினை அதிகமான அல்லது குறைந்த ரெசல்யூசனில் வடிவமைத்து டவுண்லோட் செய்திடலாம். நீங்கள் விரும்பினால் பின்னர் இதனை எந்த சோஷியல் நெட்வொர்க் தளங்களிலுல் பதியலாம். அல்லது டிவிடியில் காப்பி செய்திடலாம்.முதலில் இந்த தளத்தில் நுழைந்தவுடன், உங்களுக்கென உள்ள இமெயில் அக்கவுண்ட் மற்றும் அதற்கான பாஸ்வேர்ட் கொடுத்து அக்கவுண்ட் ஒன்று தொடங்க வேண்டும். பின்னர் காட்டப்படும் விண்டோவில் மூன்று ஆப்ஷன்கள் கிடைக்கும். உங்கள் ஹோம் வீடியோ பைலை அப்லோட் செய்வது, உங்களுடைய ஷாவினை நீங்களே உருவாக்குவது மற்றும் உங்கள் படைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது.

உங்களுக்கென இந்த தளத்தில் தரப்படும் 10 ஜிபி இடத்தில் உங்கள் வீடியோக்களைப் பதிந்து வைக்கலாம். அல்லது உங்களுக்குப் பிரியமான சோஷியல் நெட்வொர்க் தளங்களில் பதிந்து வைக்கலாம்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

எழுதியவர் : கார்த்திக்
மேலும் அறிய

Sunday, May 30, 2010

> அண்ணன் வழியில் தம்பி!

ஆண்டுதோறும் தன் பிறந்தநாள் விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தனது ‘அகரம்’ பவுண்டேஷன் மூலமாக செய்து வருகிறார் நடிகர் சூர்யா. குறிப்பாக கல்விக்கான உதவிகளை பெரும் அளவில் செய்து வருகிறார்.

அதைப்போலவே தனது பிறந்தநாளை முன்னிட்டு பொது சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் நடிகர் கார்த்தி. தனது அண்ணன் வழியில் இந்த சேவை ஒவ்வொரு பிறந்த நாள் விழாவுக்கும் தொடரும் என்கிறார்.

அவ்வகையில் குன்றத்தூர் அருகேயுள்ள ட்ராப்ஸ் முதியோர் இல்லத்துக்கு சென்று அங்குள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு தேவையான வசதிகளை செய்வதற்காக ரூ.50 ஆயிரம் வழங்கினார்.

மேலு‌ம், புரசைவாக்கம் மற்றும் ராயபுரத்தில் உள்ள அரசு சீர்திருத்த பள்ளிகளுக்கும் சென்று அப்பள்ளிகளுக்கு தேவையான மேஜை, நாற்காலி, மின்விசிறி போன்றவற்றுக்கான தொகையை வழங்கினார்.

இதற்கான ஏற்பாட்டை அகில இந்திய கார்த்தி ரசிகர் மன்றத்தினர் செய்திருந்தனர். நல்ல விஷயம்... இன்னும் நெறைய பண்ணுங்க, ‘பையா...’
மேலும் அறிய

Saturday, May 29, 2010

> ‘சிங்கம்’ சூர்யாவின் நன்றிக்கடன்

சூர்யாவுக்கு ஒன்றிரண்டு படங்கள் வந்தாலும் பெரிய அளவுக்கு பேசப்பட்ட படம் ‘நந்தா’. அதனால் இயக்குனர் பாலா மீது எப்போதும் நல்ல மரியாதை கொண்டவர் சூர்யா. இதை எந்த விழாக்களிலும் சொல்வார். அதை‌‌‌‌ப் பயன்படுத்தி பாலாவும் கால்ஷீட் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்வதில்லை.

தற்போது ஆர்யாவை வைத்து ‘அவன் இவன்’ படத்தை இயக்கி வரும் பாலா, முதலில் சூர்யாவை மனதில் வைத்துதான் கதையை உருவாக்கி வைத்திருக்கிறார். ஆனால் கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு சூர்யா பிஸி. கொஞ்ச நாள் காத்திருந்து விட்டுத்தான் ஆர்யாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் பாலா.

ஆனாலும் ஒரு கெஸ்ட் ரோலாவது சூர்யா இந்த படத்தில் பண்ண வேண்டும் என பாலா கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஒரு சின்ன கேரக்டர், ஆனால் பேசப்படும்படியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் அறிய

> திரைக்கதை வித்தியாசம் !

கமல் நடித்த ‘விருமாண்டி’ படத்தில் வித்தியாசமான திரைக்கதையாக அதில் நடித்த கதாபாத்திரங்கள் தங்கள் பார்வையில் என்ன நடந்தது என்பதை அவரவர் பாணியில் சொல்லப்பட்டிருந்தன. அதேபோன்ற கதையமைப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம்தான் ‘பச்சை என்கிற காத்து’.

‘அ’ திரை நிறுவனம் சார்பாக அஸ்வத்தமன், இந்துமதி, வைகறையாழன் தனலட்சுமி தயாரிக்கிறார்கள். மணப்பாறையில் வாழ்ந்த ஒரு இளைஞன் வாழ்வில் ஏற்பட்ட உண்மை சம்பவ‌ம்தான் இந்த‌ப்படம். படத்தில் மொத்தம் ஏழு முக்கிய கதாபாத்திரங்கள். ஏழு பேரும் அவரவர் பார்வையில் நடந்ததை சொல்கிறார்கள்.

சினிமா கலப்பில்லாமல் எதார்த்தமான படமாக எடுத்துள்ளேன். மேலும் ஒரு பாடல்காட்சியை ஒரே ஷாட்டில் படமாக்கியுள்ளது புதுமையாக இருக்கும். படப்பிடிப்பின் போதே பலர் இந்த முயற்சியை பாராட்டினார்கள். அதேபோல மக்களும் பாராட்டுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. குறுகிய காலத்துக்குள் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் நிறைவுடன் இருக்கும்’ என்கிறார் தங்கர்பச்சானின் சீடரும், இப்பட இயக்குனருமான கீரா.
மேலும் அறிய

> திரைப்பட‌க் கல்லூரி விண்ணப்பம்

2010-2011 ஆ‌ம் ஆண்டுக்கான எம்.ஜி.ஆர். திரைப்பட, தொலைக்காட்சிக்கான தொழில்நுட்ப பயிற்சியில் சேருவதற்கான விண்ணங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. மூன்றாண்டு கால கல்வியாகும்.

+2 தேறியவர்கள், பட்டப்படிப்புகளுக்கான தனித்தனியாக விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விருப்பமானவர்கள் கல்வி தகுதிகேற்ற வகுப்புகளில் சேர்ந்து படிக்கலாம்.

இயக்குதல், திரைக்கதை, வசனம் எழுதுவதற்கான படிப்பில் சேர வேண்டுமெனில் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். எடிட்டிங், பிராஸசிங், ஒலி அமைப்பு போன்றவைகளுக்காக +2 வகுப்பு தேறியிருந்தால் போதுமானது.

மேலும் விவரங்களுக்கு 044-22542212 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது www.tn.gov.in என்ற இணையதள முகவரியிலோ பார்த்து தெரிந்தகொள்ளலாம்.

இது ஒரு அரசு நிறுவனம் என்பதால் ஜாதி அடிப்படையிலான கல்விக் கட்டணச் சலுகைகளும் உண்டு.
மேலும் அறிய

> ரஜினிக்காக காத்திருக்கும் நடிகை!

தான் நடிக்கும் ஒவ்வொரு படமும் வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் நடிகைகள், படங்கள் நிறைய கிடைக்கும் என்பதோடு, சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்பதைத்தான் பெரியதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு படம் சுமாராக ஓடிவிட்டாலே அடுத்த படத்துக்கு இரண்டு மடங்கு சம்பளத்தை உயர்த்தி விடுவார்கள்.

அப்படி வந்த இரண்டு புதுபடங்களைக் கூட வேண்டாமென மறுத்துவிட்டார் விஜயலட்சுமி. காரணம் அவர் நடித்து வெளியாக இருக்கும் இரண்டு படங்க‌ள் ‘கற்றது களவு’, ‘சுல்தான் தி வாரியார்’. இந்த இரண்டு படங்களும் வெளிவந்ததும் தனக்கு மார்‌‌க்கெட் கூடும். அதேநேரம் சம்பளத்தையும் உயர்த்தி விடலாம் எனத் திட்டமிட்டிருக்கிறார்.

அதிலும் ரஜினிக்கு ஜோடி என்கிற பெயரும் கிடைக்கும் என்பதால் ‘வாரியர்’ படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார் விஜயலட்சுமி. காத்திருக்கிறது தப்பில்லைதான், ஆனா வயசும் காத்துக்கிட்டு இருக்காதில்லையா... அனுசரிச்சுப் போங்க.
மேலும் அறிய

Friday, May 28, 2010

> Honda நிறுவனத்தின் 2வது தொழிற்சாலை

மோட்டார் பைக் தயாரித்து விற்பனை செய்யும் ஹோன்டா நிறுவனம், ராஜஸ்தானில் மோட்டார் பைக், ஸ்கூட்டர் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கிறது.

ஜப்பானைச் சேர்ந்த ஹோன்டா நிறுவனத்தின் துணை நிறுவனம் ஹோன்டா மோட்டார் சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா லிமிடெட்.

இதன் தயாரிப்பான யூனிகார்ன் டாஜிலர் பைக் அறிமுக விழா கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது. இந்நிறுவனத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சின்ஜி அயோமா செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவில் ஹோன்டா பைக் விற்பனை அதிகரித்து வருகிறது. இதன் தேவையை நிறைவேற்ற ராஜஸ்தான் மாநிலத்தில் ஆர்வல் என்ற இடத்தில் அடுத்த ஆண்டு மோட்டார் பைக் உற்பத்தி செய்யும் புதிய தொழிற்சாலையை அமைக்கின்றோம்.

இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக ஹோன்டா பைக் விற்பனை அதிகரித்து வருகிறது. இதே போல் இந்த நிதி ஆண்டிலும் விற்பனை 18 விழுக்காடு அதிகரிக்கும். இதை ஈடுகட்ட உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். தற்போது வருடத்திற்கு 1 லட்சத்து 60 ஆயிரம் இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்கின்றோம். இதை 2 லட்சத்து 20 ஆயிரமாக அதிகரிக்க உள்ளோம்.

எங்கள் தொழிற்சாலை ஹரியானா மாநிலத்தில் குர்கானுக்கு அருகே மனிஸ்வர் என்ற இடத்தில் உள்ளது. இங்கு அதிகபட்சமாக வருடத்திற்கு 1 லட்சத்து 50 ஆயிரம் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே தயாரிக்க முடியும்.

எனவே இரண்டாவது தொழிற்சாலையை ராஜஸ்தானில் ஆல்வார் மாவட்டத்தில் அமைக்கின்றோம். இந்த நவீன தொழிற்சாலை 52 ஏக்கர் பரப்பளிவில் அமையும். இது வருடத்திற்கு 1 லட்சம் மோட்டார் பைக், ஸ்கூட்டர்கள் தயாரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த தொழிற்சாலை ரூ.500 கோடி முதலீட்டில் அமைக்கப்படுகிறது. இங்கு உற்பத்தி அடுத்த வருடம் ஜூலையில் இருந்து தொடங்கும்.

இது இல்லாமல் இந்தியாவில் மேலும் ரூ.1,200 கோடி முதலீடு செய்ய உள்ளோம் என்று சின்ஜி அயோமா தெரிவித்தார்.

இந்தியாவின் மொத்த மோட்டார் பைக் விற்பனையில், ஹோன்டாவின் பங்கு 14 விழுக்காடாகவும், ஸ்கூட்டர் விற்பனையில் 50 விழுக்காடாகவும் உள்ளது.

இந்தியாவில் வருடத்திற்கு 1 லட்சத்து 20 ஆயிரம் யூனிகார்ன் டாஜிலர் பைக் விற்பனை ஆகும் என்று எதிர்பார்க்கின்றோம். இந்த வருட இறுதியில் 125 சி.சி சி.பி.யூ விஎப்ஆர் ரக பைக்குகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு பைக்,ஸ்கூட்டர் ஏற்றுமதி செய்கின்றோம். சென்ற வருடம் 30 நாடுகளுக்கு 80 ஆயிரத்திற்கும் அதிகமாக இரு சக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளோம்.

ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியாவுக்கு மட்டுமல்லாது, ஆசிய-பசிபிக் பிராந்திய நாடுகளுக்கும், தென் கிழக்காசிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று சின்ஜி அயோமா தெரிவித்தார்.
மேலும் அறிய

> விஜய் புது கெட்டப்பில் - சீமான்.

ஆவேசமாய் ‘நாம் தமிழர்’ கட்சி ஆரம்பித்திருக்கும் இயக்குனர் சீமான். அரசியல் பணிகளுக்கிடையே ஒரு படத்தை இயக்கவுள்ளார். மிகவும் வலிமை வாய்ந்த கதையாகவும், ஒவ்வொரு தமிழனையும் யோசித்துப் பார்க்க வைக்கும் காட்சிகளுமாக அதிரடியாய் களம் இறங்க இருக்கிறார்.

விஜய்தான் ஹீரோ. விஜய்க்கு இது முக்கியப் படமாக இருக்கும். ஏற்கனவே இப்படி ஒரு கதை இருப்பது விஜய்க்குத் தெரியும். இப்போது வேண்டாமே என்று தள்ளிப்போட்டு வந்திருக்கிறார். அதற்கான நேரம் இப்போது வந்திருக்கிறது. அதனால் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

‘காலைப்புலி’ தாணு தயாரிக்கும் படம் என்றால் பிரம்மாண்டத்துக்கு பஞ்சமே இருக்காது. ‘புது கெட்டப்பில் நடிங்க இளைய தளபதி’ என்று ஓயாமல் கோஷமிட்டு வந்த அவருடைய ரசிகர்களுக்கு தீனி போடும் வகையில் வித்தியாசமான கெட்டப்பில் குதிக்க இருக்கிறார் விஜய்.

மேலும் படத்தின் வசனம் நெருப்பு போல இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு டைரக்டர் குழுவே வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது.
மேலும் அறிய

> சூப்பர் ஸ்டாரின் கண்டிஷன்!

மிகுந்த பொருட்செலவில் தயாரித்ததோடு முழுக்க அனிமேஷன் படமான ‘சுல்தான் தி வாரியர்’ படம் எல்லா வேலைகளும் முடிந்து வெளியிடத் தயார் நிலையில் இருந்தும், படம் இன்னும் ரிலீஸ் ஆகாத கவலையில் இருக்கிறார் படத்தின் இயக்குனர் சௌந்தர்யா ரஜினி.

“எந்திரன்” படத்துக்காக ஒவ்வொரு நாளும் வெளிநாடு, உள்ளூர் என பறந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார், மகளின் இந்த கவலையை காது கொடுத்து கேட்கக்கூட நேரமின்றி பி‌ஸியாக இருக்கிறார்.

அம்மா லதா மூலம் படத்தை எப்போது வெளியிடலாம் எனக்கேட்டு தூது அனுப்ப, இப்போது வேண்டாம், ‘எந்திரன்’ படம் வெளியாகி வெற்றிக்கு பின்னால் வெளியிடலாம் என்று உறுதியாக சொல்லிவிட்டாராம் ரஜினி.

காரணம் பல கோடிகளை கொட்டி உருவாகி வரும் ‘எந்திரன்’ பட வசூலை எந்த வகையிலும் பிரித்துவிடக் கூடாது என்பதில் ரஜினி, ஷங்கர், சன் பிக்சர்ஸ் மூவரும் கண்டிப்புடன் இருக்கிறார்களாம்.

பின்னே கோடி‌க் கண‌க்‌கி‌ல் சம்பளம் வாங்கும் சூப்பர் ஸ்டார் இதை கூடவா செய்ய மாட்டார்.
மேலும் அறிய

> பரத் தம்பி ,அமீர் அண்ணன்

அமீருக்கு தம்பியாக நடிக்கிறார் பரத். அடுத்த மாதம் தொடங்கயிருக்கும் இப்படத்தை அமீர் தயாரித்து ஒரு முக்கியமான கேரக்டரிலும் நடிக்கிறார். அண்ணன் தம்பி பாசத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது ‘ஜெயம்’ ரவியை வைத்து ‘ஆதிபகவான்’ என்ற படத்தை இயக்கிவரும் அமீர். அண்ணன் கதாபாத்திரத்தை விரும்பி ஏற்றுள்ளார். ஆனால் அந்த படத்தை தான் இயக்காமல் வி.இசட்.துரையை இயக்கச் சொல்லியிருக்கிறார்.

‘ஒரே நேரத்தில் இரண்டு வேலைகள் செய்தால் எதிலும் முழுமையான கவனம் செலுத்த முடியாது என்பதால். நான் தயாரிக்கும் படத்தை வேறு டைரக்டரிடம் கொடுத்துள்ளேன்’ என்கிறார்.

‘யோகி’யில் ஹீரோவாக நடித்துவிட்டு இதில் அண்ணனாக நடிப்பது பற்றி கேட்டால்... அதைவிட இது பவர்ஃபுல்லான கேரக்டர். படம் வரும்போது தெரியும் என்கிறார் அமீர். நம்பிக்கை இருக்குங்க...
மேலும் அறிய

Thursday, May 27, 2010

> நண்பா உலக அளவில் !

குறும்படம் மூலம் பல்வேறு விருதுகளை குவித்து வருகிறார் ரோஷின் என்ற மாணவர். பிரான்சில் ஆண்டுதோறும் நடைபெறும் குறும்பட போட்டியில் எடிட்டிங் மற்றும் ஒலி அமைப்புக்காக இரண்டு தங்க‌ப் பதக்கங்களைப் பெற்றிருக்கிறது இவர் இயக்கிய ‘நண்பா’ எனும் குறும்படம்.

மாணவர்களுக்கான போட்டியில் ஒவ்வொரு நாட்டில் இருந்தும் இரண்டு படங்கள் மட்டும் தேர்வு செய்கிறார்கள். அப்படி உலகம் முழுக்க வந்திருக்கும் படங்களிலிருந்து பரிசுகளை தேர்வு செய்கிறார்கள். அந்தத் தேர்வில்தான் இரண்டாம் பரிசு பெற்றிருக்கிறது ரோஷின் படம்.

சென்னையில் இருக்கும் எல்.வி.பிரசாத் ஸ்டுடியோவின் மாணவரான இவர், 'இதுபோல் இன்னும் பல விருதுகளைப் பெற்று இந்தியாவுக்கும், தான் பயின்று வரும் பிரசாத் பிலிம் இன்ஸ்டிடியூட்டுக்கும் பெருமை சேர்க்கப் போகிறேன்’ என்கிறார்.

வாங்க... வாங்க... உங்களை மாதிரியான திறமைசாலிதான் வேணும்.
மேலும் அறிய

> மம்தாவின் மனக் கவலை

‘என்னைப் பற்றி தவறான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. யார் இப்படியெல்லாம் பத்திரிகைகளுக்கு சொல்கிறார்கள் என்று தெரியவில்லை’ என்கிறார் மம்தா. அமீர் இயக்கும் ‘ஆதிபகவன்’ கமர்சியல் படம் இல்லை என்பதால் அதில் நடிக்க மறுத்து விட்டேன் என்றெல்லாம் பேசிக் கொள்கிறார்கள்.

டாகுமெ‌ண்ட்ரி போன்ற கதையம்சம் கொண்ட படங்களிலும் நடித்திருக்கிறேன். நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளன. ஆனால் முன்னணி நடிகையாக வரவேண்டுமென்றால் கமர்சியலான ‘ஹிட்’ படங்களில் நடிக்க வேண்டும். அதற்காகத்தான் தற்போது கதைகள் கேட்டு சில படங்களில் நடித்து வருகிறேன்.

‘ஆதிபகவன்’ படத்தில் கால்ஷீட் பிரச்சினையால் கொஞ்சம் தாமதம் ஆனதே தவிர, படத்தில் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் கூறவில்லை. அமீர் சாருக்கும் இது தெரியும். ஓரிரு வாரங்களுக்குப் பிறகு ஆதிபகவனில் நடிக்க இருக்கிறேன்’ என்றார். பொடி நடையா... நடந்துகிட்டே இதையெல்லாம் யோசிப்பாங்களோ...
மேலும் அறிய

> விஜய்யின் வேலாயுதம் படப்பூஜை விழா அறிவிப்பு !

விஜய்யின் ‘வேலாயுதம்’, ‘காவல்காரன்’ படத்துக்குப் பின் நடிக்கும் படம். ‘வேலாயுதம்’ படப்பூஜையே பிரம்மாண்ட விழாவாக நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். படப்பூஜை விழாவாக மட்டுமில்லாமல் விஜய் ரசிகர் மன்றத்தின் விழாவாகவும், முக்கிய சில முடிவுகள் அறிவிப்பு விழாவாகவும் இருக்குமென்கிறார்கள்.

ரசிகர் மன்ற முக்கிய பிரமுகர்களுக்கு தனியாக அழைப்பும் விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் தொடர்ந்து தோல்வி‌ப் படங்களாக கொடுத்து வருவதால் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விழாவாகவும் இது இருக்குமாம்.

ஆஸ்கார் ரவிச்சந்திரனின் பிரம்மாண்டமான படத்தயாரிப்பில் ‘ஜெயம்’ ராஜா இயக்கும் படம். யார்... யாரோ ஹீரோயினியாக நடிப்பார்கள் என இழுப்பறியில் இருந்த விஷயம் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. அந்த நாயகி ஹன்சிகா.

விஜயை இயக்குவது மூலம் ‘ஜெயம்’ ராஜாவின் ஆசை நிறைவேறப் போகிறது. தம்பி படம்னு நெனச்சிக்கிட்டு, நீங்களாவது ‘ஹிட்’ கொடுங்க ராஜா.
மேலும் அறிய

Wednesday, May 26, 2010

> வாய்ப்புகள் ! விடாமல் துரத்துகிறது.

இயக்கப் ஒப்புக்கொண்ட படம் வரைக்கும் இயக்கி முடித்துவிட்டு டென்ஷனே இல்லாமல் நடிப்பது மட்டுமே போது‌ம் எ‌ன்ற யோசனை‌யி‌ல் இரு‌க்‌கிறார் இயக்குனர் ஏ.வெங்கடேஷ். காரணம் ஏகப்பட்ட படங்கள் இயக்கியதில் கிடைக்காத புகழ் ‘அங்காடித் தெரு’வில் கிடைத்ததாக நெகிழ்கிறார்.

அதோடு அவரின் மனைவி மற்றும் சொந்தங்களும் நடிப்பதைத்தான் விரும்புகிறார்கள். நடிப்பில் ‘அங்காடி‌த் தெரு’தான் முதலும் கடைசியும் என்றார். ஆனால், பாராட்டி வரும் நிறைய போன் கால்களால் மனம் மாறியிருக்கிறார்.

தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் ‘வல்லக்கோட்டை’, இதையடுத்து அருண் விஜய் நடிக்கும் படம் ‘காவல்துறை’. இது, ‘மலை மலை’, ‘மாஞ்சா வேலு’ படத்தை தயாரித்த அதே நிறுவனம் தயாரிக்கும் படம். இவ்விரண்டையும் இயக்கி முடித்த பிறகு முழுநேர நடிகராக மாற இருக்கிறார்.

தனது நண்பர்களான பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், அமீர், சசி போன்றவர்களும் தங்களின் படங்களில் நடிக்க அழைப்பு விடுத்திருக்கிறார்களாம். ஒரு தடவை சாயத்தை பூசிட்டா விடாதுங்கறது உண்மைதானோ!
மேலும் அறிய

> வடிவேலுக்கு சுந்தர்.சி.யின் சமாதான தூது!

சில வருடங்களாக நடிக்க மட்டுமே செய்து வந்த சுந்தர்.சி. தற்போது மீண்டும் படம் இயக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார். ‘தலைநகரம்’ தான் இவர் ஹீரோவான முதல் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு சற்று மங்கும் நிலையில் இருப்பதால் மீண்டும் இயக்குனராக‌த் திட்டமிட்டு ‘தலைநகரம்’ படத்தின் இரண்டாம் பாகமாக, ‘நகரம் மறுபக்கம்’ என்று தலைப்பிட்டு பணிகளை ஆரம்பித்து விட்டார்.

தலைநகரத்தின் வெற்றிக்கு வடிவேலுவின் பங்கு நிறைய இருந்தது என்பதால்... இரண்டாம் பாகத்திலும் அவரை நடிக்க வைக்க தூது அனுப்பியுள்ளார் சுந்தர்.சி.

‘குரு சிஷ்யன்’ படத்தில் முதலில் நடிப்பதாக இருந்த வடிவேலு, நடிக்கவில்லை. அதற்குக் காரணம் சுந்தர்.சி.தான் என யாரோ வடிவேலுவிடம் போட்டுக் கொடுத்து விட்டார்களாம். அதனால் சமாதான முயற்சி நடைபெறுகிறது.
மேலும் அறிய

> அதிரடியாய் களம் இறங்குகிறது ‘சிங்கம்’.

அதிரடியாய் களம் இறங்க இருக்கிறது ‘சிங்கம்’. அனுஷ்காவுக்கு அடுத்தடுத்து பெரிய படங்கள். விஜய், சூர்யாவென முன்னணி ஹீரோக்களோடு ஆட்டம் போட்டு முடித்திருக்கிறார். அதற்குப் பிறகு இன்னும் பெரிய ஹீரோக்களோடு நடிக்க வேண்டுமெனும் ஆசை எப்போது நிறைவேறுமென்று தெரியவில்லை.

‘சிங்கம்’ சூர்யா, இயக்குனர் ஹரி பற்றி கேட்டால் வாய் வலிக்கும் அளவுக்கு புகழ்ந்து தள்ளுகிறார். குறிப்பாக ஹரியை, கதை சொல்லும் போதே தேவையில்லாமல் உங்களை கிளாமராக காட்டமாட்டேன். என்ன தேவையோ அதை மட்டும் செய்தால் போதுமென்றார். அதைப் போலவே ‘நச்’சின்னு இருக்கும் என்னோட கிளாமர் என்கிறார்.

‘சிங்கத்தை ஹரி லட்சியப் படம் போல எடுத்திருக்கிறார். சின்னச் சின்ன விஷயமும் பக்காவா இருக்கணும்னு எதிர்பார்ப்பார். ஒருநாள் என்னோட டிரெஸ் பிடிக்கலைங்கறதுக்காக, காரெடுத்துக்கிட்டு போயி அவரே செலக்ட் பண்ணிக் கொண்டு வந்து கொடுத்து நடிக்க வெச்சார்னா பாருங்களேன்’ என்கிறார் பெருமையாக.

சினிமாவுக்காக எவ்வளவோ செஞ்சிட்டார் இதை செய்ய மாட்டாரா?
மேலும் அறிய

Tuesday, May 25, 2010

> ஜூன் 2, 3 திரைப்பட இலவச பயிற்சி முகாம்!

சென்னையில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவ, மாணவிகளுக்கு இலவச திரைப்பட பயிற்சி முகாமை நடத்துகிறது தாட்கோ நிறுவனம். தேசிய திரைப்படத்துறை கழகத்தினர் சேர்ந்து இம்முகாமை ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

ஜூன் 2, 3 ஆகிய தேதிகளில் கோ ஆப்டெக்ஸ், வேர்ஹவுஸ் முதல் மாடி 350, பாந்தியன்சாலை, எழும்பூர் என்ற முகவரியில் நடைபெறுகிறது. இதில் ஒளிப்பதிவு, எடிட்டிங், மல்டிமீடியா போன்ற பயிற்சிகளை இலவசமாக கற்றுக் கொடுக்கின்றனர். 12ஆ‌ம் வகு‌‌ப்பு‌க்கு மேல் படித்திருக்க வேண்டும்.

தகுதியுடையவர்கள் கல்வி, மற்றும் சாதி சான்றுகளுடன் நேரிலோ, 044 28192407, 28192506 என்ற எண்ணுக்கு போன் செய்தும் தகவல் பெறலாம். முகாமில் திரைப்படத் துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துகொண்டு விளக்கமளிக்க உள்ளனர்.
மேலும் அறிய

> ‌ஸ்ரு‌தி - அப்பாதா‌ன் எல்லாமே

எப்போதும் தன் அப்பா புராணத்தை யாரிடமாவது சொல்லாவிட்டால் அன்றைய பொழுதே போகாது ஸ்ருதி ஹாசனுக்கு. ‘அப்பாதான் எனக்கு எல்லாமே. அப்பான்னு சொல்றதைவிட நல்ல நண்பன்னுதான் சொல்லுவேன். எதையும் என் விருப்பப்படி விட்டுவிடுவார். அவர் எண்ணங்களை என் மீது திணிக்க மாட்டார்.

இந்தியில் நான் நடித்த ‘லக்’ சரியாப் போகலை. முதல் படம், அதுவும் பெரிய படம் ஓடலைன்னதும் முதல்ல ஆறுதல் சொன்னது அப்பாதான். அந்த நேரத்தில் எனக்கு அவரின் வார்த்தைகள் தைரியம் கொடுத்துச்சி.

இதோ இப்போ தமிழ்ல முதல் படம் சூர்யாவுக்கு ஜோடி, ‘ஏழாம் அறிவு’ என்ற படம், ஏ.ஆர்.முருகதாஸ் பண்றார். பெரிய நிறுவனம். ‘தைரியமா பண்ணு எந்த விஷயமா இருந்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய் கண்டிப்பா ஜெயிப்பேன்’னு வாழ்த்தினார்.

நானும் சினிமாவை ஒரு கை பாத்திடறேன் என்று களம் இறங்கி இருக்கிறார் ஐஸ்க்ரீம் ஸ்ருதிஹாசன். பின்னுங்க பின்னுங்க...
மேலும் அறிய

> அடங்கிப் போன விஜய்

விஜய் - அசினை வைத்து எடுக்கப்பட்டு வரும் படம் ‘காவல்காரன்’. வேலூர் மாவட்டத்தில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை பார்த்து வந்த விஜய்போல் இல்லாமல் முற்றிலும் வித்தியாசமாக காட்டியிருக்கிறேன் என்கிறார் இப்படத்தின் இயக்குனர் சித்திக்.

தொடர்ந்து தோல்விப் படங்களாகக் கொடுத்துவரும் விஜய், காவல்காரனை சித்திக் விருப்பப்படி எடுக்க வைத்திருக்கிறார். வழக்கமான விஜய் படமாக இல்லாமல் கதையுடன், ஒரு பொறுப்புள்ள விஜய் படத்தில் தெரிகிறாராம்.

ஒவ்வொரு படத்தின் தொடக்கத்திலும் ஒரு அதிரடியான ‘ஓபனிங் ஷாங்’ வரும். அப்படியொரு பாடல் இதிலும் வைத்துக் கொள்ளலாம் என்று விஜய் கேட்க, வேண்டாம் என்று நாசூக்காக மறுத்துவிட்டாராம் சித்திக். படத்தை ஓடவெச்சிடுவார் போல... பார்ப்போம்.
மேலும் அறிய

> தோ‌னியும் அ‌‌சினும் பைக்கில் ஒன்றாக சவாரி

தன்னைப் பற்றியும் தோ‌னி பற்றியும் நாளுக்கு நாள் வரும் கிசுகிசுவால் மனமுடைந்து காணப்படுகிறார் நடிகை அ‌‌சின்.

நானும் தோ‌னியும் நல்ல நண்பர்கள்தான். எங்க ரெண்டு பேருக்குள்ளும் நீங்க நெனைக்கிற மாதிரி எதுவுமில்லை என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்தாலும் நம்பத் தயாராயில்லை பிலிம் உலகம்.

தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்து கொண்டிருக்கிறேன். ஒன்றிரண்டு இந்தி படங்களும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நடிக்கவே நேரம் போதவில்லை. அவ்வளவு பிஸியாக இருக்கிறேன். வீணாக ஏன் இப்படி தப்பு தப்பாக எழுதுகிறார்கள், என்கிறார்.

ஆனால் மும்பை வீதிகளில் தோ‌னியின் இரு சக்கர வாகனத்தில், ஹெல்மெட்டுடன் சவாரி போவது கண்டிப்பாக அ‌சின்தான் என்று தீ மிதிக்கக் கூட தயாராயிருக்கிறார்கள் மும்மை வாழ் தமிழ் நெஞ்சங்கள். அப்புறம்... கிரிக்கெட்ல எப்படி ஜெயிக்கிறது?
மேலும் அறிய

Monday, May 24, 2010

> Google Chrome முதலிடத்தை பிடிக்குமா?

இன்டர்நெட் தேடலுக்கு அடிப்படையான பிரவுசர்கள் அனைத்தும் இலவசமாகஇன்று கிடைக்கின்றன. இவற்றில் முதல் இடத்தில் இயங்குவது இன்டர்நெட்எக்ஸ்புளோரர் பிரவுசராகும். அடுத்து மொஸில்லாவின் பயர்பாக்ஸ் இடம்பெறுகிறது. ஆனால் இவற்றுக்குப் பின்னால் இருக்கும் குரோம் பிரவுசர், வெகுசீக்கிரம் முதல் இடத்தைப் பிடித்துவிடும் என்று பலரும் கணக்கிடுகின்றனர். இதற்கென அவர்கள் கூறும் காரணங்களைப் பார்க்கலாம்.

காரணங்களைப் பார்க்கும் முன் இன்றைய பிரவுசர் சந்தை நிலை குறித்த சிலதகவல்களைக் காணலாம். சென்ற ஏப்ரல் மாதத்துடன் முடிந்த ஆய்வுக் கணக்கின்படி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், பிரவுசர் வாடிக்கையாளர்களில் 80% பேரைக் கொண்டிருந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஏப்ரல் இறுதியில் 59.95% க்குஇறங்கியுள்ளது. குரோம் பிரவுசர் 6.7% கொண்டுள்ளது. இந்த மாதத்தில்மட்டுமான உயர்வு 0.6% ஆகும். இது மிகப் பெரிய அளவிலான எண்ணிக்கைஇல்லை என்றாலும், இதுவரை குரோம் பெற்ற கூடுதல் வாடிக்கையாளர்களின்எண்ணிக்கையில் இதுவே மிக அதிகமாகும். இதனுடன் ஒப்பிடுகையில், சபாரிமற்றும் பயர்பாக்ஸ் கொண்ட கூடுதல் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். பயர்பாக்ஸ் தற்போது 25% வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. ஆப்பராமற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்கள் தங்கள் வாடிக்கையாளர்களைஇழந்துள்ளனர். இதனைத் தவிர்த்தவர்கள் பயர்பாக்ஸ் மற்றும் குரோம்பிரவுசருக்கு மாறி உள்ளனர். இதற்கான காரணங்கள் கீழ்க்கண்டவை எனப்பலரும் கருதுகின்றனர்.வேகம்

கூகுள் தரும் குரோம் பிரவுசர், இன்டர்நெட் தளங்களைக் கொண்டு வருவதில்பேய் வேகத்தைக் கொண்டுள்ளது என்று கூறலாம். ஆப்பிள் சபாரி, ஆப்பரா, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ் ஆகிய அனைத்துடன், குரோம்பிரவுசரின் வேகத்தை ஒப்பிட்டுப் பார்த்துப் பலரும் இந்த முடிவிற்குவந்துள்ளனர்.

எளிமை

அடுத்ததாக, குரோம் பிரவுசர் தரும் எளிமையான கட்டமைப்பு. கூகுள் தரும் மற்றஅப்ளிகேஷன்கள் மற்றும் சேவைகளைப் போல, இந்த பிரவுசர் மிக எளிமையானமுறையில் மெனுக்களைக் கொண்டு இயங்குகிறது.மற்ற பிரவுசர்களில்காணப்படும் பலவகையான, குழப்பத்தில் ஆழ்த்தும் மெனுக்கள், குரோம்பிரவுசரில் இல்லை. ஆனால் இதுவே சிலரை குரோம் பிரவுசரிலிருந்து, மீண்டும்மற்ற பழைய பிரவுசர்களுக்குத் தாவ வைத்துள்ளது. இருப்பினும் குறைவான, ஆனால் அடிப்படைத் தேவைகளைத் தரும் வகையில், மெனுக்களைவிரும்புபவர்களும் பலர் உள்ளனர். இந்த வகையில் குரோம் பிரவுசர் பலரின்விருப்ப பிரவுசராக மாறி உள்ளது.

சிறந்த பாதுகாப்பு

இன்டர்நெட் பிரவுசர் பலரின் ஏளனத்திற்கு ஆளாவதற்குக் காரணம், முழுமையான பாதுகாப்பினை வழங்க முடியாததுதான். குரோம் பிரவுசர் வரும்முன்னர், இந்த காரணத்தி னாலேயே, பலர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்பிரவுசரிலிருந்து, மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசருக்குத் தாவினார்கள். ஆனால் குரோம் வந்தவுடன், அது தரும் பாதுகாப்பு அனைவராலும்உறுதிப்படுத்தப்பட்டு பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

ஹேக்கர்கள் எந்தவிதத்திலும் உள்ளே நுழைய முடியாத வகையில், குரோம்பிரவுசர் கட்டமைப்பு உள்ளது. ஆனாலும், இன்டர்நெட் சந்தையில், குரோம்பிரவுசரைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 7 சதவீதத்திற்கும் குறைவாகஇருப்பதால், மால்வேர் புரோகிராம்களை அனுப்புபவர்கள், இதன் மீது தங்கள்கவனத்தைத் திருப்பவில்லை என்றும் ஒரு சாரார சொல்லுகின்றனர். அதிகமானஎண்ணிக்கையில் மக்கள் இதனைப் பயன்படுத்த முயற்சிக்கையில், வைரஸ்மற்றும் மால்வேர் களைப் பரப்புபவர்கள், நிச்சயம் குரோம் கட்டமைப்பினையும்உடைப்பார்கள் என்று பலரும் கருதுகின்றனர். இருப்பினும் இன்றைய நிலையில்கூடுதல் பாதுகாப்புள்ளது குரோம் பிரவுசர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பழைய சிஸ்டத்திலும் இயங்கும்

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பழைய தொகுப்புகளிலும், குரோம்பிரவுசர் சிறப்பாக இயங்குகிறது. குறிப்பாக விண்டோஸ் எக்ஸ்பியில் இதுநன்றாக இயங்குகிறது. எனவே இதற்கு மாறும் பழைய கம்ப்யூட்டர் பயனாளர்கள், எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்வதில்லை.

பிரவுசர் சந்தையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம்தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பல மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் வேகம் மற்றும் எளிமை என்ற இரு காரணங்களினால், குரோம்தொடர்ந்து தன் பயனாளர்களின் எண்ணிக்கையைப் பெருக்கி வருகிறது. சிலஆண்டுகளில், குரோம் முதல் இடத்திற்கு உயர்ந்துவிடும் என்றே பலரும்கணிக்கின்றனர். காத்திருந்து பார்க்கலாம்.

எழுதியவர் : கார்த்திக்
மேலும் அறிய

> விரைவில் நடிகர்களின் ரகசிய கூட்டம்

இயக்குனர் எஸ்.வி.சோலைராஜா இயக்கிய ‘நீயும் நானும்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில், நடிகர்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என ராதாரவி பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் பேசியதில் சில உண்மைகள் இருந்தாலும் சில இளம் நடிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து ‘நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக முக்கியப் பொறுப்பில் இருக்கும் ராதாரவி நடிகர் சங்கத்தில் கூடி விவாதிக்க வேண்டிய விஷயத்தை இப்படி பொது விழாவில் பேசியிருக்கத் தேவையில்லை என்று ரஜினி, கமல் போன்ற மூத்த நடிகர்கள் அதிர்ப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

இது ராதாரவியாகப் பேசியதாகத் தெரியவில்லை சில நொந்துபோன பெரிய பட்ஜெட் தயாரிப்பாளர்கள் தூண்டிவிட்டதன் பேரில்தான் இப்படி பேசியிருக்கிறார், என சில இளைய முன்னணி நாயகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் பல கோடிகளை சம்பளமாகப் பெறும் ஹீரோக்கள் அடுத்து என்ன செய்யலாம் என்று ரகசியக் கூட்டம் போடத் தீர்மானித்திருக்கிறார்கள். அப்போ சம்பளத்தை குறைக்க மாட்டீங்க அப்படித்தானே...
மேலும் அறிய

> கம‌ல் அ‌றி‌க்கை - த‌மி‌‌ழ் உண‌ர்வை ம‌தி‌க்‌கிறே‌ன்

ஃபிக்கியின் ஊடக பொழுதுபோக்கு மற்றும் வணிகப் பொறுப்பில் இருந்து தா‌ன் விலக வேண்டும் என்று தமிழன உணர்வாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு நடிகர் கமல் ஹாசன் பதில் அளித்துள்ளார்.

த‌மிழ‌ர்களை இன‌ப்படுகொலை செ‌ய்த கு‌ற்ற‌ச்சா‌ற்‌றி‌க்கு ஆளா‌கியு‌ள்ள இல‌ங்கை‌யி‌ன் கொழும்புவில் நடைபெறவுள்ள சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவிற்கு வணிக ஆதரவு அளித்துள்ள இந்திய தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பு (FICCI) பொறுப்பிலிருந்து நடிகர் கமல் விலக வேண்டும் என்று மே 17 இயக்கம் சார்பாக தமிழின உணர்வாளர்கள் கமல் வீடு முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதற்கு உடனடியாக பதில் அளித்துள்ள கமல், தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது :

த‌மி‌‌ழ் உண‌ர்வா‌ள‌ர்களே...

மேற்சொன்ன விலாசம் தவிர வேறு பொறுப்புகளில் உள்ளோர் பெயர்கள் இல்லாததால், கடிதம் ஒட்டுமொத்தமாக தமிழின உணர்வாளர்களுக்கு எழுதப்படுகிறது. அவ்விலாசம் எனக்கும் பொருந்தும் என்ற மயக்கமற்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

ஃபிக்கி என்ற அமைப்பு திரு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களால் துவங்கப்பட்டது. மனித நேயம் இந்த அமைப்பின் அடிப்படைத் தீர்மானங்களுள் இரண்டறக் கலந்ததாகும்.

உங்களைப் போன்ற உணர்வுள்ள நான், ஏற்கெனவே இலங்கை சென்று இந்த விழாவில் பங்கு கொள்வது நியாயமில்லை என்ற காரணத்தில் ஐஃபா நிகழ்ச்சியில் பங்குபெறச் செல்லவில்லை. உண்மையைச் சொன்னால், இதுவரை நடந்த ஐஃபாவின் எந்த நிகழ்ச்சியிலுமே நான் கலந்து கொண்டதில்லை.

என் அலுவலகத்தின் முன்னாள் கூடிய ஒரு சிறு தமிழுணர்வாளர்கள் கூட்டத்தில், சிலர் விண்ணப்ப வாக்கியங்கள் எழுதிய காகிதங்களை உயர்த்திப் பிடித்திருந்தனர்.

அவை நான் தென்னக FICCI தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்றும், இன்னொரு சுவரொட்டி எனக்கு இந்நாடு வழங்கிய பத்மஸ்ரீ பட்டத்தை திரும்பத் தந்துவிட வேண்டும் என்றும் வலியுறுத்தின.

தமிழ் உணர்வை மனதில் கொண்ட நான், FICCI தலைமை, FICCI entertainment தலைவர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் யாரும் கொழும்பு விழாவில் பங்கேற்கக் கூடாது என அன்புக் கட்டளையிட, அவர்களும் இசைந்து IIFA விழாவுக்குச் செல்வதைத் தவிர்த்துள்ளனர். இலங்கையில் நடக்கவிருக்கும் வர்த்தக் கூட்டமைப்பு விழாவுக்கும் இவர்கள் செல்லப் போவதில்லை என்றும் சொல்லியிருக்கின்றனர்.

மற்றபடி வியாபாரிகள் வர்த்தகம் செய்வது தொடர்ந்து நடந்து வருவதைத் தடுப்பது FICCI போன்ற சிறிய அமைப்புகள் கையில் இல்லை. உங்கள் கருத்துக்கள் என்னை வந்தடையும் முன்பாகவே (தற்காப்பு அல்ல) உணர்வின் உந்துதலால் இந்தப் பணியைச் செய்துள்ளேன். மற்றபடி என் நாடு எனக்களித்த கவுரவத்தைத் திருப்பித் தருவதால் சாதிக்கப் போவது ஒன்றுமில்லை என்று நம்புகிறேன்.

FICCI விமர்சனங்களை ஏற்று நடவடிக்கை எடுக்கும் மனப்பாங்குடையது. இம்மனித நேயம், மனப்பாங்கு, அதை நிறுவியவரிடம் FICCI கற்ற பாடம். தன் நிலையை உணர்த்தும் முதல் நடவடிக்கையாக FICCI தலைவர்கள் மனித நேயத்தோடு எடுத்திருக்கும் இம்முடிவு உங்களை மகிழ்விக்கும் என நம்புகிறேன் என்று கம‌ல் கூறியுள்ளார்.
மேலும் அறிய

Sunday, May 23, 2010

> த்ரிஷாவின் பரம ரகசியம்

எப்போதும் தன் உடலை கச்சிதமாக வைத்துக் கொள்ள விரும்புவார் த்ரிஷா. முதல் படத்தில் பார்த்த அதே போலவே உடம்பை வைத்துக் கொண்டிருக்கிறார். உணவு கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்து வருகிறார்.

தற்போது மேலும் உடம்புக்கு மெருகூட்ட யோகாசனம் செய்து வருகிறார். எந்த வேலையாக இருந்தாலும் அரை மணி நேரமாவது யோகா செய்து விடுவார். அப்போதுதான் உடலும், மனமும் நன்றாக நிறைவாக இருக்கிறதாம். இதற்காக ஒரு யோகா, மாஸ்டரை தேர்வு செய்து, பயிற்சி செய்து வருகிறார்.

படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றாலும், மாஸ்டரை அழைத்துக் கொண்டுதான் செல்கிறார். அதெல்லாம் சரிதான். மாஸ்டருக்கான செலவை தயாரிப்பாளர் தலையில் கட்டாமல் இருந்தால் ஓகே.
மேலும் அறிய

> படம் பார்த்து பாராட்டிய கமல்

கிரிகுஜா பிலிம்ஸ் இண்டர்நேசனல் சார்பாக சுந்தர்ராமன் தயாரித்துள்ள படம் கொல கொலயா முந்திரிக்கா. முற்றிலும் காமெடி படமான இதற்கு கதை, வசனம் கிரேஸிமோகன் எழுத, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் மதுமிதா.

ரிலீசுக்குத் தயாரான இப்படம் ஃபோர்பிரேம் தியேட்டரில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்காக விசேஷக்காட்சி திரையிட்டு காட்டப்பட்டது. குழந்தைகள் உற்சாகமாக படத்தை ரசித்தனர்.

இக்குழந்தைகளோடு அமர்ந்து நடிகர் கமல் ஹாசனும் படத்தைப் பார்த்து வெகுவாக பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் இயக்குனர் மதுமிதா, ஹீரோ கார்த்திக்குமார், ஹீரோயின் ஷிகா, எம்.எஸ்.பாஸ்கர், கிரேஸிமோகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ரொம்ப... ரொம்ப பாராட்டப்பட வேண்டிய விஷயம். தொடர்ந்து நல்ல படங்களைக் கொடுங்க.
மேலும் அறிய

> அஞ்சலியின் ‘அந்த’ கவர்ச்சி ஆட்டம்

கவர்ச்சி, காற்றில் கூட கலந்து வெளியே போய்விடக் கூடாதென்று படப்பிடிப்பு தளத்தை இறுக சாத்திவிட்டு, கலக்கலான, கவர்ச்சியான உடையில் அஞ்சலியை ஆட வைத்திருகிறார் ‘கத்தாழ கண்ணால’ நடன இயக்குனர் தினா.

‘மகாராஜா’ என்ற படத்துக்கான பாடல் காட்சிதான் அது. நீண்ட நாட்களுக்கு முன் தொடங்கப்பட்ட படம். இப்போதுதான் முழுமை பெற்றிருக்கிறது. அஞ்சலி படு கிளாமராக ஆடும் இந்த ஆட்டம் படத்தில் ‘ஹைலைட்’டாக இருக்கும். அதனால்தான் வெளியாட்கள் யாரையும் அரங்கிற்குள் அனுமதிக்காமல் இந்த பாடல் காட்சியை எடுத்தோம் என்கிறார் இப்பட இயக்குனர் மனோகரன்.

சத்யா, அஞ்சலி, நாசர், கருணாஸ், கோவை சரளா, எம்.எஸ்.விஸ்வநாதன் என பெரிய பட்டாளமே இதில் நடிக்கின்றனர். இசையமைக்கிறார் டி.இமான். ஒளிப்பதிவு லட்சுமிபதி. அங்காடித் தெருவுல வந்த அழகான பொண்ணை, அங்கம் தெரியற மாதிரி ஆடவுட்டிட்டீங்களேப்பா...
மேலும் அறிய

Saturday, May 22, 2010

> நேற்று ஆறு படங்கள்.

பொங்கல், தீபாவளிக்கே மூன்று, நான்கு படங்கள்தான் திரைக்கு வருகின்றன. ஆனால் நேற்று ஆறு படங்கள் திரைக்கு வந்துள்ளன.

கரண் நடிப்பில் கவின் பாலா இயக்கியிருக்கும் கனகவேல் காக்க நீண்ட காத்திருப்புக்குப் பின் இன்று வெளியாகியுள்ளது. இன்று வெளியாகியுள்ள இன்னொரு படம் மாஞ்சா வேலு. மலை மலை சுமாராகப் போனதால் அதே டீமுடன் அருண் விஜய் நடித்திருக்கும் படம்.

டி.பி.கஜேந்திரனின் காமெடிப் படம் மகனே என் மருமகனே இன்று வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாரான குற்றப்பி‌ரிவும் இன்று திரைக்கு வந்துள்ளது. ஸ்ரீகாந்த், பிருத்விரா‌ஜ், கமாலினி முகர்‌ஜி, சஞ்சனா நடித்துள்ளனர்.

இந்தப் படங்களுடன் காதலாகி படமும் ரேஸில் கலந்து கொண்டுள்ளது. மதுமிதாவின் நகைச்சுவைப் படமான கொல கொலயா முந்திக்காவும் இன்று திரைக்கு வந்துள்ளது.

இது தவிர ஐயன்மேன் 2, கைட்ஸ், டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார் போன்ற மொழிமாற்றுப் படங்களும் இன்று வெளியாகியுள்ளன.
மேலும் அறிய

> U/A ஆக்சன் படத்துக்கு

மென்மையான காதல் படத்துடன் திரை வாழ்க்கையை ஆரம்பித்தவர் ரவி ம‌ரியா. இப்போது இவர் தமிழ் சினிமாவின் முக்கியமான வில்லன்களில் ஒருவர். மாத்தியோசியும், கோ‌ரிப்பாளையமும் இந்த புதிய அந்தஸ்துக்கு பலமான அஸ்திவாரம் அமைத்திருக்கின்றன.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் இயக்கியிருக்கும் படம், மிளகா. பெயருக்கு ஏற்றபடி படத்தின் ஸ்டில்களில் வன்முறை வழிகிறது.

நட்ரா‌ஜ், பூங்கொடி நடித்திருக்கும் மிளகாவைப் பார்த்த சென்சார் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் அளித்து ஆச்ச‌ரியப்படுத்தியிருக்கிறது.

மிளகாவில் காமெடி ஏ‌ரியாவை கலகலப்பாக்கியிருப்பவர் சிங்கப்புலி.

சென்சா‌ரின் சோதனையை வெற்றிகரமாகக் கடந்த மிளகா கலெ‌க்சனிலும் ஜெயிக்கும் என நம்புவோம்.
மேலும் அறிய

> ஜெனிலியாவின் காமெடி செய்யும் வரம்.

காமெடி என்பது ஒரு வரம். சிலருக்கு இந்த வரத்தை இறைவன் கேட்காமலேயே கொடுத்திருக்கிறான். ஜெனிலியாவுக்கும் இறைவன் அருள் தாராளமாக இருக்கிறது.

சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம் படங்களில் ஜெனிலியாவின் காமெடி நடிப்பைப் பார்த்து புன்னகைக்காத ரசிகர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதுவும் கொம்பு முளைக்கும் என்று சொல்லி தலையோடு தலை முட்டும் காமெடி... இன்றும் சி‌ரிப்பு சேனல்களில் பிரபலம்.

தற்போது தனுஷ் நடிக்கும் உத்தமபுத்திரன் படத்தில் ஜெனிலியா நடித்து வருகிறார். தெலுங்கில் வெளியான ரெடி படத்தின் ‌‌ரீமேக் இது. தெலுங்கில் ஜெனிலியா நடித்த வேடத்தை இங்கும் அவரே செய்கிறார்.

காமெடிப் படமான இதில் ஹீரோ தனுஷ் முதல் ஹீரோயின் ஜெனிலியா வரை அனைவரும் காமெடி செய்திருக்கிறார்கள். போதாததற்கு பாக்யரா‌ஜ், கருணாஸ் ஆகியோரும் இருக்கிறார்கள். இந்தப் படம் வெளிவந்த பிறகு தனது காமெடி நடிப்பு பேசப்படும் என்று நம்பிக்கை தெ‌ரிவித்தார் ஜெனிலியா.

வர்றதுக்கு முன்னாடியே பேசிட்டோம்... சந்தோஷமா.
மேலும் அறிய

> மல்லிகா ஷெராவத் பிரசாந்த் படத்தில்

1983ல் தனது நடிப்பில் வெளிவந்து மிகப் பெ‌ரிய வெற்றி பெற்ற மலையூ‌ர் மம்பட்டியான் படத்தை தனது மகன் பிரசாந்தை வைத்து ‌‌ரீமேக் செய்து வருகிறார் தியாகராஜன். படத்தை தயா‌ரிப்பதுடன் இயக்குவதும் அவரே.

மம்பட்டியான் படத்தில் நிறைய சுவாரஸியங்கள். முக்கியமாக சண்டைக் காட்சிகள். பாதி கட்டி முடித்த பில்டிங்கில் தலைமுடி வளர்த்த வில்லன்களுடன்தான் ஹீரோக்கள் சண்டையிடுவார்கள். இந்தப் படத்தில் சற்று வித்தியாசமாக லொகேஷனை கிழக்கு ஆப்பி‌ரிக்காவுக்கு மாற்றியிருக்கிறார்கள்.

அதேபோல் ஹீரோ சண்டையிடுவதும் மனிதர்களுடன் அல்ல, காட்டெருமை, யானை போன்ற மிருகங்களுடன். எப்படி இதை லைவ்வாக ஷூட் செய்தார்கள் என்பதே மிகப்பெ‌ரிய பிரமிப்பு.

ஒ‌ரி‌ஜினல் மம்பட்டியானில் ஹீரோயின் ச‌ரிதா. அவருடன் ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா ஆகியோரும் நடித்திருந்தார்கள். ‌‌ரீமேக்கில் பிரசாந்துக்கு ஜோடி மீரா ஜாஸ்மின். ஜெயமாலினி நடித்த வேடத்தில் மூமைத்கான். சில்க் நடித்த வேடத்தில் மல்லிகா ஷெராவத்தை நடிக்க வைக்க இருக்கிறார்கள்.

இவர்களுடன் பிரகாஷ்ரா‌ஜ், கோட்டா ஸ்ரீனிவாசராவ், ‌ரியாஸ்கான், வடிவேலு, விஜயகுமார், கலைராணி என பெரும் நட்சத்திர‌ப் பட்டாளமே நடிக்கிறது.

இன்னும் ஓ‌ரிரு மாதங்களில் படம் திரைக்கு வரவுள்ளது.
மேலும் அறிய

Friday, May 21, 2010

> கௌதம் மேனன் காட்டில் அடை மழை.

கௌதம் வாசுதேவ மேனன்... தமிழ் திரையுலகில் கொஞ்சம் ஆச்ச‌ரியமான பெயர். அடுத்தடுத்து இடைவெளி இல்லாமல் படங்களும் தருவார், அதேநேரம் படத்தின் குவாலிட்டியிலும் குறைவிருக்காது. ஒரே நேரத்தில் பல படங்களில் பணிபு‌ரியாமல் இவரால் இருக்க முடியாதோ என்றும் தோன்றும்.

தற்போது குறுகியகால தயா‌ரிப்பாக க்ரைம் த்‌ரில்லர் ஒன்றை இயக்கி வருகிறார். அடுத்து அ‌ஜீத் நடிக்கும் படம். இதன் ஸ்கி‌ரிப்ட் வேலைகள் இன்னும் முழுமையடையவில்லை என்று அ‌ஜீத்தே கூறியிருக்கிறார்.

இந்நிலையில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இந்தியில் இயக்குவதற்கான வேலைகளையும் ஒருபுறம் கவனித்து வருகிறார்.

லேட்டஸ்ட் தகவல், விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறார்.

கௌதம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது விக்ரமின் நீண்ட நாள் ஆசை. விக்ரமை இயக்க வேண்டும் என்பது கௌதமின் நீண்ட நாள் விருப்பம். இப்போது இரண்டும் நிறைவேறுவதற்கான சந்தர்ப்பும் அமைந்திருக்கிறது.

செல்வராகவன் மற்றும் பூபதி பாண்டியன் இயக்கத்தில் தலா ஒரு படம் நடிக்கும் விக்ரம் இந்தப் படங்கள் முடிந்ததும் கௌதம் இயக்கும் படத்தில் அனேகமாக நடிக்கலாம் என்கிறார்கள்.

கௌதம் காட்டில் வெறும் மழையில்லை, அடை மழை.
மேலும் அறிய

> பிரமாண்ட தொடக்கம் - விஜய்யின் 52வது படம்

விஜய்யின் 52வது படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயா‌ரிக்கிறார். ஜெயம் ராஜா இயக்கும் இந்தப் படத்துக்கு வேலாயுதம் என்ற பெயர் ப‌ரிசீலனையில் உள்ளது.

இந்தப் படத்தின் தொடக்க விழா மிகப் பிரமாண்டமாக நடத்தப்படுகிறது என்று முன்பே குறிப்பிட்டிருந்தோம். பல ஆயிரம் பேர்களுக்கு அன்னதானம் வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரு உள் விளையாட்டரங்கில் அடுத்த மாதம் நடைபெறுகிறது. தசாவதாரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை ஆஸ்கர் ரவிச்சந்திரன் இங்குதான் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் தமிழக முதல்வர், ஜாக்கிசான், அமிதாப்பச்சன், மம்முட்டி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

தசாவதாரம் விழாவுக்கு நிகராக விஜய் படத்தின் தொடக்க விழாவும் இருக்கும் என்கிறார்கள்.
மேலும் அறிய

> ராம்கோபால் வர்மா நட்சத்திர பேட்டி

நிழல் உலக தாதாக்களின் வாழ்க்கையை இவர் அளவுக்கு திரையில் நெருக்கமாகச் சொன்ன இயக்குனர்கள் இல்லை. தெலுங்கில் சிவா படத்தின் மூலம் அறிமுகம். தமிழில் இந்தப் படம் உதயம் என்ற பெய‌ரில் இளைஞர்களை பெ‌ரிதும் ஈர்த்தது. இவரது சத்யா க்ரைம் த்‌ரில்லர் வ‌ரிசையில் இன்னும் உலகப் படங்களுக்கு நிராக வைத்துப் போற்றப்படுகிறது.

சர்க்கார், சாக்கார் ரா‌ஜ், ரான் என்று அடுக்கடுக்காக ஆச்ச‌ரியங்களைத் தரும் ராம்கோபால் வர்மாவின் புதிய அட்டாக், ரத்த ச‌ரித்திரம். சூர்யா, விவேக் ஓபராய் நடித்திருக்கும் இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக பத்தி‌ரிகையாளர்களை சென்னையில் சந்தித்தார் வர்மா. அவருடனான உரையாடலிலிருந்து...

ரத்த ச‌ரித்திரம் என்ன கதை?

ஆந்திராவை கலக்கிய ப‌‌ரி‌ட்டால ரவி என்ற மனிதனின் கதையைதான் ரத்த ச‌ரித்திரம் என்ற பெய‌ரில் இயக்கியிருக்கிறேன். ரவி என்ற மனிதனின் வளர்ச்சி, அரசியல், அதிகாரம் பற்றியெல்லாம் நான் தொடர்ந்து தெ‌ரிந்து வைத்திருந்தாலும், ஆந்திராவில் ராமநாயுடு ஸ்டுடியோ அருகில் ரவியை கொல்ல நடந்த வெடிகுண்டு சம்பவத்தில்தான் சூ‌ரி என்கிற மனிதனைப் பற்றி தெ‌ரிந்து கொண்டேன். இந்த இரண்டு மனிதர்களின் கதைதான் ரத்த ச‌ரித்திரம்.

யார் யார் நடித்திருக்கிறார்கள்?

ப‌ரி‌ட்டால ரவியாக விவேக் ஓபராயும், சூ‌ரியாக சூர்யாவும் நடித்திருக்கிறார்கள். சூர்யாவின் ஜோடியாக ப்‌ரியாமணி நடித்துள்ளார்.

படத்தில் யார் ஹீரோ?

இந்தப் படம் தெலுங்கு மற்றும் இந்தியில் இரண்டு பாகங்களாக வருகிறது. முதல் பாகத்தில் சூர்யா இல்லை, இரண்டாம் பாகத்தில்தான் அவர் வருகிறார். தமிழைப் பொறுத்தவரை இந்த இரு பாகங்களையும் இணைத்து இயக்கியிருக்கிறேன். ரவியை பழி வாங்கும் சூ‌ரியின் வெறி ஜெயிலில் அடைக்கப்பட்ட போதும் தணியாமலே இருந்தது. ஜெயிலில் இருந்தபடியே ரவியை கொலை செய்யும் திட்டத்தில் வெற்றி பெறுகிறான். இந்தப் படத்தில் சூர்யா, விவேக் ஓபராய் இருவருமே ஹீரோக்கள்தான்.

உண்மைக் கதை எனும் போது அதிகம் உழைக்க வேண்டி இருக்குமே?


இந்தப் படத்திற்காக ரவி, சூ‌ரி இருவருடனும் நெருக்கமாக இருந்த பல்வேறு ஆட்களை நே‌ரில் சந்தித்து ஆய்வு நடத்தினேன். சூ‌ரியின் குடும்பத்தை சந்தித்து அவர்களின் உணர்வுகளையும் பதிவு செய்திருக்கிறேன். ரவி கொலை வழக்கில் தற்போது அனந்த‌ப்பூர் ஜெயிலில் இருக்கும் சூ‌ரியையும் நே‌ரில் சந்தித்து திரைக்கதைக்கு தேவையான விஷயங்களைப் பெற்றேன். போலீஸ் தாக்கல் செய்த குற்றப்பத்தி‌ரிகை, சாட்சிகள் போன்ற ஆதாரங்களும் திரைக்கதைக்கு உதவின.

படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தால் வெறும் வெட்டும் குத்துமாக இருக்கிறதே?

இது இரண்டு தனி மனிதர்களுக்கிடையே நடந்த ரத்தம் உறையும் திருப்பங்கள் நிறைந்த கதை. என்றாலும் இதன் பின்னணியில் ஜாதி, அரசியல், அதிகாரம், விதி, குடும்பம், குற்றம் போன்ற எல்லா காரணிகளும் இருக்கிறது.

சூர்யாவுடன் பணிபு‌ரிந்த அனுபவம்..?

ரத்த ச‌ரித்திரத்தை படமாக்குவது என்று முடிவு செய்த போதே சூர்யாதான் சூ‌ரி என்பதை முடிவு செய்தேன். இதுவரை நான் இயக்கிய நடிகர்களில் அமிதாப்பச்சனுக்கு அடுத்து பவர்ஃபுல் கண்களை உடையவர் சூர்யாதான். இந்தப் படத்துக்கு தேவையான திறமையும் உழைப்பும் அவருக்கு இருப்பதை காக்க காக்க, க‌ஜினி படங்களைப் பார்த்து தெ‌ரிந்து கொண்டேன். க‌ஜினியில் அமீர்கானைவிட சூர்யாவே பெட்டராக செய்திருப்பதாக நினைக்கிறேன். ரத்த ச‌ரித்திரத்தில் நீங்கள் புதிய சூர்யாவை பார்க்கலாம்.

தொடர்ந்து தாதா கதைகளையே படமாக்குகிறீர்களே?


நான் அப்படி நினைக்கவில்லை. கடந்த 20 வருடங்களாக அதிகம் வெளிச்சம் படாத மனிதர்களின் வாழ்க்கையை படமாக்கியிருப்பதாகவே கருதுகிறேன்.
மேலும் அறிய

Thursday, May 20, 2010

> ர‌ஜினியின் வாழ்த்து மருமகனுக்கு

சமீபத்தில் தனுஷுக்கு வாழ்த்து தெ‌ரிவித்தார் ர‌ஜினி. எதற்காக இந்த வாழ்த்து?

பல படுதோல்விகளை கொடுத்தாலும் பாரதிராஜா என்றால் பரபரக்கதான் செய்கிறது தமிழ் சினிமா. அவரது இயக்கத்தில் நடிக்க எல்லா நடிகர்களுக்கும் விருப்பம் உள்ளது.

இந்நிலையில் அடுத்து இயக்கப் போகும் தென்கிழக்குச் சீமையிலே, குற்றப்பரம்பரை இரண்டும் தனது கனவுப் படங்கள் என அவர் அறிவித்ததால் அதில் நடிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு அமையும் என கோடம்பாக்கமே உற்று கவனித்து வந்தது.

இந்நிலையில் தனுஷை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து கதை சொன்னார் பாரதிராஜா. கதையிலும், பாரதிராஜாவின் அழைப்பிலும் உருகிப் போன தனுஷ் உடனே ஓகே சொல்லியிருக்கிறார்.

இந்தத் தகவலை அவர் ர‌ஜினியிடம் பகிர்ந்து கொண்டபோது, நல்ல முடிவு கண்டிப்பாக நன்றாக வரும் என வாழ்த்தியிருக்கிறார்.
மேலும் அறிய

> அ‌‌ஜீத்தின் உள்ளம் உயர்ந்தது

அதிக படங்களில் ஏன் நடிப்பதில்லை என்று பிரபல வார இதழொன்று அ‌‌ஜீத்திடம் கேட்டதற்கு, அவரளித்த பதில், குப்பையாக படங்கள் தந்து ரசிகர்களை ஏமாற்றுவதைவிட வீட்டில் சும்மா இருக்கலாம்.

பேச்சில் மட்டுமின்றி நடைமுறையிலும் இந்த ஓப்பன் மைண்டை உருக்குலையாமல் வைத்திருக்கிறார் அ‌‌ஜீத்.

அ‌‌ஜீத்தின் கடைசிப் படம் அசல். சரண் இயக்கிய இந்தப் படத்தை சிவா‌ஜி பிலிம்ஸ் தயா‌ரித்திருந்தது. படத்தின் ஓபனிங் எல்லாம் நன்றாகவே இருந்தது. ஆனால் பினிஷிங்...? பாக்ஸ் ஆஃபிஸில் படம் பப்படம். தயா‌ரிப்பாளர் முதற்கொண்டு அனைவருக்கும் நஷ்டம்.

சமீபத்தில் பிரபுவை தொடர்பு கொண்ட அ‌‌ஜீத், மீண்டும் சிவா‌ஜி பிலிம்சுக்கு கால்ஷீட் தர தனது சம்மதத்தை தெ‌ரிவித்திருக்கிறார். அசலுக்கு வாங்கியதைவிட மிகக் குறைந்த சம்பளமே போதும் என்று அவர் தெ‌ரிவித்ததாக தெ‌ரிகிறது.

தயாநிதி அழகி‌ரியின் தயா‌ரிப்பில் கௌதம் படத்தை முடித்தப் பிறகு சிவா‌ஜி பிலிம்ஸ் தயா‌ரிக்கும் படத்தில் அ‌‌ஜீத் நடிப்பார் என அவருக்கு நெருக்கமான வட்டாரம் தெ‌ரிவிக்கிறது.
மேலும் அறிய

> த்‌ரிஷா மீண்டும் கௌதம் இயக்கத்தில்

கௌதம் இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்கிறார் த்‌ரிஷா. இந்தப் படம் இந்தியில் தயாராகிறது.

கௌதம் மின்னலே படத்தை ஏற்கனவே இந்தியில் இயக்கினார். ஆனால் படம் ச‌ரியாகப் போவில்லை. தற்போது தனது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இந்தியில் ‌‌ரீமேக் செய்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயாவின் இந்தி ‌‌ரீமேக் உ‌ரிமையை தீன் பத்தி படத்தை தயா‌ரித்த செ‌ரின்டிபிட்டி பிலிம்ஸ் வாங்கியுள்ளது. ஹீரோயின் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதற்கு பதிலாக கோவாவைச் சேர்ந்தவராக மாற்றியுள்ளனர்.

இந்திப் பதிப்பிலும் த்‌ரிஷாவே ஹீரோயினாக நடிக்கிறார். ஹீரோ யார் என்பது முடிவாகவில்லை.

அ‌க்சய் குமார் ஜோடியாக காட்டா மிட்டா படத்தில் நடித்துவரும் த்‌ரிஷாவின் இரண்டாவது இந்திப் படமாக கௌதம் இயக்கும் படம் இருக்கும்.
மேலும் அறிய

Wednesday, May 19, 2010

> பையா பார்டரை தாண்டியது

சமீபத்தில் வெளியான படங்களில் கௌதமின் விண்ணைத்தாண்டி வருவாயா படம் மட்டுமே சென்னையில் 5 கோடிகளை‌த் தாண்டி வசூலித்தது.

5 கோடி என்ற பார்டரை தற்போது லிங்குசாமியின் பையாவும் தாண்டியிருக்கிறது. சென்ற வார இறுதி வரை இதன் மொத்த சென்னை வசூல் 5.03 கோடிகள்.

ஆறு வாரங்கள் முடிவில் இந்த வசூல் சாதனையை பையா பு‌ரிந்திருக்கிறது. ஆனாலும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் சாதனையை பையா எட்டிப் பிடிக்காது என்றே தோன்றுகிறது.

கௌதம் படத்தின் வசூல் ஏறக்குறைய ஆறு கோடியை தொட்டிருக்கிறது. தற்போது பையாவின் வார இறுதி வசூல் இரண்டு லட்சத்தை ஒட்டியே இருப்பதால் ஆறு கோடியை எட்டுவது மிக சிரமம்.
மேலும் அறிய

> சுறா தொடர்ந்து முதலிடம் சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்

சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சுறா தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. சென்ற வாரம் வெளியான படங்களில் எதுவும் வசூலை வா‌ரி குவிக்கவில்லை என்பது வருத்தத்திற்கு‌ரிய செய்தி.

5. கோ‌ரிப்பாளையம்
அளவுக்கதிகமான வன்முறை, படம் நெடுக நிறைந்திருக்கும் நெகடிவ் கதாபாத்திரங்கள், இவை இரண்டும் இராசுமதுரவனின் கடும் உழைப்பை வீணடித்துவிட்டன. சென்னையில் வசூல் வெகுவாக குறைந்துள்ளது. சென்ற வார இறுதியில் இப்படத்தின் வசூல் 7.27 லட்சங்கள். இதன் மொத்த சென்னை வசூல் 25 லட்சங்கள்.

4. குரு சிஷ்யன்
குளறுபடியான கதை, புளித்த காட்சிகள், முகம் சு‌ளிக்க வைக்கும் ஆபாச வசனங்கள், பாடல்கள், சிறு பிள்ளைத்தனமான திரைக்கதை... இத்தனையும் இணைந்த ஷக்தி சிதம்பரத்தின் படம் நாலு நாளை தாண்டி ஓடுவதே அதிசயம். இரண்டு ஹீரோக்கள் இருந்தும் இதன் சென்ற வார இறுதி வசூல் 8 லட்சங்கள் மட்டுமே. இதுவரை இதன் சென்னை வசூல் 27 லட்சங்கள்.

3. குட்டிப்பிசாசு
ராம.நாராயணனின் மற்றுமொரு சீசன் பிசினஸ். கோடை விடுமுறைக்கு குழந்தையை குறிவைத்து ட்ரான்ஸ்பார்மர் ஹாலிவுட் படத்தின் கார் மனிதனை ‘சுட்டிருக்கிறார்.’ அருந்ததி மே‌ஜிக் இந்தமுறை மிஸ்ஸிங். இதுவரை 33 லட்சங்களை மட்டுமே வசூலித்திருக்கும் இப்படம் சென்ற வார இறுதியில் 8.43 லட்சங்களை மட்டு வசூலித்துள்ளது.

2. இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்
கோடை விடுமுறைக்கு வந்தப் படங்களில் மக்களிடம் சுமாரான வரவேற்பையாவது பெற்ற படமென்றால் அது சிம்புதேவனின் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம். ஆபாசம், இரட்டை அர்த்தம் எதுவுமில்லாத இந்த கௌபாயை ரசிகர்கள் குடும்பமாக வந்து ரசிக்கிறார்கள். இதன் சென்ற வார இறுதி வசூல் 18.9 லட்சங்கள். இதுவரையான சென்னையின் மொத்த வசூல், 52 லட்சங்கள்.

1. சுறா
தொடர்ந்து முதலிடத்தில் சுறா. 58 லட்சத்திற்கு மேல் வசூல் செய்த சுறா சென்ற வாரத்தில் ஏறக்குறைய 20 லட்சங்கள் குறைந்து 37.3 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை அதிக படங்கள் வெளியாவதால் சுறாவின் வசூல் மேலும் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. இரண்டு வார முடிவில் 2.85 கோடிகளை சுறா வசூலித்துள்ளது.
மேலும் அறிய

> சூர்யா மீண்டும் பாலா இயக்கத்தில்

அடுத்து முருகதாஸ் இயக்கும் உலக மகா படத்தில் (முருகதாஸ் அப்படிதான் சொல்கிறார்) நடிக்கிறார் சூர்யா. இந்தப் படத்தில் நடிக்கும் போதே பாலா படத்தில் நடிக்கவும் கால்ஷீட் தந்திருக்கிறார்.

அட, இதென்ன அதிசயம் என்று நிமிர்ந்து உட்காரும் வாசகர்களுக்கு... சூர்யா நடிக்கப் போவது ஹீரோவாக அல்ல, கெஸ்ட் ரோல்.

விஷால், ஆர்யா நடிக்கும் அவன் இவன் படத்தில் கெஸ்ட் ரோல் ஒன்றில் நடித்துத் தரும்படி கேட்டிருக்கிறார் பாலா. இதற்கு சூர்யாவும் உடனே சம்மதம் தெ‌ரிவித்திருக்கிறார்.

இந்த வருட இறுதிக்குள் படத்தை முடித்துவிடுவதாக பாலா சபதம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அறிய

> ஜெயிக்க விஜய் என்ன செய்ய வேண்டும்?

ஒவ்வொரு திரைப்படமும் ஒரு நோக்கத்திற்காக எடுக்கப்படுகிறது. தமிழில் உருவாகும் திரைப்படங்களில் பெரும்பான்மையானவை பணம் பண்ணுவது என்ற நோக்கத்திற்காக எடுக்கப்படுபவை. அங்காடித்தெரு போன்றவை விதிவிலக்கு.

இவற்றிற்கு லாபம் சம்பாதிக்கும் நோக்கம் இருந்தாலும், நடைமுறை வாழ்வில் இருக்கும் நிஜத்தை காட்சிப்படுத்தும் நோக்கத்தையும், நல்ல சினிமா என்ற விமர்சனத்தை பெற்றுவிட வேண்டும் ஆவலையும் இவ்வகைப் படங்கள் தன்னகத்தே கொண்டுள்ளன.

விஜய்யின் திரைப்படங்கள் அனைத்திற்கும் உள்ள ஒரே நோக்கம் அதிக ரசிகர்களை திரையரங்குக்கு வரவழைப்பது, அதன் மூலம் அதிக லாபம் சம்பாதிப்பது என்பது மட்டுமே. திரைப்படங்கள் வர்த்தக அந்தஸ்தை பெற்றுவிட்ட இந்த‌ச் சூழலில் இதை ஒரு குற்றச்சாற்றாக யாரும் முன்வைக்க முடியாது என்பதே உண்மை.

இந்த நோக்கத்திற்கு ஏற்ப விஜய் படங்கள் தயா‌ரிப்பாளர்கள், திரையரங்கு உ‌ரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், கேன்டீன் நடத்துகிறவர்கள் என சகல தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்து கொடுக்கும் அட்சய பாத்திரமாகவே இருந்து வந்தன. ர‌ஜினிக்குப் பிறகு அனைத்து தரப்பினரும் லாபம் பெற்றுத் தரும் நடிகர் என்று விஜய்யையே கை காட்டுகிறார்கள். ர‌ஜினி மூன்று நான்கு வருடங்களுக்கு ஒரு படம் என்று சுருங்கியப் பிறகு விஜய்யின் முக்கியத்துவம் அபி‌ரிதமான அளவு வளர்ந்தது.

ஆனால் இன்று நிலைமை வேகமாக மாறி வருகிறது. அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா என சமீபத்தில் விஜய் நடித்தப் படங்கள் அனைத்துமே வசூலில் திருப்தியை தரவில்லை. நடுவில் வந்த போக்கி‌ரி மட்டும் விதிவிலக்கு. இந்த நிலைமைக்கு விஜய்யே முழு பொறுப்பு என்று கூறிவிட முடியாது.

என்றாலும் இந்த நிலையை மாற்றும் முழுப் பொறுப்பும், கடமையும், அதற்கான சாத்தியமும் விஜய்க்கு மட்டுமே உள்ளது. இனி வரும் படங்களில் அவர் சில மாற்றங்களை கண்டிப்பாக யோசித்தே ஆக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். பார்வையாளர்கள் விரும்பும் சில மாற்றங்கள் பற்றி பார்ப்போம்.

பூமியை பிளந்து கொண்டோ, வானத்தை கிழித்துக் கொண்டோ வரும் அறிமுகக் காட்சி, அதனைத் தொடர்ந்து வரும் அறிமுகப் பாடல் என்ற வழக்கத்தை விட்டொழிப்பது.

நான் அடிச்சா தாங்க மாட்டே, கை வச்சா யோசிக்க முடியாது என்று தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும் பழக்கத்தை விட்டொழிப்பது.

ஆம்பள நான் அப்படிதான் இருப்பேன், பொம்பள நீ இப்படிதான் இருக்கணும் என்று பொம்பளைக்கு புத்தி சொல்லும் பழக்கத்தை மறந்துவிடுவது.

நூறு லேப் டாப்பை விற்று நூறு கோடி பணம் சம்பாதிப்பது போன்ற காமெடிகளை முடிந்தவரை தவிர்ப்பது.

என் பின்னாடி ஒரு சிங்கக் கூட்டமே இருக்கு என்று விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு படத்தில் இரை போடுவதை சுத்தமாக விட்டொழிப்பது.

ஜனங்களுக்கு ஏதாவது செய்யணும் போல இருக்கு என்று படத்திலும், நிஜத்திலும் அரசியல் பிரவேசத்துக்கு அடிபோடாமலிருப்பது.

காமெடி என்றதும் தோளை குறுக்கி தலையை ஆட்டி வாய்ஸை மாற்றும் மிமிக்கி‌ரியை அடியோடு நிறுத்தி‌க் கொள்வது.

ஆறு பாட்டு, நாலு சண்டை என்ற பார்முலாவை முடிந்தவரை தவிர்ப்பது. இந்த பார்முலாவுக்குள் எந்தக் கதையைப் போட்டாலும் அது ஒரே கதையாகிவிடும் ஆபத்து அதிகமுண்டு.

அதிகம் அடிக்காத, அதிகம் ஆவேசப்படாத பூவே உனக்காக, காதலுக்கு ம‌ரியாதை, லவ்டுடே போன்ற படங்கள்தான் தனக்கு திருப்புமுனையாக அமைந்தது என்பதை உணர்ந்து அந்தவகைப் படங்களை அவ்வப்போதாவது செய்ய முயற்சி மேற்கொள்வது.

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற பழமொழி எல்லோர் வாழ்விலும் உண்மையாக இருக்க வேண்டியதில்லை என்ற உண்மையை பு‌ரிந்து கொள்வது.

பார்வையாளர்களின் இந்த பத்து எதிர்பார்ப்புக்கு விஜய் செவிகொடுக்க முன்வந்தால் தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்த்தி என்ற பட்டம் அவருக்கு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. செய்வாரா இளைய தளபதி?
மேலும் அறிய

Tuesday, May 18, 2010

> மீண்டும் காக்கி சட்டை போடும் விக்ரம்

காக்கி சட்டை என்றால் த‌ங்கப்பதக்கம் சிவா‌ஜி, மூன்று முகம் ர‌ஜினி, காக்கி சட்டை கமல் என்று சிலரது பெயர்கள்தான் நினைவுக்கு வரும். சாமி படத்துக்குப் பிறகு விக்ரமின் முகமும் ரசிகர்களின் மலரும் நினைவுகளில் வருவது ஆறுச்சாமியாக சாமியில் அவர் செய்த அட்டகாசம்தான் காரணம்.

மறுபடியும் ஒருமுறை காக்கிக்குள் புகுந்து கொள்ளப் போகிறார் விக்ரம். படம், வெடி.

ஒரு படத்துக்காக வருடக் கணக்கில் நடிக்கும் விக்ரம் குறுகிய கால தயா‌ரிப்பாக ஒத்துக் கொண்டிருக்கும் படம்தான் வெடி. மோகன் நடராஜன் தயா‌ரிக்கும் இந்தப் படத்தை பூபதி பாண்டியன் இயக்குகிறார். காமெடியும், ஆக்சனும் கலந்து உருவாகும் இந்தப் படத்தில் அசிஸ்டெண்ட் கமிஷனர் வேடமாம் விக்ரமுக்கு.

இலியானா படத்தின் ஹீரோயின். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
மேலும் அறிய

> கார்த்தி மீண்டும் ரவீந்திரன் தயா‌ரிப்பில்

ஆயிரத்தில் ஒருவன் படத்தைப் பொறுத்தவரை இயக்குனர் செல்வராகவன், ஹீரோ கார்த்தி, ஹீரோயின்கள் ‌‌ரீமாசென், ஆண்ட்‌ரியா இவர்கள் அனைவரையும் விட அதிகம் கஷ்டப்பட்டவர் படத்தை தயா‌ரித்த ரவீந்திரன்.

ஏழு கோடி பட்ஜெட் என்று தொடங்கப்பட்ட படத்துக்கு 32 கோடிகள் செலவு செய்வது என்றால் சும்மாவா? இதயம் இரும்பில் செய்திருக்க வேண்டும்.

ரவீந்திரன் மீண்டும் செல்வராகவனுடன் சேர்ந்து பணிபு‌ரிவாரா என்பது தெ‌ரியாது. ஆனால் விரைவில் கார்த்தி நடிக்கும் படம் ஒன்றை தயா‌ரிக்கிறார். இந்தப் படத்தை இயக்குகிறவர் செல்வராகவனின் உதவியாளர் கார்த்திக். இது இவருக்கு முதல் படம்.

குருவிடமிருந்து கலையை கற்றவர் காலதாமதத்தை கற்றிருக்க மாட்டார் என ரவீந்திரன் போலவே நாமும் நம்புவோம்.
மேலும் அறிய

> சுறா U.Kயில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

யுகே-யில் விஜய்யின் சுறா எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியான மற்ற எந்தத் தமிழ்ப் படங்களைவிட சுறா அதிகம் வசூலித்திருப்பது ஆச்ச‌ரியம்.

பாக்ஸ் ஆஃபிஸில் 22வது இடத்தில் இருந்த சுறா சென்ற வாரம் 34வது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வாரம் இந்தப் படம் 12,395 பவுண்ட்கள் வசூலித்தது. ஏழு திரையிடல்களில் இந்த‌ப் பெ‌ரிய வசூலை அது ஈட்டியுள்ளது.

இதுவரை யுகே-யில் மட்டும் 95,987 பவுண்ட்களை வசூலித்துள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 64.14 லட்சங்கள்.

விநியோகஸ்தர்களே எதிர்பார்க்காத வசூல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அறிய

Monday, May 17, 2010

> வீட்டுக்குள் வளரும் செடிகள்

மரம், செடிகள் தங்களது உணவான பச்சையத்தை தயாரிக்க சூரிய ஒளியும், தண்ணீரும் அவசியமாகும். சூரிய ஒளி இல்லாத நிலையில் செயற்கை மின்விளக்கு ஒளியில் உயிர் வாழும் வகையில் செடிகளை வளர்க்கும் ஆய்வு நடந்து வருகிறது. ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் நடத்திய இந்த ஆய்வில் மின் விளக்கு மற்றும் ஒளிரும் தன்மையுள்ள (Electric LED lighting) விளக்கு மூலம் செடிகள் வளர்க்கப்பட்டன. இந்த முறையின் மூலம் காய்கறிச் செடிகள், வண்ண மலர்ச்செடிகள் வளர்க்கப் பட்டுள்ளன.
மேலும் அறிய

> துபையில் குளோனிங் ஒட்டகம் உருவாக்கம்

துபையில் உள்ள குளோனிங் ஆய்வகத்தில் கடந்த ஆண்டு முதன்முறையாக ஒட்டகம் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டது. தற்போது இரண்டாவதாக உருவாக்கப்பட்ட ஆண் ஒட்டகத்திற்கு சௌகான் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. காளை மாடு ஒன்றின் செல் மூலம் இந்த ஒட்டகம் உருவாக்கப்பட்டுள்ளது. உயிருடன் உள்ள ஒரு விலங்கின் செல்லிலிருந்து குளோனிங் முறையில் ஒட்டகம் உருவாக்கப் பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
மேலும் அறிய

> Google Chrome Update பைல் வடிவில் வைரஸ்!

குரோம் பிரவுசருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதனால், மால்வேர் புரோகிராம்களைத் தயாரித்து அனுப்புபவர்கள், குரோம் எக்ஸ்டன்ஷன் என்ற பெயரில் வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராம்களைத் தயாரித்து மறைமுகமாக அனுப்பத் தொடங்கி உள்ளனர்.

கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு, தானாக ஒரு செய்தி அனுப்பப்படும். அதில் டாகுமெண்ட்ஸ் மற்றும் இமெயில் செய்திகளை கூடுதல் வசதியுடன் பார்க்க, குரோம் எக்ஸ்டன்ஷன் ஒன்று தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், அதனைப் பெற இந்த லிங்க்கில் கிளிக் செய்யுமாறும் கூறப்படும். இந்த செய்தியை உண்மை என நம்பி, கிளிக் செய்தால், உடனே நாம் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவோம்.

அந்த தளம் கூகுள் குரோம் எக்ஸ்டன்ஷன்களைத் தரும் தளம் போலவே தோற்றமளிக்கும். ஆனால் நீங்கள் எதிர்பார்த்த எக்ஸ்டன்ஷன் புரோகிராமிற்குப் பதிலாக, வேறு ஒரு புரோகிராம் தானாகக் கம்ப்யூட்டரில் பதியப்படும். இது ஒரு மால்வேர் புரோகிராம். கம்ப்யூட்டரில் இருந்து கொண்டு, கம்ப்யூட்டரில் உள்ள பெர்சனல் தகவல்களை, பாஸ்வேர்ட், பேங்க் அக்கவுண்ட் எண் போன்றவை, எடுத்து இந்த மால்வேர் புரோகிராமினை பரப்பியவருக்கு அனுப்பி வைக்கும். பின் அவற்றைப் பயன்படுத்தி, நிதி மோசடியில் இதனை அனுப்பியவர்கள் ஈடுபடுவார்கள்.

இந்த மால்வேர் புரோகிராம் வழக்கமான எக்ஸ்டன்ஷன் போலவே தோற்றமளிக்கும். அது உள்ள தளம், முகப்பு போன்றவை அப்படியே நம்மை ஏமாற்றும். உஷாரானவர்களாக இருந்தால், அந்த புரோகிராமின் துணைப் பெயர், எக்ஸ்டன்ஷனுக்கான '.crx' என்று இல்லாமல், '.exe' என்று இருப்பதனைப் பார்க்கலாம்.

இதனை பிட் டிபன்டர் (Bit Defender) Trojan.Agent.20577 எனக் கண்டறிந்துள்ளது. இது பெர்சனல் தகவல்களைத் திருடுவதுடன், கூகுள் மற்றும் யாஹூ இணையப் பக்கங்களுக்கு நம்மைச் செல்லவிடாமல் தடுக்கிறது. குரோம் வெப் பிரவுசரில் எப்போது 'google.[xxx]' அல்லது '[xx].search.yahoo.com' என டைப் செய்தாலும், உடனே 89.149.xxx.xxx என்ற இன்டர்நெட் முகவரிக்கு நாம் தள்ளப்படுவோம். இதன் மூலம் நாம், இந்த திருட்டு புரோகிராமினை எழுதியவர்களின் இணைய தளத்திற்கே எடுத்துச் செல்லப்படுவோம்.

எனவே எக்ஸ்டன்ஷன் எது குறித்துத் தகவல் வந்தாலும், அது நமக்குத் தேவையா என்று ஒரு கணம் சிந்தியுங்கள். பின் அதனைத் தரும் தளம் சரியானதுதானா என்று சோதனை செய்திடவும். பைலின் பெயரை பலமுறை சோதனை செய்து அறியவும். உடனே அதனை அமல்படுத்தாமல், டவுண்லோட் செய்து வைத்து, அல்லது குறித்து வைத்து பின்னர் அது பற்றி முடிவெடுக்கவும். ஏனென்றால், பாதிக்கக் கூடிய எக்ஸ்டன்ஷன் எனில் உடனே இது குறித்த அறிவிப்பு இணையத்தில் கிடைக்கும்.

எழுதியவர் : கார்த்திக்
மேலும் அறிய

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.