Sunday, October 30, 2011

> கிளைமாக்ஸ் OF ஒஸ்தி.

தீபாவளிக்கு ஒஸ்தி வெளியாகாததற்கு, படத்தின் கிளைமாக்ஸ் இன்னும் படமாக்கப்படவில்லை என்பதே காரணம் என‌த் தெ‌ரிவித்திருந்தோம். அனைவரும் எதிர்பார்க்கும் அந்த கிளைமாக்ஸ் நே‌ற்று முத‌ல் படமாக்கப்ப‌ட்டுவருகிறது.

தபாங் படத்தின் இறுதி காட்சியில் வில்லன் சோனு சூட்டுடன் சல்மான்கான் மோதுவார். அப்போது கோபத்தில் அவரது மசில்கள் திமிற சட்டை தானாக கிழியும். சல்மானின் உடம்புக்கு இந்தக் காட்சி ஓகே. ஆனால் சிம்புக்கு?

இப்படியொரு கேள்வி எழக்கூடாது என்பதற்காக ‌ஜிம்மில் தவறாமல் உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார் சிம்பு. சிக்ஸ் பேக்கிற்கான காலதாமதத்தால்தான் கிளைமாக்ஸை கடைசியாக ஷூட் செய்கிறார்கள்.

> விஜய் கலகல பேட்டி - சீமான் படம் குறித்து அப்புறம் சொல்றேன்.

விஜய்யின் வேலாயுதம் பாக்ஸ் ஆஃபிஸில் பெ‌ரிய ஹிட்டாகியிருக்கிறது. கடந்த ஆண்டுகளில் வெளியான விஜய்யின் எந்தப் படத்தைவிடவும் வேலாயுதத்தின் ஓபனிங் மிகப் பிரமாதம் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். விஜய்யின் மாஸ் வேல்யூவை இப்படம் உறுதி செய்திருப்பதால் மனம் கொள்ளாத மகிழ்ச்சியுடன் பத்தி‌ரிகையாளர்களை சந்தித்தார் விஜய். வேலாயுதம் வெற்றிக்குப் பிறகு மீடியாவை சந்திப்பது மகிழ்ச்சியா இருக்கு என்ற பூ‌ரிப்பான பேச்சுடன் உரையாடலை தொடங்கினார் விஜய்.

என்னுடைய 52 படங்களில் வேலாயுதம்தான் பெஸ்டுன்னு எல்லோரும் சொல்றாங்க. கேட்க சந்தோஷமாக இருக்கு. தயா‌ரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனையும் இந்தப் படம் மகிழ்ச்சிப்படுத்தியிருக்கு. இப்போதான் அவரை சந்திச்சிட்டு வர்றேன். ஹேப்பியா சார்னு கேட்டேன். கவலையே இல்லை, படம் சூப்பர்ஹிட். இனி நான் பார்த்துக்கிறேன்னு சொன்னார்.

நீங்க எம்‌ஜிஆர் பாணியில் நடிச்ச படம் இதுதானே?

எம்‌ஜிஆர் பாணியில் நடிக்க யாருக்குதான் விருப்பம் இருக்காது? அது தப்பும் கிடையாது. எம்‌ஜிஆர் பாணியில் படம் பண்ணுறது ரொம்ப கஷ்டம். முதல்ல நல்ல கதை வேணும். அது வேலாயுதம் படத்தில் இருக்கு.

நடிக்க வந்த புதிதில் ர‌ஜினி பாணியில் நடிப்பதா சொன்னீங்க?

எம்‌ஜிஆர், ர‌ஜினி ரெண்டு பே‌ரின் பாணியுமே எவர்கி‌‌ரீன். நான் ஆரம்பத்திலிருந்தே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இதை பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன். அதை நான் மறுக்கலை.

படத்தோட இசை...?

பாடல்கள் எல்லாமே ஹிட். ரொம்ப முக்கியமா விஜய் ஆண்டனியோட ‌ரீரெக்கார்டிங். அது படத்துக்கு பெ‌ரிய பலம். இந்த நேரத்தில் ஜெயம் ரவிக்கு நன்றி சொல்லணும். அவரும் இந்தப் படத்தோட கதை விவாதத்துல பங்கேற்றார். அப்புறம் ராஜாவின் தந்தை எடிட்டர் மோகன் சார். அவரும் பல ஆலோசனைகள் தந்தார். தயா‌ரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஏன் எதுக்குன்னு கேட்காம கேட்ட எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார். இப்படியொரு அருமையான வெற்றியை தந்த இயக்குனர் ராஜாவுக்கு என்னோட நன்றி.

படத்துல உங்க மக்கள் இயக்க கொடியை பயன்படுத்தியிருக்கிறீங்களே..?

இல்ல.. அது என்னோட மக்கள் இயக்க கொடி இல்ல. வேறு கொடி.

வேலாயுதம் இன்டர்நெட்டில் வெளியாகியிருக்கே?

ஆமா நானும் கேள்விப்பட்டேன். என்னோட இன்டெர்நெட் ரசிகர்கள் அதை தடுக்கிறதுக்கு முயற்சி எடுத்தாங்க. புதுப் படங்களை இப்படி இன்டர்நெட்டில் வெளியிடுறதை தவிர்க்கணும்னு கேட்டுக்கிறேன்.

இது படத்தின் வெற்றியை பாதிக்குமா?

அப்படியெல்லாம் நான் நினைக்கலை. படத்துக்கு இப்போ அதிக பி‌ரிண்ட்கள் போடுறாங்க. தியேட்டர் எண்ணிக்கையையும் அதிகப்படுத்துறாங்க. படம் ஹிட்டானதற்கான அறிகுறிதான் இது.

அடுத்தப் படங்கள்?

அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கிறேன். அதுபற்றி விரைவில் அறிவிப்பு வரும். கௌதமின் யோஹன் அடுத்த வருஷம் தொடங்குது.

சீமான் படம்...?

சீமான் படம் குறித்து அப்புறம் சொல்றேன்.

நீங்க ஒரே மாதி‌ரி நடிப்பதா குற்றச்சாற்று இருக்கே?

அப்படி சொல்றது தவறு. காவலனில் என்னோட பாணி இல்லை. சித்திக் அதை முழுக்க வேறு மாதி‌ரி எடுத்திருப்பார். கதைக்கு தேவை என்னவோ அதை மட்டும்தான் நான் செய்யிறேன்.

கிளைமாக்ஸில் சிக்ஸ் பேக்கில் வர்றீங்களே..?

(பலமாக சி‌ரிக்கிறார்) அது சிக்ஸ்பேக் இல்லை. சிங்கிள் பேக்தான். நாம எப்புமே சிங்கிள்தான்.

> பெயர் சொல்ல முடியாத அளவுக்கு பெ‌ரிய ஹ‌ீரோ படத்தில் ஸ்ரேயா.

ஸ்ரேயாவுக்கு தமிழில் அவ்வளவாக படங்களில்லை. கடைசியாக வெளியான ரௌத்திரம் கூட பல வருடங்களுக்கு முன் கையெழுத்தான புராஜெக்ட்.

இந்நிலையில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக ஸ்ரேயா தெ‌ரிவித்தார். படத்தின் இயக்குனர், ஹீரோ யார் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை. பெ‌ரிய ஹீரோ என்று மட்டும் தெ‌ரிவித்தார்.

பெயர் சொல்ல முடியாத அளவுக்கு அவ்வளவு பெ‌ரிய ஹீரோவா?

Saturday, October 29, 2011

> விஜய் டாடா டோக்கோமோ விளம்பரத்தில்.

தற்போது புதிய தொலைத்தொடர்பு கம்பெனிக்காக விளம்பரத்தில் நடித்திருக்கிறார் விஜய் . அந்தக் கம்பெனி டாடா டோகோமோ.

தமிழைப் பொறுத்தவரை சூப்பர் ஸ்டார்கள் ர‌ஜினி, கமல் இருவரும் விளம்பரத்தில் நடிப்பதில்லை என்ற முடிவில் உள்ளனர். இளம் நடிகர்களில் சூர்யாதான் விளம்பரத்தின் மூலம் லம்பாக சம்பாதித்து வருகிறார். மாதவன், கார்த்தி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

கோக் விளம்பரத்தில் நடித்த விஜய் அதன் பிறகு விளம்பரத்தில் ஈடுபாடு காட்டவில்லை. தற்போது டாடா டோக்கோமோ விளம்பரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு ஒப்பந்தம் போட்டிருக்கிறார்.

> சிம்பு வெற்றிமாறன் இயக்கத்தில்.

வெற்றிமாறன் அடுத்து வட சென்னை படத்தை இயக்குகிறார். இதில் ஹீரோவாக நடிப்பவர் சிம்பு.

வட சென்னை கதையை முதலில் கார்த்தியிடம்தான் சொன்னார் வெற்றிமாறன். சிறுத்தை போன்ற கலெ‌க்ச‌‌ன் பட மோகத்தில் இருந்தவர் வட சென்னை விஷயத்தில் அக்கறை காட்டவில்லை. அதனால் சிம்புவை ஒப்பந்தம் செய்துள்ளார்.

சிம்புக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார். ஆ‌ண்ட்‌ரியாவும் படத்தில் உண்டு. முக்கியமான கேரக்ட‌ரில் தெலுங்கு நடிகர் ராணா நடிக்கிறார். இரண்டு ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதை என்பதால்தான் கார்த்தி படத்திலிருந்து விலகியதாக சொல்லப்படுகிறது.

> ர‌ஜினி பார்த்தார் 7 ஆம் அறிவு.

7 ஆம் அறிவு படத்தை ‌தீபாவ‌ளி அ‌ன்று தனது மகள் ஐஸ்வர்யாவுடன் ர‌ஜினி பார்த்தார்.

சிங்கப்பூர் சிகிச்சைக்குப் பின் இப்போதுதான் வெளியே வர ஆரம்பித்திருக்கிறார் ர‌ஜினி. திருப்பதி சென்று நேர்த்திக் கடன் செலுத்திய அவர் முதல் முறையாக திரையரங்குக்கு வந்து பார்த்த படம் 7 ஆம் அறிவு.

பட‌ம் வெ‌ளியான அதே ‌தின‌த்‌தி‌ல் ர‌ஜினிக்காக ஃபோர் பிரேம் திரையரங்கில் ஸ்பெஷல் ஷோ போடப்பட்டது. திரையரங்குக்கு வந்த ர‌ஜினியை வரவேற்க சூர்யாவும், ஜோதிகாவும் காத்திருந்தனர். படம் பார்த்த ர‌ஜினி சூர்யாவை வெகுவாக பாராட்டியுள்ளார்.

> வேலாயுதமா ,7 ஆம் அறிவா வெற்றிக்கு அருகில்.

இந்த தீபாவளிக்கு இரண்டே படங்கள். வெற்றி பெறப் போவது 7 ஆம் அறிவா, வேலாயுதமா என்று ஏக எதிர்பார்ப்பு. ஓபனிங்கை பொறுத்தவரை இரண்டுமே வெற்றி பெற்றிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.

இரண்டு படங்கள் ஓடும் திரையரங்குகளும் ரசிகர்களால் நிரம்பி வழிந்தன. போட்டி பலமானது என்பதால் விஜய் ரசிகர்கள் அளவுக்கு அதிகமாகவே வேலாயுதத்தை வரவேற்றார்கள். படம் வெளியான அனைத்துத் திரையரங்குகளிலும் இசைக்குழுவை இறக்கிவிட்டு காதுகளை இம்சித்ததை சொல்ல வேண்டும்.

அதே அரைத்த மாவு என்றாலும் ச‌ரியான விகிதத்தில் ஜெயம் ராஜா தந்திருப்பதால் வேலாயுதம் ரசிகர்களை ஏமாற்றவில்லை. 7 ஆம் அறிவு புதிய களம், புதிய முயற்சி. ஆனால் தொய்வான திரைக்கதை ரசிகர்களுக்கு பல நேரம் கொட்டாவியை வரவழைத்தது எதிர்பாராத ஏமாற்றம்.

7 ஆம் அறிவு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத அதேநேரம் வேலாயுதம் ரசிகர்களுக்குப் பிடித்துள்ளது. சுறா, வேட்டைக்காரனெல்லாம் ரசிகர்களையே முகம் கூ‌ளிக்க வைத்தவை.

அந்தவகையில் வேலாயுதத்தின் வெற்றி உறுதி என்கிறார்கள்.

> வசூல் சாதனை ரா.ஒன் பெருமை பெற்றிருக்கிறது.

எதிர்பார்த்தது போலவே வசூல் சாதனை பு‌ரிந்திருக்கிறது ஷாருக்கானின் ரா.ஒன். இந்தப் படம் இந்தியாவில் வெளியான படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை‌ப் பெற்றிருக்கிறது.

சல்மான்கானின் பாடிகா‌ர்ட் படம் முதல் நாளில் 21 கோடிகள் வசூலித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. ரா.ஒன் முதல் நாளில் 22 கோடிகளை வசூலித்துள்ளது. என்றாலும் சல்மான்கான் ரசிகர்கள் இதனை ஒத்துக் கொள்வதாக இல்லை. பாடிகா‌ர்ட் இந்தியில் மட்டுமே வெளியானது. ரா.ஒன் தமிழ், தெலுங்கிலும் வெளியானது. அதே போல் பாடிகா‌ர்ட் வெளியான திரையரங்குகளைவிட ரா.ஒன் வெளியான திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகம்.

அதனால் இதனை சாதனையாக கருத முடியாது என்பது அவர்களின் பதில். சல்மான் இதற்கு என்ன சொல்லப் போகிறார்?

> ஹிருத்திக் டான் 2 வில் ?

டான் 2 படத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிக்கிறார். பாலிவுட்டை இந்தச் செய்தி பரபரப்படைய வைத்திருக்கிறது. ஷாருக்கான் நடித்த டான் மிகப்பெ‌ரிய வெற்றியை பெற்றது. இப்போது டான் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் போஸ்டர்களே ரசிகர்களை அதிகம் கவாந்துள்ளன.

இந்தப் படத்தில் ஹிருத்திக்ரோஷன் வில்லனாக நடிப்பதாக பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனை படத்தின் இயக்குனர் ஃபாரன் அக்தர் மறுத்துள்ளார். டான் 2ல் ஹிருத்திக் நடிப்பதாக வந்த செய்தியில் உண்மையில்லை. பெர்லினில் படப்பிடிப்பு நடந்த போது நட்புக்காகதான் அங்கு வந்தார். ஆனால் சொல்வதற்கில்லை... விரைவில் நாங்கள் ஒன்றாக பணிபு‌ரியலாம் என கழுவுற மீனில் நழுவுற மீனாக பதில் சொல்லியிருக்கிறார்.

ஹிருத்திக் நடிப்பதை சஸ்பென்சாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி மறுப்பு தெ‌ரிவித்திருக்கிறார் என்று இப்போதும் ஹிருத்திக் டான் 2ல் நடிப்பதை நம்பிக் கொண்டிருக்கிறது பாலிவுட்.

Wednesday, October 26, 2011

> சூடுபிடிக்க தொடங்கிடுச்சி தீபாவளி.

தீபாவளிக்கு இரண்டே படங்கள்தான். வேலாயுதம், 7 ஆம் அறிவு. இதில் 7 ஆம் அறிவின் வியாபாரம் மூச்சடைக்க வைக்கிறது. ஏறக்குறைய 100 கோடிக்கு படத்தை விற்றிருப்பதாக‌க் கூறுகிறார்கள்.

இரண்டு படங்கள் என்பதால் போட்டியும் கடுமை. இதனை வேலாயுதம் இயக்குனர் ராஜாவின் சூடான பேச்சிலிருந்து உணர முடிந்தது. பத்தி‌ரிகையாளர் சந்திப்பின் போது, ரா ஒன் என்ன நூறு என்ன, ஆயிரம் அறிவு என்ன எது வேண்டுமானாலும் வரட்டும் என்றார் மசில் தட்டி.

ரா ஒன், 7 ஆம் அறிவு இரண்டையும்தான் இப்படி குறிப்பிட்டார் ராஜா.

தீபாவளி சூடுபிடிக்க தொடங்கிடுச்சி.

Tuesday, October 25, 2011

> சரண்யா மோகன் அ‌ஜீத் ஜோடியாக.

சரண்யா மோகன் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்திருக்கிறார். கன்னட வாய்ப்பு இதுவரை தள்ளியே இருந்தது. இப்போது ஹீரோயினாகவே கன்னடத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதற்காக கன்னடம் படித்து வருகிறார் சரண்யா மோகன். தெலுங்கைவிட கன்னடம் கடினமாக இருக்கிறது என்பது இவ‌ரின் கண்டுபிடிப்பு. இந்தப் படத்தில் இவரது ஜோடியாக நடிப்பவர் கர்நாடகாவின் இளம் நடிகர் அ‌ஜீத்.

நம்ம தல அ‌ஜீத்துன்னு தப்பா நினைச்சிருந்தா... ரொம்ப ஸா‌ரி.

> பிரகாஷ்ரா‌ஜ் சல்மானின் தபாங் 2 படத்தில்.

தபாங் படத்தின் இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடிக்கிறார் பிரகாஷ்ரா‌ஜ்.

தபாங் படத்தின் வெற்றியால் அதன் இரண்டாம் பாகத்தை தயா‌ரிப்பதில் மும்முரமாக இறங்கியுள்ளார் தபாங் படத்தின் தயா‌ரிப்பாளரும், சல்மானின் சகோதரருமான அர்பாஸ் கான்.

இந்தப் படத்தில் தபாங்கில் வில்லனாக நடித்த சோனு சூட்டே வில்லனாக தொர்வார் என்று கூறியிருந்தனர். ஆனால் அது போரடிக்கும் என்பதால் பிரகாஷ்ராஜை வில்லனாக தேர்வு செய்திருக்கிறார்கள். ஏற்கனவே வான்டட், சிங்கம் படங்களில் பிரகாஷ்ரா‌ஜ் வில்லத்தனம் செய்து ரசிகர்களை மிரட்டியிருப்பது முக்கியமானது.

அப்படியானால் சோனு சூட்? படத்தில் அவருக்கும் முக்கிய ரோல் இருக்கிறது. ஆனால் மெயின் வில்லன் பிரகாஷ்ரா‌ஜ்தானாம்.

> தீபாவளிப் படங்கள் ‌சிற‌ப்பு கண்ணோட்டம்.

நான்குப் படங்கள் வெளியாவதாக இருந்த இந்தத் தீபாவளி இறுதியில் இரண்டுப் படங்களாக சுருங்கியிருக்கிறது. உடம்பு ச‌ரியில்லை முன்பு போல் வேலை செய்வது கடினமாக இருக்கிறது என்று தனது மயக்கம் என்ன தீபாவளிக்கு வெளியாகாததற்கு விளக்கம் அளித்துள்ளார் செல்வராகவன். ஒஸ்தி குறித்து சிம்பு எந்த விளக்கமும் தரவில்லை. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி மற்றும் தயா‌ரிப்பு தரப்பின் நெருக்கடி ஆகிய காரணங்களால் ஒஸ்தியும் தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆக, வெளிவரவிருப்பது முருகதாஸின் 7 ஆம் அறிவு, ராஜாவின் வேலாயுதம் இரண்டு மட்டுமே.

மூன்று தீபாவளிக்கு முன்புவரை, நான் விஜய் மாதி‌ரியெல்லாம் கிடையாது, அவரைப் போல் ஆட எனக்கு வராது என்று விஜய்யை புகழ்ந்துப் பேசும் நிலையில் இருந்தார் சூர்யா. இன்று காட்சி மாறியிருக்கிறது. விஜய்யை குறித்துப் பேசுவது, அவருக்கு தேவையில்லாமல் ஒரு அந்தஸ்தை உருவாக்கித் தந்துவிடும் என்று நினைக்கும் இடத்துக்கு சூர்யா வந்திருக்கிறார். ர‌ஜினி, கமலுக்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகரும் இவர்தான். இந்த கௌரவத்தை இதற்கு முன் வைத்திருந்தவர் விஜய். 7 ஆம் அறிவு, வேலாயுதத்துக்கு இடையேயான போட்டியின் கனம் இப்போது ஏகதேசமாக பு‌ரிந்திருக்கும்.

ஷங்கருக்குப் பிறகு கமர்ஷியலில் அடி பின்னுவது முருகதாஸ்தான். இவர் உருவாக்கும் உணர்வுபூர்வமான திரைக்கதைப் பின்னலில் ரசிகர்கள் லா‌ஜிக் ஓட்டைகளை மறந்துவிடுகிறார்கள். இந்தமுறை தமிழனின் பெருமையை சொல்லும் போதி தர்மர் என்று இன உணர்வுக்கு செமத்தியான தீனி தரும் சப்ஜெக்ட். முடிந்த அளவுக்கு இதனை பீக்கிற்கு கொண்டு சென்றிருப்பார். நோக்கு வர்மம், சர்க்கஸ்காரன், இளமை ததும்பும் இளம் விஞ்ஞானி ஸ்ருதி, வெளிநாட்டு வில்லன், ஜெட்லீ டைப் சண்டைகள்... தொலைந்தான் ரசிகன். பிளாக்கில் எவ்வளவுக்கு விற்றாலும் தமிழன் பார்த்துதான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் தேசிய நீரோட்டத்திலிருந்து தள்ளி வைக்கப்படுவோம்.

விஜய்யை பொறுத்தவரை தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். காவலன் பெ‌ரிய வெற்றி என்றதெல்லாம் சும்மா. நான்கு கோடியைக்கூட இப்படம் சென்னையில் வசூல் செய்யவில்லை.

தெய்வத்திருமகள் எட்டு கோடி அளவுக்கு வசூலித்தது. அப்படியானால் காவலன் எந்த மாதி‌ரி வெற்றி என்று பார்த்துக் கொள்ளுங்கள். வேலாயுதத்தைப் பொறுத்தவரை விஜய் இரண்டு மாங்காய் அடித்தாக வேண்டும். முதலில் தொடர் தோல்விக்கு முற்றுப் புள்ளி. இரண்டாவது பாக்ஸ் ஆஃபிஸில் 7 ஆம் அறிவின் பக்கத்திலாவது இருந்தாக வேண்டும். கடினமான இலக்குகள்.

பாக்ஸ் ஆஃபிஸையே வி‌ரித்து பிளாட்ஃபார்ம் ஆக்கியது போன்ற சப்ஜெக்ட் என்பதால் 7 ஆம் அறிவின் வெற்றியில் சந்தேகமில்லை. ஆனால் வேலாயுதம் விஷயம் அப்படியல்ல. கெட்டவனை அழிக்கும் சூப்பர் ஹீரோ. சூப்பர் ஹீரோ கந்தசாமி நொந்த சாமியான ச‌ரித்திரம் நம்மிடையே உண்டு. கிராமத்தில் விதவை தாயார், ஒரே தங்கை சரண்யா மோகன், முறைப்பெண் ஹன்சிகா மோத்வானி என வாழ்ந்துவரும் விஜய், தங்கையின் திருமணத்தை முன்னிட்டு தான் பணம் போட்டிருக்கும் நிதி நிறுவனத்திலிருந்து பணம் எடுக்க பட்டணம் வருகிறார். வந்த இடத்தில் தொலைக்காட்சி நிருபர் ஜெனிலியாவின் அறிமுகம் கிடைக்கிறது. இதனிடையில் பட்டணத்து ரவுடிகளிடமிருந்து ஜெனிலியா காப்பாற்றப்படுகிறார். தன்னை காப்பாற்றியது ஒரு சூப்பர் ஹீரோ என்று ஜெனிலியா ஊடகம் வழியாக செய்தி பரப்புகிறார். இப்போது விஜய்யே அந்த சூப்பர் ஹீரோவாக கெட்டவர்களையெல்லாம் அ‌ழிக்கிறார். இதுதான் வேலாயுதத்தின் ஏகதேசமான கதை. சென்டிமெண்ட், காமெடி, ஆக்சன், காதல் என்று சகலத்தையும் பிழிந்து செய்யப்பட்டிருக்கும் ராஜா ஸ்பெஷல் பதார்த்தம்.

டிக்கெட் ‌ரிசர்வேஷன், திரையரங்குகளின் எண்ணிக்கை, வெளிநாடு மற்றும் கேரள உ‌ரிமை. தொலைக்காட்சி ஒளிபரப்பு உ‌ரிமை என முதல் சுற்றில் வேலாயுதத்தை முந்தியிருக்கிறது 7 ஆம் அறிவு. இறுதி சுற்று எப்படி அமையும் என்பது தீபாவளி அன்று தெ‌ரிந்துவிடும். போதி தர்ம‌ரின் வர்மக் கலையை சூப்பர் ஹீரோ சமாளித்தால் இயக்குனர் ராஜாவுக்கு உண்மையிலேயே ஒரு ஓ போடலாம்.

Monday, October 24, 2011

> பின்னி மில்லில் வேட்டை கிளைமாக்ஸ்.

பின்னி மில் மட்டும் இல்லாவிட்டால் தமிழ் சினிமாவின் நிலை என்னாகும் என்பதை நினைக்கவே முடியவில்லை. நீங்கள் பார்க்கும் முக்கால்வாசிப் படங்களின் கிளைமாக்ஸ் பின்னி மில்லில்தான் எடுக்கப்பட்டிருக்கும்.

அவ்வளவு ஏன்? சிம்புவின் புதிய படம் வேட்டை மன்னன் சண்டைக் காட்சி பின்னி மில்லில்தான் எடுக்கப்பட்டது. ராஜபாட்டை படத்தின் கிளைமாக்ஸுக்கும் அங்குதான் அரங்கு அமைத்து சண்டை போட்டார்கள். லேட்டஸ்ட் வேட்டை.

லிங்குசாமி இயக்கும் வேட்டையில் மாதவன், ஆர்யா, அமலா பால், சமீரா ரெட்டி நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் இறுதி காட்சியும் பின்னி மில்லில்தான் சமீபத்தில் படமாக்கப்பட்டது.

யுவன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை கிறிஸ்துமஸுக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

> அவசரத்தில் பாலா மற்றபடி எந்த மனஸ்தாபமும் இல்லை.

அவன் இவன் பாலா மீதிருந்த க்ரேஸை கடுமையாக கீழிறக்கியது. அதனை மீண்டும் ச‌ரி செய்யும் அவசரத்தில் இருக்கிறார் பாலா. அவசரம் என்று சொல்ல காரணம் இருக்கிறது.

பாலாவின் புதிய படத்தில் இளையராஜாவோ, யுவனோ இல்லை. ‌ஜி.வி.பிரகாஷை பாலா தேர்வு செய்திருக்கிறார். இது ஏன் என்ற கேள்விக்கு யுவன் விளக்கமளித்துள்ளார்.

பாலா ஒரு வாரத்தில் அனைத்துப் பாடல்களும் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அது முடியாது என்பதால்தான் அவர் ‌ஜி.வி.பிரகாஷை தேர்வு செய்திருக்கிறார். மற்றபடி இரு தரப்பிலும் எந்த மனஸ்தாபமும் இல்லை.

அதுதான் வேண்டும்.

> ‌தீபாவ‌ளியை T.V‌யி‌ல் தொலை‌க்கா‌தீ‌ர்க‌ள்.

"இந்தியத் தொலைக்காட்சிகளில்..." என்பது போய், தற்போது "உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக திரைக்கு வந்து சில நாட்களே ஆன...'' இதுதான் அனைத்து தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களும் தற்போது அரைமணி நேரத்திற்கு 60 முறை ஒளிபரப்பப்பட்டு வரும் விளம்பரமாக உள்ளது.

`அனைத்து நிகழ்ச்சிகளையும் பாருங்கள். தீபாவளியைக் கொண்டாடுங்கள்' என்பதோடு நில்லாமல், ``தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தையும் வழங்குவோர்... '' என்று கூறி ஒரு நீண்ட பெரிய பட்டியலையும் குறிப்பிடுவார்கள்.

அந்தப் பட்டியல் முழுவதும் பல கோடி ரூபாய் விளம்பரங்கள் என்பது டி.வி முன் பண்டிகை நாளில் தவமிருக்கும் பல்லாயிரக்கணக்கானோருக்கு தெரிய வாய்ப்பில்லை.

தீபாவளிப் பண்டிகை என்றால் பொதுவாக அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து, வீட்டில் விளக்கேற்றி கடவுளை வழிபட்டு, புத்தாடை அணிந்து உரிய இனிப்பு உள்ளிட்ட பதார்த்தங்களை சாப்பிட்ட பின் கோயி‌ல்களுக்குச் சென்று வழிபடுவதாக இருந்தது ஒருகாலத்தில்.

ஆனால், இன்று தீபாவளி உட்பட அனைத்துப் பண்டிகைகளும் சில, பல தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் சிறப்பு நிகழ்ச்சிகளாய் மாறி சின்னாபின்னமாகிச் சிக்கித் தவிக்கிறது.

காலையில் எழுந்தவுடனேயே தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை ஒவ்வொரு சேனல்களாக மாற்றி, மாற்றிப் பார்க்கும் நிலைதான், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது எண்ணமுமாக உள்ளது.

பிரபல, முன்னாள், இந்நாள் - நடிகர், நடிகைகள், அவர்களின் நடிப்புலக அனுபவங்கள் (!?) அல்லது அவர்கள் காதல் மனைவியுடன் அவர்களது `தலைதீபாவளி அனுபவங்கள்' என தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்திலும் (எந்த சேனல்களும் விதிவிலக்கல்ல) சினிமாவின் ஆதிக்கம் தொற்றிக்கொண்டாகி பல ஆண்டுகள் ஆகி விட்டன.

இதில் சில தொலைக்காட்சிகளில் `ஷூட்டிங் ஸ்பாட்' வேறு. நடிகர் - நடிகைகளின் தீபாவளியைப் பார்க்கும் ஆர்வத்தில் நம் வீட்டு தீபாவளிக் கொண்டாட்டங்களையல்லவா தொலைத்து விடுகிறோம்?

இதற்கெல்லாம் ஒரே தீர்வு, தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலாவது டி.வி.-க்கு விடுமுறை என்ற உறுதியை வீட்டிலிருப்பவர்கள் எடுத்து, கேபிளை ஒருநாளாவது எடுத்து விடுவது தான்.

அக்கம்-பக்கம் வீட்டில் இருந்து சத்தம் கேட்டால் கவலையில்லை.

குழந்தைகளுடன் அல்லது வீட்டிற்கு வரும் உறவினர்களுடன், வீட்டில் உள்ள தாய் - தந்தை, பாட்டி-தாத்தா உள்ளிட்ட மூத்தவர்களுடன் பல விஷயங்களைப் பகிர்ந்து, தீபாவளியைக் கொண்டாடலாம். அனைவரும் ஒரே இடத்தில் விடுமுறையில் இருப்பதால், அவர்களை ஒட்டுமொத்தமாக சந்திப்பதே பெரிய நிலையாகி விட்ட இக்காலகட்டத்தில், மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டு கலந்து பேசி களிக்கலாம்.

அப்போது தான் வருங்கால சந்ததியினருக்கு தீபாவளியின் முக்கியத்துவமும், கொண்டாட்டங்களின் அனுபவங்களும் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சி சேனல்கள் இல்லாத கால கட்டத்தில் கொண்டாடப்பட்ட தீபாவளியின் மகிழ்ச்சி இப்போது இல்லை.

பட்டாசு கொளுத்துவது கூட டி.வி-யில் ஏதாவது செய்தி (!?) போன்ற பார்க்க விரும்பாத நிகழ்ச்சி வரும் போதுதான் என்பதை பெரும்பாலானோர் வாடிக்கையாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேதனையிலும் வேதனை.

தீபாவளிப் பண்டிகை மட்டுமல்ல. பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு, விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் என அனைத்துப் பண்டிகைகளின் போதும் இதே நிலைதான். சிறப்பு நிகழ்ச்சிகளை அளிப்பதன் மூலம் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தினர் பல்லாயிரம் கோடியை கல்லா கட்டி விடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

அந்த நிகழ்ச்சிகளை வெறுமனே எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிட்டபடியே பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு, வீணான நோயும், மூளை அழற்சியும், உடல் சோர்வும் ஏற்படுவதான் நாம் பெறும் பரிசாக உள்ளது.

மகிழ்ச்சி என்பது பண்டிகை நாட்களில் வீணாக டி.வி. முன் அமர்ந்திருப்பது அல்ல என்பதை பெரியவர்கள் உணர்வதுடன் மட்டுமல்லாமல், தங்கள் வீட்டில் உள்ள இளையோருக்கும் அதனை உணர்த்த வேண்டும் என்பதே இக்கட்டுரையின் மூலம் விருப்பம்.

Sunday, October 23, 2011

> நண்பன் ஆடியோ டிசம்பரில்.

விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா நடித்திருக்கும் நண்பன் படத்தின் ஆடியோ டிசம்பர் மாதம் வெளியிடப்படுகிறது. இதனை படத்தின் இயக்குனர் ஷங்கர் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது.

நண்பன் வேலைகள் 100 சதவீதம் முடிந்துவிட்டன. பொங்கலுக்கு படம் திரைக்கு வருகிறது. அதற்குமுன் டிசம்பரில் படத்தின் ஆடியோ வெளியிடப்படும்.

நண்பன் அமீர்கானின் 3இடியட்ஸ் படத்தின் ரிமேக். மூன்று ஹீரோக்கள் தவிர இலியானா, அனுயா, சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

> தூ‌க்குடு தமிழ் ‌ரிமேக்கில் விஜய் நடிப்பாரா.

தூக்குடு ஆந்திராவில் மிகப்பெ‌ரிய வெற்றியை பெற்றிருக்கிறது. பொதுவாக ஒரு படம் வெற்றி பெற்றால் அதன் ‌ரிமேக் உ‌ரிமையை யார் வாங்குகிறார்கள் என்பதில் ஹீரோக்கள் கவனம் செலுத்துவதில்லை. மகேஷ் பாபு வேறு மாதி‌ரி.

தூக்குடுவின் இந்தி ‌ரிமேக்கில் சல்மான்கான் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தெ‌ரிவித்திருப்பவர் அவ‌ரின் சகோதரர் அர்பாஸ் கானுக்கே ‌ரிமேக் உ‌ரிமையை தந்திருக்கிறார். அர்பாஸ் கான் தயா‌ரிக்க தூக்குடு ‌ரிமேக்கில் சல்மான் நடிக்கயிருக்கிறார்.

அதேபோல் தமிழில் மகேஷ்பாபுவின் சாய்ஸ் விஜய். ஏற்கனவே மகேஷ்பாபுவின் ஒக்கடு, போக்கி‌ரி ‌ரிமேக்கில் விஜய் நடித்திருக்கிறார்.

முருகதாஸ் படம் அடுத்து கௌதம் படம் என விஜய்யின் ஷெட்யூல்ட் டைட்டாக இருப்பதால் தூ‌க்குடு தமிழ் ‌ரிமேக்கில் அவர் நடிப்பாரா என்பது சந்தேகம் என்கிறார்கள் இன்டஸ்ட்‌ரியில்.

> அ‌ஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில்?

இப்போதைக்கு கேள்விக்குறியாகதான் இருக்கிறது. சிறுத்தை படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் அ‌ஜீத் நடிக்கக்கூடும் என்கிறார்கள்.

பில்டலா 2 ல் கவனம் செலுத்தி வரும் அ‌ஜீத் அடுத்து ஏ.எம்.ரத்னம் தயா‌ரிக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை அனேகமாக விஷ்ணுவர்தன் இயக்கக்கூடும். இதையடுத்து நாகி ரெட்டிக்கு படம் பண்ணித்தர ஒப்புக் கொண்டிருக்கிறாராம் அ‌ஜீத். இந்தப் படத்தை சிவா இயக்கலாம், ஹீரோயின் அனுஷ்கா என்று தகவல் சொல்கிறார்கள்.

சம்பந்தப்பட்டவர்கள் இதுகுறித்து எதையும் உறுதி செய்வில்லை என்பது முக்கியமானது.

Friday, October 21, 2011

> டோனி பிரகாஷ்ரா‌ஜ் படத்தில்.

இந்திய கி‌ரிக்கெட் அணியின் கேப்டன் டோ‌னி, பிரகாஷ்ரா‌ஜ் தயா‌ரித்து இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

குழந்தைகளை அவர்களின் தனித் திறமையை கண்டறிந்து அவர்களின் போக்கில் வளரவிட வேண்டும் என்ற கருத்தை அடிப்படையாக வைத்து பிரகாஷ்ரா‌ஜ் தயா‌ரித்து இயக்கும் படம் டோனி. இந்தப் படத்தில் வரும் சிறுவனின் ரோல் மாடல் டோனி. அதனால் படத்தின் பெயரை டோனி என்று வைத்துள்ளனர்.

தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தில் இரு மொழி கலைஞர்களும் நடித்து வருகின்றனர். ஒரு பாடல் காட்சியில் பிரபுதேவா நடனம் ஆடுகிறார். டோனியை மையப்படுத்திய கதை என்பதால் ஒரு காட்சியில் கி‌ரிக்கெட் வீரராகவே அவர் நடிக்கிறார். இதற்கான சம்மதத்தையும் அவர் பிரகாஷ்ரா‌ஜிடம் தெ‌ரிவித்துள்ளார்.

> விஜய் ஒஸ்தி ஆடியோ வெளியீட்டு விழாவில்

சிம்புவின் ஒஸ்தி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் கலந்து கொண்டார்.

சிம்பு அ‌‌ஜீத்தின் தீவிர ரசிகர் என்பது எல்லோருக்கும் தெ‌ரியும். விஜய்யுடன் நடித்தால் அ‌‌ஜீத் ரசிகர்களுக்கு பிடிக்காது என்று நண்பன் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பையே மறுத்தவர். அவரது விழாவில் விஜய்யா? விழாவுக்கு வந்தவர்கள் அனைவ‌ரின் புருவமும் உயர்ந்தது.

ஒஸ்தியை தரணி இயக்கியுள்ளார். தரணிக்கு நெருக்கமானவர் விஜய். அதனாலேயே விஜய் ஒஸ்தி விழாவில் கலந்து கொண்டார் என்கிறார்கள். எப்படியோ துருவங்கள் இணைவது நல்லதுதானே.

> ர‌ஜினி பேட்டி ஜனவ‌ரியில் ராணா.

ஜனவ‌ரியில் ராணா படப்பிடிப்பு தொடங்கும் என ரஜனிகாந்த் தெ‌ரிவித்தார். திருப்பதிக்கு வந்தபோது அவர் இதனை‌‌த் தெ‌ரிவித்தார்.

பூரண உடல்நலம் பெற்ற ர‌ஜினி நேற்று குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையானை த‌ரிசிக்க வந்தார். சாமி கும்பிட்டபின் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். கேள்விகள் பெரும்பாலும் ராணாவை பற்றியதாகவே இருந்தன.

இதற்குப் பதிலளித்த ர‌ஜினி, ராணா தொடங்க இன்னும் ஓ‌ரிரு மாதங்கள் ஆகும். காரணம் இது பிரமாண்ட படம். காஸ்ட்யூம் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். எப்படியும் ஜனவ‌ரி மாதம் படம் தொடங்கிவிடும் என்றார்.

பேட்டியின் போது அவர் தனது உடல்நலத்திற்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி தெ‌ரிவித்தார்.

Thursday, October 20, 2011

> விஜய் ஹைதராபாத்துக்கும் செல்வாரா?

விஜய்யின் படங்கள் தமிழில் வெளியாகும் அதேநாள் தெலுங்கிலும் வெளியாகும். கர்நாடகாவில் தமிழ் ரசிகர்கள் அதிகம் என்பதால் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் தமிழிலேயே படம் வெளியாகும்.

அனேகமாக தமிழகம் தவிர்த்து வேறு மாநிலங்களுக்கு படத்தை விளம்பரப்படுத்த விஜய் செல்வதில்லை. வேலாயுதம் விஷயம் வேறு. வெற்றிபெற வேண்டும் என்பதைத்தாண்டி 7ஆம் அறிவை முந்த வேண்டிய நிர்ப்பந்தமும் உள்ளது. இதனால் படத்தை விளம்பரப்படுத்த பெங்களூரு சென்றார் விஜய். பெங்களூரு பூர்ணிமா திரையரங்கில் நடந்த நிகழ்ச்சியில் விஜய் கன்னடத்தில் பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

விஜய் ஹைதராபாத்துக்கும் செல்வார் என‌த் தெ‌ரிகிறது.

> நயன்தாரா இன்னும் பல சுவாரஸியமான செய்திகளை‌த் தருவாரா?

தன் மீதுள்ள காதலால் நடிப்பையே துறந்தவர் நயன்தாரா என்று உணர்ச்சிவசப்பட்டிருந்தார் பிரபுதேவா. அந்த‌க் காதலி மீண்டும் நடிக்கயிருப்பதாக செய்தி கசிந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முதல் மனைவி ரமலத்தை பிரபுதேவா விவாகரத்து செய்த பிறகு உடனடியாக பிரபுதேவா நயன்தாரா திருமணம் நடக்கும் என்றே எண்ணியிருந்தனர். ஆனால் திருமணம் தள்ளிப் போனது. இந்நிலையில் பிரபுதேவா தனது குழந்தைகளை‌ச் சென்று சந்தித்துள்ளார். நயன்தாராவுக்கு தெ‌ரியாமல் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இதனால் கோபமான நயன்தாரா பிரபுதேவாவை தனது கேரள வீட்டில் அனுமதிக்கவில்லை.

ஆனால் இதனை நயன்தாரா மறுத்துள்ளார். பிரபுதேவாவுடன் ஒற்றுமையாக இருப்பதாக அவர் தெ‌ரிவித்துள்ளார். நயன்தாரா இப்படி கூறினாலும், குழந்தைகளுடன் உள்ள உறவை முறித்தால் மட்டுமே பிரபுதேவாவுடன் திருமணம் என்பதில் உறுதியாக இருப்பதாக நயன்தாராவுக்கு நெருக்கமானவர்கள் தெ‌ரிவிக்கிறார்கள். பிரபுதேவாவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காக அவர் மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதாகவும் தெ‌ரிவிக்கிறார்கள்.

நயன்தாரா இன்னும் பல சுவாரஸியமான செய்திகளை‌த் தருவார் என நம்பலாம்.

Wednesday, October 19, 2011

> இந்து மக்கள் கட்சி ர‌ஜி‌னிகா‌ந்‌த், கம‌ல்ஹாச‌‌னை கடுமையாக சாடியு‌ள்ளது.

''ஊருக்கு ஒரு உபதேசம், தனக்கு ஒரு உபதேசம் என்று நடிக‌ர்க‌ள் இருக்கக்கூடாது'' எ‌ன்று உ‌ள்ளா‌ட்‌சி தே‌ர்த‌‌லி‌ல் வா‌க்க‌ளி‌‌க்காத ர‌ஜி‌னிகா‌ந்‌த், கம‌ல்ஹாச‌‌ன் உ‌ள்‌ளி‌ட்ட நடிக‌ர், நடிகைகளை இந்து மக்கள் கட்சி கடுமையாக சாடியு‌ள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. ''உள்ளாட்சி என்பது இதயம் போன்றது. மக்களுடன் நேரடி தொடர்பில் இருந்து பிரச்சனைகளை தீர்க்க கூடியது. இத்தேர்தலில் சிறப்பாக பணியாற்றக் கூடியவர்களை மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்வது ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமை'' எ‌ன்று இந்து மக்கள் கட்சி‌யி‌ன் மா‌நில அமை‌‌ப்பு செயலாள‌ர் க‌ண்ண‌ன் இ‌ன்று வெ‌‌ளி‌யி‌ட்டு‌ள்ள அற‌ி‌க்கை‌யி‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சாதாரண பிரஜைகளை விட பிரபலங்களாக இருப்பவர்கள் நிச்சயம் ஓட்டு போட்டு தங்களின் ஜனநாயக கடமைகளை ஆற்றுவது அவசியம் எ‌ன்று கூ‌றியு‌ள்ள க‌ண்ண‌ன், திரையுலகில் இருக்கும் ரஜினி, கமல், சூர்யா, கார்த்தி, ஆர்யா, திரிஷா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் தேர்தலில் ஓட்டு போடாதது வேதனை அ‌ளி‌‌ப்பதாக தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

''திரைப்படங்களில் அரசியல்வாதிகள் தேர்தல் வாக்காளர்களின் கடமை போன்றவற்றை காட்சிப்படுத்துகின்றனர். ஓட்டு போடுவதன் அவசியத்தை வற்புறுத்துகின்றனர். மக்கள் பிரதிநிதிகளின் கடமைகளை போதிக்கின்றனர். நிஜ வாழ்க்கையிலும் நடிகர், நடிகைகள் அதுபோல் இருக்க வேண்டும். ஊருக்கு ஒரு உபதேசம், தனக்கு ஒரு உபதேசம் என்று இருக்கக்கூடாது என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்'' எ‌ன்று‌ம் க‌ண்ண‌ன் தனது அ‌றி‌க்கை‌யி‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

நடிகர், நடிகைகள் தவறாமல் ஓட்டு அளிப்பது ரசிகர்களையும் ஜனநாயக கடமையாற்ற தூண்டுவதாக அமையும் எ‌ன்று‌ம் அதை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் எ‌ன்று‌ம் க‌ண்ண‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வா‌க்க‌ளி‌க்காத நடிக‌ர், நடிக‌ைக‌ள் ‌மீது சா‌டு‌ம் இ‌ந்து ம‌க்க‌ள் அவ‌ர்க‌ளி‌ன் சூ‌ழ்‌நிலையை பு‌ரி‌ந்து கொ‌ண்டு அ‌றி‌க்கை ‌வி‌ட்டு இரு‌க்‌கிறதா எ‌ன்று தெ‌‌‌ரிய‌வி‌ல்லை. ஒவ்வொரு தேர்தலில் தவறாமல் வாக்களிக்கும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இந்த முறை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கவில்லை.

'விஸ்வரூபம்' படத்துக்காக சென்னையின் புறநகர்ப் பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்துகொண்டதால் கமல்ஹாசன் வாக்களிக்கவில்லை எ‌ன்று கூற‌ப்ப‌டு‌கிறது. 'பில்லா 2' படப்பிடிப்புக்காக கோவா சென்றுள்ளதால் அஜித்குமா‌ர் வாக்களிக்கவில்லையாகு‌ம்.

'மாற்றான்' படத்துக்காக ர‌‌ஷ்யா சென்றுள்ளதால் சூர்யாவும், 'சகுனி' படத்துக்காக போலந்து சென்றுள்ளதால் கார்த்தியும் வாக்களிக்கவில்லை.

உடல் நலக் குறைவுக்காக சிகிச்சை மேற்கொண்டு தீவிர ஓய்வில் இருக்கும் ரஜினியின் உடல் நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஸ்டெல்லா மேரிஸ் பள்ளிக்கு வாக்களிக்க வருவார் என எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்ப‌ட்டது. ஆனால் நீண்ட நாள்களுக்குப் பிறகு பொது இடத்துக்கு வந்தால் செ‌ய்‌தியாள‌ர்களை சமாளிப்பது சிரமமாக இருக்கும் என்று கருதியதால் வாக்களிப்பதை தவிர்த்துவிட்டார் என ரஜினிகாந்த் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

நாடாளுமன்றம், சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஆர்வத்துடன் வாக்களித்த நடிகர், நடிகையர் பலர் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க அதிக ஆர்வம் காட்டவில்லை எ‌ன்பதே உ‌ண்மை.

> உளவியல் நிபுணர் எச்சரிக்கை சிறுவர்கள் இணைய தளத்திற்குஅடிமையா?

14 வயது முதல் 24 வயது வரை உள்ள சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை இணையதளத்திற்கு அடிமையாவதை பெற்றொர்கள் எச்சரிக்கையுடன் அணுகவேண்டும் என்று ஜெர்மனியைச் சேர்ந்த உளவியல் நிபுணர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜெர்மனி பெடரல் சுகாதார அமைச்சகத்தின் தகவல்களின் படி 14 முதல் 24 வயதுள்ளோர் வரை இணையதளத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.

இதில் 2.4% முற்று முழுதான இணையதள அடிமைகள், 13.6% பிரச்சனை பயனாளர்கள் என்று வகைப்படுக்தியுள்ளனர்.

ஜெர்மனியின் மெய்ன்ஸ் பல்கலைக் கழகத்தின் சூதாட்ட அடிமைகள் புற நொயாளிகள் பிரிவில் பணியாற்றும் இயக்குனர் கிளாஸ் வுல்ஃபிளிங் என்பவர் இதனை தெரிவித்துள்ளார்.

'பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் இணையதள அடிமைகளாகி தனிமைப்பட்டுப் போய் விட அனுமதிக்கக் கூடாது. பெற்றொர்கள் குழந்தைகளிடத்தில் இதுபோண்ற அறிகுறிகளைக் கண்டவுடன் அவர்களிடம் பேசி நயமாக வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்கிறார் இவர்.

குறிப்பாக ஆந்லைன் கணினி விளையாட்டுக்களுக்கு சிறுவர்கள் அடிமையாகி வருவது பெருத்துள்ளது என்று இவர் கூறுகிறார். கணினி விளையாட்டுக்களில் ஒரு பிரச்சனையை தீர்ப்பது என்கிற வகையில் ஆட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் குழந்தைகள் இயல்பிலேயே அதன் பக்கம் சென்று விடுகின்றனர்.

இது தவிர சோசியல் நெட்வொர்க், அரட்டைகளுக்கு அடிமையாவதும் அதிகத்துள்ளது. அதாவது எதார்த்த வாழ்க்கையில் அல்லது நிஜமான உலக வாழ்க்கையில் அவர்களுக்கு கிடைக்காத தனி அடையாளம் இதில் கிடைப்பதாக இவர்கள் உணர்வதே அடிமைக்கு இட்டுச் செல்கிறது.

இணையதளத்தில் நண்பர்களை அடைகின்றனர். எப்போதும் அவர்கள் இணையத்தில் இருப்பதால் தனிமை இல்லை. ஆனால் உண்மையான சமூகத்திலிருந்து அன்னியப்பட்டு விடுகின்றனர் என்கிறார் இந்த ஜெர்மானிய உளவியல் நிபுணர்.

இதனை வலுக்கட்டாயமாக தடுக்க நினைத்தால் கடுமையான உளவியல் சிக்களுக்கு இவர்கள் ஆளாகின்றனர். தூக்கமின்மை உள்ளிட்ட பிற மன நோய்களும் ஏற்படுகிறது என்கிறார்.

அடிமையாகாமல் இணையதளத்தைப் பயன்படுத்துவோர் ஒருநாளைக்கு 3 மணிநேரம் இணையத்தில் இருக்கிறார்கள் என்றால் அடிமைகள் 8 மணி நேரத்திற்கும் கூடுதலாக அதில் புழங்குகின்றனர்.

இணையதளத்தை கட்டுப்பாட்டுடன் எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய விழிப்புணர்வு தேவை என்று கூறியுள்ளார் இவர்.

> 5 நாட்களுக்கு 7 ஆம் அறிவு ஹவுஸ் ஃபுல்.

இன்று காலை 7 ஆம் அறிவு படத்தின் ‌ரிசர்வேஷன் தொடங்கியது. தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள் அனைத்துத் திரையரங்குகளிலும் ஐந்து நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

தீபாவளிப் படங்களில் மற்ற எல்லாப் படங்களை விடவும் 7 ஆம் அறிவு படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதற்கேற்ப ‌ரிசர்வேஷன் தொடங்கிய இன்று ஒரு மணி நேரத்திலேயே ஐந்து தினங்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. சனி, ஞாயிறு தினங்களுக்கான டிக்கெட்டுகள் வழங்கப்படவில்லை. வழங்கியிருந்தால் அந்தத் தினங்களும் ஹவுஸ்ஃபுல்லாகியிருக்கும்.

சென்னையில் 7 ஆம் அறிவு வெளியாகும் திரையரங்குகளில் சத்யம் திரையரங்கில் மட்டும் ‌ரிசர்வேஷன் டிக்கெட்டுகள் வழங்கப்படவில்லை.

> எங்கேயும் எப்போதும் முதலிடத்தில் சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்.

5. மங்காத்தா
மங்காத்தா இந்த வருடத்தின் மெகா ஹிட்டாக பாக்ஸ் ஆஃபிஸில் தன்னை பதிவு செய்துள்ளது. எட்டே கால் கோடியை இதுவரை சென்னையில் மட்டும் இப்படம் வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 3.69 லட்சங்கள்.

4. வேலூர் மாவட்டம்
நந்தா நடித்திருக்கும் வேலூர் மாவட்டம் முதல் பத்து தினங்களில் 43.59 லட்சங்களை வசூலித்துள்ளது. சென்ற வார இறுதியில் 5.17 லட்சங்களை மட்டுமே இப்படத்தால் வசூலிக்க முடிந்துள்ளது.

3. முரண்
சேரன் தயா‌ரித்து நடித்திருக்கும் முரண், வித்தியாசமான கதைக் களத்தை விரும்பும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இரண்டு வாரங்கள் முடிவில் 96 லட்சங்களை வசூலித்திருக்கும் இப்படம் சென்ற வார இறுதியில் எட்டு லட்சங்களை வசூலித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

2. வெடி
சன் பிக்சர்ஸின் திகட்டும் விளம்பரங்களால் படம் இரண்டாவது வாரத்தையும் வெற்றிகரமாக தாக்குப் பிடித்துதுள்ளது. இரண்டு வாரங்கள் முடிவில் வெடியின் வசூல் 3 கோடிகள். சென்ற வார இறுதி வசூல் 22.2 லட்சங்கள்.

1. எங்கேயும் எப்போதும்
தொடர்ந்து முதலிடத்தில் எங்கேயும் எப்போதும். அறிமுக இயக்குனர் சரவணனின் இப்படம் சென்ற வார இறுதியில் 26 லட்சங்களை வசூலித்துள்ளது. நான்கு வாரங்கள் முடிவில் இதன் சென்னை வசூல் 4.09 கோடிகள்.

Tuesday, October 18, 2011

> பில்லா 2 கோவாவில்.

பில்லா 2-வின் படப்பிடிப்பு கோவாவில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் அ‌‌ஜீத், பார்வதி ஓமன குட்டன் எல்லோரும் கலந்து கொள்கிறார்கள்.

படத்தின் சண்டைக் காட்சி ஒன்றும் கோவாவில் படமாக்கப்பட்டது. இந்த சண்டைக் காட்சியின் போது அ‌‌ஜீத்தின் கையில் அடிபட்டு ரத்தம் கொட்டியிருக்கிறது. யூனிட்டில் உள்ள அனைவரும் பதறிப் போயிருக்கிறார்கள். அ‌‌ஜீத் மட்டும் நிதானமாக, விஷயத்தை வெளியே சொல்லி பரபரப்பு ஏற்படுத்த வேண்டாம் என்று காயத்துடன் சண்டையை கண்டினியூ செய்திருக்கிறார்.

விஷயம் அவரது வீட்டிற்குகூட தெ‌ரியாது என்பதுதான் ஹைலைட்.

> விக்ரம், ஐங்கரன்,K.V.ஆனந்த் பிரமாண்டத்துக்கு குறைவிருக்காது.

ஐங்கரன் தயா‌ரிப்பில் படம் நடிக்க விக்ரம் சில வருடங்கள் முன் வாக்குறுதி தந்திருந்தார். அதனை நிறைவேற்ற இப்போது வாய்ப்பு அமைந்திருக்கிறது.

சமீபத்தில் விக்ரம், கே.வி.ஆனந்த் சந்தித்தனர். அப்போது ஆனந்த் ஒரு கதை சொல்ல விக்ரமுக்கு கதை ரொம்பவே பிடித்துவிட்டது. மாற்றானுக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்க உள்ளார் ஆனந்த். அதற்குள் ராஜபாட்டை, க‌ரிகாலன் படங்களை முடித்துவிடும் முனைப்பில் உள்ளார் விக்ரம்.

இவர்கள் இணையும் படத்தை ஐங்கரன் நிறுவனம் தயா‌ரிக்கிறது.

கே.வி.ஆனந்த், விக்ரம், ஐங்கரன்.. பிரமாண்டத்துக்கு குறைவிருக்காது.

Monday, October 17, 2011

> அடுத்த ஆட்டத்துக்கு தயார் மூன்று ஹீரோக்கள் நடிக்கும் படம்.

தமிழ்ப் படம் இயக்கிய அமுதன் அடுத்தப் படத்துக்கு தயாராகி வருகிறார். இதில் மூன்று பேர் நடிக்கிறார்கள்.

இதுவரை வெளிவந்த தமிழ்ப் படங்களை சகட்டுமேனிக்கு கிண்டல் அடித்து எடுக்கப்பட்ட படம் தமிழ்ப் படம். கிளவுட்நைன் சார்பில் தயாநிதி அழகி‌ரி தயா‌ரிக்க அமுதன் இயக்கியிருந்தார். படம் பெ‌ரிய வெற்றியை‌ப் பெற்றது.

தற்போது அமுதன் அடுத்த ஆட்டத்துக்கு தயார். இவரது புதிய படத்தில் முதல் பட ஹீரோ மிர்ச்சி சிவாவுடன் வைபவ், ‌ரிச்சர்ட் ஆகியோரும் நடிக்கிறார்கள். தமிழ்ப் படம் போலவே இதுவும் காமெடியை மையப்படுத்தியே தயாராகிறது.

> விக்ரம் K.V.ஆனந்த் இயக்கத்தில் ?

இந்தக் கேள்விக்குறி அடுத்த வருட மத்தியில் ஆச்ச‌ரியக்குறியாக மாறலாம். ஆம், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விக்ரம் நடிப்பதற்கான வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது.

‌ஜீவாவை வைத்தே ஒரு சூப்பர்ஹிட் படத்தைக் கொடுத்ததால் கே.வி.ஆனந்துக்கு எல்லா ஹீரோக்களிடமும் நல்மதிப்பு. தற்போது சூர்யாவை வைத்து மாற்றான் படத்தை ஆனந்த் இயக்கி வருகிறார்.

இந்தப் பட வேலைகளுக்கு நடுவில் விக்ரமை சந்தித்து ஒரு கதை சொல்லியிருக்கிறார். விக்ரமுக்கு கதை பிடித்திருக்கிறது. இதனால் மாற்றானுக்கு அடுத்து ஆனந்த் விக்ரமை இயக்குவார் என்று உறுதியாக நம்புகிறார்கள்.

விரைவில் ஆச்ச‌ரிய அறிவிப்புகள் வரலாம்.

> விரைவில் ராணா சௌந்தர்யா அறிவிப்பு.

ராணா படம் தொடங்கப்படுமா என்பதில் இப்போதும் இழுபறி நிலவுகிறது. இந்நிலையில் கி‌ரிஸ்டல் கிளியர் ஸ்டேட்மெண்ட் வந்திருக்கிறது ர‌‌‌‌‌ஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவிடமிருந்து.

அப்பா பூரண நலமடைந்துவிட்டார். ராணா படத்தை தொடங்க அவர் ஆர்வமாக இருக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என அவர் தெ‌ரிவித்துள்ளார். மேலும் ரா.ஒன்னில் ர‌‌‌ஜினி சிட்டியாக நடித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

சௌந்தர்யா ராணா படத்தின் இணை இயக்குனர். இதனால் ராணா தொடங்கப்படுமா என்ற சந்தேகத்தின் கடைசி துளியையும் அவ‌ரின் ஸ்டேட்மெண்ட் துடைத்தெறிந்திருக்கிறது.

> 7 ஆம் அறிவு, வேலாயுதத்துக்கு U சான்றிதழ்.

தீபாவளிக்கு வெளியாகும் இரண்டு படங்களுக்கும் சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

7 ஆம் அறிவு படத்தைப் பார்த்த சென்சார் ஆட்சேபம் தெ‌ரிவிக்காமல் யு சான்றிதழ் வழங்கியது போல வேலாயுதம் படத்துக்கும் க்ளீன் யு வழங்கியுள்ளது.

வேலாயுதத்தில் ஏறக்குறைய ராபின்ஹுட் வேடம் விஜய்க்கு. பத்தி‌ரிகை நிருபராக ஜெனிலியாவும், கிராமத்துப் பெண்ணாக ஹன்சிகாவும் நடித்துள்ளனர். ஆக் ஷன் காட்சிகள் நிறந்த படம். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.

வேலாயுதம் சென்னை மற்றும் புநக‌ரில் மட்டும் 38 திரையரங்குகளில் வெளியாகிறது.

Saturday, October 15, 2011

> சுந்தர் சி அரைக்கும் மசாலா.

நடிப்புக்கு முழுக்குப் போட்ட சுந்தர் சி. விமல், சிவா, பிந்து மாதவி, அஞ்சலி நடிக்கும் படத்தை இயக்குகிறார். குஷ்பு தயா‌ரிக்கும் இந்தப் படம் சுந்தர் சி-யின் வழக்கமான கமர்ஷியல் காமெடிகளுடன் தயாராகிறது.

இந்தப் படத்தில் சுந்தர் சி நடிக்கவில்லை. காமெடி ஏ‌ரியாவுக்கு சந்தானத்தை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்தப் படத்துக்கு சுந்தர் சி மசாலா என்று பெயர் வைத்துள்ளார்.

காரமாக இருக்காதே?

> கமல் மகள் மணிரத்னம் படத்தில் நடிக்கவில்லை.

கமலின் இளைய மகள் அக் ‌ஷ்ரா மணிரத்னத்தின் புதிய படத்தில் அறிமுகமாவதாக தகவல்கள் வந்தன. ஆனால் அதற்கான வாய்ப்பில்லை என்பதை அக் ஷாராவின் புதிய முடிவு தெ‌ளிவுப்படுத்தியிருக்கிறது.

திரைக்குப் பின்னால் இருப்பதே தனக்குப் பிடித்திருப்பதாக அக் ஷரா ஏற்கனவே தெ‌ரிவித்திருந்தார். அதன்படி இந்தி இயக்குனர் ஒருவ‌ரிடம் உதவி இயக்குனராக பணிபு‌‌ரிந்து வந்தார். தற்போது அவர் தனது தந்தை கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் விஸ்வரூபம் படத்தில் உதவி இயக்குனராக பொறுப்பேற்றிருக்கிறார்.

இந்த புதிய முடிவு அவர் மணிரத்னம் படத்தில் நடிக்கப் போவதில்லை என்பதை தெ‌ளிவுப்படுத்தியுள்ளது.

> 30 காமெடியன்களும் சந்தானமும்.

சந்தானம் பெரும்பாலும் சோலேவாகதான் காமெடி செய்கிறார். அதிகம் போனால் இரண்டு பேர் அட்மாஸ்பியருக்காக உடனிருப்பார்கள். அதிகமும் சிங்கிள்மேன் ஷோதான்.

மாறாக வேலாயுதம் படத்தில் சந்தானத்துடன் 30 காமெடியன்கள் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். சந்தானம் அவர்களின் லீடர். ஆக்சன் கதையாக இருந்தாலும் விஜய் படம் என்பதால் காமெடிக்கு அதிமுக்கியத்துவம் தந்திருக்கிறார் இயக்குனர் ராஜா.

வேலாயுதம் ரசிகர்களின் சி‌ரிப்பு தீபாவளி.

> மீண்டும் இந்திப் படம் இயக்கும் முருகதாஸ்

7 ஆம் அ‌றிவுக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தை முருகதாஸ் இயக்குகிறார். இதனையடுத்து அவர் மீண்டும் இந்திக்கு செல்கிறார். ஹீரோ ஷாருக்கான்.

இந்தி க‌ஜினியின் வெற்றி டாப் ஹீரோக்களின் ஃபேவரைட் இயக்குனராக முருகதாஸை ஆக்கியது. பலரும் அவரது இயக்கத்தில் நடிக்க விரும்பினர். ஆனால் அதனை மறுத்து தமிழுக்கு வந்தார். 7 ஆம் அறிவு தீபாவளிக்கு வெளியாகிறது. அடுத்து விஜய் படம்.

இதனை முடித்த பின் அவர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இது குறித்து பேசிய ஷாருக்கான், முருகதாஸ் இரண்டு கதைகள் சொன்னார். இரண்டுமே பிடித்திருந்தது. எந்த ஸ்கி‌ரிப்ட் முதலில் தயாராகிறதோ அதில் நடிப்பேன் என்று தெ‌ரி‌வித்தார்.

ஆக, முருகதாஸ் மீண்டும் இந்திக்கு செல்வது உறுதியாகியிருக்கிறது.

Friday, October 14, 2011

> ர‌ஜினி ரா.ஒன் ட்ரெய்‌ல‌‌ரில்.

ரா.ஒன்னில் ர‌ஜினி நடித்த பிறகு அதி உற்சாகமாக இருக்கிறார் ஷாருக்கான். ரா.ஒன் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை ஷாருக்கான் அடைந்திருக்கிறார். குறிப்பாக தென்னிந்தியாவில் படத்தை கடைசி ரசிகன் வரை கொண்டு சேர்க்கலாம் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக ர‌ஜினி நடித்த காட்சிகள் இடம்பெறும் புதிய ட்ரெய்லரை ஷாருக்கான் வெளியிடுகிறார். சிகிச்சைக்குப் பின் புகைப்படத்தில் மட்டுமே ர‌ஜினியை பார்த்திருந்த அவரது ரசிகர்களுக்கு இது புது உற்சாகமாக அமையும், திரையரங்குக்கும் அவர்களை இந்த ட்ரெய்லர் அதிக எண்ணிக்கையில் ஈர்க்கும்.

ஷாருக்கான் நல்ல நடிகர் மட்டுமல்ல, திறமையான தொழிலதிபரும்கூட.

> ஒஸ்தி ஐந்து பாடல்களுடன்.

தமன் இசையில் ஐந்து அட்டகாசமான பாடல்களுடன் ஒஸ்தி வெளியாகிறது. இதன் ஆடியோ வெளியீட்டு விழா வரும் 19ஆம் தேதி சென்னையில் நடக்கிறது.

ஒஸ்தி மாமேய்.. என்ற பாடலை வாலி எழுதியுள்ளார். ச‌ரியான குத்துப் பாடல் இது. உன்னாலே உன்னாலே எனத் தொடங்கும் பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். தமனே இந்தப் பாடலை பாடியிருக்கிறார். உடன் பெண் குரலும் உண்டு.

படத்தின் ஹைலைட்டான குத்துப் பாடலை வாலி எழுதியுள்ளார். சிம்பு இந்தப் பாடலில் மல்லிகா ஷெராவத்துடன் ஆடியிருப்பதாக கூறப்படுகிறது. பொண்டாட்டி என்ற பாடலை யுகபாரதியும் இன்னொரு பாடலை சிம்புவும் எழுதியுள்ளனர். சிம்பு தான் எழுதியப் பாடலுக்கு தானே பாடியுள்ளார்.

> மாதவன் மகிழ்ச்சியில்.

மாதவன் நடித்த இந்திப் படம் ஜெர்மன் மொழியில் வெளியாகியிருக்கிறது. இந்திய நடிகர்கள் யாருக்கும் வாய்க்காத இந்த‌ப் பெருமை மாதவனை மகிழ்ச்சி மாதவனாக மாற்றியிருக்கிறது.

மாதவன் நடித்த பல படங்கள் இந்தியில் மிகப்பெ‌ரிய வெற்றியை‌ப் பெற்றிருந்தாலும் அவையெல்லாம் வேறு ஹீரோக்களுடன் இணைந்து நடித்தப் படங்கள். சோலோவாக மாதவனுக்கு வெற்றி தேடித் தந்தப் படம் தனு வெட்ஸ் மனு. இந்தப் படத்தை ஜெர்மன் மொழியில் டப் செய்து வெளியிட்டிருக்கிறார்கள்.

அளவுகடந்த மகிழ்ச்சியுடன் தனது ஜெர்மனி ரசிகர்களுக்கு வாழ்த்தும் நன்றியும் தெ‌ரிவித்துள்ளார் மாதவன்.

> அபிராமி ராமநாதன் வாங்கிய ரா-1.

ர‌ஜினி நடித்திருப்பதால் ர‌ஜினி படங்களுக்கு‌ரிய எதிர்பார்ப்பு ரா.ஒன் படத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. போதாதற்கு தமிழிலும் படத்தை வெளியிடுகிறார் ஷாருக்கான்.

ரா.ஒன் படத்தின் தமிழ் பதிப்பின் உ‌ரிமையை அபிராமி ராமநாதன் வாங்கியுள்ளார். தமிழ்நாடு மட்டுமின்றி ரா.ஒன்னின் ரா-1 தமிழ் உ‌ரிமையும் இவர் கைவசமே உள்ளது.

7 ஆம் அறிவு, வேலாயுதம் படங்களுக்கு இணையாக ரா-1க்கும் எதிர்பார்பபு உள்ளது முக்கியமானது.

> கிறிஸ்மஸ் கோடம்பாக்கத்தில் களைகட்டப் போகிறது.

தீபாவளிக்கு 7ஆம் அறிவும், ரா.ஒன்னும் திரையரங்குகளை வளைத்துவிட்டதால் மயக்கம் என்ன, ஒஸ்தி ஆகியவை நவம்ப‌ரில் திரைக்கு வருகின்றன. வேலாயுதத்தின் முடிவு கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது.

சுசீந்திரனின் ராஜபாட்டை கிறிஸ்மஸ் விடுமுறைக்கு திரைக்கு வருகிறது. பொதுவாக பெ‌ரிய நடிகர்களின் படங்கள் கிறிஸ்மஸ் விடுமுறையில் வெளியாவதில்லை. அதைவிட பொங்கல் நல்ல சாய்ஸ்.

இந்தமுறை லிங்குசாமியின் வேட்டையும் கிறிஸ்மஸ் தினத்தில் வெளியாவதற்கான வாய்ப்பு உள்ளது. தயா‌ரிப்பாளர் தரப்பில் அப்படியொரு எண்ணம் இருப்பதாக‌த் தெ‌ரிவிக்கிறார்கள். ஷங்க‌ரின் நண்பன் பொங்கலுக்கு வெளியாகும் என்றார்கள். கிறிஸ்மஸைத் தொடர்ந்து நியூ இயர், பொங்கல் என விடுமுறைகள் வருவதால் பொங்கலைவிட கிறிஸ்மஸுக்கு படத்தை வெளியிடலாமே என யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த கிறிஸ்மஸ் களைகட்டப் போகிறது.

Thursday, October 13, 2011

> தனுஷ் ஆதிவாசி.

அடுத்து சிம்புதேவன் இயக்கும் மா‌ரிசன் படத்தில் நடிக்கிறார் தனுஷ். இதில் அவருக்கு மூன்று வேடங்களாம்.

வித்தியாசமான கதைக்களத்தில் படம் உருவாக்குவதில் சிம்புதேவன் வல்லவர். எந்தக் கதைக்களமாக இருந்தாலும் நையாண்டி நிச்சயம். மா‌ரிசன் ச‌ரித்திரப் பின்னணியில் தயாராகப் போகிறதாம்.

தனுஷின் மூன்று கேரக்டர்களில் ஆதிவாசி கெட்டப் ஒன்றும் உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த கதாபாத்திரத்துக்கு கோவணம் மட்டுமே உடை என்றொரு அதிர்ச்சி தகவலும் வெளியாகியிருக்கிறது. காமெடியாக படமெடுப்பவர் ஏனிப்படி கர்ண கடூரமாக யோசிக்கிறார் என்று தெ‌ரியவில்லையே.

Wednesday, October 12, 2011

> மங்காத்தா எட்டு கோடியை‌த் தாண்டியது.

மங்காத்தா வெளியான போது சென்னையில் இப்படம் எட்டு கோடியை‌த் தாண்டும் என்று குறிப்பிட்டிருந்தோம். நமது வாக்கை மெய்ப்பித்திருக்கிறது இந்தப் படம்.

ஐந்து வாரங்கள் முடிந்த நிலையில் மங்காத்தா சென்னையில் 8.19 கோடிகளை வசூலித்துள்ளது. இது சிங்கம், சிறுத்தை, தெய்வத்திருமகள் படங்களின் வசூலைவிட அதிகம். அதேநேரம் எந்திரன், தசாவதாரம் படங்களின் வசூலைவிட குறைவு.

அ‌‌ஜீத் படங்களில் சென்னையில் அதிகம் வசூலித்தப் படமும் மங்காத்தாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

> ர‌‌ஜினியை இன்னும் சந்திக்கவில்லை ஷாருக்கான்.

ரா-1 (த‌மி‌ழ்) படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. ஷாருக்கான் இந்த விழாவில் கலந்து கொண்டார். அவருடன் மணிரத்னம், ர‌ஜினி மகள் சௌந்தர்யா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விழாவுக்குப் பின் நிருபர்களிள் கேள்விக்கு பதிலளித்த ஷாருக்கான், ர‌‌ஜினியை இன்னும் சந்திக்கவில்லை, இனிதான் சந்திக்க வேண்டும் என்று தெ‌ரிவித்தார். இது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. கி‌ரிக்கெட் போட்டிக்காக சென்னை வந்த ஷாருக் ர‌ஜினியை சந்தித்ததாக முன்னணி ஊடகங்கள் எழுதியிருந்தது நினைவிருக்கலாம். ஷாருக்கானே ர‌ஜினியை சந்திக்கவில்லை என்று சொன்னது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

> தமிழ்நெட்வேர்க் செய்திகளை S.M.S மூலம் இலவசமாக பெற்று கொள்ள

எமது தளத்தில் இடம்பெறும் முக்கிய செய்திகள் மற்றும் பல்சுவை தகவல்களை உங்களது கையடக்க தொலைபேசியில் உடனுக்குடன் பெற்று கொள்ளுங்கள் . இது முற்றிலும் இலவசமான சேவை , இந்த செய்தி சேவையை செயற்படுத்த உங்களது கையடக்க தொலைபேசியில் Follow (இடைவெளி) Tamilnetwork என டைப் செய்து 40404 என்ற இலக்கத்திற்கு அனுப்புங்கள்.

Etisalat, Dailog , Mobitel (Sri Lanka) வலையமைப்பின் வாடிக்கையாளர்கள் Follow Tamilnetwork என டைப் (Type) செய்து 40404 என்ற இலக்கத்திற்கு SMS அனுப்புவதன் மூலமும் Bharti Airtel, Reliance, Videocon, TATA DOCOMO (India) வலையமைப்பின் வாடிக்கையாளர்கள் Follow Tamilnetwork என டைப் (Type) செய்து 53000 என்ற இலக்கத்திற்கு SMS அனுப்புவதன் மூலமும் இச்செய்திச் சேவையை உடனடியாக பெற்றுக்கொள்ளமுடியும்.

வெளிநாடுகளில் உள்ள எமது வாசகர்கள் அந்த நாடுகளின் கையடக்கத் தொலைபேசி வலையமைப்பில் Follow Tamilnetwork என டைப் (Type) செய்து கீழே பட்டியலில் வழங்கப்பட்டுள்ள நாட்டின், வலையமைப்பின் இலக்கங்களுக்கு SMS அனுப்புவதன் மூலம் இச்செய்திச் சேவையை பெற்றுக்கொள்ளமுடியும்.

Afghanistan: 40404 (Roshan)
Argentina: 89338 (Movistar, Personal,)
Aruba: 176 (Digicel)
Antigua: 176 (Digicel customers)
Anguilla: 176 (Digicel customers)
Australia: 0198089488 (Telstra customers)
Bahrain 88000 (VIVA), 98555 (Zain customers)
Bangladesh: 9594(Citycell customers)
Belarus: 40404 (life:) customers)
Bermuda: 176 (Digicel customers)
Brasil: 40404 (TIM andNextel customers)
Bhutan 40404 (B-mobile)
Bolivia: 40404 (Viva and Tigo customers)
Bonaire: 176 (Digicel customers)
Canada: 21212 (Any customers)
Colombia: 40404 (Tigo customers)
Cambodia: 40404 (Cellcard, Smart Mobile)
Cameroon: 8711(MTN)
Curacao: 176 (Digicel)
Democratic Republic Congo: 40404 (Tigo customers)
Denmark: 40404 (Telmore)
Egypt: 4040 (Vodafone customers), 2222 (Mobinil customers)
El Salvador: 40404 (Digicel and Tigo customers)
Fiji: 40404 (Digicel and Vodafone customers)
Georgia: 40404 (Beeline customers)
Grenada: 176 (Digicel customers)
Guatemala: 40404 (Tigo and Movistar customers)
Guyana: 1443 (Digicel customers)
Haiti: 40404 (Digicel customers)
Honduras: 40404 (Digicel customers)
India: 53000 (Bharti Airtel, Reliance, Videocon, and TATA DOCOMO customers)
Indonesia: 89887 (AXIS, 3, Telkomsel, XL Axiata, TelkomFlexi, and Indosat)
Iraq: 71117 (Zain); 1432 (Asiacell)
Ireland: 51210 (Vodafone, Meteor Mobile customers)
Isle of Man: 89887 (Manx customers)
Italy: 4880804 (Wind customers), +3424486444 (Vodafone customers)
Jamaica: 176 (Digicel customers)
Jordan: 90903 (Zain customers); 98788 (Umniah customers)
Kazakhstan: 4040 (Beeline, Kcell/Activ customers); 40404 (Airtel customers)
Kenya: 89888 (Safaricom customers); 40404 (Airtel customers)
Kuwait: 89887 (Zain customers)
Korea: #1234 (LG U+ customers)
Kyrgyzstan: 4040 (Megacom, Beeline Customers)
Macedonia: 40404 (VIP customers)
Madagascar: 40404 (VIP)
Malaysia: 28933 (Maxis, Tune Talk, DiGi)
Maldives: 4040 (Wataniya customers)
Mexico: 6464 (Telcel customers)
Nauru: 40404 (Digicel customers)
New Zealand: 8987 (Vodafone and Telecom NZ customers)
Nicaragua: 89887 (Movistar)
Nigeria: 40404 (Zain and MTN customers ); 20644 (Glo Mobile customers)
Pakistan: 40404 (Mobilink, Zong, Ufone, and Telenor customers)
Palestinian Territories: 40404 (Wataniya customers); 37373 (Jawwal customers)
Panama: 3010 (Digicel customers)
Papua New Guinea: 40404 (Digicel customers)
Paraguay: 40404 (Personal)
Romania: 89338 (Vodafone and Cosmote customers)
Russia: 8080 (Beeline customers)
Rwanda: 3434 (MTN customers)
Saudi Arabia: 840404 (STC customers)
Saudi Arabia: 710001 (Zain customers)
Saudi Arabia: 606040 (Mobily customers)
Serbia: 40404 (Vip mobile, mt:s, and Telenor customers)
Seychelles: 9695 (Airtel customers)
Sri Lanka: 40404 (Dialog, Telecom Mobitel, and Etisalat Lanka customers)
St. Lucia: 176 (Digicel customers)
St. Vincent: 176 (Digicel customers)
St. Kitts: 176 (Digicel customers)
Sudan: 40404 (Zain customers)
Sweden: 71017(3 customers)
Tonga: 40404 (Digicel customers)
Trinidad and Tobago: 40404 (Digicel customers)
Turkey: 2444 (Vodafone and Telsim customers)
Uganda: 179 (MTN customers)
UK: 86444 (Vodafone, Orange, 3 and O2 customers)
Ukraine: 40404 (life:) customers)
United Arab Emirates: 335640404 (Zain)
Uruguay: 40404 (Antel)
US: 40404 (Any customers)
Uzbekistan: 89338 (Beeline, Ucell customers)
Venezuela: 89338 (Movistar)
Yemen: 7070 (MTV)

Monday, October 10, 2011

> ஷாருக், சூர்யா நேரடிப் போட்டி.

ர‌ஜினி நடித்துள்ளதால் ரா. ஒன் படத்தின் மார்க்கெட் எகிறியிருக்கிறது. ர‌ஜினியை பார்க்க அவரது ரசிகர்கள் ஒருமுறை ரா. ஒன்னைப் பார்த்தாலே படம் ஹிட்தான். தமிழில் வேறு ரா. ஒன்னை டப் செய்து வெளியிடுகிறார்கள்.

இதன் காரணமாக 7 ஆம் அறிவு படத்தின் நேரடி போட்டியாக ரா. ஒன் மாறியுள்ளது. அப்படியானால் வேலாயுதம்?

தீபாவளிக்கு முதல் நாள் வெளியாகும் என்று சொல்லப்பட்ட இப்படம் திரையரங்குகள் ச‌ரியாக கிடைக்காததால் வெளிவருமா என்பது சந்தேகம் என்கிறார்கள். படத்தை தயா‌ரித்திருப்பது ஆஸ்கர் ரவிச்சந்திரன் என்பதால் கண்டிப்பாக வெளியாகும் என்றும் சொல்கிறார்கள்.

வேலாயுதம் வெளியானாலும் 7 ஆம் அறிவு, ரா. ஒன் இரண்டுக்கும்தான் போட்டி. இவ்விரு படங்களைதான் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.

> சந்தானம் வடிவேலுக்குப் பதில்.

சுந்தர் சி. இயக்கும் படத்தில் வடிவேலு நடிப்பதாக வந்த செய்திகளை சுந்தர் சி. மறுத்திருந்தார். இப்போது தனது படத்தின் காமெடியன் யார் என்பதை அறிவித்துள்ளார்.

நடிப்பு கை கொடுக்காததால் இயக்கத்துக்கு திரும்பியிருக்கும் சுந்தர் சி. தனது படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த வடிவேலுவை காமெடியனாக ஒப்பந்தம் செய்ததாக செய்திகள் வெளியாயின. இதனை அவர் மறுத்தார். அத்துடன் சந்தானத்தை தனது படத்தில் ஒப்பந்தம் செய்திருப்பதாக அறிவித்துள்ளார்.
உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.