Thursday, September 30, 2010

> ஜெயம் ரவி - ஆஸ்கர் பிலிம்ஸில்?

அமீ‌ரின் ஆதி பகவான் படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. பிரபுதேவா இயக்கத்தில் இவர் நடித்த எங்கேயும் காதல் விரைவில் வெளிவர உள்ளது.

இந்தப் படங்களைத் தொடர்ந்து அவர் ஆஸ்கர் பிலிம்ஸ் தயா‌ரிக்கும் படத்தில் நடிப்பார் என‌த் தெ‌ரிகிறது.

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவியாளராக இருந்த என்.கல்யாண கிருஷ்ணன் ஆஸ்கர் பிலிம்ஸ் - ஜெயம் ரவி இணையும் படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது. படத்துக்கு பூலோகம் என்று பெயர் வைத்துள்ளனர்.

இது பாக்ஸிங் சம்பந்தப்பட்ட கதையாம்.
மேலும் அறிய

> சந்தானம் - உதயநிதி படத்தில்.

ராஜேஷ் எம். இயக்கிய சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் இரண்டுமே ஹிட். இரண்டிலுமே கதாநாயகர்கள் வேறு என்றாலும் காமெடியன் ஒரேயொருவர்தான், சந்தானம்.

கதையில்லாமல் படமெடுத்தாலும் சந்தானம் இல்லாமல் ராஜேஷ் படமெடுக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. இரண்டு படங்களை வைத்து இதைச் சொல்லவில்லை.

ராஜேஷ் அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதுவும் காமெடி கதைதான். இதிலும் ஹீரோவுடன் சேர்ந்து உடுக்கடிக்கப் போகிறவர் வேறு யாருமில்லை, சந்தானமேதான்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்ப‌ரில் தொடங்குகிறது.

ஹீரோயின் யார், த்‌ரிஷாதானே?
மேலும் அறிய

> இணைய தளங்ளில் ஏமாற்றப்படும் இந்தியகள்.

உலகம் முழுவதுமே இணைய தளக் குற்றங்கள் எனப்படும் சைபர் குற்றங்கள் சகஜமாக நடக்கின்றதென்றாலும், இத்தகைய சைபர் கிரைம் குற்றவாளிகள் அதிகம் குறிவைத்து மொட்டையடிப்பதென்னவோ இந்தியர்களைத்தான் என்கிறது ஆய்வறிக்கை ஒன்று!

இணைய தளங்களில் வலம் வரும் இந்தியர்களில் 76 விழுக்காட்டினர் கம்ப்யூட்டர் வைரஸ், ஆன் லைன் கிரெடிட் கார்டு மோசடி, வங்கி ரகசிய எண்ணை திருடி பணத்தை சுருட்டுதல் போன்ற சைபர் கிரைம் எனப்படும் இணைய தளக் குற்றங்களுக்கு ஆட்படுபவர்களாகவே உள்ளதாம்!

சர்வதேச அளவில் இணைய தளங்களை பயன்படுத்துவோர்களில் 65 விழுக்காட்டினர் மேற்கூறிய ஏதாவது ஒரு மோசடி அல்லது பாதிப்பை எதிர்கொண்டவர்களாகவே உள்ளதாகவும், ஆனால் இந்த மோசடி இந்தியர்களை இன்னும் அதிகமாக பாதிப்பதாகவும் கூறுகிறது "நார்ட்டான் சைபர் கிரைம் ரிப்போர்ட்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கை.

அதிலும் சமீப காலமாக இந்தியா முழுவதுமே பரவலாக இணைய தளங்களை பயன்படுத்துவோர்களது இமெயில் முகவரிக்கு, " உங்களுக்கு லண்டன் லாட்டரியில் இத்தனை கோடி பணம் விழுந்துள்ளது; மேற்கொண்டு விவரம் பெற இந்த முகவரியில் தொடர்புகொள்ளுங்கள்!" என்று கூறி ஒரு டுபாக்கூர் முகவரியை கொடுத்திருப்பார்கள் அந்த மெயிலை அனுப்பியவர்கள்!

"ஆஹா லட்சுமி தேவி கண்ண தொறந்துட்டாடா...!" என்று பதில் மெயில் அனுப்பினால், "சிக்கிட்டாண்டா ஏமாளி!" என்ற ரீதியில் வரும் பதிலில், உங்களுக்கான லாட்டரி பரிசை அனுப்பி வைப்பதற்கு சேவை கட்டணம் தேவைப்படுவதால், அதனை அனுப்பி வையுங்கள் என்று ஆளுக்கு தகுந்தபடி ஐந்து லட்சமோ அல்லது பத்து லட்சமோ குறிப்பிட்டு, ஒரு வங்கி கணக்கு எண்ணை அனுப்பி வைப்பார்கள்.சரி பரிசுதான் கோடிக்கணக்கில் வரப்போகிறதே... என்ற எண்ணத்தில் கையில் இருப்பது, வங்கியில் இருப்பது, போதாதற்கு கடன் என்று அடித்து பிடித்து அந்த தொகையை அனுப்பி வைப்பார்கள் சில அப்பாவி கோவிந்துகள்.

அததோடு சரி! பரிசு தொகை பட்டை நாமம்தான்; மேற்கொண்டு எந்த பதிலும் வராது! அதற்கு பிறகு பணத்தை அனுப்பியவர்கள் சுதாரித்து காவல்துறையில் புகார் அளித்து, பணம் போட்ட வங்கி கணக்கை ட்ரேஸ் செய்தால், அந்த பணம் வழித்து துடைக்கப்பட்டிருக்கும்;கூடவே அக்கவுண்டும் க்ளோஸ் ஆகி, வங்கியில் கொடுத்த முகவரியும் டுபாக்கூர் என்று தெரியும்.

அப்போதுதான் ஆஹா மோசம் போனமே என்று வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறுவார்கள்.

இது ஒரு உதாரணம்தான்! எங்கள் வங்கியில் கணக்கு வைத்திருந்தவர் மரணமடைந்துவிட்டார். அவருக்கு வாரிசு யாரும் இல்லை.உங்களது பெயரும் அவரது பெயரும் ஒரே மாதிரியாக இருப்பதால் அதை உங்களது பெயருக்கு அனுப்புகிறோம். இருவரும் பாதிப்பாதி பங்கு போட்டுக்கொள்ளலாம் என்று கதை விட்டு மேற்கூறிய மாதிரியே சுருட்டி விடுவார்கள்.

இதுபோன்ற மோசடிகள் இன்னும் வகை வகையாய் "ஒக்காந்து ரூம் போட்டு யோசிப்பாங்களோ?!" என்று சொல்லும் அளவுக்கு நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

இதுதவிர எங்கிருந்தோ சுட்ட பெண்களின் படத்தை மார்ஃபிங் செய்து, அவர்களை ஆபாசமாக சித்தரித்து இணைய தளங்களில் உலாவ விடுவது, படு தீவிரமாக நாம் ஒரு தகவலை பெறுவதற்காக இணைய தளங்களில் மேய்ந்துகொண்டிருக்கும்போது, நாம் க்ளிக் செய்யாமலேயே, கணினி திரையின் ஓரம் வந்து அழைப்பு விடுக்கும் பெண்கள் படம், அதில் சபலப்பட்டு தொடர்புகொள்பவர்கள் பணம் உள்ளிடவற்றை இழந்து, வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு சமயங்களில் சக்கையாய் அடி உதைபட்டு திரும்புவதும் உண்டு.

இப்படி உலக அளவில் இணைய தளங்கள் மூலமாக அதிகம் மோசடிக்குள்ளாவது இந்தியர்கள்தான் என்று கூறும் இந்த ஆய்வை நடத்திய "செக்யூரிட்டி சொலியுசன்ஸ் புரவைடர் சிமேன்டெக்" என்ற நிறுவனத்தின் விற்பனை மேலாளர் கவுரவ் கன்வால், இணைய தளங்கள் மூலம் இந்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் 60 விழுக்காடு கம்ப்யூட்டர் வைரஸ் மற்றும் மால்வேர் (malware) - தீமையை ஏற்படுத்தும் மென்பொருள் - ஆகியவைதான் என்கிறார்!

" இன்றைய சைபர் கிரிமினல்கள் குறிவைப்பது ஆன் லைனில் புதிதாக வலம் வரும் மற்றும் அப்பாவி நபர்களைத்தான்.இப்படி சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்படுபவர்கள், யாரை சந்தித்து இது குறித்து முறையிடுவது என்பதை அறியாதவர்களாகவும், உதவ யாரும் இல்லை என்று நினைப்பவர்களாகவும் உள்ளனர் என்பதுதான் இதில் சோகமான விடயம்" என்று வருத்தம் தொனிக்க கூறுகிறார் கவுரவ்.

இப்படி யாரிடம் புகார் அளிப்பது என்று தெரியாமல் பாதிக்கப்பட்டவர்கள் விழிப்பது ஒருபுற இருந்தாலும், 58 விழுக்காட்டினர் அது குறித்து கோபமடைவதாகவும், 51 விழுக்காட்டினர் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்வதாகவும், 46 விழுக்காட்டினர் மனமுடைந்து அல்லது மன அங்கலாய்ப்புக்கு ஆளாகுவதாகவும் அந்த ஆய்வறிக்கை!

அதே சமயம் இதில் பெரும்பான்மையானவர்கள் - 88 விழுக்காட்டினர் - நடந்துபோன மோசடிக்கு தாங்கள்தான் காரணம் என்று தங்களைத் தாங்களே நொந்துக் கொள்கிறார்களாம்!

மேலும் இத்தகைய சைபர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை; அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவதில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்களில் ஏறக்குறைய 57 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்துள்ளனர். இதுபோன்ற காரணங்களாலேயே இத்தகைய கிரிமினல் பேர் வழிகள் சட்டத்தின் பிடியில் சிக்காமல் தெனாவட்டாக வளைய வருகிறார்கள்.

"இது எதுமாதிரி இருக்கிறதென்றால் கார்களை பற்றி உங்களுக்கு ஏதும் அதிகம் தெரியாத நிலையில், மெக்கானிக் என்ன சொல்கிறாரோ அதனைக் கேட்டுக்கொண்டுதான் தீர வேண்டியதிருக்கிறது. அது குறித்து அவரிடம் அதிகமாக ஏதும் வாதம் செய்ய முடியாது. அத்தகையதொரு நிலையை நீங்கள் மோசமாக கருதினாலும்; அந்த சூழ்நிலையை ஏற்றுக்கொண்டுதான் தீருகிறீர்கள்.அதுபோன்ற நிலையில்தான் சைபர் குற்றங்களுக்கு ஆளானவர்களின் நிலையும்" என்கிறார் கவுரவ்.

மேலும் இதுபோன்ற சைபர் குற்றங்களை தீர்ப்பது இந்தியாவில் மிகக்கடினமான ஒன்றாக உள்ளது. இந்தியாவில் ஒரு சைபர் குற்றத்தை தீர்க்க சராசரியாக 44 நாட்கள் ஆகின்றன.அதற்கான செலவுத் தொலையும் சராசரியாக 5,262 ஆக உள்ளது.

அதே சமயம் சர்வதேச அளவில் இது முறையே 28 நாட்களாகவும், 15,000 ரூபாயாகவும் உள்ளதாக கூறுகிறது அந்த ஆய்வறிக்கை.

" இதுபோன்ற இணைய தள மோசடிக்கு ஆளாகுபவர்கள் அடுத்து என்ன செய்வது என்றே தெரியாமல் திகைத்துப்போய் நின்றுவிடுகின்றனர்.வங்கிகள் மற்றும் அரசாங்கமும் சைபர் குற்றங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ள போதிலும், இன்னும் அதிகமாக மேற்கொள்வது அவசியமாக உள்ளது.

" மிக லேட்டஸ்ட்டான பாதுகாப்பு மென்பொருள்களை நிறுவிக்கொள்வது, நிதி பரிமாற்றம் தொடர்பான விவரங்களையோ அல்லது தங்களைப்பற்றிய விவரங்களையோ ஆன் லைனில் யாருடனும் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது, சந்தேகத்திற்குரிய மெயில்கள் மற்றும் 'லிங்' - link - குகளை திறக்காமல் இருப்பது போன்ற ஒரு சில எளிதான வழிகளில் இணைய தளங்களில் உலா வருவோர் தங்களையும், தங்களது கணினிகளையும் பாதுகாத்துக்கொள்ளலாம்" என்று கூறுகிறார் கவுரவ்!

மொத்தத்தில் இணைய தளங்களில் உலா வருபவர்களுக்கு தேவை எச்சரிக்கை உணர்வும், சபலங்களுக்கு ஆட்படா மன உறுதியும்தான்!
மேலும் அறிய

Wednesday, September 29, 2010

> 31 kg எடை குறைந்த SPB சரண்.

விளையாட்டாக நடிக்க ஆரம்பித்து இன்று அதுவே அவரது முதன்மையான தொழிலாகியிருக்கிறது. வ - குவாட்டர் கட்டிங் வெளியானால் சரணின் மார்க்கெட் வேல்யூ இன்னும் கூடும் என்கிறார்கள்.

வ படத்திற்கு குழந்தைத்தனமான பப்ளி முகம் தேவைப்பட்டிருக்கிறது. “உடனே எங்களுக்கு நினைவு வந்தவர் எஸ்.பி.‌பி.சரண்தான். அந்த கேரக்டருக்கு அவரைவிட்டால் வேறு ஆளில்லை” என்கிறார்கள் வ படத்திய் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்‌ரி.

வ படத்தில் நடித்த போது 100 கிலோ இருந்த எஸ்.பி.‌பி.சரண் வெறும் ஜூஸ் மட்டும் குடித்து தனது உடல் எடையை 69 கிலோவாக குறைத்திருக்கிறார். இந்த எடை குறைப்பினால் வந்த தைரியமா தெ‌ரியவில்லை. தயா‌ரிப்பாளரும், இயக்குனரும் ‌ரிஸ்க் எடுத்தால் ஹீரோவாக நடிக்கவும் தயார் என அறைகூவல் விடுத்துள்ளார்.

சவாலை ஏற்க சரண் ரெடி, தயா‌ரிப்பாளர்களே நீங்க ரெடியா?
மேலும் அறிய

> இரட்டை வேடம் கார்த்திக்கு.

இன்றைய தேதியில் சூர்யாவும், கார்த்தியும்தான் தமிழக பாக்ஸ் ஆஃபிஸை ஆக்கிரமித்திருக்கிறார்கள். இவர்களின் படங்களை ரசிகர்களைவிட விநியோகஸ்தர்களும், திரையரங்கு உ‌ரிமையாளர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

கார்த்தியின் புதிய படம் சிறுத்தையில் அவருக்கு இரண்டு வேடங்கள். ஒன்று போலீஸ் அதிகா‌ரி என்கின்றன தகவல்கள். இன்னொன்று இதற்கு முற்றிலும் மாறுபட்ட வேடம்.

கார்த்தி இரண்டு வேடங்களில் நடிப்பது இதுவே முதல் முறை. சூர்யாவுக்குக்கூட இப்படியொரு வாய்ப்பு அமையவில்லை.

சிறுத்தையை ஒளிப்பதிவாளர் சிவா இயக்குகிறார்.
மேலும் அறிய

Tuesday, September 28, 2010

> இழந்தது வாய்ப்பை அங்காடித்தெரு.

ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் வெளியாகும் ஏதேனும் ஒரு திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்பப்படும். இத்திரைப்படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற பி‌ரிவில் போட்டியிடும்.

இந்த ஒரு விருது தவிர சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர் உள்ளிட்ட எந்த‌ப் பி‌ரிவுக்கும் இப்படம் ப‌ரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

2010ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு பல்வேறு திரைப்படங்கள் தேர்வு கமிட்டியால் ஆராயப்பட்டன. இறுதியில் இந்தியில் வெளியான ‌பீப்லி லைவ் படத்தை ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

இந்தத் தேர்வுப் போட்டியில் பீப்லி லைவ் திரைப்படத்துக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது வசந்தபாலனின் அங்காடித்தெரு. பீப்லி லைவ் இந்திய அளவில் விவசாயிகள் தற்கொலையை எடுத்துச் சொல்லும் படம் என்பதால் நூலிழையில் அங்காடித்தெருவை முந்திக் கொண்டது.
மேலும் அறிய

> கரண் - நட்சத்திர பேட்டி.

சோலோ ஹீரேவாக நடித்து வந்த கரண் முதல் முறையாக சத்யராஜுடன் இணைந்து நடித்த படம் இரண்டு முகம். படம் Linkஅவ்வளவாக வரவேற்பை பெறவில்லையென்றாலும் கரணின் கேரக்டர் மட்டும் பலராலும் ரசிக்கப்பட்டது. முக்கியமாக அவர் தனது வேடத்தை அண்டர்ப்ளே செய்திருந்த விதம். எப்போதும் கேஷுவலாக இருக்கும் கரண் தனது படங்கள் குறித்து பகிர்ந்து கொண்டவை உங்களுக்காக.

இப்போது என்னென்ன படங்களில் நடிக்கிறீர்கள்?

கந்தா, சூரன், தம்பி வெட்டோத்தி சுந்தரம்னு மூணு படங்களில் நடிச்சிட்டிருக்கேன். இந்த மூணு படங்களோட கதைக்களமும், என்னோட கேரக்டரும் வித்தியாசமாக ஒவ்வொண்ணுக்கும் சம்பந்தமில்லாம இருக்கும்.

இந்தப் படங்களின் ஒன் லைன் சொல்ல முடியுமா?

கந்தா ஆசி‌ரியர்-மாணவர் உறவைச் சொல்கிற படம். வெளிநாடு போய் ஊர் திரும்பும் ஒரு இளைஞன் தனக்கு படிப்புச் சொல்லித் தந்த ஆசி‌ரியரை தேடி அலைகிறான். அப்போது அவனது ஊர் ரௌடிகளால் சின்னாபின்னமாகி கிடப்பதைப் பார்க்கிறான். அதன் பிறகு அவன் எடுக்கும் சில முடிவுகளும், செயல்களும்தான் கதை.

சூரன் படம் ரௌடிகளைப் பற்றியது. பொதுவாக ரௌடி என்றால் அவனது ரௌடியிஸத்தை காண்பிப்பார்கள். இதில் வித்தியாசமாக அவனது இன்னொரு முகத்தை நீங்கள் பார்க்கலாம்.

தம்பி வெட்டோத்தி சுந்தரம் கும‌ரி மாவட்டத்தின் தமிழக-கேரள எல்லைப் பகுதியில் வாழ்ந்த சுந்தரம் என்ற மனிதனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம்.

ஒவ்வொரு படமும் வெ‌வ்வேறு பகுதிகளைச் சார்ந்தது. அதற்கேற்ப அந்தந்த வட்டார வழக்குகளில் எப்படி உங்களால் பேச முடிகிறது?

நான் நடிக்கிற படம் எந்த ஊரை பின்னபுலமாகக் கொண்டிருக்கிறதோ, அந்த ஊர் வட்டார வழக்கைதான் பேசுவேன். கொ‌க்கி படத்தை பார்த்தீங்கன்னா கிராமத்திலிருந்து ப‌‌ட்டணம் வரும் அப்பாவி கேரக்டர்ல நடிச்சிருப்பேன். அதுக்குத் தகுந்த மாதி‌ரி கிராமத்து பாஷையில் பேசியிருப்பேன். கருப்பசாமி குத்தகைதாரர் படத்துல மதுரைக்காரன். அதனால் மதுரை பாஷை பேசியிருப்பேன்.

இது எப்படி சாத்தியமாகிறது?

நாம போகிற இடங்களில் சந்திக்கிற மனிதர்களை உன்னிப்பா கவனிச்சு அப்சர்வ் பண்றதுதான் இதற்கு காரணம். தம்பி வெட்டோத்தி சுந்தரத்தில் நாஞ்சில் நாட்டு பாஷை பேசியிருக்கேன். கந்தாவில் தஞ்சாவூர் பாஷை.

கேரக்டருக்கு தகுந்தபடி மாறுவது பற்றி உங்கள் கருத்து என்ன?

நான் எந்த கேரக்ட‌ரில் நடிக்கிறேனோ அதுகேற்றபடிதான் என்னுடைய தோற்றமும் இருக்கணும். இப்போதுகூட ஏழரை கிலோ எடை குறைச்சிருக்கேன். கேரக்டருக்கு தேவைப்பட்டா எடையை கூட்டவும், குறைக்கவும் என்னால் முடியும்.

சத்யராஜுடன் இணைந்து நடித்த அனுபவம்?

அவரோடு நடித்தது மறக்க முடியாத அனுபவம். அவர் பெ‌ரிய நடிகர் மட்டுமில்லை, யதார்த்தமான இயல்பான மனிதர். எனக்கு பல விஷயங்களை அவர் சொல்லித் தந்தார். மூத்த நடிகரான அவர் என்னை நண்பனாக நினைத்து பழகியது எப்போதும் மறக்க முடியாது.

சமீபத்தில் உங்கள் பிறந்த நாளை கிராமத்து மக்களோடு இணைந்து கொண்டாடினீர்களே?

சென்னை பக்கத்திலுள்ள எருமைவெட்டி பாளையத்தில் என்னுடைய பிறந்த நாளை அந்த‌க் கிராமத்து மக்களுடன் கொண்டாடினேன். அவர்களுக்கு என்னாலான உதவிகள் செய்து, மரக்கன்றுகள் நட்டு... உண்மையிலேயே மறக்க முடியாத அனுபவம். படப்பிடிப்புக்கு வேற ஊர் செல்லும் போது அங்குள்ள மக்களுடன் பேசும் போதுதான் அவங்க நம்ம மேல வச்சிருக்கிற ம‌ரியாதையும் அன்பும் தெ‌ரிய வரும். அந்த நல்ல அனுபவம்தான் நான் மக்களோடு பிறந்த நாள் கொண்டாட‌க் காரணம்.
மேலும் அறிய

Monday, September 27, 2010

> பயிற்சியாளராக விருப்பம் - கங்குலி.

இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக விரும்புவதாக, முன்னாள் கேப்டன் கங்குலி விருப்பம் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர்,

கடந்த 15 ஆண்டுகளாக சர்வதேவ கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்ட நான், ஏராளமான அனுபவத்தை சேர்த்து வைத்துள்ளேன். கொல்கத்தாவில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை துவக்கி, இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளேன்.

இதற்கான ஆரம்பகால பணிகளை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட விரும்பமாக உள்ளது. டோனியில் தலைமையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

டெல்லி வருவதற்கு முன்னரே மைதானத்தில் மேற்கூரை இடிந்து விழுவது மற்றும் காமன்வெல்த் கிராமத்தில் எங்கும் சுகாதாரக்கேடு நிலவுவது போன்ற காட்சிகளை பார்த்தேன். நான் ஒன்றை மட்டும் கூறிக் கொள்கிறேன். இந்தியா எவ்வளவு பெரிய பேரிழப்பில் இருந்தும் மீண்டுவரக்கூடியது திறன் உடையது. அதனால் காமன்வெல்த் போட்டிகள் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை என்றார்.
மேலும் அறிய

Sunday, September 26, 2010

> A.R ரஹ்மான் - கௌதம் கம்பெனியில்.

சமீபத்தில் போட்டோன் கதாஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை கௌதம் வாசுதேவ மேனன் தொடங்கினார். இந்த தயாரிப்பு நிறுவனம் வெப்பம் படத்தையும், சுசீந்திரனின் அழகர்சாமியின் குதிரையையும் தயாரித்து வருகிறது.

இந்த கம்பெனியை லண்டனில் பதிவு செய்திருக்கிறார் கௌதம். இதன் பெரும்பகுதி ஷேர்களை கௌதமும் அவரைச் சார்ந்தவர்களும் வைத்துள்ளனர். கௌதம் இந்த கம்பெனியின் கிரியேடிவ் ஆபிசராக உள்ளார்.

போட்டோன் கதாஸில் ரஹ்மானும் தற்போது ஒரு பார்ட்னராக சேர்ந்துள்ளார். இந்தத் தகவலை கௌதம் அலுவலக வட்டாரம் தெரிவித்துள்ளது. முறையான அறிவிப்புக்கு காத்திருப்போம்.
மேலும் அறிய

> ஷங்க‌ரின் இறுக்கமான மௌனம்.

ஷங்க‌‌ரின் அடுத்தப் படம் 3இடியட்ஸ் ‌ரிமேக் என்பது கடைகோடி ரசிகனுக்கும் தெ‌ரிந்துவிட்டது. படத்தில் அமீர்கான் நடித்த வேடத்தில் விஜய் நடிப்பதும் ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

படத்தை தயா‌ரிக்கும் ஜெமினி பிலிம் சர்க்யூட், ஷங்கர்தான் படத்தை இயக்குகிறார் என்பதை உறுதிபட தெ‌ரிவித்துள்ளது. ஆனாலும் பூசா‌ரி கையிலா இருக்கிறது, வரம் தரும் முடிவு?

3இடியட்ஸ் ‌ரிமேக் பற்றி இதுவரை வாயே திறக்கவில்லை ஷங்கர். வம்படியாக படம் பற்றி கேட்பவர்களிடமும், இப்போதைக்கு எந்திரன் ‌ரிலீஸில் பிஸியாக இருக்கேன், படம் வெளியாகி ரசிகர்களின் கருத்தை அறிந்து கொண்ட பிறகுதான் வேறு எதைப் பற்றியும் பேசுவேன் என்று திட்டவட்டமாக கூறி வருகிறார். 3இடியட்ஸ் என்ற பெயரை மறந்தும் அவர் இதுவரை உச்சரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த இறுக்கமான மௌனத்தை பார்க்கும் சிலர், ஷங்க‌ரிடம் என்னமோ திட்டம் இருக்கு என்று முணுமுணுப்பதையும் கேட்க முடிகிறது.
மேலும் அறிய

> மிஸ்டர் & மிசஸ் பாக்யரா‌ஜ் விளம்பரத்தில்.

ஏறக்குறைய 26 வருடங்களுக்குப் பின் கேமராவுக்காக மேக்கப் போட்டிருக்கிறார் பூர்ணிமா பாக்யரா‌ஜ். மேக்கப்பை தாண்டி பூர்ணிமாவின் முகத்தில் புன்னகை பளீ‌ரிடுகிறது. காரணம், கூடவே நடிப்பது அவரது கணவர் பாக்யரா‌ஜ்.

இந்தப் படப்பிடிப்பு சினிமாவுக்காக அல்ல, விளம்பரத்துக்காக.

விளம்பரத்தில் நடிக்கச் சொல்லி பாக்யரா‌ஜ் பலரும் அணுகியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் நோ சொன்னவர் மந்த்ரா கடலை எண்ணெய் விளம்பரத்தில் நடிக்க உடனே ஓகே சொல்லியிருக்கிறார். இந்த விளம்பரத்தை எடுப்பது பாக்யரா‌ஜின் நண்பர் லேகா ரத்னகுமார் என்பதும், மனைவி பூர்ணிமாவையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்ததுமே பாக்யரா‌ஜ் உடனே சம்மதம் தெ‌ரிவிக்க காரணம்.

கஜோல், அஜய்தேவ் கான் போல விளம்பரத்தில் உயர வாழ்த்துவோம்.
மேலும் அறிய

> எந்திரன் முன்பதிவு.

நேற்று எந்திரன் முன்பதிவு தொடங்கியது. ஆச்ச‌ரியமாக பெரும்பாலான திரையரங்குகள் அதே கட்டணத்தையே வசூலித்தன.

எந்திரன் முன் பதிவு குறித்து சன் குழும ஊடகங்கள் தினந்தோறும் செய்திகள் வெளியிட்டு வந்தன. (இந்த விளம்பரங்களின் மார்க்கெட் மதிப்பு மட்டும் பல கோடி இருக்கும்). நேற்று தொடங்கிய முன்பதிவுக்கு ரசிகர்கள் பல்வேறு திரையரங்குகளில் முண்டியடித்தனர். என்றாலும் இணையம் வழி முன்பதிவு செய்யவே பெரும்பாலான ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.

முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் முதல் மூன்று தினங்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. சில திரையரங்குகள் ரசிகர்களுக்காக டிக்கெட்டுகள் ஒதுக்கியதாகவும் தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. முதல் மூள்று நாள் கலெக்‌ஷனில் பட்ஜெட்டின் பெரும்பகுதி திரும்பக் கிடைத்துவிடும் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.
மேலும் அறிய

Saturday, September 25, 2010

> த்‌ரிஷாவை லிப் டு லிப் முத்தமிட மறுத்த பவன் கல்யாண்.

கூலி கொடுத்தும் கரும்பு தின்ன மறுத்தவரைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? த்‌ரிஷா சம்மதம் தெ‌ரிவித்தும் அவரை முத்தமிட மறுத்த நடிகரைப் பற்றி வேறெப்படி சொல்வது?

இந்தியில் வெளியான லவ் ஆ‌ஜ் கல் படத்தை தெலுங்கில் ‌ரீமேக் செய்கிறார்கள். சைஃப் அலிகான் நடித்த வேடத்தில் பவன் கல்யாண், தீபிகா படுகோன் வேடத்தில் த்‌ரிஷா.

லவ் ஆ‌ஜ் கல்லில் வருவதைப் போன்ற லிப் டு லிப் முத்தக் காட்சியை தெலுங்கிலும் வைக்க ஆசைப்பட்டிருக்கிறார் இயக்குனர். பவன் கல்யாணுக்கு முத்தம் தர த்‌ரிஷா தயார். ஆனால் பவன் கல்யாண் தனது வயசுக்கும், கௌரவத்துக்கும் ச‌ரிவராது என்று த்‌ரிஷாவை முத்தமிட மறுத்திருக்கிறார்.

பவன் கல்யாணை என்ன சொல்வது. ஜென்டில்மேன் என்பதா? இல்லை பிழைக்க‌த் தெ‌ரியாதவர் என்பதா?
மேலும் அறிய

> திரைப்பட விழாவில் ர‌ஜினியின் திரைப்படங்கள்

எந்திரன் வெளியாவதை முன்னிட்டு சென்னை ஏ‌ஜிஎஸ் மல்டிஃபிளிக்ஸ் ர‌ஜினி ‌திரைப்பட விழாவை ஏற்பாடு செய்திருக்கிறது. இன்றிலிருந்து 30ஆம் தேதி வரை நடக்கும் இந்தத் திரைப்பட விழாவில் ர‌ஜினியின் முக்கியமான ஏழு திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

முதல் நாளான இன்று ஏ‌ஜிஎஸ் மல்டிஃபிளிக்ஸ் சென்றால் அண்ணாமலை படத்தை - காசு கொடுத்துதான் - பார்க்கலாம். நாளை மன்னன், நாளை மறுநாள் தளபதி. 27 ஆம் தேதி குரு சிஷ்யனும், 28 ஆம் தேதி முரட்டுக்காளையும், 29 ஆம் தேதி முத்துவும் திரையிடப்படுகிறது. கடைசி நாளான முப்பதாம் தேதி, சந்திரமுகி.

இவை அனைத்தும் அடிக்கடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் படங்கள்தான் என்பது தொலைக்காட்சிப் ப்‌ரியர்களுக்கு தெ‌ரிந்த விஷயம்தானே.
மேலும் அறிய

> சீண்டும் வேட்டை மன்னன் சிம்பு.

லிங்குசாமி தனது புதிய படத்துக்கு வேட்டை என்று பெயர் வைத்துள்ளார். ஆர்யா ஹீரோ.

பையா படத்துக்குப் பிறகு லிங்குசாமி சிம்பு நடிக்கும் படத்தை இயக்குவதாகதான் இருந்தது. சிம்புவும் காத்திருந்தார். ஆனால் லிங்குசாமி விஜய்க்கு கதை சொல்வதில் கருத்தாக இருந்ததுடன், விஜய் ஓகே என்றால் அவரை வைத்து படம் செய்ய தயாராக இருப்பதாகவும் அறிவித்தார்.

இது லிங்குசாமியின் படத்தில் நடிப்பதற்காக காத்திருந்த சிம்புவை கோபம் கொள்ளச் செய்தது. லிங்குசாமிக்கு எதிராக கடுமையாக பேசியவர் வானம் படத்தில் தனது கவனத்தை திருப்பினார்.

இந்த உள்ளடி வேலைகளுக்குப் பிறகுதான் ஆர்யா நடிப்பில் வேட்டை என்ற படத்தை ஆரம்பிக்க இருப்பதாக லிங்குசாமி அறிவித்தார். சிம்புவின் கோபம் இன்னும் தணியவில்லை போலும்.

வானம், போடா போடிக்குப் பிறகு வேட்டை மன்னன் என்ற படத்தில் நடிக்கயிருப்பதாக சிம்பு அறிவித்துள்ளார். இந்தப் படத்தை நெல்சன் என்பவர் இயக்குகிறார். பெரும்பகுதி படப்பிடிப்பை வெளிநாட்டில் நடத்த உள்ளனர்.
மேலும் அறிய

Friday, September 24, 2010

> வானத்திற்கு திரும்பும் STR.

முதலிலேயே கிளியர் செய்து விடுகிறோம்... எஸ்டிஆர் என்பது சிம்புவின் லேட்டஸ்ட் பெயர். போடா போடி படப்பிடிப்பில் இருப்பவர் விரைவில் வானம் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார் என்பதுதான் லேட்டஸ்ட் தகவல்.

போடா போடி ஷூட்டிங் லண்டனில் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. படத்தின் அறுபது சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

தற்போது லண்டனில் இருக்கும் சிம்பு... ஸாரி எஸ்டிஆர் விரைவில் சென்னை திரும்புகிறார். சென்னை வந்ததும் அவர் தெலுங்கு வேதம் படத்தின் தமிழ் ‌ரீமேக்கான வானம் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

இந்தப் படத்தில் எஸ்டிஆருடன் அனுஷ்கா, பரத் நடிப்பது முக்கியமானது.
மேலும் அறிய

> கள்ளக் காதலர் நடவடிக்கை எடுக்காவிடில் நயன்தாரா நடிப்பது உறுதி.

செய்திகளின் அட்சய பாத்திரமாக இருக்கிறார் நயன்தாரா. இந்த விஷயத்தில் அவர் எப்போதோ சிம்ரனை ஓவர்டேக் செய்துவிட்டார்.

நயன்தாரா பாஸ் என்கிற பாஸ்கரனுக்குப் பிறகு எந்தப் படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்பது ரேஷனுக்கு கியூவில் நிற்கும் தமிழகத்தின் சராச‌ரி ஜனங்களுக்கும் தெ‌ரியும். நயன்தாரா புதுப் படங்களை ஒப்புக் கொள்வதாக இல்லை என்றுதான் இதுவரை சொல்லி வந்தார் அவரது மேனேஜர்.

ஆனால் அதில் இப்போது பெருத்த மாற்றம். நயன்தாரா நல்ல கதை அமைந்தால் நடிக்க‌த் தயாராக இருப்பதாக ஸ்லோகனை மாற்றி சொல்ல ஆரம்பித்திருக்கிறார். நேற்று இல்லாத இந்த மாற்றத்துக்கு என்ன காரணம்?

நயன்தாரா ரகசியமாக காதலித்து வரும் தனது கள்ளக் காதலனுக்கு - இந்த வார்த்தைப் பிரயோகம் நம்முடையதல்ல, பெரும் பத்தி‌ரிகைகள் மனைவி இருப்பவருடன் தொடர்பு வைத்திருப்பவர்களை இந்த அடைமொழியில்தான் குறிப்பிட்டு வருகின்றன - நெருக்கடியை கொடுக்கும் பொருட்டே மீண்டும் நடிப்பதாக அறிவித்திருப்பதாக கூறுகிறார்கள்.

கள்ளக் காதலர் விரைந்து நடவடிக்கை எடுக்காவிடில் நயன்தாரா நடிப்பது உறுதி என்கிறார்கள்.
மேலும் அறிய

Thursday, September 23, 2010

> விஜய்பட அறிவிப்பு அடுத்த வாரம்?

விஜய்யின் காவலன் முடிந்துவிட்டது. வேலாயுதம் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. 3 இடியட்ஸ் ‌‌ரீமேக் விரைவில் தொடங்கப்பட உள்ளது. சிறையிலிருந்து சீமான் வெளியே வந்தால் பகலவன் வேலைகளும் தொடங்கிவிடும்.

இதன் நடுவில் களவாணி சற்குணம் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவும் விஜய் ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. இந்நிலையில் விஜய் நடிக்கும் புதிய படம் ஒன்றின் அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாக உள்ளதாக கோடம்பாக்க பட்சி தெ‌ரிவிக்கிறது.

விஜய்யை வைத்து கில்லி படத்தை தயா‌ரித்த ஸ்ரீசூர்யா மூவிஸ் ஏ.எம்.ரத்னம் மீண்டும் விஜய்யை வைத்து ஒரு படம் தயா‌ரிக்கிறார். இந்தப் படத்தை இயக்குகிறவர் யாவரும் நலம் படத்தை இயக்கிய விக்ரம் கே.குமார்.

மெகா பட்ஜெட் படமான இதன் ஸ்கி‌ரிப்ட் வேலைகள் முழுமையாக முடிவடைந்துவிட்டன. அடுத்த வாரம் எனது புதிய புராஜெக்ட் குறித்து அறிவிக்க இருக்கிறேன் என விக்ரம் கே.குமார் தெ‌ரிவித்துள்ளார். அந்த அறிவிப்பு அவர் இயக்கும் விஜய் படம் பற்றியதாகவே இருக்கும் என்கிறார்கள்.

யாவரும் நலம் போலவே இதுவும் வித்தியாசமான சப்ஜெக்ட் என்பது கூடுதல் செய்தி.
மேலும் அறிய

> Airtel புதிய அம்பாசிடர் - கார்த்தி.

அண்ணன் சூர்யா ஏ‌ர்செல்லின் அம்பாசிடர், தம்பி கார்த்தியை அம்பாசிடராக ஒப்பந்தம் செய்திருப்பது ஏர்செல்லின் வியாபார பகையாளி ஏர்டெல்.

இனி ஏர்டெல்லின் விளம்பரங்களில் கார்த்திதான் ஏர்டெல்லை உபயோகிக்கும்படி வற்புறுத்தயிருக்கிறார்.

இந்த புதிய வியாபார ஒப்பந்தம் தமிழ் உணர்வாளர்களை ரொம்பவே காயப்படுத்தியிருக்கிறது. ஈழப்போர் நடந்த நேரம் இலங்கை இனப்படுகொலை அரசுக்கு ஏர்டெல் சாதகமாக இருந்ததாகவும், அதன் படுகொலைகளை மறைக்க உதவியதாகவும் தமிழ் உணர்வாளர்கள் ஏற்கனவே ஏர்டெல் மீது குற்றம் சுமத்தியிருக்கிறார்கள்.

ஏர்டெல்லை புறக்கணிக்கும் விதமாக நூற்றுக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் தங்களது ஏர்டெல் கனெ‌‌க்சனை திரும்பக் கொடுத்த நிகழ்வும் தமிழகத்தில் நடந்துள்ளது. ஏர்டெல்லுக்கு எதிரான போராட்டத்தை அவர்கள் மேலும் வலுவடையச் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் கார்த்தி ஏர்டெல்லின் புதிய அம்பாசிடராக பொறுப்பேற்றுக் கொண்டது ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அறிய

> பாஸ் என்கிற பாஸ்கரன் முதலிடத்தில் - பாக்ஸ் ஆஃபிஸ்.

5. பலோ பாண்டியா
சித்தார்த் இயக்கியிருக்கும் இந்த காமெடிப் படம் முதல் இரு வாரங்களில் 44 லட்சங்களை வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 2 லட்சம் மட்டுமே.

4. துரோகி
ஸ்ரீகாந்த், விஷ்ணு நடித்திருக்கும் இப்படம் முதல் வார முடிவில் 28 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 7.8 லட்சங்கள்.

3. வந்தே மாதரம்
தடைகளை‌த் தாண்டி வந்திருக்கும் படம். இதன் முதல் மூன்று நாள் வசூல் 9.8 லட்சங்கள். இருபெரும் நடிகர்கள் நடித்திருந்தும் மிகக் குறைவான வசூலையே இப்படம் பெற்றிருக்கிறது.

2. நான் மகான் அல்ல
நான்கு வாரங்கள் முடிவில் இந்த ஹீரோயிஸ படம் 3.9 கோடிகளை வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி மூன்று நாள் வசூல், 10.3 லட்சங்கள்.

1. பாஸ் என்கிற பாஸ்கரன்
முதலிடத்தில் ஆர்யாவின் பாஸ் என்கிற பாஸ்கரன். இதன் சென்ற வார இறுதி மூன்று நாள் வசூல் 59 லட்சங்கள். இதன் முதல் பத்து நாள் சென்னை வசூல் 1.73 கோடிகள்.
மேலும் அறிய

Wednesday, September 22, 2010

> Facebookகில் மூழ்கினால் தொலைந்தது ??

நொடியில் தகவல்களை கணினியில் கொட்டுவது, கொண்டு சேர்ப்பது என இன்றைய இணைய தள உலகத்தினால் எவ்வளவுக்கு எவ்வளவு நன்மைகள் உள்ளதோ அதே அளவுக்கு, அவற்றை வரையறையில்லாமல் பயன்படுத்தும்போது தீமைகளும் வந்து சேருகிறது என்பதை தினம் ஒரு தினுசில் வெளிப்படும் சைஃபர் கிரைம் எனப்படும் இணைய தளக் குற்றங்கள் உணர்த்துகிறது.

இத்தகைய சைஃபர் கிரைம் குற்றங்கள் ஒருபுறம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சமுதாயத்தை பாதிக்கச் செய்கிறது என்றால், மறுபுறம் வலை தளங்களிலேயே மூழ்கி, குறிப்பாக சாட்டிங் போன்றவற்றுக்கு அடிமையாகி உடல் நலம், மன நலம் பாதிகப்பட்டு, வேறு பல பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.இது குறித்த ஆய்வில், பாதிக்கப்படுபவர்களில் மாணவர்களும் இருப்பதாக கூறி திடுக்கிட வைக்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்.

இணைய தளங்களுக்கு அடிமையானவர்களிடம் முதலிடத்தில் இருப்பது சாட்டிங் என்றால், மாணவர்கள் ஏகத்திற்கு மோகம் கொண்டு மூழ்கி கிடப்பது "ஃபேஸ்புக்" எனப்படும் சமூக வலைத் தளங்கள்தான் என்கின்றனர் அந்த ஆய்வாளர்கள்!

மாணவர்களின் இந்த ஃபேஸ்புக் மோகத்தால், அவர்களது படிப்பு பாதிக்கப்படுவதாகவும், ஃபேஸ்புக் பயன்படுத்தாத மாணவர்களை காட்டிலும், அதில் மூழ்கி கிடக்கும் மாணவர்களின் படிப்பு திறன் சுமார் 20 விழுக்காடு அளவுக்கு குறைந்து காணப்படுவதாகவும் கூறுகின்றனர் இந்த ஆய்வை மேற்கொண்ட மனோதத்துவ நிபுணர்கள்.

பொதுவாகவே இளவயதுக்காரர்களுக்கு கணினியிலும், இணைய தளங்களிலும் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யக்கூடிய திறன் மூளையில் அதிகமாக இருக்குமாம்.

இத்தகைய நிலையில், கணினியிலோ அல்லது இணைய தளத்திலோ ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்துகொண்டே மறுபுறம் தனது நண்பர்கள் அல்லது தோழிகளுடன் சாட்டிங் செய்வது, மின்னஞ்சல் அனுப்புவது, இன்பாக்ஸை திறந்து, மெயில் வந்துள்ளதா என்று 'செக்' பண்ணுவது, அப்படியே ஃபேஸ்புக் அல்லது இதர சமூக வலைத்தளங்களில் மேய்வது என்று அங்குமிங்குமாக வளைய வந்துகொண்டிருக்கும் போக்கு இன்றைய தலைமுறையினரிடையே சர்வ சாதாரணமாக காணப்படுகிறது.

அப்படி இருக்கையில் இள ரத்தம் கொப்பளிக்கும் மாணவர்களிடம் கேட்கவா வேண்டும்?

மடிக்கணினியை திறந்து ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் மேய ஆரம்பித்தபடியே படிப்பையும் கவனிக்கும்போது, தானாகவே நேர பற்றாக்குறை ஏற்படுகிறது.

இதனால் பிரதான வேலையான படிப்பை முடிப்பதில் தாமதம் மற்றும் தவறுகள் நிகழ்வது என பிரச்சனைகளை வரிசை கட்டி வர ஆரம்பித்து விடுகின்றனவாம்!

இது தொடர்பாக அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று 19 முதல் 24 வயதுடைய 219 மாணவர்களிடம் நடத்திய ஆய்வில், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் சராசரி கல்வி திறன் 3.06 ஜிபிஏ - GPA - ஆக இருந்த நிலையில், அவற்றை பயன்படுத்தாத மாணவர்களின் கல்வி திறன் 3.82 என்ற அளவிற்கு கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் தங்களால் அதிக நேரம் படிப்புக்காக செலவிட முடிவதாகவும் கூறியுள்ளனர் சமூக வலைத் தளங்களை பயன்படுத்தாத மாணவர்கள்!

அதே சமயம் ஃபேஸ்புக் போன்வற்றில் மேயும் மாணவர்களில் நான்கில் மூன்று பேர், சமூக வலைத்தளங்களில் மேய்வதால் படிப்புத் திறன் பாதிக்கப்படுவதாக கூறுவதை தங்களால் ஏற்க முடியவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஆய்வு என்னவோ, பாதிப்பு ஏற்படுவது உண்மைதான் என அடித்துக் கூறுகிறது.

உண்மையை ஏற்றுக்கொள்வதுதானே உச்சத்திற்கு செல்லும் வழி?
மேலும் அறிய

> நமிதா - நட்சத்திர பேட்டி.

முன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது...? தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நமிதா திருமணம் செய்து கொள்ளப் போகிறார், அவர் சின்னத்திரையில் மட்டுமே கவனம் செலுத்துவார், அவருக்கு வாய்ப்புகள் இல்லை என நமிதாவின் ஆப்சென்டுக்கு ஆளாளுக்கு ஒரு கதை சொல்கிறார்கள். உண்மை என்ன? நமிதாவே சொல்கிறார்.

எனக்கு வாய்ப்புகள் இல்லை என்று சிலர் சொல்வதில் உண்மையில்லை. கடந்த ஆறு மாதத்தில் மட்டும் என்னைத் தேடி வந்த வாய்ப்புகள் பதினைந்துக்கும் மேல் இருக்கும். ஆனால் எல்லாம் ஒரே விதமான கேரக்டர்ஸ். தொடர்ந்து ஒரே மாதி‌ரியான கேரக்ட‌ரில் நடித்தால் ரசிகர்களுக்கும் போரடிக்கும், நமக்கும் போரடிக்கும். அதனால் ஒரே மாதி‌ரியான வேடங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். ஆரம்பத்தில் சில தவறான வாய்ப்புகளை ஒப்புக் கொண்டதும், இயக்குனர்களின் முகத்துக்காக நடித்துக் கொடுத்ததும் மிகப்பெ‌ரிய தப்பு என்று இப்போது உணர்கிறேன். இனி அப்படியொரு தவறை செய்ய மாட்டேன். கதையும், கேரக்டரும் ஓகே என்றால் மட்டுமே நடிப்பேன்.

ஆனால் தெலுங்குப் படங்களில் தொடர்ந்து நடிக்கிறீர்களே?

நான் முதலில் அறிமுகமானது தெலுங்கில் என்றாலும் தமிழில்தான் அதிக படங்களில் நடித்திருக்கிறேன். சமீபத்தில் சிம்கா படத்தில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடித்தேன். படம் அங்கு சூப்பர்ஹிட். அதன் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தாலும் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. போலீஸ் அதிகா‌ரியாக வித்தியாசமான வேடம் ஒன்று வந்தது. அதை மட்டுமே ஒப்புக் கொண்டிருக்கிறேன்.

நமிதா என்றால் கிளாமர் என்றுதான் ரசிகர்கள் அர்த்தப்படுத்தியிருக்கிறார்கள். அப்படியிருக்கையில் திடீரென இளைஞன் படத்தில் வில்லியாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறீர்களே?

ஒரு நடிகையைப் பொறுத்தவரை அவரது கேரக்டர் எப்படிப்பட்டது என்பதுதான் முக்கியம். இளைஞன் படத்தைப் பொறுத்தவரை எனக்கு ஹீரோவுக்கு இணையான வேடம். படையப்பாவில் ரம்யா கிருஷ்ணன் வில்லிதான். ஆனால் ர‌ஜினி சாருக்கு இணையாக அவரது கேரக்டர் பேசப்பட்டது. அப்படியொரு கதாபாத்திரத்தில்தான் நான் நடித்திருக்கிறேன்.

முதல்வர் உங்களை பாராட்டியதாக செய்திகள் வந்ததே?

படத்தின் ரஷ் பார்த்துவிட்டு டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணாவும், குஷ்பு மேடமும் பாராட்டினார்கள். முதல்வர் அவர்களும் படத்தைப் பார்த்துவிட்டு நல்லாயிருக்கு என்று பாராட்டியதாக இயக்குனர் சொன்னார்.

திடீரென சின்னத்திரை பக்கம் ஒதுங்கிவிட்டீர்களே...?

மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஜட்ஜாக இருப்பதை கௌரவமாக நினைக்கிறேன். இந்த சிகழ்ச்சியின் மூலம் என்னால் வாராவாரம் ரசிகர்களை சந்திக்க முடிகிறது, அவர்களின் உணர்வுகளை நெருக்கமாக தெ‌ரிந்து கொள்ள முடிகிறது. இது எனக்கே புது உற்சாகமாக இருக்கிறது. மானாட மயிலாட நிகழ்ச்சியை பொறுத்தவரை ஒரு ரசிகையாக எனக்கு மிக விருப்பமான நிகழ்ச்சி அது.

திருமணம்....?

இப்போதைக்கு அதைப் பற்றி யோசிக்கவில்லை.

தமிழ் ரசிகர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தமிழ் ரசிகர்கள் தமிழ்நாட்டில் எனக்கென ஒரு இடம் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் அன்பானவர்கள். அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது.
மேலும் அறிய

Tuesday, September 21, 2010

> த்‌ரிஷா ஜோடியாகும் அ‌‌‌‌‌ஜீ‌த்.

இந்திப் படவுலகுக்கு சென்றதால் தமிழ், தெலுங்குப் படங்களை தவிர்த்து வந்த த்‌ரிஷா மீண்டும் தமிழ், தெலுங்குக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

தெலுங்கில் குறுகிய காலத்தில் இரு படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். இதில் ஒரு படம் இந்தியில் வெளியான லவ் ஆ‌ஜ் கல் படத்தின் தெலுங்கு ‌‌ரீமேக்.

தமிழில் மன்மதன் அம்பு படத்தில் மட்டும் நடித்து வருகிறவர் அ‌‌‌‌‌ஜீ‌த் ஜோடியாக மங்காத்தாவில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

மங்காத்தாவில் அ‌‌‌‌‌ஜீ‌த்துடன் நாகார்ஜுனா, பிரேம்‌ஜி அமரன், லட்சுமிராய், கணேஷ் வெங்கட்ராமன் உள்பட ஏராளமானோர் நடிக்கிறார்கள். நீது சந்திரா நடிப்பதாக முன்பு கூறப்பட்டது. ஆனால் இப்போதைய பட்டியலில் அவர் பெயர் இல்லை.

அவருக்கு பதில்தான் த்‌ரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளனர் என கூறப்படுகிறது. அதிகார‌ப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.
மேலும் அறிய

> அ‌‌‌‌‌ஜீ‌த் காலில் விழுந்தாரா ???

ஜெயலலிதாவுக்கு அ‌‌‌‌‌ஜீ‌த் மீது எப்போதுமே சாஃப்ட் கார்னர் உண்டு. அதேபோல் அ‌‌‌‌‌ஜீ‌த்துக்கும். அதிமுகவுக்கு ஆதராவக அ‌‌‌‌‌ஜீ‌த் பிரச்சாரம் செய்வார் என்பது வரை கிசுகிசுக்கப்பட்டது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.

அ‌‌‌‌‌ஜீ‌த்தின் புதிய படம் மங்காத்தாவை மு.க.அழகி‌ரியின் மகன் துரை தயாநிதியின் கிளவுட் நைன் தயா‌ரிக்கிறது. இந்நிலையில்தான் ஜெயலலிதா காலில் விழுந்து அ‌‌‌‌‌ஜீ‌த் ஆசிர்வாதிம் வாங்கிய சம்பவம் நடந்திருக்கிறது.

சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்தது. இதில் ஜெயலலிதாவும் கலந்து கொண்டார்.

அப்போது மனைவி ஷாலினி சகிதம் அங்கு வந்தார் அ‌‌‌‌‌ஜீ‌த். ஜெயலலிதாவைப் பார்த்ததும் அவரும் ஷாலினியும் ஜெயலலிதாவின் காலில் விழுந்து வணங்கினர். பிறகு இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
மேலும் அறிய

Sunday, September 19, 2010

> விஜய் சற்குணம் இயக்கத்தில் ???

சுறுசுறுப்பா இருக்கிறா‌ர் விஜய். காதலுக்கு ம‌‌ரியாதைக்குப் பிறகு இந்தளவு பிஸியாக அவர் இருந்ததே இல்லை எனலாம்.

காவலன் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. வேலாயுதம் படத்தின் ஷுட்டிங் வேகமாக நடந்து வருகிறது. வேலாயுதம் முடிந்ததும் ஷங்கர் இயக்கத்தில் 3இடியட்ஸ் ‌‌ரிமேக். அடுத்து சீமான் இயக்கத்தில் பகலவன்.

இவற்றை முடிக்கவே ஒன்றரை வருடம் தேவைப்படும். இந்நிலையில் களவாணி சற்குணம் இயக்கத்தில் நடிக்கவும் இளைய தளபதி ஒப்புக் கொண்டிருக்கிறா‌ராம். இதில் அவருக்கு போலீஸ் அதிகா‌‌ரி வேடம் என்பதுவரை புட்டு புட்டு வைக்கிறா‌ர்கள்.

உண்மையா பாஸ்?
மேலும் அறிய

> த்‌‌ரிஷா மாற்றிய கொள்கை.

மாஸ் ஹீரோவின் படத்தில் கதாநாயகி அந்தஸ்துடன் சும்மா வந்துப் போவதும் த்‌‌ரிஷா‌வுக்கு உடன்பாடுதான். ஆனால் படம் முழுக்க வரும் ஹீரோயின் ஓ‌‌ரியண்ட் சப்ஜெக்ட் என்றா‌ல், கதையை கேட்காமலே கதவை சாத்திவிடுவார்.

மற்ற படங்கள் தோல்வி அடைந்தாலும் அது பெ‌‌ரிய அளவில் ஹீரோயினை பாதிக்காது. ஹீரோயின் ஓ‌‌ரியண்ட் படம் என்றா‌ல் மொத்த தோல்வியையும் நாமே சுமக்க வேண்டி வரும் என்று இதற்கு விளக்கமும் கூறியிருந்தார் த்‌‌ரிஷா‌.

அருந்ததி அனுஷ்காவை ஒரே நாளில் உச்சத்தில் வைத்ததாலா தெ‌‌ரியவில்லை த்‌‌ரிஷா‌வும் தனது கொள்கையை தளர்த்தி ஹீரோயின் ஓ‌‌ரியண்ட் படத்தில் நடிக்க முன் வந்திருக்கிறா‌ர். தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தை எம்.எஸ்.ராஜு தயா‌‌ரிக்கிறா‌ர்.
மேலும் அறிய

> எதிர்பார்ப்பும் எந்திரனும்.

பாடலை கேட்டாச்சு, ட்ரெய்லர் பார்த்தாச்சு... படம் எப்போ சார் என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக இருந்தது. இனியும் இழுத்தடிக்கக் கூடாது என்று சன் பிக்சர்ஸ் சார்பில் அதிகாரபூர்வமாகவே நேற்று அறிவித்துவிட்டார்கள், படம் அக்டோபர் ஒன்றா‌ம் தேதி வெளியாகிறது.

பொதுவாக வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் முதல் நாளே தமிழ்ப் படத்தை பார்ப்பது என்பது அ‌‌ரிது. ‌சில நேரம் இங்கிலாந்து, அமெ‌‌ரிக்கா ஆகிய நாடுகளில் வசிப்பவர்களுக்கு மட்டும் இந்த அதிர்ஷ்டம் கிடைக்கும்.

ஆனால் எந்திரனைப் பொறுத்தவரை நீங்கள் எங்கிருந்தாலும் அக்டோபர் ஒன்றா‌ம் தேதியே படத்தைப் பார்க்கலாம். அந்தளவுக்கு பூலோகம் முழுவதும் பெட்டியை அனுப்பியிருக்கிறா‌ர்கள். தமிழ்நாடு மட்டுமின்றி உலகமெங்கும் எந்திரனுக்கு எதிர்பார்ப்பு நிலவுவதையே இது காட்டுகிறது.
மேலும் அறிய

Saturday, September 18, 2010

> தப்பாட்டம் - மங்காத்தா

ஆர்ப்பாட்டமாக அறிவித்தார்கள், அட்டகாசமாக பூஜையும் போட்டார்கள், மிரட்டலாக ட்ரெய்லரும் வெளியிட்டார்கள். ஆனால்...

மங்காத்தா படத்தின் படப்பிடிப்பு என்ன ஆனது என்பது பற்றி யாருக்கும் தெ‌ரியாது.

மங்காத்தாவில் அ‌‌ஜீத்துடன் நான்கு பேர் நடிக்கிறார்கள், நாகார்ஜுனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார், லட்சுமிராய், நீது சந்திரா ஹீரோயின்கள், யுவன் மியூஸிக் என்பது வரை முடிவாகியிருக்கிறது. அதேநேரம் ஆந்திராவிலிருந்து வரும் தகவல்கள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

நாகார்ஜுனா ச‌ரித்திர படமொன்றில் நடிக்கிறார். அதனால் மங்காத்தாவில் நடிக்க அவர் தயக்கம் காட்டுவதாக‌க் கூறப்படுகிறது. மேலும், வெங்கட்பிரபு சொன்ன கதை பிடித்திருக்கிறது என்றுதான் சொன்னேன். அட்வான்ஸ் கூட வாங்கவில்லை, அதற்குள் நடிக்கிறேன் என்று எப்படி அதிகார‌ப்பூர்வமாக அறிவிக்கலாம் என நாகார்ஜுன் வருத்தப்பட்டதாகவும் அவர் தரப்பில் கூறுகிறார்கள்.

வெங்கட்பிரபு இது பற்றி ‌விளக்கினால் நல்லது.
மேலும் அறிய

> ஆக்சன் கிங்கின் 5 அவதாரம்

அர்ஜு‌னின் அடுத்த அதிரடி, வல்லக்கோட்டை. கமர்ஷியலுக்கென்றே அவதாரம் எடுத்த ஏ.வெங்கடேஷின் படம்.

இந்தப் படத்தில் ஒரு விசேஷம் இருக்கிறது. கமலைப் போல இதில் பல்வேறு கெட்டப்புகளில் அர்ஜுன் தோன்றுகிறார். கவனிக்க, கேரக்டர் அல்ல, கெட்டப்.

இந்த ஒவ்வொரு கெட்டப்புக்கும் அவர் மிகவும் கஷ்டப்பட்டார் என் நற்சான்றிதழ் வழங்கியுள்ளார் ஏ.வெங்கடேஷ். வல்லக்கோட்டையின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி பின்னி மில்லில் எடுக்கப்படுகிறது. இந்த சண்டைக் காட்சியுடன் படத்தின் டாக்கி போர்ஷன் முடிவுக்கு வருகிறது.
மேலும் அறிய

> தமிழ் மீது இளையராஜாவுக்கு என்ன கோபமோ?

தேசிய விருது கிடைத்ததையொட்டி பத்தி‌ரிகையாளர்களை சந்தித்தார் இளையராஜா. பேச்சில் வழக்கம் போல சுவாரஸியமும், கோபமும் ச‌ரிவிகிதத்தில் கலந்திருந்தது.

இளையராஜாவுக்கு கிடைத்திருக்கும் 4வது தேசிய விருது இது. பின்னணி இசைக்காக அவருக்கு கிடைத்த முதல் விருது இது. இதனை அவரே ஆச்ச‌ரியத்துடன் குறிப்பிட்டார். இளையராஜா அதிகமான மலையாளப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஆனால் இதுவரை மலையாளப் படத்திற்கு இசையமைத்ததற்காக அவருக்கு விருது எதுவும் கிடைத்ததில்லை.

உங்களுக்கு விருது கிடைத்த பிறகுதான் எனக்கு கிடைக்கும் விருதை ஏற்றுக் கொள்வேன், அதற்குமுன் எனக்கு விருது கிடைத்தால் அதை ஏற்றக்கொள்ள மாட்டேன் என்று பழஸிராஜா இயக்குனர் ஹ‌ரிஹரன் கூறியிருந்ததை நினைவுகூர்ந்தார் இசை ஞானி.

ஜாம்பவான்கள் நிறைந்திருந்த இசையுலகு இப்போது மொட்டையடிக்கப்பட்டு விட்டதாக குறைபட்டுக் கொண்டவர், ஆங்கிலத்தையும், தெலுங்கையும், மலையாளத்தையும் மட்டுமே தனது பேட்டியின் போது பயன்படுத்தினார். தமிழ் மீது இளையராஜாவுக்கு அப்படி என்ன கோபமோ?
மேலும் அறிய

Friday, September 17, 2010

> U சான்றிதழ் எந்திரனுக்கு.

அனைவரும் எதிர்பார்க்கும் எந்திரன் தனது முதல் சோதனையை வெற்றிகரமாக கடந்திருக்கிறது.

ஷங்கர் படத்தின் காட்சிகளிலும், கதையிலும் ஆபாசம் இருக்காது. ஆ‌க்சன் காட்சிகளும் பயமுறுத்துவது போல் இல்லாமல் ஃபே‌ண்டஸியாகவே இருக்கும். சர்ச்சைக்கு‌ரிய கருத்துகளையோ, ஆள்பவர்களுக்கு கிலி ஏற்படுத்தும் விஷயங்களையோ அவர் தொடுவதில்லை. இதன் காரணமாக அவரது படங்கள் இதுவரை சென்சார் பிரச்சனையில் சிக்கியதில்லை.

எந்திரன் படமும் சென்சா‌ரில் சின்ன சேதம் கூட இன்றி யு சான்றிதழ் பெற்றுள்ளது. படத்தின் எந்தக் காட்சிக்கும் சென்சார் உறுப்பினர்கள் நோ சொல்லவில்லை என்கிறது எந்திரன் வட்டாரம்.
மேலும் அறிய

> விஜய் விலகிய தீபாவளி ரேஸ்.

வருடத்தில் 365 நாட்களும் படங்கள் வெளியானாலும் தீபாவளிக்கு வெளியாவதுதான் இன்று வரை ஸ்பெஷல். கமல், ர‌ஜினி படங்கள் தீபாவளிக்கு வெளியானால் இன்னும் ஸ்பெஷல். குறைந்தபட்சம் அ‌‌ஜீத், விஜய் படங்களையாவது ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் இந்த தீபாவளி ஏமாற்றம் அளிக்கும் தீபாவளியாக இருக்கப் போகிறது.

ர‌ஜினி படம் இந்த தீபாவளிக்கு வெளிவரப் போவதில்லை. இனி எந்த தீபாவளிக்கு அவரது படம் வரும் என்பது அருக்கே தெ‌ரியாத நிலைதான் உள்ளது. கமலின் மன்மதன் அம்பு படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. அதனால் படம் தீபாவளிக்கு வருவது சந்தேகமே. அ‌‌ஜீத்தின் மங்காத்தா இன்னும் முறையாக தொடங்கவில்லை. ஒரே நம்பிக்கை விஜய்யின் காவலன்.

ஆனால் காவலன் படப்பிடிப்பு இன்னும் முடியாததால் படத்தை டிசம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. இது விஜய் ரசிகர்களுக்கு மிகப் பெ‌ரிய தீபாவளி ஏமாற்றமாக இருக்கப் போகிறது.
மேலும் அறிய

Thursday, September 16, 2010

> பெயர் மாற்றம் - இச்.

ஜெயம் ரவியை வைத்து பிரபுதேவா இயக்கி வரும் இச் படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

வில்லு படத்துக்குப் பிறகு பிரபுதேவா இயக்கும் படம் இச். ஜெயம் ரவி நாயகன். நாயகி ஹன்சிகா மோத்வானி. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்டிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டது. இசை ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ்.

இச் என்ற படத்தின் பெயரை மாற்றப் போவதாக ஏறகனவே கூறியிருந்தனர். பல பெயர்கள் ப‌ரிசீலனையில் இருந்தன. இறுதியாக எங்கேயும் காதல் என்று மாற்றியுள்ளனர்.

விரைவில் படம் திரைக்கு வருகிறது.
மேலும் அறிய

> ராதாரவி - அசின் மீது நடவடிக்கை

திரைப்பட கூட்டமைப்பின் எதிர்ப்பை மீறி இலங்கை சென்ற அசின் திரையுலகில் கடும் கண்டனத்துக்கு ஆளானது. அசின் மீது நடவடிக்கை உறுதி என்ற நிலையில் சரத்குமா‌ரின் அர்த்தமில்லாத ஆதரவு பேச்சால் நடவடிக்கை நீர்த்துப் போனது.

இந்நிலையில் நடிகர் சங்கத்துக்கு நே‌ரில் வந்து இதுவரை விளக்கம் அளிக்காத அசின் மீது நடவடிக்கை உறுதி என்று ராதாரவி தெ‌ரிவித்துள்ளார்.

அசினின் திமிர் பேச்சால் காம்பட்டிருக்கும் அனைத்துத் தமிழர்களுக்கும் ராதாரவியின் பேச்சு ஆறுதல் அளித்துள்ளது.

நடிகர் சங்க‌த் தலைவர் என்ற கோதாவில் சரத்குமார் மீண்டும் இதில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவ‌ரின் வேண்டுகோளாக இருக்கிறது.
மேலும் அறிய

> சோனியா அகர்வால் - வானம் படத்தில்.

செல்வராகவனை விவாகரத்து செய்த பிறகு சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வந்தார் சோனியா அகர்வால். வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்றும் அவர் தெ‌ரிவித்திருந்தார்.

தெலுங்கில் வெளியான வேதம் படத்தை தமிழில் சிம்பு நடிப்பில் வானம் என்ற பெய‌ரில் தயா‌ரித்து வருவது தெ‌ரிந்ததே. இந்தப் படத்தில் பிரகாஷ்ரா‌ஜின் மனைவியாக நடிக்க சோனியா அகர்வால் ஒப்பந்தமாகியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

வானத்தில் சிம்புவுடன் பரத், அனுஷ்கா, சினேகா உல்லால் ஆகியோரும் நடிக்கின்றனர்.
மேலும் அறிய

Wednesday, September 15, 2010

> பிரபுதேவா - நயன்தாராவை திருமணம் செய்வேன்

பல மாத கண்ணாமூச்சி விளையாட்டுக்கு முடிவு கட்டியிருக்கிறார் பிரபுதேவா. அதாவது நயன்தாராவை காதலிப்பது உண்மை என்றும், அவரை விரைவில் திருமணம் செய்வேன் என்றும் அவர் பேட்டியளித்துள்ளார்.

சந்தோஷ் சிவனின் உறுமி படத்தில் பிரபுதேவா நடித்து வருகிறார். இந்தப் படப்பிடிப்பின் போது அவர் அளித்த பேட்டியில் நயன்தாராவை காதலிப்பதை உறுதி செய்துள்ளார்.

அவர் ஒரு துணிச்சல்காரர், அவரைப் போலவே என்னையும் மாற்றியிருக்கிறார். எனக்கு முன்கோபம் அதிகம். நயன்தாராவுடன் பழகிய பிறகு அது குறைந்துவிட்டதாக எனது உதவியாளர்களே கூறுகிறார்கள் என்றெல்லாம் அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார்.

விரைவில் எங்கள் திருமணம் நட‌க்கும் எனவும் அவர் இந்தப் பேட்டியில் தெ‌ரிவித்துள்ளார்.
மேலும் அறிய

> ‌ரிலீஸ் தேதி of எந்திரன்???

எந்திரன் இம்மாதம் வெளியாகிறது என தயா‌ரிப்பாளர் தரப்பு உறுதிபட‌க் கூறியிருக்கிறது. ஆனால் தேதி?

செப்டம்பர் 24 ஆம் தேதி படம் திரைக்கு வரும் என்பதே இதுவரை நம்பப்பட்டு வந்த செய்தி. ஆனால் மேலும் சில நாட்கள் எந்திரன் ‌ரிலீஸ் தள்ளிப் போகும் என தெ‌ரிகிறது.

எந்திரனின் தமிழ், தெலுங்கு மற்றும் இந்திப் பதிப்புகளை ஒரே நேரத்தில் வெளியிட வேண்டும் என்பதே தயா‌ரிப்பாள‌ரின் விருப்பம். தமிழ், தெலுங்குப் பதிப்புகள் தயாராகிவிட்டன. இந்திப் பதிப்பு மட்டும் இன்னும் சில டச்சப் வேலைகளுக்காக காத்திருக்கிறதாம்.

இதன் காரணமாண படம் செப். 24க்குப் பதிலாக செப். 30 ஆம் தேதி திரைக்கு வரும் என்கிறார்கள்.
மேலும் அறிய

Tuesday, September 14, 2010

> அதிரடி நீக்கம் - ஸ்ரேயா

உள்ளே வெளியே விளையாட்டு சினிமாவில் சகஜம். இலியானா நடிப்பதாக இருந்தப் படத்தில் திடீரென அவரை நீக்கிவிட்டு த்‌ரிஷாவை ஒப்பந்தம் செய்தனர். இப்போது இலியானாவின் முறை.

தெலுங்கு நடிகர் ராணாவின் புதிய படம் ராணி. இந்தப் படத்தில் ராணாவுக்கு ஜோடியாக ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்திருந்தனர். இந்நிலையில் திடீரென அவரை நீக்கிவிட்டு இலியானாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம்?

ஸ்ரோயாவின் மீது ராணாவுக்கு ஏற்பட்ட அதிருப்திதான் காரணம் என்கிறார்கள். ஸ்ரேயா வேண்டாம் வேறு நடிகையை ஒப்பந்தம் செய்யுங்கள் என்று ராணாவே கூறியதால் வேறு வழியில்லாமல் அவரை நீக்கிவிட்டு இலியானாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இந்த திடீர் பல்டியால் அப்செட்டில் இருக்கிறார் ஸ்ரேயா.
மேலும் அறிய

> காத்திருக்கும் சூர்யா - ர‌ஜினிக்காக

தமிழ் திரையுலகமே ஒரு படத்தின் ‌ரிலீஸை ஆவலுடன் எதிர்பார்க்கிறது. அந்தப் படம் எது என்று சொல்லத் தேவையில்லை.

எந்திரன் எப்போது வரும் என ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒருவகை என்றால் நடிகர்களின் எதிர்பார்ப்பு வேறுவகை. எந்திரன் திரைக்கு வரும்போது நமது படம் கண்டிப்பாக வெளியாகக் கூடாது என்ற விழிப்புடன் எந்திரனுக்காக காத்திருக்கிறார்கள் இவர்கள். சேர்ந்து வந்தால் படம் கலெ‌க்சனில் துவையலாகிவிடும் என்ற நடைமுறை உண்மை இவர்களுக்கு அதிகடியாகவே தொpயும்.

விஜய்யை கலெ‌க்சனில் பீட் பண்ணும் சூர்யாவே எந்திரன் வெளியாவதற்காக காத்திருக்கிறார் என்றால் மற்றவர்கள் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

சூர்யாவின் ரத்த ச‌ரித்திரம் விரைவில் வெளியாகிறது. இம்மாதமே வெளியிடலாம் என்று சொன்ன ராம் கோபால் வர்மாவை, வம்பு எதற்கு என்று தடுத்திருக்கிறார் சூர்யா.

எந்திரன் வெளியாகி அதன் ஹீட் தணிந்த பிறகு ரத்த ச‌ரித்திரத்தை வெளியிடலாம் என கூறியுள்ளாராம். இந்த அறிவுரையின் நியாயம் பு‌ரிந்து வர்மாவும் படத்தை தாமதமாக வெளியிட முடிவு செய்துள்ளார்.
மேலும் அறிய

> சீமான் படம் தள்ளிவைப்பு.

ராமன் தேடிய சீதை படத்தை இயக்கிய ஜெகன்‌ஜி அடுத்து சீமான் நடிக்கும் படத்தை இயக்குவதாக இருந்தது. இந்தப் படத்திற்காக சிபியிடமும் கால்ஷீட் வாங்கப்பட்டது.

படப்பிடிப்புக்கு கிளம்பும் நேரம் தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததற்காக தமிழக அரசு சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை பிரயோகித்து அவரை சிறையில் அடைத்தது. இந்த சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டால் ஒரு வருடம் கண்டிப்பாக உள்ளே இருந்துதான் ஆக வேண்டும்.

இந்த திடீர் திருப்பத்தால் ஜெகன்‌ஜியின் படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக வேறொரு படத்தை இயக்கும் வேலையில் தீவிரமாக இருக்கிறார் ஜெகன்‌ஜி. கதை, திரைக்கதை எல்லாம் தயாரான நிலையில் பாடல் கம்போஸங்குக்கான வேலைகளுக்கு தயாராகி வருகிறார்கள். இன்னும் சில வாரங்களில் இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
மேலும் அறிய

> புதிய சாதனை - எந்திரன் ட்ரெய்லர்

எந்திரன் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு படத்தின் ட்ரெய்லருக்கு ரசிகர்கள் இத்தனை அதிக முக்கியத்துவம் கொடுத்து பாலாபிஷேகம் செய்தது உலகிலேயே இந்தப் படத்துக்காகதான் இருக்கும். அந்தவகையில் எந்திரன் மேலுமொரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.

எந்திரன் ட்ரெய்லர் பல்வேறு இடங்களில் வெளியிடப்பட்டது. சத்யம் காம்ப்ளக்ஸ்தான் ஹைலைட். வைரமுத்து, ஆர்யா, கே.எஸ்.ரவிக்குமார் என அரங்கு வழிய விஐபிகள். லதா ர‌ஜினிகாந்த், சௌந்தர்யா என குடும்ப உறுப்பினர்களும் உண்டு.

ர‌ஜினி எண்பதாவது வயதிலும் இதேபோல் டூயட் பாடுவார். காரணம் ஏ‌‌ஜ் அல்ல இமே‌ஜ் என்று ர‌ஜினி ரசிகர்களை விசிலடிக்க வைத்தார் ரவிக்குமார். வைரமுத்து இன்னும் ஒருபடிமேல். எந்திரனில் ர‌ஜினி 100 அடி பாய்ந்திருக்கிறார். அடுத்தப் படத்தில் 120 அடி பாய்வார் என்றார். ர‌ஜினியையும், அமிதாப்பையும் வைத்து அவர் சொன்ன கதையை ர‌ஜினியே ரசிப்பாரா என்பது சந்தேகம்.

எந்திரன் படத்துக்கு 1000 நாள் போஸ்டர் அடிப்பார்கள் என ஆருடம் சொன்னார் ஆர்யா.

சத்யத்தில் ட்ரெய்லரை ர‌ஜினி வெளியிட்டார், கலாநிதி மாறன் இந்த விழாவில் கலந்து கொண்டார்.

சென்னையில் மட்டும் பல்வேறு திரையரங்குகளில் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. அந்த வகையில் ர‌ஜினி ரசிகர்களுக்கு ட்ரெய்லர் வெளியீடே ஒரு திருவிழாவாக இருந்தது மிகையல்ல.
மேலும் அறிய

Monday, September 13, 2010

> ஒபாமா தீவிரம் - ஒசாமாவைப் பிடிக்க.

சர்வதேச பயங்கரவாதியும், அல்-காய்தா தலைவருமான ஒசாமா பின்லேடனை பிடிக்கும் அல்லது கொல்லும்வரை ஓயமாட்டோம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சூளுரைத்தார்.

இந்த விஷயத்தில் அமெரிக்க அதிகாரிகளும், படை வீரர்களும் மனம் தளர்ந்துவிடவில்லை. பின்லேடனை தீர்த்துக்கட்டியே ஆக வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான போரை நடத்தவில்லை. பயங்கரவாதிகளுக்கு எதிராகவே போர் நடத்துகிறோம். இஸ்லாம் என்ற போர்வையில் யாரெல்லாம் மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபடுகிறார்களோ அவர்களுக்கு எதிராகவே நாங்கள் போர் புரிகிறோம்.

பின்லேடன் தாக்குதலுக்குப் பயந்து பூமிக்கடியில் பதுங்கியுள்ளார். எதற்கெடுத்தாலும் அறிக்கைவிட்டு மிரட்டல் விடுத்து வந்த ஜவாஹிரியின் செயல்பாடும் முடங்கிவிட்டது. இதெல்லாம் அமெரிக்கப் படைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

இவ்வாறு கூறினார் ஒபாமா.
மேலும் அறிய

> 9வது ஆண்டு நினைவு தினம் 9/11 தாக்குதல்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்த உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரம் பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டதன் 9வது ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.

கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி அல் கய்டா பயங்கரவாதிகள் விமானங்களைக் கடத்திக் கொண்டு வந்து ஒன்றன் பின் ஒன்றாக வர்த்தக மைய கோபுரங்கள் மீது மோதி தகர்த்தனர்.

இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்டது.

இதன் 9வது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி வாஷிங்டனில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமெரிக்க அதிபர் ஒபமா, அமெரிக்காவில் எந்தவொரு ஆணும், பெண்ணும் சமமாக நடத்தப்படுகின்றனர். அதுபோலத்தான் அமெரிக்காவில் மதச் சுதந்திரமும் உள்ளது.

இங்கு கிறிஸ்தவ தேவாலயமும் கட்டலாம், யூதர்களின் தலமும் கட்டலாம், இந்துக் கோயில்களும் கட்டலாம், அதுபோலவே மசூதியும் கட்ட முடியும்.

இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காக நாம் பிரார்த்தனை செய்வோம் என்று கூறினார்.
மேலும் அறிய

> பின்னணி பாடகி சுவர்ணலதா திடீர் மரணம்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைப்படப் பின்னணிப் பாடல்களைப் பாடிய பிரபல பாடகி சுவர்ணலதா நேற்று சென்னையில் தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 37.

நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த சுவர்ணலதா நேற்று காலை சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

1995ஆம் ஆண்டு பாரதிராஜாவின் கருத்தம்மா திரைப்படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இவர் பாடிய "போறாளே பொன்னுத்தாயி" என்ற அருமையான பாடலுக்கு தேசிய விருது பெற்றார்.

இவர் கேரளாவில் உள்ள பாலக்காட்டில் பிறந்தவர். இவரது தந்தை கே.சி.செருக்குட்டி ஹார்மோனியம் வாசிப்பவர், பாடகர். தாய் கல்யாணியும் இசையில் நாட்டமுடையவர்.

சுவர்ணலதாவிற்கு ஹார்மோனியமும், கீ போர்டு இசைக்கருவிகளையும் வாசிக்கத் தெரியும்.

1989ஆம் ஆண்டு முதல் பாடி வரும் சுவர்ணலதா, இளையராஜாவின் இசையில் சத்ரியன் என்ற படத்தில் "மாலையில் யாரோ மனதோடு பேச" என்ற பாடல் மூலம் தனது அருமையான குரல் வளத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தொடர்ந்து இவர் அலைபாயுதே படத்தில் பாடிய 'எவனோ ஒருவன்", பாம்பே திரைப்படத்தில் பாடிய குச்சி குச்சி ராக்கம்மா, ஜென்டில்மேன் படத்தில் பாடிய 'உசிலம் பட்டி பெண்குட்டி' காதலன் படத்தில் முகாபலா முகாபலா ஆகிய பாடல்கள் தமிழ் நாட்டில் அடிரடி ஹிட் பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரேயில் இவர் பாடிய 'பூங்காற்றிலே", இந்தியன் படத்தில் பாடிய மாயா மச்சீந்திரா' ஆகியவையும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இவருக்கு புகழ் சேர்த்தன.

இளையராஜா இசையில் எடுத்துக் கொண்டால், கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இவர் பாடிய 'ஆட்டமா, தேரோட்டமா', சின்ன ஜமீனில் பாடிய 'வனப்புத்தட்டு புல்லாக்கு', சத்ரியனில் "மாலையில் யாரோ", சின்னத்தம்பியில் 'போவோமா ஊர்கோலம்', சின்னத்தாயி படத்தில் பாடிய 'நான் ஏரிக்கரை" ஆகிய பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது.

மேலும் ரஜினிகாந்த் நடித்த தர்மதுரை படத்தில் இவர் பாடிய 'மாசி மாசம்', ராஜ்கிரணின் ராசாவின் மனச்சுல படத்தில் பாடிய 'குயில் பாட்டு', புதுப்பட்டி பொன்னுத்தாயி படத்தில் பாடிய 'ஊரடங்கும் சாமத்தில' ஆகிய பாடல்கள் ரசிகர்களின் மனத்தை கொள்ளை கொண்டு போக,

பட்டித் தொட்டிகளிலெல்லாம் முழங்கியது தளபதி படத்தில் இவர் பாடிய 'அடி ராக்கம்மா கையத்தட்டு'. தேவர் மகனில் இடம்பெற்ற 'மணமகளே, மருமகளே' என்ற அருமையான பாடலுக்கு சொந்தமானவரும் சுவர்ணலதாவே என்பது குறிப்பிடத்தக்கது.

வீராவின் இரண்டு ஹிட் பாடல்களான 'மாடத்திலே கன்னி மாடத்திலே', 'மலைகோயில் வாசலில்' ஆகிய இரண்டையும் பாடியவர் சுவர்ணலதா.

இவர் பாடிய அனைத்துப் பாடல்களுமே தமிழில் ஹிட் பாடல்கள் என்றால் அது மிகையாகாது.
மேலும் அறிய

Sunday, September 12, 2010

> அதிரடி மாற்றம் செய்த ஸ்ருதி ஹாசன்.

கமலுக்கும், ர‌ஜினிக்கும் நீண்ட காலமாக பிஆர்ஓ-வாக இருப்பவர் நிகில் முருகன். தமிழ் சினிமாவின் ஹைடெக் மக்கள் தொடர்பாளர், கண்ணியமான தொடர்பாளர் என்பதெல்லாம் இவரது அடையாளங்கள். இவர்தான் நடிகர் சூர்யாவுக்கும், ஸ்ருதி ஹாசனுக்கும் பிஆர்ஓ.

இந்நிலையில் நிகில் முருகனுக்குப் பதில் ஜான்சனை தனது பிஆர்ஓ-வாக அறிவித்தார் சூர்யா. நான் மகான் அல்ல படத்தைப் பற்றி எதிர்மறை பதிவுகள் நிகிலின் இணையதளத்தில் இருந்ததாகவும், அதனால் சிவகுமார் எடுத்த கடும் முடிவுதான் இந்த நீக்கம் எனவும் கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

இந்த நீக்கத்திற்கு இரண்டாவது நாளே ஸ்ருதியிடமிருந்து பரபரப்பான அறிவிப்பு வெளிவந்தது. சூர்யாவைப் போலவே அவரும் நிகிலை மாற்றிவிட்டு ஜான்சனை தனது புதிய பிஆர்ஓ ஆக்கியிருந்தார்.

சூர்யாவும், ஸ்ருதிஹாசனும் 7ஆம் அறிவு படத்தில் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அறிய

> மாஸ் ஓபனிங் - பாஸுக்கு

பாஸ் என்கிற பாஸ்கரன் ‌ரிலீஸ். ஆர்யா, நயன்தாரா, சந்தானம் என எல்லாமே பிரபல முகங்கள். கூடுதலாக உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ்.

எதிர்பார்த்தது போலவே பாஸ் என்கிற பாஸ்கரன் வெளியாகியிருக்கும் திரையரங்குகள் எல்லாம் பிதுங்கி வழிகின்றன. துரோகி, வந்தே மாதரம் படங்கள் இன்று வெளியானாலும் மாஸ் இருப்பது பாஸிடம்தான்.

இந்தப் படம் அனைத்துத் தரப்பினருக்கும் லாபத்தை சம்பாதித்து தரும் என திரையரங்கு உ‌ரிமையாளர்கள் மகிழ்ச்சி தெ‌ரிவித்துள்ளனர். ரசிகர்கள் செய்யும் ஆரவாரம்தான் அவர்களை இப்படி மகிழ்ச்சி கொள்ள வைத்துள்ளது.

மதராசப்பட்டினத்தைத் தொடர்ந்து ஆர்யாவுக்கு இன்னொரு ஹிட்டாக அமைந்துள்ளது பாஸ் என்கிற பாஸ்கரன்.
மேலும் அறிய

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.