Saturday, July 31, 2010

> பிரச்சனையை கிளப்பும் ப்‌ரியாமணி

சிங்கள அரசின் ஊதியம் வாங்காத விளம்பர தூதராக செயல்பட்டு வருகிறார்கள் சல்மான்கானும், விவேக் ஓபராயும். சல்மான்கானின் சகவாசத்தால் இந்த தூதர் வேலையை அசினும் செய்து சிக்கலில் மாட்டிக் கொண்டது உலகுக்கே தெ‌ரியும். அப்படியிருக்க ப்‌ரியாமணியும் அந்த வலையில் விழ‌த் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

போக்க‌ரி படத்தை சல்மான்கானை வைத்து வான்டட் என்ற பெய‌ரில் இந்தியில் இயக்கினார் பிரபுதேவா. படம் ஹிட். அப்போதே வான்டட் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என தயா‌ரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் ப்‌ரியாமணியை நடிக்க வைக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. இது குறித்து ப்‌ரியாமணியிடம் கேட்டதற்கு, வான்டட் இரண்டாம் பாகத்தில் நடிக்க கேட்டு என்னை இதுவரை யாரும் அணுகவில்லை. அப்படி கேட்டால் உடனடியாக ஒப்புக் கொள்வேன். சல்லு பாயுடன் நடிக்க யாருக்குப் பிடிக்காது என்று உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார்.

யாருடைய படங்களை தவிர்க்க வேண்டும் என்று தமிழர்கள் நினைக்கிறார்களோ அவர்கள்தான் இந்த நடிகைகளுக்கு பிடித்தமான நடிகர்கள்.

திரையுலகமே ரெட் கார்ட்டை ரெடி பண்ணி வையுங்கள்.
மேலும் அறிய

> ர‌ஜினி - நான் கண்டது ஆற‌‌றிவு

ர‌ஜினி படங்களில் ஓபனிங் பாடல் என்பது ர‌ஜினியும் ஸ்டைலும் போல பி‌ரிக்க முடியாதது. எந்திரனில் மட்டும் இதற்கு விதிவிலக்காக முடியாதல்லவா?

எந்திரனிலும் இருக்கிறது ஒரு ஓபனிங் பாடல். ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி என வசீக‌ரித்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம்தான் இந்த ஓபனிங் பாடலை பாடியிருக்கிறார். பாடலை எழுதியிருப்பவர், வைரமுத்து.

நான் கண்டது ஆற‌‌றிவு, நீ கண்டது ஈரறிவு, நான் கற்றது ஆறுமொழி நீ கற்றது நூறு மொழி... என்று டியூனுக்கு ஏற்ப ஒழுகிச் செல்கிறது பாடல் வ‌ரிகள்.

நாளை இந்தப் பாடலை ரசிகர்கள் காது குளிர கேட்டு மகிழலாம்.
மேலும் அறிய

Friday, July 30, 2010

> மாதவன் விளக்கம் - 3 இடியட்ஸ்

3 இடியட்ஸ் படத்தின் தமிழ், தெலுங்கு ‌ரீமேக்கை ஷங்கர் இயக்குவதாக அறிவித்த பிறகு அதற்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்திருக்கிறது. படத்தில் நடிக்க நான் நீ என்று நடிகர்கள் முட்டி மோதுகிறார்கள்.

இந்தியில் மாதவன் நடித்த வேடத்தை தமிழ், தெலுங்கிலும் மாதவனே நடிக்கிறார் என்றும், ஷங்கர் அதை‌த்தான் விரும்புகிறார் எனவும் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் தனது நிலையை விளக்கியிருக்கிறார் மாதவன்.

3 இடியட்ஸ் தமிழ், தெலுங்கு ‌ரீமேக்கில் நான் நடிக்கவில்லை என தெ‌ளிவாக விளக்கம் அளித்துள்ளார் மாதவன். வேறு படங்கள் கைவசம் இருப்பதால் அவர் 3 இடியட்ஸில் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.
மேலும் அறிய

> இலியானா ,த்‌ரிஷா – அதிர்ஷ்டம் யாருக்கு ?

3 இடியட்ஸ் ‌ரீமேக்கில் யார் யாரை நடிக்க வைப்பது என்பது இன்னும் முடிவாகவில்லை. ஹீரோக்கள் மட்டுமல்ல ஹீரோயின் விஷயத்திலும் இழுபறிதான்.

3 இடியட்ஸ் ‌ரீமேக்கை ஷங்கர் இயக்குவதால் எப்படியும் படத்தில் இடம்பெறுவது என நடிகைகள் மத்தியில் தள்ளு முள்ளு. ஆனால் இறுதி லிஸ்டில் இடம் பிடித்திருப்பவர்கள் த்‌ரிஷாவும், இலியானாவும்தான்.

இவர்களில் யார் க‌‌ரீனா கபூர் நடித்த வேடத்தில் நடிக்கப் போகிறார் என்பதை இவர்களின் கால்ஷீட்டும், ஷங்கரும்தான் முடிவு செய்வார்கள். எந்திரன் ‌ரிலீஸுக்கு முன்பே இதற்கான விடை தெ‌ரிந்துவிடும் என்கிறார்கள் ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்டில்.
மேலும் அறிய

> பில்லா பார்ட் 2

அ‌ஜீத்தின் அல்டிமேட் ஹிட் என்று பில்லாவைச் சொல்லலாம். இந்தப் படத்தில்தான் அ‌ஜீத்தின் ஸ்டைலும், அழகும் ஆண்களே பொறாமைப்படும்படி இருந்தது.

இந்த ஸ்டைலிஷான படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க விஷ்ணுவர்தனும், நடிக்க அ‌ஜீத்தும் ஆர்வமாகவே இருந்தனர். இப்போது அதற்கான காலம் கனிந்திருக்கிறது.

பில்லா பார்ட் 2 அடுத்த வருடம் தொடங்கப்படும் என விஷ்ணுவர்தன் தரப்பில் அதிகார‌ப்பூர்வமாக தெ‌ரிவிக்கப்பட்டிருக்கிறது.

பில்லா 2 தொடங்குவதற்குமுன் ஆளுக்கு தலா ஒரு படத்தை முடித்துவிடுவது என முடிவு செய்திருக்கிறார்கள்.
மேலும் அறிய

Thursday, July 29, 2010

> விஜய்யின் அடுத்தப் படம் இந்தி‌ப் படமா?

இது நடிகர் விஜய் அல்ல, இயக்குனர் விஜய். கி‌‌ரீடம், பொய் சொல்லப் போறோம் படங்களை இயக்கிய இவ‌ரின் மூன்றாவது படம் மதராசப்பட்டினம். சமீபத்தில் வெளிவந்தப் படங்களில் களவாணியும் மதராசப்பட்டினமும்தான் நன்றாகப் போகிறது.

இந்நிலையில் மதராசப்பட்டினம் படத்தைப் பார்த்த அ‌‌ஜீத், மீண்டும் விஜய்யுடன் பணிபு‌ரியும் தனது விருப்பத்தை வெளியிட்டிருக்கிறார். மதராசப்பட்டினத்துக்குப் பிறகு இந்திப் படம் இயக்கும் முனைப்பில் இருந்த விஜய்க்கு இது இனிய சர்ப்ரைஸ்.

விஜய்யின் அடுத்தப் படம் இந்தி‌ப் படமா? இல்லை அ‌‌ஜீத் படமா என்பது இன்னும் சில தினங்களில் தெ‌ரிந்துவிடும்.
மேலும் அறிய

> எதிர்ப்பு தெ‌ரிவித்த பிறகும் கருணாஸ் பிடிவாதம்

பலர் எதிர்ப்பு தெ‌ரிவித்த பிறகும் இலங்கைக்கு செல்வது என்பதில் உறுதியாக இருக்கிறார் காமெடியர் கருணாஸ். இவர் செல்வது முடி காணிக்கை செலுத்த அல்ல, சிங்களவனின் வானொலியில் அவனை புகழந்து பாடுவதற்கு.

இந்த துரோகத்தை நாம் தமிழர் இயக்கத்தினர் தெ‌ளிவாக தங்கள் அறிக்கை மூலம் பு‌ரிய வைத்திருக்கிறார்கள். அதன் பிறகும் அவர் அடங்குவதாக இல்லை. சப்பைக் காரணங்களால் தனது இனத்துரோகத்தை மறைக்க முயன்று வருகிறார்.

இந்நிலையில் இந்த இனப் பிரச்சனையை சாதிப் பிரச்சனையாக்கும் சதியும் நடந்து வருகிறது. சென்னை முழுக்க கருணாஸை ஆத‌ரித்து அவரது சாதியைச் சேர்ந்தவர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். காமெடியா‌ரின் ஆசிர்வாதத்துடனேயே இந்த இழி செயல்கள் அரங்கேறியுள்ளன.

சொந்த இனத்துக்கே துரோகம் செய்யும் இவர்களை எப்படி கலைஞர்கள் என்பது?
மேலும் அறிய

> தனி விமானம் எந்திரனுக்கு

எந்திரன் ஆடியோ கோலாலம்பூ‌ரில் வரும் 31ஆம் தேதி வெளியிடப்படுகிறது. படத்தின் போஸ்டர் டிசைன் கூட வித்தியாசமாக அனைவரையும் கவரக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஷங்கர்.

இதற்காக டிசைனர் சித்தார்த்தின் மித்ரா மீடியா அலுவலகத்துக்கு நே‌ரில் வந்த ஷங்கர் அதிக நேரம் அவருடன் போஸ்டர் டிசைன் குறித்து டி‌ஸ்கஸ் செய்தார் (போஸ்டருக்கே இப்படியா?).

மலேசியாவில் நடக்கும் விழாவுக்கு தமிழகத்திலிருந்து அதிக எண்ணிக்கையில் சிறப்பு விருந்தினர்கள் செல்கிறார்கள். இதனால் அனைவருக்கும் சேர்த்து தனி விமானம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனராம்.

உண்மையிலேயே பிரமாண்ட படம்தான்.
மேலும் அறிய

Wednesday, July 28, 2010

> நெருக்கடியில் ரத்த ச‌ரித்திரம்

ராம்கோபால் வர்மா இயக்கியிருக்கும் ரத்த ச‌ரித்திரம் ஆந்திராவில் நடந்த உண்மைக் கதை. ரவுடியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ப‌ரி‌ட்டால ரவி மற்றும் அவனது கூட்டாளி சூ‌ரி ஆகியோரைப் பற்றியது.

படம் தொடங்கப்பட்ட போதே ப‌ரி‌ட்டால ரவியின் மனைவி சுனிதா எதிர்ப்பு தெ‌ரிவித்தார். தனது கணவர் ரவுடி இல்லை, அவர் சிறந்த மனிதாபிமானி என்பது சுனிதாவின் கருத்து.

படம் முடிந்த நிலையில் முதலில் எனக்குதான் படத்தை திரையிட்டு காண்பிக்க வேண்டும். என்னடைய கணவரை தவறாக சித்த‌ரித்திருந்தால் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டேன் என திடீர் மிரட்டல் விடுத்துள்ளார் சுனிதா. அப்படியே படத்தை சுனிதாவுக்கு திரையிட்டு காண்பிக்காமல் ‌ரிலீஸ் செய்தால் நீதிமன்றம் சென்று தடை வாங்கவும் தயங்க மாட்டாராம்.

தாவூத்தை பற்றியே படம் எடுத்த வர்மா இந்த பூச்சாண்டிக்கு பயப்படுவார் என்றா நினைக்கிறீர்கள்?
மேலும் அறிய

> விஜய் - ஷங்கர் இயக்கத்தில்

எந்திரன் படத்துக்குப் பிறகு 3 இடியட்ஸ் ‌ரீமேக்கை ஷங்கர் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் ஒரே நேரத்தில் படம் தயாராகிறது.

இந்தியில் அமீர்கான் நடித்த வேடத்தில் விஜய் நடிக்கிறார். மாதவன் நடித்த வேடத்தில் அவரையே நடிக்க வைக்க ஷங்கர் முடிவு செய்துள்ளார். ஆனால் மாதவன் இதுவரை தனது சம்மதத்தை தெ‌ரிவிக்கவில்லை. மூன்றாவது கதாபாத்திரத்தில் எஸ்டிஆர் - அதாங்க சிம்பு நடிக்கிறார்.

தெலுங்கில் விஜய்க்குப் பதிலாக மகேஷ்பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். எஸ்டிஆர் தமிழில் செய்யும் வேடத்தை தெலுங்கிலும் அவரே செய்கிறார். மாதவன் வேடத்தில் யார் நடிப்பது என்பது இன்னும் முடிவாகவில்லை.

3 இடியட்ஸ் ‌ரீமேக்கை ஷங்கர் இயக்குகிறார் என்று தெ‌ரிந்த பிறகே இந்த நடிகர்கள் ‌ரீமேக்கில் நடிக்க முன்வந்தனர். இவர்களுக்கெல்லாம் முன்பாக இயக்குனர் யார் என்பது முடிவாகும் முன்பே நடிக்க முழு சம்மதம் தெ‌ரிவித்தவர் ‌‌ஜீவா. ஆனால் இப்போதைய கூட்டணியில் ‌‌ஜீவா இல்லை, வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

அதுதான் சினிமா.
மேலும் அறிய

Tuesday, July 27, 2010

> எந்திரன் - கலைஞர் பேச்சு

கோலாலம்பூ‌ரில் வரும் 31ஆம் தேதி எந்திரன் படத்தின் பாடல்கள் வெளியிடப்படுகின்றன. எல்லா வகையிலும் இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய எந்திரன் படக்குழு முயன்று வருகிறது.

எந்திரனின் உத்தேச பட்ஜெட் 190 கோடிகள் என தயா‌ரிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஷங்கர், ர‌ஜினி, ரஹ்மான், சன் பிக்சர்ஸ் என மெகா கூட்டணி என்பதால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வமும் அதிகமுள்ளது. ஆடியோ வெளியீட்டு விழாவிலிருந்தே படத்தின் விளம்பரத்தை தொடங்க இருக்கிறார்கள்.

மலேசியா தலைநகர் கோலாலம்பூ‌ரில் நடக்கும் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஷங்கர், ர‌ஜினி, ஐஸ்வர்யாராயுடன் அமிதாப்பச்சன், கமல் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

இந்த விழாவில் முதல்வர் கருணாநிதியின் வாழ்த்தும் இருந்தால் நன்றாக இருக்கும் என தயா‌ரிப்பாளர் தரப்பு கருத, கலைஞர் தொலைக்காட்சி அரங்கத்தில் எந்திரன் படத்தைக் குறித்து முதல்வர் பேசும் காட்சி படமாக்கப்பட்டது. இந்தக் காட்சி கோலாலம்பூர் விழாவில் திரையிடப்படுமாம்.
மேலும் அறிய

> சூர்யா - K.V.ஆனந்த் கூட்டணி மீண்டும்

பாக்ஸ் ஆஃபிஸை கலங்கடித்த அயன் கூட்டணி மீண்டும் ஒன்றிணைகிறது. 2011 பிப்ரவ‌ரியில் இந்தப் படம் தொடங்கப்பட உள்ளது.

ஏ‌ஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயா‌ரித்த படம் அயன். கே.வி.ஆனந்த் இயக்க சூர்யா நடித்த இந்தப் படம் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டானது. தமன்னா ஹீரோயினாக நடித்திருந்தார்.

கோ படத்தை இயக்கிவரும் கே.வி.ஆனந்த் கோ முடிந்ததும் மீண்டும் சூர்யாவை இயக்குகிறார். அயன் படத்தை தயா‌ரித்த ஏ‌ஜிஎஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயா‌ரிக்கிறது. முருகதாஸின் 7ஆம் அறிவு முடிந்ததும் கே.வி.ஆனந்த் இயக்கும் படம் தொடங்கவுள்ளது.
மேலும் அறிய

> விஜய் காஜல் அகர்வால் ஜோடி

வேலாயுதம் படத்துக்குப் பிறகு லிங்குசாமி இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த‌க் கூட்டணி நவம்ப‌ரில் படத்தை ஆரம்பிப்பது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

லிங்குசாமி சிம்பு நடிக்கும் படத்தை இயக்குவதாக‌க் கூறி வந்தார். நடுவில் விஜய் கால்ஷீட் கொடுக்கவே சிம்புவுக்கு டாட்டா காட்டி விஜய் புராஜெக்டில் பிஸியாகிவிட்டார். இவர்கள் இணையும் படம் வேலாயுதம் முடிந்த பிறகு தொடங்கப்பட உள்ளது.

இன்னும் பெய‌ரிடப்படாத இந்த புதிய படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலை கேட்டுள்ளனர். காஜல் அகர்வால் நடித்த நான் மகான் அல்ல இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் அறிய

Monday, July 26, 2010

> கெடாத இன்சுலின் கண்டுபிடிப்பு

குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பாது காக்க வேண்டிய தேவையில்லாத இன்சுலின் மருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மெல்போர்ன் மோனாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சாதாரண அறையில் உள்ள வெப்பநிலையில் இருந்தாலும் கெட்டுப்போகாத இன்சுலின் மருந்தை கண்டுபிடித்துள்ளனர். இன்சுலின் மருந்தின் மற்ற தன்மைகள் மாறாமல் வெப்பநிலை அதிகரிக்கும்போது கெட்டுப் போகாதபடி மாற்றி அமைத்துள்ளனர். இந்த புதிய மருந்துக்கு டைகார்பா இன்சுலின் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை சாதாரண அறை வெப்ப நிலையில் வைத்திருக்கலாம். இதே வெப்ப நிலையில் ஒரு சில ஆண்டுகள் இருந்தாலும் மருந்து தனது தன்மையை இழக்காது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அறிய

> லேசர் வெடிகுண்டு சோதனை ஆராய்ச்சி

பெங்களூருவில் இயங்கி வரும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ) உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரித்துள்ள அதிநவீன லேசர் கைடு பாம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரானில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான போர் விமானங்கள் மூலம் இந்த வெடிகுண்டுகள் வீசி சோதனை நடத்தப்பட்டது. இதில் அந்த வெடிகுண்டுகள் சிறப்பாக செயல்பட்டு இலக்கை வெற்றிகரமாக தாக்கியது.
மேலும் அறிய

> ரசிகர்களை சந்திக்கும் ஆர்யா

சமீபத்தில் வெளியான படங்களில் களவாணியும், மதராசப்பட்டினமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இவ்விரு படங்கள் மட்டுமே விற்றவர்களுக்கும், வாங்கியவர்களுக்கும் லாபத்தை சம்பாதித்து கொடுத்துள்ளது.

லாப சதவீதத்தை அதிக‌ரிக்கும் விதமாக மதராசப்பட்டினம் டீம் திரையரங்குக்கு சென்று ரசிகர்களை நேரடியாக சந்திக்க உள்ளது. படத்தின் ஹீரோ ஆர்யா, ஹீரோயின் எமி ஜாக்சன், இயக்குனர் விஜய், தயா‌ரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் மற்றும் படத்தை தமிழகத்தில் விநியோகித்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் என அனைவரும் இந்த விளம்பர பயணத்தில் கலந்து கொள்கிறார்கள்.

கோயம்புத்தூர், சேலம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் மதராசப்பட்டினம் ஓடும் திரையரங்குகளில் இவர்கள் ரசிகர்களை சந்திப்பார்கள்.
மேலும் அறிய

Sunday, July 25, 2010

> விஷால் - பிரபுதேவா இயக்கத்தில்

பிரபுதேவா தற்போது ஜெயம் ரவி நடிக்கும் இச் படத்தை இயக்குவதில் தீவிரமாக உள்ளார். இச்-இல் ரவி ஹீரோயின் ஹன்சிகா மோத்வானி.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சல்மான் கான் நடிக்கும் இந்திப் படத்தை பிரபுதேவா இயக்குவார் என்றுதான் அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர். சல்மான் கானின் இலங்கை துரோகப் படலத்துக்குப் பிறகு அவரை இயக்கும் முடிவை பிரபுதேவா ஒத்திப் போட்டிருக்கிறார். ஆமாம், இச் படத்துக்குப் பிறகு மீண்டும் தமிழ்ப் படத்தைதான் பிரபுதேவா இயக்குகிறார்.

இந்த புதிய படத்தில் விஷால் ஹீரோவாக நடிப்பார் என்று தெ‌ரிகிறது. தற்போது நடித்து வரும் பாலாவின் அவன் இவன், ஏற்கனவே கமிட்டான பூபதி பாண்டியனின் படம் இரண்டையும் முடித்துவிட்டே விஷால் பிரபுதேவா இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

அப்போ இன்னும் நிறைய நாட்கள் இருக்குதுன்னு சொல்லுங்க.
மேலும் அறிய

Saturday, July 24, 2010

> கமல் ர‌ஜினி பட விழாவில் ?

வரும் 31 ஆம் தேதி எந்திரன் பாடல்கள் வெளியிடப்படுகின்றன. வெளியீட்டு விழா நடைபெறும் இடம் மலேசியா தலைநகர் கோலாலம்பூர்.

பிரமாண்டமாக நடைபெறும் இந்த விழாவில் ஷங்கர், ர‌ஜினி, ஐஸ்வர்யாராய், ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட படத்தில் பணிபு‌ரிந்த அனைவரும் கலந்து கொள்கிறார்கள். பிரமாதமான கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. (சன் டிவியில் ஆறு மணி நேரத்துக்கு ஒளிபரப்ப வேண்டுமே).

இந்த விழாவில் ஜுனியர் சூப்பர் ஸ்டார் எஸ்டிஆரும் - அதாங்க சிலம்பரசன் - ஒரு பாடலுக்கு ஆடவிருக்கிறாராம். எந்திரன் படப் பாடலாக அது இருக்கும் என்கிறார்கள்.

இந்த ஆடியோ விழாவில் கலந்து கொள்ளும் இன்னொரு தமிழக விஐபி கமல்ஹாசன். எந்திரன் கதை முதலில் ரோபோ என்ற பெய‌ரில் கமலுக்காகவே உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அறிய

> மெகா ப்ஜெட் படம் - விஜய்

விக்ரமை இயக்கும் திட்டம் கை நழுவியதால் தனது பார்வையை விஜய் பக்கம் திருப்பியிருக்கிறார் யாவரும் நலம் இயக்குனர் விக்ரம் கே.குமார் என சில நாட்கள் முன்பு எழுதியிருந்தோம். விஜய் நடிக்க விக்ரம் கே.குமார் இயக்கும் படம் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிட்டது.

மெகா பட்ஜெட்டில் தயாராகவிருக்கும் இந்தப் படத்தை தயா‌ரிப்பவர் பல ஹிட் படங்களை தந்த ஸ்ரீசூர்யா மூவிஸ் ஏ.எம்.ரத்னம். சில காலம் படத்தயா‌ரிப்பிலிருந்து விலகியிருந்த இவர் தனது ‌‌ரீஎ‌ண்ட்‌ரியை பிரமாண்டமாக அமைக்க அத்தனை ‌ரிஸ்க்கையும் எடுத்து வருகிறார்.

விக்ரம் கே.குமார் இயக்கும் படத்தின் பட்ஜெட் இதுவரை விஜய் நடித்தப் படங்களிலேயே மிக அதிகம் என்கிறார்கள் ரத்னத்தின் அலுவலகத்தில். படத்தின் பட்ஜெட் ஏறக்குறைய நாற்பது கோடியாம். இத்தனை காஸ்ட்லி படத்தில் விஜய் இதுவரை நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் பிலிம்சின் வேலாயுதம் படத்துக்குப் பிறகு இந்த மெகா புராஜெக்ட் தொடங்கப்படும் என்கிறார்கள். விஜய்யின் ஜோடி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
மேலும் அறிய

> இரட்டை வேடம் - விக்ரம்

விக்ரம் படம், இயக்குனர் பூபதி பாண்டியனுக்கு கிடைத்த எதிர்பாராத ஜாக்பாட். மோகன் நடராஜன் தயா‌ரிப்பில் விக்ரமை விக்ரம் கே. குமார்தான் இயக்குவதாக இருந்தது. சில காரணங்களால் அது கைகூடாமல் போக விக்ரம் கே.குமா‌ரின் இடம் பூபதி பாண்டியனுக்கு கிடைத்தது.

தனது படத்துக்கு வெடி என்று பெயர் வைத்துள்ளார் பூபதி பாண்டியன் என்பதும், இலியானா வெடியின் ஹீரோயின் என்பதும் தெ‌ரிந்த விஷயங்கள். இந்தப் படத்தில் விக்ரம் போலீஸ் அதிகா‌ரியாக நடிக்கிறார்.

ஏற்கனவே விக்ரம் நடித்த போலீஸ் கதையான சாமி கண்டபடி ஓடியதால் வெடி மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கம். இதில் இன்னொரு சுவாரஸியம், போலீஸாக நடிக்கும் அதேநேரம் போலீசுக்கு குடைச்சல் கொடுக்கும் ரவுடியாகவும் இதில் வருகிறாராம் விக்ரம். ஆம், விக்ரமுக்கு இதில் இரட்டை வேடமாம்.

கலெ‌க்சனும் இரட்டிப்பாக அமைந்தால் சந்தோஷம்தான், தயா‌ரிப்பாளருக்கு.
மேலும் அறிய

> சென்சார் பாராட்டிய இனிது இனிது...

குஷி, நியூ, மொழி போன்ற படங்களின் கேமராமேன் கே.வி.குகன் முதல் முறையாக இயக்கியிருக்கும் படம், இனிது இனிது. பிரகாஷ்ரா‌ஜின் டூயட் மூவிஸ் படத்தை தயா‌ரித்துள்ளது.

முழுக்க புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு மிக்கி ஜே.மேயர் இசையமைத்துள்ளார். கேம்பஸ் கதையான இதன் படப்பிடிப்பு வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னால‌ஜியில் (‌விஐடி) நடந்தது.

அங்கு நடைபெற்ற முதல் படப்பிடிப்பு இனிது இனிது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்குப் பிறகே ஷங்கர் தனது எந்திரன் படத்தின் சில காட்சிகளை வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னால‌ஜியில் எடுத்தார்.

நட்பையும், காதலையும் பிரதானமாகச் சொல்லும் இப்படம் நேற்று தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்காக திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த உறுப்பினர்கள், வழக்கமான சினிமா கேம்பஸாக இல்லாமல் இது புதிதாக இருக்கிறது என படத்தின் இயக்குனரை பாராட்டியுள்ளனர்.

மேலும் படத்தின் எந்தப் பகுதியிலும் சென்சா‌ரின் கத்தி‌ரி தீண்டவேயில்லை. ஒரு கட் கூட இல்லாமல் சென்சா‌ரில் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் வாங்கிய படம் சமீபத்தில் இனிது இனிதாகவே இருக்கும்.

நண்பர்கள் தினமான ஆகஸ்ட் 1ஆ‌ம் தேதி படத்தின் பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
மேலும் அறிய

Friday, July 23, 2010

> சிம்பு விளக்கம் லிங்குசாமியின் பதில்???

சிம்பு வானம் படத்தில் நடிக்க‌ப் போய்விட்டதால் லிங்குசாமி விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறார் என்று இன்டஸ்ட்‌ரி முழுக்க தகவல் பரவியிருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தனது விளக்கத்தை பதிவு செய்திருக்கிறார் சிம்பு.

லிங்குசாமி தயா‌ரிப்பில் பூபதி பாண்டியன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். பிறகு, படத்தை லிங்குசாமி இயக்குவார், கிளவுட் நைன் துரை தயாநிதி தயா‌ரிப்பார் என்றார்கள். அடிப்படையில் பார்த்தால் கிளவுட் நைனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, நான் அவர்களுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவுமில்லை.

லிங்குசாமி படத்தின் கதையை சொல்வார் என்று 100 நாட்களுக்கு மேல் காத்திருந்தேன். ஆனால் அவர் கதை சொல்லவில்லை. இதன் காரணமாகதான் வானம் படத்தை தொடங்கினேன். துரை தயாநிதியிடம் லிங்குசாமி படம் குறித்து கேட்டதற்கு, செப்டம்பர் முதல் தேதி படத்தை ஆரம்பிக்கலாம் என்றார்.

இந்நிலையில் லிங்குசாமி வேறொரு நடிகரை வைத்து படத்தை ஆரம்பிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இது அநியாயம். என்னை காக்க வைத்துவிட்டு இன்னொரு நடிகரை நடிக்க வைப்பது ச‌ரியல்ல என்று சிம்பு கூறியுள்ளார்.

லிங்குசாமியின் பதில் விளக்கம் எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
மேலும் அறிய

> சூப்பர் ஸ்டாருடன் நடிக்க மறுத்த நயன்தாரா.

கன்னட சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வந்த வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்திருக்கிறார் நயன்தாரா.

ஒருகாலத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்த நயன்தாராவுக்கு தற்போது வாய்ப்புகள் குறைவு. தமிழில் ஆர்யாவுடன் நடிக்கும் ஒரேயொரு படம் மட்டுமே இருக்கிறது. தெலுங்கிலும் இதுதான் நிலைமை.

இந்நிலையில்தான் கன்னட சூப்பர் ஸ்டார் சிவரா‌ஜ் குமா‌ரின் புதிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு நயன்தாராவுக்கு வந்தது. தமிழ், தெலுங்கில் அவர் வாங்கும் சம்பளத்தை தரவும் தயாராகயிருந்தார் சிவரா‌ஜ் குமார். காரணம் இது அவரது நூறாவது படம். படத்தின் தொடக்க விழாவில் நம்மூர் சூர்யா முதல் பல விஐபி-களும் கலந்து கொண்டனர்.

ஆனால் இந்த வாய்ப்பு வேண்டாம் என நிராக‌ரித்துள்ளார் நயன்தாரா. அவரது இந்த முடிவு சிவரா‌ஜ் குமார் உள்ளிட்ட அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
மேலும் அறிய

> இதற்கு பெயர்தான் ராஜ தந்திரமா?

ராம்கோபால் வர்மாவின் ரத்த ச‌ரித்திரம் தமிழில் வெளியாகுமா என்றொரு நிலைமை நேற்று வரை இருந்தது. காரணம் தமிழ் அமைப்புகள் மற்றும் திரைப்பட சங்கங்கள்.

ஐஃபா விழாவில் பங்கேற்ற எந்த நடிக‌ரின் படத்தையும் தென்னிந்தியாவிலுள்ள ஐந்து மாநிலங்களில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என திரைப்பட சங்கங்கள் அறிவித்திருந்தன.

ஐஃபா விழாவில் முதல்தர அடிவருடியாக நடந்து கொண்ட விவேக் ஓபராய் ரத்த ச‌ரித்திரத்தில் நடித்திருந்ததால் இந்தப் படத்தை தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் வெளியிடக் கூடாது என்று சங்கங்கள் கூறி வந்தன.

இந்நிலையில் தம்பி சூர்யாவின் படத்துக்கு தடை சொல்ல மாட்டேன் என்று செந்தமிழன் சீமான் சொந்தத்துக்காக ஒரு பல்டி அடித்தார். ஆனாலும் தமி‌ழின உணர்வு இயக்கங்கள் ரத்த ச‌ரித்திரத்தை வெளியிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தன.

தற்போது ரத்த ச‌ரித்திரத்தின் ஒட்டுமொத்த விநியோக உ‌ரிமையை துரை தயாநிதியின் கிளவுட் நைன் வாங்கியுள்ளதாம். சம்பளத்துக்குப் பதில் தமிழக விநியோக உ‌ரிமையை பெற்றிருந்த சூர்யாதான் படத்தை துரை தயாநிதிக்கு கை மாற்றியதாக கூறுகிறார்கள். படம் பெ‌ரிய இடத்துக்கு கை மாறியதால் திரைப்பட சங்கங்கள் படத்துக்கு எதிராக சுண்டு விரலை‌க்கூட அசைக்காது என்று குதூகலிக்கிறார்கள் ரத்த ச‌ரித்திர யூனிட்டை சேர்ந்தவர்கள்.

இதற்கு பெயர்தான் ராஜ தந்திரமா?
மேலும் அறிய

Thursday, July 22, 2010

> இரட்டை எழுத்தாளர்கள் விஜய் படத்தில்

விஜய்யின் வேலாயுதம் படத்தை விஜய்யை போலவே ரசிகர்களும், விநியோகஸ்தர்களும் ஆர்வமாக எதிர்பார்க்கிறார்கள். விஜய் படத்தில் கதை இருக்காது அல்லது ஒரேவிதமான கதைதான் இருக்கும் என்ற குற்றச்சாற்றை வேலாயுதம் பொடி‌ப் பொடியாக்கும் என்பதே அனைவ‌ரின் எதிர்பார்ப்புக்கு காரணம்.

ஜெயம் ராஜா இயக்கிய நான்கு படங்களுமே கதையின் வலிமையால் வெற்றி பெற்றவை. குடும்பமாக உட்கார்ந்து பார்ப்பதற்கு உத்தரவாதம் தருபவை.

வேலாயுதம் படத்திலும் அடர்த்தியான கதை இருக்கும் என்பது அனைவ‌ரின் நம்பிக்கை. மேலும் படத்தின் வசனம் எழுதும் பொறுப்பை இரட்டை எழுத்தாளர்களான சுபாவிடம் ஒப்படைத்திருக்கிறார் ஜெயம் ராஜா.

கே.வி.ஆனந்தின் ஆஸ்தான எழுத்தாளர்களான இவர்கள் கனா கண்டேன், அயன் படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர்கள். கோ படத்துக்கும் இவர்களே வசனம்.

கதை ஏ‌ரியா ஸ்ட்ராங்காக இருப்பதால் வேலாயுதம் வெற்றி பெறும் என்கிறார்கள். நம்புவோம்.
மேலும் அறிய

> எந்திரன் ‌ரிலீஸ் தள்ளிப் போகும் ?

ஒட்டுமொத்த ரசிகர்களின் ஒரே எதிர்பார்ப்பு எந்திரன். விநியோகஸ்தர்கள் ஆவலாக எதிர்பார்க்கும் படமும் இதுதான். ஒரு வருடத்தின் நஷ்டத்தை ஈடு செய்வதுடன் லாபத்தை தருகிற கற்பகதரு, ர‌ஜினி படம் என்பது அவர்கள் பலமுறை அனுபவித்த உண்மை.

வரும் ஆகஸ்டில் அதாவது அடுத்த மாதம் படம் திரைக்கு வந்துவிடும் என ர‌ஜினியே அறிவித்திருக்கிறார். ஆகஸ்டை குறிவைத்தே ஷங்கரும் வேகமாக போஸ்ட் புரொட‌க்சன் வேலைகளை முடுக்கி விட்டுள்ளார்.

ஆனால் எந்திரன் என்பது யாருடைய எதிர்பார்ப்புக்குள்ளும் அடங்காத பிரமாண்ட படமாயிற்றே... அறிவித்தபடி ஆகஸ்டில் படத்தை கொண்டு வருவது கஷ்டம் என்கிறார்கள் எந்திரன் யூனிட்டில். படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகள் மேலும் நாட்களை எடுத்துக்கொள்ள வாய்ப்பிருப்பதால் படம் செப்டம்பர் மாதமே திரைக்கு வரும் என்கிறார்கள்.

படத்தின் குவாலிட்டியில் எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை என்பதில் ஷங்கரைப் போலவே தயா‌ரிப்பாளரும் உறுதியாக இருப்பதால் செப்டம்பர் மாதமே படம் திரைக்கு வரும் என அடித்து‌ச் சொல்கிறார்கள்.

தள்ளிப் போனாலும் தரமாக வந்தால் சந்தோஷம்தானே.
மேலும் அறிய

Wednesday, July 21, 2010

> சமீரா ரெட்டி - விலைமாது ???

சமீராவின் கைவசம் ஒரு தமிழ்ப் படம் மட்டுமே இருக்கிறது. கௌதம் வாசுதேவ மேனனின் நடுநிசி நாய்கள்.

படத்தின் பெயரைப் போலவே கதையும் வித்தியாசமாக இருக்கும் என்கின்றன படத்தைப் பற்றி வரும் தகவல்கள். காதல் எப்படி இருக்கும் என்பதை இதுவரை என்னுடைய படங்களில் காட்டியிருக்கிறேன். எப்படி இருக்கக் கூடாது என்பதை சொல்லும் படம்தான் நடுநிசி நாய்கள் என்கிறார் கௌதம்.

க்ரைம் த்‌ரில்லர் வகையைச் சேர்ந்த இந்தப் படத்தில் பாடல்களோ பின்னணி இசையோ கிடையாதாம். வீரா என்பவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

சமீராவுக்கு இதில் விலை மாது வேடமாம். வழக்கமான படம் போல் இரண்டரை மணி நேரம் இழுக்காமல் ஒன்றரை மணி நேரத்தில் முழுப் படத்தையும் எடுக்க திட்டமிட்டுள்ளாராம்.

படம் சர்வதேச அளவில் பல விருதுகளைப் பெற இப்போதே வாழ்த்துவோம்.
மேலும் அறிய

> அ‌‌ஜீத் - பெயர் பிரச்சனையில்

வெங்கட்பிரபு இயக்கத்தில் அ‌‌ஜீத் நடிக்கும் படத்துக்கு மங்காத்தா என்று பெயர் வைத்திருந்தனர். சப் டைட்டில், உள்ளே வெளியே.

இந்த மங்காத்தா தலைப்பை ஏற்கனவே ஒருவர் சேம்ப‌ரில் பதிவு செய்து வைத்துள்ளார். இதன் காரணமாக மங்காத்தா பெயரை பயன்படுத்துவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பெயரை பதிவு செய்திருக்கும் நிறுவனத்திடம் அ‌‌ஜீத்தே நேரடியாகப் பேசியிருக்கிறார். இதனால் பிரச்சனை சுமூகமாக முடிந்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.
மேலும் அறிய

Tuesday, July 20, 2010

> சிக்கலில் த்‌ரிஷா இந்திப்பட வாய்ப்புகள்

த்‌ரிஷாவின் முதல் இந்திப் படம் கட்டா ‌‌மிட்டா. அ‌க்சய் குமார் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படம் வரும் 23ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்தி முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவரும் போது, ஆறு மாதத்துக்கு முன்பே விளம்பர டூ‌ரில் இறங்கிவிடுவார்கள். பல்வேறு நகரங்களில் பல்வேறு வடிவங்களில் நடக்கும் இந்த விளம்பர நிகழ்ச்சியில் யார் கலந்து கொள்கிறார்களோ இல்லையோ, ஹீரோயின் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்.

ஆனால் கட்டா ‌‌மிட்டா-வுக்காக நடக்கும் விளம்பர நிகழ்ச்சியில் ஹீரோ அ‌க்சய் குமார் மட்டுமே கலந்து கொள்கிறார். கமலின் மன்மதன் அம்பு படத்தில் நடிப்பதால் த்‌ரிஷாவின் இடம் எப்போதும் வெற்றிடமாகவே உள்ளது.

இந்த ஒரே காரணத்தால் த்‌ரிஷாவின் அடுத்தடுத்த இந்திப்பட வாய்ப்புகள் மங்கத் தொடங்கியுள்ளன.
மேலும் அறிய

> சிம்பு, பரத் இணைந்து நடிப்பது அபூர்வம்.

சிம்பு நடிக்கும் வானம் திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடிக்கிறார் பரத். இது கெஸ்ட் ரோல் அல்ல, சிம்புக்கு இணையான கதாபாத்திரம்.

இந்தியில் அரை டஜன் ஹீரோக்கள் இணைந்து நடிக்கிறார்கள். ஆனால் தமிழில் இரண்டு பேர் இணைந்து நடிப்பதே அபூர்வம். இந்த ஈகோ யுத்தத்துக்கு தங்கள் அளவில் முடிவு கட்டியிருக்கிறார்கள் சிம்புவும், பரத்தும்.

தெலுங்கில் வெளியான வேதம் படமே வானம் என்ற பெய‌ரில் தமிழில் தயாராகிறது. இரண்டு ஹீரோ சப்ஜெக்டான இதில் சிம்புடன் மனோ‌ஜ் நடிப்பார் என கூறப்பட்டது. எதிர்பாராத விதமாக மனோ‌ஜ் விபத்தில் மாட்டிக் கொள்ள அந்த வேடத்தில் நடிக்க பரத்தை கேட்டிருக்கிறார் சிம்பு. அவரும் உடனே ஓகே சொல்லியிருக்கிறார்.

சென்ற வாரம் தொடங்கிய படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.
மேலும் அறிய

Monday, July 19, 2010

> சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் பூமியை நோக்கி

கடந்த 11 ஆண்டுகளாக அமைதியாக இருந்த சூரியன் தற்போது விழிப்படைந்துள்ள தாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியை நோக்கி அது ஒரு பெரும் சூறாவளியை அனுப்பும் அபாயம் உள்ளது. 21-ஆம் நூற் றாண்டில் தொழிநுட்ப உபகரணங்களை சூரிய னிடம் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து ஆராய்ந்தார்கள். “சூரிய நடுக்கத்தால் கிளம்பும் தீச்சுடர்களின் செறிவு மாறுபடக் கூடியவை. அது பூமியின் காந்தப்புலத்தில் தாக் கத்தை ஏற்படுத்தும். இவை பெரும் கதிரியக்கத் தன்மையுடையவை. மனித இனம் இக்கதிரி யக்கத்தில் இருந்து இயற்கையாகவே பாது காக்கப்பட்டிருந்தாலும், தொழில்நுட்பம் இதனால் பெரும் பாதிப்படையும். தீச்சுடரில் இருந்து கிளம்பும் வெப்பம் செய்மதிகளைச் செயலிழக்கச் செய்யலாம். அத்துடன் ஊடுகதிர் அலைகள் வானொலித் தொடர்புகளைப் பாதிக் கும். இன்னும் சில ஆண்டுகளில் அதன் உக்கிர மான தாக்கத்தை நாம் உணர முடியும். இவை மனித இனத்தைப் பாதிக்கும் எனக் கூறப் படுகிறது. இது 2012-ஆம் ஆண்டில் நிகழலாம் என கூறப்பட்டுள்ளது. அதிதொழில்நுட் பத்தைக் கொண்டுள்ள வளர்ச்சியடைந்த நாடு களின் நகரங்களில் இதனால் மின்சாரத் தடை ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கத்ரீனா சூறாவளி யினால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பை விட 20 மடங்கு அதிகமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
மேலும் அறிய

> உயிர்க்கொல்லி நோய்க்கு மருந்து

இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் கிருமிகளால் தாக்கப் படுவதால் செப்சிஸ் நோய் ஏற்படுகிறது. இந்நோய் ஆண்டுதோறும் உலகின் ஏறக்குறைய 20 மில்லியன் பேரை பாதிக்கிறது. பெரும்பாலானோர் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர். பாதிக்கப் பட்டவர்களில் பாதிப்பேர் மட்டுமே உயிர் பிழைக்கின்றனர்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அலிரியோ மெலன்டெஸ் என்பவரும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியைச் அவரது குழுவும் தாங்கள் கண்டுபிடித்துள்ள புதிய மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
மேலும் அறிய

Sunday, July 18, 2010

> U.Kயில் மதராசப்பட்டினம் பாஸ் மார்க் பெறுவது கடினம்.

ஆர்யாவின் மதராசப்பட்டினம் தமிழ்நாட்டில் வெளியான அதே நாள் யுகே-யிலும் வெளியிடப்பட்டது. ஆனால் படம் ரசிகர்களை பெ‌ரிதாக கவரவில்லை.

வெளியான முதல் வார இறுதியில் மதராசப்பட்டினம் பாக்ஸ் ஆபிஸில் 38வது இடத்தையே பிடிக்க முடிந்தது. இதன் ஓபனிங் வார இறுதி வசூல் 4,351 பவுண்ட்கள்.

மூன்று திரையிடல்களில் இந்த வசூலை மதராசப்பட்டினம் பெற்றுள்ளது. நமது ரூபாய் மதிப்பில் இது 3.07 லட்சங்கள். ஓபனிங் வார இறுதி வசூலே சுமார் என்பதால் யுகே வசூலில் மதராசப்பட்டினம் பாஸ் மார்க் பெறுவது கடினம்.

அதேநேரம் ராவணன் படம் ஏறக்குறைய ஒரு கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் அறிய

> குடியிருந்த கோயில் மீண்டும்

மக்கள் திலகம் எம்.‌ஜி.ஆ‌ரின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று குடியிருந்த கோயில். இதே பெய‌ரில் ஒரு படம் தயாராகிறது.

எம்.‌ஜி.ஆர். படத்தை ‌‌ரீமேக் செய்யாமல் படத்தின் பெயரை மட்டும் பயன்படுத்துவதால் எம்.‌ஜி.ஆர். ரசிகர்கள் கவலைப்பட‌த் தேவையில்லை. இந்த‌ப் பெயரை பயன்படுத்துவதற்கான உ‌ரிமையை முறைப்படி வாங்கிவிட்டார்களா என்பது தெ‌ரியவில்லை.

இந்த புதிய குடியிருந்த கோயிலில் சரண் என்பவர் ஹீரோவாக நடிக்கிறார். இவர் மறைந்த இயக்குனர் ராஜசேக‌ரின் உறவினர். படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறவர் ராஜராஜன். இவர் திரைப்பட‌க் கல்லூ‌ரி மாணவர். ச‌ரி, படத்தின் கதை?

எம்.‌ஜி.ஆ‌ரின் குடியிருந்த கோயிலில் முரடனாக இருந்த ஹீரோ தாய்ப் பாசத்தால் மனிதனாக மாறுவார். இதில் முரடனாக இருப்பவன் தெய்வமாக மாறுகிறான்.

ஒக்காந்து யோசிப்பாய்ங்களோ?
மேலும் அறிய

Saturday, July 17, 2010

> நான் மகான் அல்ல ஆகஸ்டில்

சுசீந்திரனின் இரண்டாவது படம் நான் மகான் அல்ல, ஆகஸ்டில் திரைக்கு வருகிறது.

கார்த்தி, காஜல் அகர்வால் நடித்திருக்கும் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சத்யம் திரையரங்கில் நடந்தது. படத்தின் ட்ரெய்லரும் இன்று வெளியிடப்பட்டது.

வெண்ணிலா கபடிக்குழுவில் கிராமத்தையும், கிராமத்து மனிதர்களையும் காட்சிப்படுத்திய சுசீந்திரன், இந்தப் படத்தில் சென்னை நகரை மையமாகக் கொண்டு கதை சொல்லியிருக்கிறார். ஆ‌க்சன் படமான இது பெரும் எதிர்பார்ப்பை இப்போதே கிளப்பியிருக்கிறது.

பாஸ்கர் சக்தி படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா ஒரு பாடல் எழுதியுள்ளார்.
மேலும் அறிய

Friday, July 16, 2010

> எதற்கும் அஞ்சாத அசராத விஜய்

விஜய்யின் படங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று தமிழ்நாடு திரையரங்கு உ‌ரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த அதிரடி முடிவால் விஜய் தரப்பு சின்னதாக அதிர்ந்ததாகக் கூட தெ‌ரியவில்லை.

ஒத்துழைப்பு மறுப்பு என்று முதலில் அறிவித்தபோது நடிகர் சங்கத்தில் இருதரப்புக்கும் நடுவில் பஞ்சாயத்து நடத்தப்பட்டது. விஜய் சொன்ன உடன்படிக்கையை திரையரங்கு உ‌ரிமையாளர்கள் ஏற்கவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இரண்டாவது முறையாகதான் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

திரையரங்கு உ‌ரிமையாளர்கள் சங்கத்தின் ஒருபி‌ரிவினர் விஜய்க்கு ஆதரவாக இருப்பதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. முக்கியமாக சென்னை நகர திரையரங்கு உ‌ரிமையாளர்கள் சங்க‌த் தலைவர் அபிராமி ராமநாதன். இவருக்கு அழைப்பு அனுப்பாமலேயே விஜய்க்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.

அபிராமி ராமநாதனும் அவரது ஆதரவாளர்களும் விஜய் படத்தை திரையிடுவதில் எந்த தடையும் இல்லை என கிளீன் சர்ட்டிபிகேட் கொடுத்திருப்பதால் விஜய்க்கு எதிரான தடை பிசுபிசுக்கும் என்றே தெ‌ரிகிறது.
மேலும் அறிய

> ர‌ஜினி - அ‌‌ஜீத் பட விழாவில் ?

அ‌‌ஜீத்தின் அடுத்தப் படத்தை இயக்குவது கௌதம் மேனன் அல்ல என்பது உறுதி. வெங்கட்பிரபு அ‌‌ஜீத்தை இயக்குவார் என்பதும் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிட்டது. படத்தின் பெயர்?

மங்காத்தா என்ற பெயர் ப‌ரிசீலனையில் உள்ளது. உள்ளே வெளியே என்பது சப் டைட்டில். இந்தப் பெயரும் சப் டைட்டிலும் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

துரை தயாநிதியின் கிளவுட் நைன் தயா‌ரிக்கும் இந்தப் படத்தின் தொடக்க விழாவை பிரமாண்டமாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

தொடக்க விழாவுக்கு அ‌‌ஜீத்தின் லேட்டஸ்ட் வெல் விஷர் ர‌ஜினியை அழைக்க தீர்மானித்துள்ளனர். கூடவே தயா‌ரிப்பாள‌ரின் தந்தையும், மத்திய மந்தி‌ரியுமான அழகி‌ரியும் கலந்து கொள்வார் எனவும் கூறப்படுகிறது.
மேலும் அறிய

> என் வெற்றிக்குப் பின்னால் என் ரசிகர்கள் - விஜய்

ஆஸ்கர் பிலிம்ஸ் என்றால் பிரமாண்டம் என்பதை இன்னொருமுறை நிரூபித்தார் ரவிச்சந்திரன். இன்று நடந்த வேலாயுதம் பட தொடக்க விழாவில் எள்ளைப் போட்டிருந்தால் அது எண்ணெய்யாகி ஓடியிருக்கும். அந்தளவுக்கு கூட்டம்.

எல்லா நடிகர்களுக்கும் ஆஸ்கர் விருது வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனக்கு ஆஸ்கர் பிலிம்ஸில் நடிக்க வேண்டும் என்று ஆசை என சுவாரஸியத்தை கொட்டியது விஜய்யின் பேச்சு. எல்லோருடைய வெற்றிக்குப் பின்னால் பெண்கள் இருப்பார்கள். என்னுடைய வெற்றிக்குப் பின்னால் இருப்பது ரசிகர்கள் என்று சொன்ன போது அரங்கம் கைத்தட்டலால் அதிர்ந்து அடங்கியது.

விழாவில் படத்தின் நாயகிகள் ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி இருவரும் கலந்து கொண்டனர். இருவருக்கும் தலா நாலு வார்த்தைகள் பகிர்ந்து கொண்டார் விஜய். படத்தின் இயக்குனர் ஜெயம் ராஜா பற்றி குறிப்பிட்டவர், ஜெயம் ரவி போல நானும் அவருக்கு ஒரு தம்பி என்றார் (கட்சி ஆரம்பிச்சிடலாம் பாஸ்).

விழாவில் எடிட்டர் மோகன், எஸ்.ஏ.சந்திரசேகரன், விஜய் மனைவி சங்கீதா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் அறிய

Thursday, July 15, 2010

> சீமான், விஜய் கூட்டணி நிலைக்குமா ???

சினிமாவை விட அரசியலில் தீவிரமாக இருக்கிறார் சீமான். மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடாது என்பதைப் போலதான் இருக்கிறது அவரது நிலை. போராட்டம், கைது, ஜெயில் இத்தியாதி...

இந்த பரபரப்பு அரசியலுக்கு நடுவில் விஜய் நடிக்கும் பகலவன் படத்தை இயக்க அனைத்து முயற்சிகளும் எடுத்து வந்தார் சீமான். படத்தின் ஸ்கி‌ரிப்ட் வேலைகளும் முடிவுறும் நிலையில் இருந்தன. இந்நிலையில்தான் மூன்று பி‌ரிவுகளில் போலீஸ் வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்திருக்கிறது.

இதன் காரணமாக வேலாயுதம் படத்துக்குப் பிறகு சீமான் இயக்கத்தில் விஜய் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தனக்காக கதை எழுதி தயாராக வைத்திருக்கும் லிங்குசாமிக்கு வாய்ப்பு கொடுக்கலாமா என்று விஜய் யோசித்து வருவதாகக் கூறுகிறார்கள்.

சீமானின் அரசியல் பகலவனை எழவிடாமல் செய்யும் என்பதே இப்போதைய நிலை.
மேலும் அறிய

> ஒத்துழைப்பு மறுப்பு - விஜய் படத்துக்கு

விஜய் நடிக்கும் படங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என தமிழ்நாடு திரையரங்கு உ‌ரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

விஜய்யின் கடந்த ஐந்துப் படங்கள் தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக திரையரங்கு உ‌ரிமையாளர்கள் சங்கம் ஏற்கனவே குற்றம் சாற்றியிருந்தது. இதற்கு நஷ்டஈடாக 35 சதவீத பணத்தை விஜய் திருப்பித்தர வேண்டும் எனவும் அவர்கள் கோ‌ரியிருந்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

இந்நிலையில் நேற்று தமிழ்நாடு திரையரங்கு உ‌ரிமையாளர்கள் சங்கத்தின் அவசர‌க் கூட்டம் நடந்தது. கூட்ட முடிவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒன்று விஜய் 35 சதவீத நஷ்டஈடு தரும்வரை அவரது படங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை எ‌ன்பது.

அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா ஆகிய படங்கள் தங்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியதாக திரையரங்கு உ‌ரிமையாளர்கள் தெ‌ரிவித்தனர். இந்த திடீர் முடிவால் விஜய் நடிப்பில் வெளிவரயிருக்கும் காவல் காதல் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் அறிய

> நட்சத்திர பேட்டி - சூர்யா

இன்றைய தேதியில் கலெ‌க்சன் மாஸ்டர் நடிகர் சூர்யா. இவரது சிங்கம் பாக்ஸ் ஆஃபிஸில் கர்‌ஜித்துக் கொண்டேயிருக்கிறது. “நடிக்க‌த் தெ‌ரியாமல் பல நேரம் அழுதிருக்கேன். அப்படிப்பட்ட என்னை உங்களுடைய விமர்சனம்தான் பக்குவப்படுத்தியிருக்கிறது” என்று பத்தி‌ரிகையாளர்களை பாராட்டும் சூர்யாவின் பேச்சில் அவரது நடிப்பின் முதிர்ச்சி தெறிக்கிறது. பத்திகையாளர்களுடனான அவரது உரையாடலிலிருந்து...

சிங்கம் படத்தை தேர்வு செய்ய என்ன காரணம்?

ஹ‌ரி சார் கதை சொன்ன விதமும், கதாபாத்திர வடிவமைப்பும் எனக்குப் பிடித்திருந்தது. படிக்கிற காலத்தில் கிராமத்துக்கு தவறாமல் போவேன். இப்போதெல்லாம் போக முடியிறதில்லை. அந்த‌க் குற்றவுணர்வு எனக்கு இருந்துகிட்டேயிருக்கு. என் கிராமத்தை திரும்பிப் பார்க்கிற படமா சிங்கம் இருந்ததால்தான் அதில் நடித்தேன்.

படத்தின் பெயர் அளவுக்கு உங்க மீசையும் பிரபலமாகிவிட்டதே...?

நான் கமல் சாரோட ரசிகன். அவரது தேவர் மகன் படம் மேல எனக்கு ரொம்பவே ஈடுபாடு உண்டு. அந்த கதாபாத்திரத்தின் பாதிப்புதான் இந்த மீசை.

ஏ.ஆர்.முருகதாஸுடன் மீண்டும் இணைந்திருக்கிறீர்கள்...

க‌ஜினிக்குப் பிறகு முருகதாஸுடன் 7ஆம் அறிவு படத்தில் இணைந்திருக்கிறேன். தமிழில் அடுத்த பத்தாண்டுகளுக்கு பேசப்படும் படமாக 7ஆம் அறிவு இருக்கும். அந்தளவுக்கு வித்தியாசமான கதை. ரசிகர்களைப் போலவே நானும் இந்தப் படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

திடீரென்று இந்திப் படத்திலும் நடிக்கிறீர்களே?

பல வருடமாக இந்தியில் நடிக்கச் சொல்லி பலரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எல்லாமே நான் தமிழில் நடித்தது போன்ற கேரக்டர்கள். வித்தியாசமாக ஏதாவது கேரக்டர் கிடைத்தால் பண்ணலாம் என்றிருந்தேன். அப்படி வந்ததுதான் ரத்த ச‌ரித்திரம் படம். நான் எதிர்பார்த்த வித்தியாசமான கேரக்டர்.

இந்தியில் யார் டப்பிங் பேசியது?

நானேதான் இந்திக்கும் டப்பிங் பேசினேன். உணர்ச்சிகள்தான் முக்கியம். வசனத்துக்காக ரொம்ப சிரமப்பட வேண்டாம்னு வர்மா சார் ஊக்கப்படுத்தியதால் ஈஸியாக டப்பிங் பேச முடிந்தது.

படத்தின் கதை என்ன?

எந்த‌ச் சூழ்நிலையில் மனிதனின் கோபம் கொலை செய்யும் அளவுக்குப் போகிறது, அந்த கோபத்தால் அவர்களுக்கு கிடைப்பது என்ன என்பதை‌த்தான் இந்தப் படத்தில் வர்மா சார் சொல்லியிருக்கார். தமிழ், இந்தி, தெலுங்கு மூன்று மொழிகளில் படம் தயாராகியிருக்கு. இதில் தெலுங்கு, இந்தியில் படம் இரண்டு பார்ட்டாக வெளிவரும். தமிழில் இரண்டையும் சேர்த்து ஒரே படமாக வெளிவரும்.

ஆறு, சிங்கம் மாதி‌ரியான படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறீர்களா?

எல்லா தரப்பு ரசிகர்களும் என்னுடைய படங்களை‌ப் பார்க்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் படங்களை தேர்வு செய்கிறேன். க‌ஜினிக்குப் பிறகு ஆறு படத்தில் நடித்த போது பலரும் அதுபற்றி கேட்டார்கள். ஆறு மாதி‌ரியான படத்தில் நடிக்கலைன்னா நான் எல்லா தரப்பு ரசிகர்களையும் சென்று சேர்ந்திருக்க முடியாது. இப்போ சிங்கம் ஏ, பி, சி-ன்னு எல்லா சென்டர்களிலும் நல்லா போயிருட்டிருக்கு.

இனி ஆ‌க்சன் படங்கள்தான் நடிப்பீர்களா?

தேவர் மகன், அலெக்ஸ் பாண்டியன் மாதியான ஆ‌க்சன் கலந்த சென்டிமெண்ட் படங்கள்தான் எனக்குப் பிடிக்கும். ரசிகர்களுக்கு என்னுடைய ஆ‌க்சன் படங்கள் பிடிச்சிருக்கு. அதனால்தான் தொடர்ந்து ஆ‌க்சன் படங்களாக நடிக்க வேண்டியிருக்கு.
மேலும் அறிய

Wednesday, July 14, 2010

> அசினுக்கு ஆபத்து

படப்பிடிப்புக்காகதான் இலங்கை சென்றேன் என்று சொன்ன அசின் அங்கு ராஜபக்சேயின் மனைவியுடன் அரசு நிகழ்ச்சியிலும், சிங்கள கண் துடைப்பு நாடகங்களிலும் கலந்து கொண்டது பத்தி‌ரிகைகளில் புகைப்படத்துடன் வெளியானது தமிழ் இன உணர்வாளர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. முக்கியமாக திரைப்பட சங்கங்கள் இந்த இன விரோத செய்கையால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆனால் ஏற்கனவே அறிவித்தபடி அசின் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இது குறித்து நடிகர் சங்க செயலாளர் ராதாரவியிடம் கேட்டதற்கு, அசின் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிபட தெ‌ரிவித்தார். என்னவிதமான நடவடிக்கை என்பது குறித்து சங்க நிர்வாகிகள் கலந்தாலோசித்ததாகவும், இன்னும் ஓ‌ரிரு தினங்களில் அதுபற்றி முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் அவர் தெ‌ரிவித்தார்.

அசின் தற்போது விஜய் ஜோடியாக காவல் காதல் படத்தில் நடித்து வருகிறார். இதுவே அவரது கடைசி தமிழ்ப் படமாக இருக்க வேண்டும் என்பதே ஒட்டு மொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் அறிய

> புதிய ஜோடி - சிம்பு, அனுஷ்கா

பொதுவாக ‌ரீமேக்கில் அதிக ஆர்வமில்லாதவர் சிம்பு. அவரையே ஒரு தெலுங்குப் படம் ஆட்டிப் படைத்திருக்கிறது. அந்தப் படம்தான் இப்போது சிம்பு நடிப்பில் வானம் என்ற பெய‌ரில் தயாராகி வருகிறது.

தெலுங்கில் கி‌ரிஷ் இயக்கத்தில் வெளியான படம் வேதம். அல்லு அர்ஜுன் கேபிள் ராஜுவாக நடித்திருந்த இந்தப் படத்தில் அனுஷ்கா ஹீரோயினாக நடித்திருந்தார். இவர்கள் தவிர மனோஜும் படத்தில் உண்டு.

வெளியான முதல் ஐந்து தினங்களில் இப்படம் பத்து கோடிக்கு மேல் வசூலித்து ஆந்திராவை ஆச்ச‌ரியப்பட வைத்தது. இதன் தமிழ் ‌ரீமேக் உ‌ரிமையை லம்‌ப்பாக ஒரு தொகைக்கு ஆர்.பி.சௌத்‌ரி வாங்கியிருந்தார்.

இந்தப் படத்தைதான் வானம் என்ற பெய‌ரில் கி‌ரிஷ் தமிழில் இயக்குகிறார். அல்லு அர்ஜுன் வேடத்தில் சிம்பு நடிக்க அனுஷ்காவே இதிலும் ஹீரோயின். படத்தயா‌ரிப்பு சௌத்‌ரியிடமிருந்து விண்ணைத்தாண்டி வருவாயா கணேஷுக்கு கை மாறியிருக்கிறது.

வானத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். நீரவ் ஷா கேமரா, எடிட்டிங் ஆண்டனி. முதலில் குத்துப் பாடலொன்றை படமாக்கியுள்ளனர்.
மேலும் அறிய

Tuesday, July 13, 2010

> நீது சந்திரா - அ‌‌‌ஜீத் ஜோடி?

அ‌‌‌ஜீத்தின் புதிய படத்தை இயக்குவது வெங்கட்பிரபு என்பது ஏறக்குறைய முடிவாகிவிட்டது. வெங்கட்டின் மற்ற படங்களைப் போல இதிலும் பல ஹீரோக்கள் இணைந்து நடிப்பார்கள் என்கின்றன தகவல்கள்.

முக்கியமாக நாகார்ஜுன் அ‌‌‌ஜீத்துடன் நடிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன. மேலும் இளம் ஹீரோக்கள் சிலரும் அ‌‌‌ஜீத்துடன் நடிக்கக் கூடும்.

படத்துக்கு மங்காத்தா என்ற பெயர் ப‌ரிசீலனையில் உள்ளது. சப் டைட்டில் உள்ளே வெளியே என்கிறார்கள். அ‌‌‌ஜீத் ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என கூறப்பட்டது. இப்போது நீது சந்திராவிடம் கால்ஷீட் கேட்க உள்ளனர்.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளவுட் நைனிடமிருந்து எதிர்பார்க்கலாம். துரை தயாநிதியின் இந்த நிறுவனம்தான் படத்தை தயா‌ரிக்கிறது.
மேலும் அறிய

> பல்டி அடித்த நயன்தாரா

நடிகைகள் பல்டி அடிப்பது ஒன்றும் புதிதல்ல. நயன்தாரா மட்டும் விதிவிலக்கா என்ன?

எத்தனை கோடி கொடுத்தாலும் விளம்பரங்களில் மட்டும் நடிக்க மாட்டேன் என்று கூறி வந்தார் நயன்தாரா. இதற்கு அவர் சொன்ன காரணம், நான் பயன்படுத்தாத பொருளை எப்படி மற்றவர்கள் வாங்கும்படி சொல்வது?

கொள்கைகளை அரசியல்வாதிகளே ஆற்றில் எறியும் போது நயன்தாரா எம்மாத்திரம்? தனது விளம்பர‌க் கொள்கை முடிவிலிருந்து பின் வாங்க தீர்மானித்திருக்கிறாராம். பிரபல நிறுவனம் ஒன்று கோடியில் சம்பளம் பேசியதால்தான் நயனிடம் இந்த கொள்கை மாற்றம் என்கிறார்கள்.

காசுக்கு முன் கொள்கையாவது ஒன்றாவது.
மேலும் அறிய

Sunday, July 11, 2010

> சமீராவின் முக்கிய சவால் வேடம்

தென்னிந்திய இயக்குனர்களின் ப்‌ரியத்துக்கு‌ரிய நடிகையாகிவிட்டார் சமீரா ரெட்டி. முக்கியமாக நம்மூர் கௌதம் வாசுதேவ மேனன்.

வாரணம் ஆயிரம் படத்தைத் தொடர்ந்து கௌதமின் புதிய த்‌ரில்லர் திரைப்படத்திலும் இவர்தான் ஹீரோயின். இந்தப் படத்தில் பாடல்கள், பின்னணி இசை எதுவும் இல்லை என்கின்றன தகவல்கள்.

காதல் எப்படி இருக்கும் என்று தனது படங்களில் சொன்ன கௌதம் இந்தப் படத்தில் காதல் எப்படி இருக்கக் கூடாது என்பதை சொல்லியிருக்கிறாராம்.

தமிழ், மலையாளத்தில் நடித்தபடி இந்தியில் ரெட் அலர்ட் படத்திலும் நடித்து முடித்துள்ளார் சமீரா. இந்தப் படத்தில் இவருக்கு நக்சலைட் வேடம். இந்தியாவின் முதன்மையான பிரச்சனையை பற்றிய படம் என்பதால் பெயரும் புகழும் தாராளமாக கிடைக்கும் என நம்புகிறார் சமீரா.
மேலும் அறிய

> தேறியிருக்கிறது பையா.

கார்த்தி தமன்னா நடிப்பில் வெளிவந்த பையா இன்று நூறு நாட்களை பூர்த்தி செய்கிறது.

அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்துக் கொடுக்கும் படங்கள் என்று ஒரு வருடத்தில் அரை டஜன் படங்கள் மட்டுமே தேறும். இந்த வருடம் அந்த அரை டஜனில் ஒன்றாக தேறியிருக்கிறது பையா.

லிங்குசாமி இயக்கிய இந்தப் படம் தமிழ்நாடு, கேரளா மட்டுமின்றி யுகே உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வசூலை வா‌ரிக் குவித்தது. சென்னையில் மட்டும் இதன் வசூல் ஐந்து கோடியை தொட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த வருடம் வெளியான படங்களில் சிங்கத்துக்கு அடுத்து அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையும் பையாவுக்கு கிடைத்துள்ளது. மேலும், விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்குப் பிறகு நூறு நாட்கள் ஓடிய படமும் பையாதான்.
மேலும் அறிய

Saturday, July 10, 2010

> ரேஸா, நடிப்பா? அ‌‌ஜீத் முடிவெடுப்பது நல்லது,

அ‌‌ஜீத், கௌதம் மேனன் இணைவதாக இருந்த படம் நூறு சதவீதம் கைவிடப்பட்டுவிட்டது. கௌதமின் இடத்தில் வெங்கட்பிரபு என்று சொன்னதும்கூட பழங்கதையாகிவிடும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த குழப்பத்துக்கு காரணம் அ‌‌ஜீத்தின் ரேஸ் மோகம்.

கௌதமுக்குப் பதில் அ‌‌ஜீத் படத்தை வெங்கட்பிரபு இயக்குவார் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்க, இன்னும் மூன்று மாதங்களில் தொடங்கவுள்ள ரேஸில் கலந்து கொள்வதற்கான பயிற்சியை எடுக்க இருக்கிறாராம் அ‌‌ஜீத்.

இதன் காரணமாக அவர் வெங்கட்பிரபுவின் படத்தில் நடிப்பதும் கடினம் என்கின்றன செய்திகள். ரேஸா, நடிப்பா? அ‌‌ஜீத் உடனே முடிவெடுப்பது நல்லது, அவருக்கும் மற்றவர்களுக்கும்.
மேலும் அறிய

> எந்திரன் ஆடியோ ஜூலை 31 முதல்

நாம் முன்பே குறிப்பிட்டிருந்தபடி எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூ‌ரில் வெளியிடப்படுகிறது. ஹாலிவுட் நிறுவனமான ஹெச்பிஓ இதற்கான வேலைகளை கவனிக்கிறது.

எந்திரன் படத்தை ஏறக்குறைய 190 கோடிக்கு தயா‌ரித்திருப்பதாக சன் பிக்சர்ஸ் வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன. ரஹ்மான் இசையில், ஷங்கர் உருவாக்கியிருக்கும் இந்தப் படம் இந்திய சினிமாவில் புதிய அத்தியாயத்தை எழுதும் என்பது பல‌ரின் கணக்கு. ர‌ஜினி நடித்திருப்பதால் இது சாத்தியமே என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள்.

வரும் 23ஆம் தேதி படத்தின் பாடல்கள் கோலாலம்பூ‌ரில் வெளியிடப்படுகிறது. அமிதாப்பச்சன் தனது மகன், மருமகளுடன் இந்த விழாவில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அறிய

Friday, July 9, 2010

> கார்த்தி, ஜெயம் ரவி மோதல்

மோதல் என்றால் நேரடி மோதல். ஆம், ஜெயம் ரவி, கார்த்தி நடித்த படங்கள் ஒரே தினத்தில் திரைக்கு வருகின்றன.

அண்ணன் ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் தில்லாலங்கடி. தமன்னா ஹீரோயினாக நடித்திருக்கும் இந்தப் படம் தெலுங்கில் வெற்றி பெற்ற கிக் படத்தின் ‌ரீமேக்.

ஜெயம் ராஜாவின் ‌ரீமேக் இதுவரை சோடை போனதில்லை என்பதால் இந்தப் படமும் நிச்சயம் வெற்றி என்று அனைத்து தரப்பினரும் நம்புகின்றனர். போதாததற்கு வடிவேலு, சந்தானம் என்று பாக்ஸ் ஆபிஸ் பார்ட்டிகளும் படத்தில் இருக்கிறார்கள். கூடவே சன் பிக்சர்ஸின் அபி‌ரீதமான விளம்பரம்.

இந்தப் படம் வரும் ஜுலை 23 திரைக்கு வருகிறது. இதே தினத்தில் திரைக்கு வரும் இன்னொரு படம் நான் மகான் அல்ல. வெண்ணிலா கபடிக்குழு சுசீந்திரனின் இரண்டாவது படைப்பான நான் மகான் அல்ல படத்தில் கார்த்தி, காஜல் அகர்வால் நடித்துள்ளனர். படத்துக்கு இப்போதே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

போட்டி பலமாக இருப்பதால் கடைசி நேரத்தில் ஏதேனும் ஒரு படம் பின்வாங்கினாலும் ஆச்ச‌ரியமில்லை.
மேலும் அறிய

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.