Tuesday, January 31, 2012

> வட சென்னையில் பிரச்சனை

தனது வட சென்னை படத்தின் ‌ரிகர்சலை வெற்றிகரமாக முடித்துவிட்டார் வெற்றிமாறன். ஆனால் பிரச்சனை புது வழியில் கிளம்பியிருக்கிறது.

வட சென்னையில் நடிக்க ராணா டகுபதி தயாராக இருக்கிறார். கதையும், அவரது கேரக்டரும் அவரை இம்ப்ரஸ் செய்திருக்கிறது. ஒரே பிரச்சனை படத்தின் ஹீரோ சிம்பு என்பது. இந்த அதிருப்தியுடன்தான் படத்தில் நடிக்க சம்மதம் தெ‌ரிவித்தார்.

வெற்றிமாறன் நடத்திய ஆக்டிங் வொர்‌க்சாப்பில் சிம்பு, ராணா இருவருமே கலந்து கொள்ளவில்லை. இருவரும் வேறு படங்களில் பிஸி. இந்நிலையில் வெற்றிமாறன் கேட்ட தேதிகளில் ராணாவால் கால்ஷீட் ஒதுக்க முடியாத சூழல். இதனை காரணமாக வைத்து ராணா படத்திலிருந்து விலக முடிவெடுத்திருக்கிறார். ஆனாலும் ராணாவிடம் பேசி அவரது கால்ஷீட்டை பெறுவது என்பதில் வெற்றிமாறன் உறுதியாகயிருக்கிறார்.

யாருடைய பிடிவாதம் வெல்லப் போகிறது, பார்ப்போம்.

> 2012இன் அதிர்ஷ்டக்கார நடிகை காஜலா ?

காஜலிடம் என்னதான் இருக்கு என்று தேடினால் பூ‌ஜ்‌ஜியம்தான் சிக்கும். ஆனால் அதிர்ஷ்டம்... இப்போது இவர் காட்டில்தான் அடை மழை.

இந்த பொம்மலாட்ட பொண்ணு இப்போது சூர்யாவுடன் மாற்றான் படத்திலும், முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் துப்பாக்கிப் படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கில் இதைவிட டாப். மகேஷ்பாபுவின் பிசினஸ்மேனில் இவர்தான் ஹீரோயினாக நடித்திருந்தார். பூ‌ரி ஜெகன்நாத் இயக்கியிருக்கும் இப்படம் ஆந்திராவில் நன்றாகவே போகிறது. இதையடுத்து பூ‌ரி ஜெகன்நாத் பவன் கல்யாணை வைத்து இயக்கும் படத்திலும் இவர்தான் நாயகி.

2012இன் அதிர்ஷ்டக்கார நடிகை என்றால் காஜலின் பக்கம்தான் கை காட்டுகிறது ஆந்திரா.



> துப்பாக்கி ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் கையிலா ?

இயக்கம் முருகதாஸ், நடிப்பு விஜய். இந்த காம்பினேஷனுக்கு கோடியில் பணம் கொட்ட தயாராக இருக்கிறார்கள். இதில் முதலில் முந்திக் கொண்டது ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் என்கிறார்கள்.

தாதா கதையான இதில் காஜல் ஹீரோயினாக நடிக்கிறார், ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ் இசை. இந்தப் படத்தின் விநியோக உ‌ரிமையை ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் லம்பாக ஒரு தொகைக்கு வாங்கியிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

ஜெமினி முந்திக் கொண்டதால் வேறு பல தயா‌ரிப்பு நிறுவனங்க‌ள் அப்செட்டில் இருக்கின்றனவாம்.

> ர‌ஜினி நடித்ததாக சொன்னது வதந்தி சௌந்தர்யா விளக்கம்.

கோச்சடையான் என்ற படத்தில் ர‌ஜினி நடிக்கிறார் என்றதும் அது யார்யா கோச்சடையான் என்று அகழ்வாராய்ச்சியில் இறங்கின சில பத்தி‌ரிகைகள். அந்தளவுக்கு ஆழமாகப் போக முடியாதவர்கள் அவரவர் அபிப்பிராயங்களை எழுத, ஏ‌ரியாவில் பெரும் குழப்பம். அதில் முக்கியமானது, கோச்சடையான் ஷூட்டிங்கில் ர‌ஜினி கலந்து கொண்டார் என்பது.

ஆனால் உண்மை வேறு. ர‌ஜினியின் விதவிதமான புகைப்படங்களை சேக‌ரித்து கம்ப்யூட்ட‌ரில் ப்ரெஷ்ஷாக வரைந்து கொண்டிருக்கிறார்கள். இது போன்ற கிரவுண்ட் வொர்க்தான் தொடங்கப்பட்டிருக்கிறதே தவிர, படப்பிடிப்பு இன்னும் ஆரம்பிக்கவில்லை. அப்படியானால் ர‌ஜினி நடித்ததாக சொன்னது?

அது சும்மா வதந்தி. இதனை சௌந்தர்யாவே தெ‌ளிவாக தெ‌ரிவித்திருக்கிறார்.

Monday, January 30, 2012

> வெங்கட்பிரபு படத்தில் காமெடி வேடத்தில் சூர்யா

யார் சூர்யாவை வைத்து படம் செய்தாலும் இடையில் அவரை வைத்து படம் பண்ணுவார் ஹ‌ரி. வாரணம் ஆயிரம் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போதுதான் அதன் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி தனது வேல் படத்தை வெற்றிகரமாக முடித்தார் ஹ‌ரி. ஆனால் யானைக்கும் அடி சறுக்குமில்லையா?

மாற்றானுக்குப் பிறகு ஹ‌ரிதான் சூர்யாவை இயக்குவதாக இருந்தது. ஆனால் இப்போது அந்த புராஜெக்ட் ட்ராப். அவருக்குப் பதில் வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார்.

இது வெங்கட்பிரபு பாணியில் அமைந்த காமெடிக் கதையாம். மாயாவிக்குப் பிறகு சூர்யா காமெடி வேடத்தில் நடிப்பதால் படத்தைப் பார்க்க எல்லோருக்கும் ஆர்வம். ஷூட்டிங் எப்போ போகப் போறீங்க?

> கௌதமும், ஹா‌ரிஸும் இப்போதைக்கு இணையப் போவதில்லை.

கௌதமும், ஹா‌ரிஸும் மீண்டும் இணைகிறார்கள். சென்னை குடிசையை ஆக்கிரமிக்கும் தீ மாதி‌ரி இந்த‌ச் செய்தியை அடிக்கடி கொளுத்திப் போடுகிறார்கள். இந்த‌ச் சூடு ஹா‌ரிஸ் காதுவரைக்கும் சென்றிருக்கிறது. இதற்கு தனது பாணியில் சூசகமாக பதிலளித்திருக்கிறார்.

நண்பன் படத்தின் இசைக்கு கிடைத்த பாராட்டை பற்றி குறிப்பிடும் போது நடுவில் கௌதம் மேட்டரையும் சேர்த்திருக்கிறார். கௌதமுடன் வேலை பார்ப்பீர்களா என்று கேட்கிறார்கள். நான் இது பற்றியெல்லாம் யோசிக்கிற நிலையில் இல்லை, வேறு படங்களில் பிஸியாக இருக்கிறேன் என்று விட்டேத்தியாக அவர் சொன்ன பதிலிலுக்கு ஒரேயொரு அர்த்தம்தான்.

இப்போதைக்கு இவர்கள் இணையப் போவதில்லை.

Sunday, January 29, 2012

> பாலு மகேந்திரா சசிகுமார் தயா‌ரிப்பில்.

ஏறுகிற மேடைகளில் எல்லாம் படம் தயா‌ரிக்க கோடிகள் வேண்டாம் லட்சங்கள் போதும் என்று எகிறி அடிப்பவர் பாலு மகேந்திரா. சொன்னதை இவர் செயலிலும் காட்டப் போகிறார் என்பதுதான் அதிரடி.

பாலு மகேந்திராவின் படங்களில் ஆடம்பர ஷாட் ஒன்றுகூட இருக்காது. சிக்கனமாக படமெடுப்பதில் இவரை அடிக்க ஆளில்லை. இவரது எல்லாப் படங்களும் லட்சங்களுக்குள் அடங்குபவை.

அடுத்து சசிகுமார் தயா‌ரிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார். படத்தின் பட்ஜெட் ஜஸ்ட் 90 லட்சங்கள். கதாநாயகியின் காஸ்ட்யூமுக்கு ஒரு கோடி செலவளித்தேன் என்று வீண் ஜம்பம் பேசுகிறவர்களுக்கிடையில் கேமரா கவிஞர் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்.

> விஸ்வரூபம் கிளைமாக்ஸ் வரை சைலண்ட்

விஸ்வரூபம் படத்தை சைலண்டாக எடுத்து வருகிறார் கமல்ஹாசன். படத்தின் ஸ்டில் முதற்கொண்டு எதுவும் வெளிவரவில்லை. கதையைப் பற்றிய அவுட்லைன் கூட யாருக்கும் தெ‌ரியாது. இத்தனை கறாராக கிளைமாக்ஸ் வரை படத்தை கொண்டு வந்துவிட்டார் என்பது ஆச்ச‌ரியம்.

ஜோர்டான், யுகே, அமெ‌ரிக்கா என பறந்து பறந்து படப்பிடிப்பை நடத்தியவர் தற்போது கிளைமாக்ஸை எடுக்க திட்டமிட்டுள்ளார். டெல்லியில் படப்பிடிப்பு நடத்துவதற்காக அனைத்து அனுமதியும் வாங்கப்பட்டிருப்பதாக விஸ்வரூபம் யூனிட் தெ‌ரிவிக்கிறது.

பூஜா குமார் நாயகியாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் ஆ‌ண்ட்‌ரியா, இஷா ஷெர்வானி ஆகியோரும் நடிக்கின்றனர்.

> த்‌ரிஷாதான் பெஸ்ட் கொண்டாடுகிறார்கள் ஆந்திரா ரசிகர்கள்.

த்‌ரிஷா, வெங்கடேஷ் நடித்த தெலுங்கு பாடிகாட் வெளியாகியிருக்கிறது. இந்த ‌ரிலீஸுக்காகதான் த்‌ரிஷா காத்திருந்தது.

பாடிகா‌ர்டின் ஒ‌ரி‌ஜினலான மலையாளத்தில் நயன்தாரா நடித்திருந்தார். தமிழில் அசின். இவர்கள் செய்த அதே வேடத்தைதான் த்‌ரிஷா தெலுங்கில் செய்திருந்தார். ஒரு வேடத்தை மூன்று மொழிகளில் மூன்று முன்னணி நடிகைகள் நடிக்கும் போது யார் பெஸ்ட் என்ற கேள்வி வருமல்லவா?

இந்த கேள்விக்கு ஆந்திரா ரசிகர்கள் த்‌ரிஷாதான் பெஸ்ட் என கொண்டாடுகிறார்கள். ஃபேஸ்புக்கில் த்‌ரிஷாவை அந்த காலத்து சாவித்தி‌ரியுடன் ஒப்பிடுகிறார்களாம்.

த்‌ரிஷா சந்தோஷப்படவில்லை என்றால்தான் ஆச்ச‌ரியம்.

> மீண்டும் தேதி மாறியிருக்கிறது சகுனி படம்

மாஸ் ஹீரோக்களின் படங்கள் திருவிழா தினங்களில்தான் வெளியிட வேண்டும் என்று பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, மே தினம், தீபாவளி என ஐந்து தினங்களை மட்டுமே தயா‌ரிப்பாளர்கள் சங்கம் ஒதுக்கியிருக்கிறது.

இந்த புதிய விதிமுறையால் பிப்ரவ‌ரியில் வெளியாவதாக இருந்த சகுனி ‌ரிலீஸ் ஏப்ரல் 13ஆம் தேதிக்கு தள்ளிப் போயுள்ளது. இந்தப் படம் மட்டுமின்றி பிப்ரவ‌ரியில் வெளியாவதாக இருந்த தனுஷின் கொலவெறி படமும் ஏப்ரல் மாதத்துக்கு தள்ளிப் போயுள்ளது.

Saturday, January 28, 2012

> சிம்ரன் சாயலில் S.J.சூர்யாவின் இசை ஹீரோயின்

வாலி வந்த போதே இசை என்றொரு சப்ஜெக்ட் வைத்திருப்பதாக கூறி வந்தார் எஸ்.ஜே.சூர்யா. இந்தி, தெலுங்கு என்று அலைந்ததில் இப்போதுதான் இசைக்கு நேரம் கிடைத்திருக்கிறது.

இந்தப் படத்திலும் சூர்யாதான் ஹீரோ. அவரே இயக்கி நடிக்கிறார். ஹீரோயின்? சூர்யாவின் சாய்ஸ் சிம்ரன். இன்றைய தேதியில் சிம்ரனை ஹீரோயினாக்கினால் குழந்தைகள் பயந்துவிடும் என்பதால் அவரது சாயலில் மும்பை மாடல் ஒருவரை தேர்வு செய்திருக்கிறாராம். 100 பேரை பார்த்து அதில் இவர் தேர்வாகியிருக்கிறார்.

நூறில் ஒருத்தி.

> அமிதாப், ர‌ஜினி ஒரே படத்தில் இனைகிறார்கள்.

மகேஷ்பாபுவை வைத்து இயக்கிய பிசினஸ்மேன் தூக்குடு அளவுக்கு வெற்றி பெறவில்லை. என்றாலும் பூ‌ரி ஜெகன்நாத்தின் முகத்தில் பிரகாசம் பின்னியெடுக்கிறது. காரணம் ஒரே படத்தில் இரண்டு சூப்பர் ஸ்டார்களை இயக்கப் போகிறார்.

இந்தியில் அமிதாப்பச்சனை இயக்கிய பூ‌ரி ஜெகன்நாத் மீண்டும் அவரை வைத்து ஒரு படம் பண்ணுகிறார். இந்தப் படத்தில் நடிக்கும்படி ர‌ஜினியிடம் கேட்டிருக்கிறார். அமிதாப், ர‌ஜினி உறவு இந்தியா அறிந்த ஒன்று. உடனே ஓகே சொல்லியிருக்கிறார் ர‌ஜினி.

ஷூட்டிங் எப்போது வைத்துக் கொள்ளலாம் என்று காலண்டரை புரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

> ஜீவாவுடன் த்‌ரிஷா தமன்னா?

ஜீவா நடிக்கும் புதிய படத்தில் அவரது ஜோடியாக த்‌ரிஷா நடிக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது. வாமனன் படத்தை இயக்கிய அகமதுதான் இந்தப் புதிய படத்தை இயக்குகிறார். வாமனன் ஹாலிவுட் படத்தின் அட்டை காப்பி என்பது குறிப்பிடத்தக்கது.

விஷயம் அதுவல்ல. தெலுங்கில் மார்க்கெட் இறங்கியதால் தமிழில் ‌‌ரீ-எ‌ண்ட்‌ரியாகத் துடிக்கும் தமன்னாவும் இந்தப் படத்தில் நடிக்கிறாராம். சென்ற வருடம் வரை சோலோவாக ஷோ காட்டியவர் இந்த டபுள் கேமிற்கு எப்படி ஒத்துக் கொண்டார் என்பதுதான் தெ‌ரியவில்லை.

> சேரன் நேரடியாகவே அமீர் மீது கோபத்தை காட்டியிருக்கிறார்.

பெப்சி இல்லாமல் படமெடுக்க முடியாது என்று அமீர் கூறியதற்கு இயக்குனர்கள் சங்கத்திலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. சேரன் அதனை வெளிப்படையாகவே காட்டியிருப்பது சூழலை மேலும் சூடாக்கியிருக்கிறது.

பெப்சியும் தயா‌ரிப்பாளர்கள் சங்கமும் முட்டிக் கொண்டடிருப்பதால் எந்நேரமும் போராட்டம் வெடிக்கும் சூழலில் தமிழ் சினிமா இருக்கிறது. இந்நிலையில்தான் பெப்சி இல்லாமல் படமெடுக்க முடியாது என்று தன்னிச்சையாக பேட்டி கொடுத்தார் அமீர். சின்ன தயா‌ரிப்பாளர்களை கணக்கில் எடுக்காமல் அமீர் பேசியிருக்கிறார். இயக்குனர்கள் சங்கம் சார்பில் அவர் மீது நடவடிக்கை எடுப்போம் என்று சேரன் நேரடியாகவே அமீர் மீது கோபத்தை காட்டியிருக்கிறார்.

இயக்குனர்கள் சங்க நிர்வாகிகள் இடையேயான பனிப்போர் விரைவில் நிஜப்போராகிவிடும்.

Friday, January 27, 2012

> சமந்தா நட்சத்திர பேட்டி நானும் தமிழ்ப் பொண்ணுதான்.

கௌதம் வாசுதேவ் மேனனின் கண்டுபிடிப்பு நடிகை சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் கெஸ்ட் ரோல். ஆனால் அதன் தெலுங்கு ‌ரீமேக்கில் சமந்தாதான் ஹீரோயின். படம் ஹிட்டாக, இரண்டு வருடங்களுக்கு கால்ஷீட் இல்லை என்று அழகாக உதட்டை பிதுக்கிக் காட்டுகிறார் இந்த பளிங்கு சிலை. அவருடன் ஒரு மினி பேட்டி.

கௌதமின் படங்களில் தொடர்ந்து நடிக்கிறீர்களே...?

ஆமாம், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சின்ன ரோலில் நடித்தேன். அதே படத்தின் தெலுங்கு ‌ரீமேக்கில் நான்தான் நாயகி. அப்புறம் நடுநிசி நாய்கள் படத்தில் சின்னதாக ஒரு வேடம் தந்தார். மீண்டும் இப்போது நீதானே என் பொன்வசந்தம் படத்தில் ஹீரோயின்.

இந்தத் தொடர் வாய்ப்புகளுக்கு என்ன காரணம்?

அதை நீங்கள் கௌதமிடம்தான் கேட்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை அவர் சிறந்த டைரக்டர். அவரது படங்களில் நடிப்பது கம்ஃபர்ட்டாக இருக்கிறது. ஆனால் காரணமே இல்லாமல் சிலர் என்னையும், அவரையும் இணைத்து காஸிப் எழுதுகிறார்கள். அதுதான் வருத்தமாக இருக்கிறது.

நன்றாக தமிழ் பேசுகிறீர்களே?

ஹலோ... நானும் தமிழ்ப் பொண்ணுதான். படித்ததும் வளர்ந்ததும் இதே சென்னையில்தான். அப்புறம் மதுரை, திருச்சி, கோயம்புத்தூர்னு தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான எல்லா ஊர்களுக்கும் போயிருக்கேன். படிக்கிற போது விடுமுறையில் இதிலுள்ள ஏதாவது ஒரு ஊர்லதான் இருப்பேன். எங்களுக்கு இந்த ஊர்களிலெல்லாம் சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள்.


நீங்கள் நடிக்கிற நீதானே என் பொன்வசந்தம் படத்தைப் பற்றி...?

முதலில் அந்த டைட்டில். எனக்குப் பிடிச்ச வைரமுத்து சாரோட பாடலின் முதல்வ‌ரியைதான் கௌதம் தலைப்பா வச்சிருக்கார். அவருக்கும் வைரமுத்துசார்னா ரொம்பப் பிடிக்கும். அந்தப் படத்தில் நான் நித்யா என்கிற கேரக்ட‌ரில் வர்றேன். நானும் ‌ஜீவாவும் காலே‌ஜ் ஸ்டூடண்ட். நல்ல நண்பர்கள். எங்கள் நட்பு எப்படி காதலா மாறுகிறது என்பதுதான் கதை. தமிழ், இந்தி, தெலுங்கு என்று மூன்று மொழிகளில் படத்தை எடுக்கயிருக்கிறார் கௌதம்.

இந்த மூன்றிலும் நீங்கதானே ஹீரோயின்?

ஆமா. தமிழில் ‌ஜீவா ஹீரோ. தெலுங்கில் நானி. இந்தியில் ஆதித்யா. ஒரே கதைன்னாலும் வேற வேற ஹீரோக்களுடன் நடிப்பதால் ஒவ்வொரு முறையும் வித்தியாசமாக ஃபீல் பண்றேன்.

Thursday, January 26, 2012

> மவுசு குறையாத மாற்றானின் சாதனை.

படம் எப்போது வெளியாகும் என்பதில் இழுபறி நீடிக்கிறது. இருந்தாலும் மாற்றானுக்கு மவுசு குறையவில்லை. படம் வெளிவரும் முன்பே கலெக்சனில் பட்டையை‌க் கிளப்புகிறது.

கே.வி.ஆனந்த் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் வெளிநாட்டு உ‌ரிமை ஏறக்குறைய 12 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. தற்போது தெலுங்கு உ‌ரிமையும் விற்பனையாகியிருக்கிறது. தெலுங்கு உ‌ரிமை மட்டும் 17 கோடிகள். பெல்லம்கொண்ட சுரேஷ் தெலுங்கு உ‌ரிமையை வாங்கியுள்ளார்.

> விரைவில் அனன்யாவுக்கு திருமணம்

நடிகை அனன்யாவுக்கு விரைவில் திருமணம் நடக்கயிருக்கிறது. இதனை அவர் தெ‌ரிவித்துள்ளார்.

நாடோடிகள் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் அனன்யா. அதன் பிறகு தமிழில் சிறிது காலம் நடிக்காமல் இருந்தவர், மலையாளப் படம் நந்தனத்தின் தமிழ் ‌ரீமேக்கான சீடனில் நடித்தார். அவர் நடிப்பில் சென்ற வருடம் வெளியான எங்கேயும் எப்போதும் கலெக்சனுடன் நல்ல படம் என்ற பெயரையும் பெற்றது.

அனன்யாவுக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். தற்போது மாப்பிள்ளை கிடைத்திருக்கிறார். கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஆஞ்சநேயன் என்பவர்தான் அனன்யாவை திருமணம் செய்யவிருக்கிறார். இந்தத் தகவலை அனன்யாவே மீடியாவிடம் தெ‌ரிவித்துள்ளார்.

> வரலட்சுமி ஹீரோயினாக நடிப்பாரா ?

ராதாமோகனின் அடுத்தப் படம் பயணம் போலவே தமிழ், தெலுங்கில் தயாராகிறது. இந்தப் படத்தில் சரத்குமா‌ரின் மகள் வரலட்சுமி நடிக்கிறார்.

ராதாமோகனின் இந்த புதிய படத்தை நாகார்ஜுனின் அன்னபூர்ணா பிலிம்ஸ் தயா‌ரிக்கிறது. ஹீரோ.. சொல்லத் தேவையில்லை, அவரது மகன் நாக சைதன்யா. இந்தப் படத்துக்கு கௌரவம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதில் வரலட்சுமி ஹீரோயினாக நடிப்பார் என‌த் தெ‌ரிகிறது. சமீபத்தில் இவரும் நாக சைதன்யாவும் கலந்து கொண்ட போட்டோசெஷன் நடந்தது.

> ர‌ஜினியை விட்டு கமலுடன் நெருக்கம் காட்டும் நண்பன்.

இப்போதெல்லாம் ர‌ஜினி புகழ் பாடுவதை விட்டு கமலுடன் நெருக்கம் காட்டுகிறார். யார் அவர்? வேறு யார் விஜய்தான்.

தனது நண்பன் படத்தை இவர் கமலுக்காக ஸ்பெஷலாக திரையிட்டுக் காட்டினார். படத்தை ரசித்த கமல், விஜய்யின் நடிப்பை வெகுவாக பாராட்டியிருக்கிறார். கலெக்சனை பார்க்கும் விஜய் முதல்முதலில் நடித்துப் பார்த்தப் படம் நண்பன். சூப்பர் நடிகரே பாராட்டிவிட்டார், குஷியில் இருக்கிறார் விஜய்.

Wednesday, January 25, 2012

> ஜெய் கௌதம் படத்தில்.

கௌதம் வாசுதேவ மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடிக்க முதலில் அழைக்கப்பட்டவர் ஜெய்தானாம். வேறு படத்தில் பிஸியாக இருந்ததால் த்‌ரிஷாவுக்கு ஜோடியாகும் வாய்ப்பு பறிபோனது.

தற்போது கௌதமின் ஃபோட்டோன் கதாஸ் தயா‌ரிக்கும் படமொன்றில் ஹீரோவாகியிருக்கிறார். பிரபுதேவாவின் அசிஸ்டெண்ட் இந்தப் படத்தை இயக்குகிறார். ஜோடி இன்னும் முடிவாகவில்லை.

விரைவில் கௌதம் இயக்கத்திலும் நடிக்கயிருக்கிறாராம்.

> ஐட்டம் சாங்க்கு நோ சொன்ன ரிச்சா.

பேமெண்ட் ‌ரிச்சாக இருந்தால் எந்த ஹீரோயினும் ஒரு பாடலுக்கு ஆடுவார் என்று சொல்ல முடியாது. மும்பையில் ஐட்டம் சாங் சகஜம் என்றாலும் நம்மூ‌ரில் இன்னமும் சங்கோஜம்தான்.

மயக்கம் என்ன ‌ரிச்சா இந்தி ரவுடி ரத்தோ‌ரில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார் என்று கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு. இது அப்படியே அச்சேற, ஆவேசமாகிவிட்டார். நான் நடிக்க வந்தது நல்ல படங்களில் நடிக்கத்தானே தவிர ஒரு பாடலுக்கு ஆடுவதற்கு அல்ல என்று தனியாவர்த்தனமே செய்திருக்கிறார்.

ரவுடி ரத்தோர் தமிழ் சிறுத்தையின் இந்தி ‌ரீமேக் என்பதும், பிரபுதேவா இதனை இயக்குகிறார் என்பதும் முக்கியமானது.

> மோதிக் கொள்ளும் கோடம்பாக்கத்தினர்.

பெப்சி அமைப்பு தன்னிச்சையாக சம்பளத்தை நிர்ணயித்ததால் தயா‌ரிப்பாளர்கள் நேற்று அவசரக் கூட்டத்தை கூட்டி சில தீர்மானங்களை எடுத்தனர். இந்தத் தீர்மானத்தால் பெப்சியைச் சேர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் கடும் கோபம் நிலவுகிறது. எந்நேரத்திலும் போராட்டம் வெடிக்கக் கூடிய சூழல் நிலவுகிறது.

நேற்றைய கூட்டத்தில் தயா‌ரிப்பாளர்கள் சில தீர்மானங்களை நிறைவேற்றினர்.

பெப்சி தொழிலாளர் அமைப்பு தன்னிச்சையாக சம்பளத்தை உயர்த்தியது விதி மீறிய செயலாகும். இதனால் இனி பெப்சியுடன் தயா‌ரிப்பாளர்கள் சங்கத்துக்கு எவ்வித ஒப்பந்தமும் கிடையாது.

தயா‌ரிப்பாளர்கள் யாரை வேண்டுமானாலும் வைத்து தொழில் செய்யலாம். அப்படி தொழில் செய்ய முன்வருகிறவர்களுக்கு தயா‌ரிப்பாளர்கள் சங்கம் ஒரு சம்பளத்தை நிர்ணயித்து அதை அனைத்து தயா‌ரிப்பாளர்களும் கடைபிடிக்க வலியுறுத்தும். மீறுகிறவர்களுக்கு தமிழக திரைப்பட தயா‌ரிப்பாளர்கள் சங்கம் எவ்வித ஒத்துழைப்பும் நல்காது.

இந்தத் தீர்மானம் பெப்சி தொழிலாளர்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

பெப்சி யூனியனில் சில அமைப்புகளுக்கு கொடுக்கப்படுவதாகக் கூறப்படும் சம்பள விவரம்.
  • லைட்மேன் ரூ. 350 புதிய சம்பளம் ரூ. 530
  • ஜூனியர் ஆர்டிஸ்ட் ரூ. 250 புதிய சம்பளம் ரூ. 320
  • மகளிர் யூனியன் ரூ. 290 புதிய சம்பளம் ரூ. 400
  • செட் அசிஸ்டென்ட் ரூ. 350 புதிய சம்பளம் ரூ. 525
  • டிரைவர்ஸ் யூனியன் ரூ. 270 புதிய சம்பளம் ரூ. 415
  • காஷ்ட்யூம் அசிஸ்டென்ட் ரூ. 700 புதிய சம்பளம் ரூ. 850
  • புரொடக்ஷன் அசிஸ்டென்ட் ரூ. 350 புதிய சம்பளம் ரூ. 550

> அசைக்க முடியாத முதலிடத்தில் நண்பன் சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்.

4. மௌனகுரு
சென்ற வாரத்தின் அதே நான்காவது இடத்தில் மௌனகுரு. இதுவரை சென்னையில் 1.42 கோடியை வசூலித்திருக்கும் இப்படம் சென்ற வார இறுதியில் 3.3 லட்சங்களை வசூலித்துள்ளது.

3. கொள்ளைக்காரன்
விதார்த் நடித்திருக்கும் இப்படம் சென்ற வார இறுதியில் 5.7 லட்சங்களை வசூலித்துள்ளது. பத்து தினங்களில் இதன் வசூல் 24 லட்சங்கள்.

2. வேட்டை
லிங்குசாமியின் படம் சென்ற வார இறுதியில் 63.7 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரை சென்னையில் இதன் வசூல் 1.91 கோடி.

1. நண்பன்
கடைசியில் விஜய்க்கு ஒரு சூப்பர்ஹிட் படம் கிடைத்திருக்கிறது. சென்ற வார இறுதியில் இப்படம் 1.38 கோடி வசூலித்துள்ளது. முதல் பத்து தினங்களில் இதன் சென்னை வசூல் மட்டும் 4.95 கோடிகள்.

Tuesday, January 24, 2012

> அமலா பாலின் நட்சத்திர பேட்டி - இப்போ சொல்லுங்க, தமிழை நான் புறக்கணிக்கிறேனா?

மைனாவுக்குப் பிறகு சட்டென்று மாறியது தமிழ் திரையுலகின் வானிலை. தமன்னா என்று உச்ச‌ரித்த உதடுகள் அமலா என்றன. அமலா இல்லையேல் கால்ஷீட் இல்லை என்கிறார்களாம் ஹீரோக்கள். தமிழில் அடிக்கும் இந்த சூறாவளி இப்போது நகர்ந்து நாயுடுகளின் தேசத்தில் மையம் கொண்டிருக்கிறது. த்‌ரிஷா, தமன்னாக்களை முந்திக் கொண்டு ஜம்போ ஜெட் ஸ்பீடில் செல்லும் அமலா பாலின் மினி பேட்டி உங்களுக்காக.

முதல்ல ஒரு சம்பிரதாயமான கேள்வி. எப்படி சினிமாவுக்கு வந்தீங்க?

எனக்கு சொந்த ஊர் கேரளா. படிக்கிறப்பவே மாடலிங்கில் ஆசை இருந்திச்சி. நடிக்கிற ஆசையை வீட்ல சொன்னப்போ முதல்ல ஒத்துக்கலை. எங்க பேமிலிக்கும் சினிமாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால சினிமாவில் நடிக்கிறது பத்தி சொன்னதும் வீட்ல பயந்துட்டாங்க. இது ச‌ரியா வராதுன்னு அம்மா சொல்லிட்டாங்க.

அப்புறம் எப்படி சம்மதிக்க வச்சீங்க?

சிம்பிள். நாலு நாள் ச‌ரியா சாப்பிடாம சோகமா தி‌ரிஞ்சேன். அதைப் பார்த்துட்டு அப்பாதான் அம்மாவை கன்வின்ஸ் செய்து எனக்கு நடிக்க பர்மிஷன் வாங்கித் தந்தார்.

உங்க முதல் படமே தமிழ்தானா?

இல்லை. மலையாளத்தில் இரண்டு படங்கள் நடிச்ச பிறகுதான் தமிழுக்கு வந்தேன்.

மைனா உங்களுக்கு இப்படியொரு பெயர் வாங்கித் தரும்னு நினைச்சீங்களா?

என்னோட நடிப்பு பாராட்டப்படும்னு தொரியும். ஆனா இப்படியொரு சக்சஸ் எதிர்பார்க்கலை. என்னுடைய கே‌ரிய‌ரில் மைனா மிக முக்கியமான படம்.

இப்போ என்னென் படங்கள் நடிச்சிட்டிருக்கீங்க?

அதர்வா ஜோடியா முப்பொழுதும் உன் கற்பனைகள். இது தவிர சித்தார்த் ஜோடியா, காதலில் சொதப்புவது எப்படி. இது தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் தயாராகுது.

தெலுங்குக்குப் போன பிறகு நீங்க தமிழ்ப் படங்களுக்கு ச‌ரியாக கால்ஷீட் கொடுக்காமல சொதப்புவதாக புகார் இருக்கே?

உண்மையில் நான் கால்ஷீட் சொதப்புறது கிடையாது. இது என்னோட டைரக்டர்ஸுக்கு தெ‌ரியும். மூணு படங்களில் நடிக்கிறபோது சில வேளை ஒரு படத்துக்கு ஒரு நாள் அதிகமாக கால்ஷீட் தர வேண்டியிருக்கும். அந்த மாதி‌ரி சந்தர்ப்பத்தில் மத்தப் பட இயக்குனர் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப்பார். இது டைரக்டர்ஸுக்காக பண்றதே தவிர எனக்காக பண்ணிக்கிறதில்லை.

வேட்டை எப்படி வந்திருக்கு?

ரொம்ப நல்லா வந்திருக்கு. லிங்குசாமி சார் கடுமையா உழைச்சிருக்கார். நாங்களும்தான். வேட்டை ஷுட்டிங் ரொம்ப ஜாலியாக இருந்ததுன்னு சொல்லலாம்.

தெய்வத்திருமகளில் நடிச்சிருந்தாலும் நீங்க விக்ரமின் ஜோடி கிடையாது. அதுல வருத்தம் இருக்கா?

அந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியே கிடையாதே. பிறகு எப்படி வருத்தம் வரும். என்னுடைய கேரக்டர் எல்லோருக்கும் பிச்சிருந்தது. நல்லா நடிச்சிருந்ததா சொன்னாங்க. அது எனக்குப் போதும்.

விக்ரமின் ராஜபாட்டையிலும் நீங்க நடிக்கிறதா முதலில் செய்தி வந்ததே... என்னாச்சு?

ராஜபாட்டையில் நடிக்க என்னிடம் கேட்கவே இல்லை. பிறகு எப்படி அந்த மாதி‌ரி செய்தி வந்ததன்னு தெ‌ரியலை. ஆனா விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கிற படத்தில் நடிக்கிறதுக்கு பேச்சுவார்த்தை நடந்துகிட்டிருக்கு.

தெலுங்கில் கவனம் செலுத்துறதால தமிழ்ப் பக்கம் நீங்க அதிகம் வர மாட்டீங்கன்னு சொல்லப்படுதே?

விக்ரம் புராஜெக்ட் தவிர வேறு இரண்டு தமிழ்ப் படங்களில் நடிக்கவும் பேசிகிட்டிருக்கோம். இப்போ சொல்லுங்க, தமிழை நான் புறக்கணிக்கிறேனா?



> யார் ஆதி யார் பகவான் ? ஜெயம் ரவி விளக்கம்

அமீ‌ரின் ஆதிபகவான் பகவானை காணப் போன யாத்திரைப் போல் நீண்டு கொண்டே போகிறது. இதற்கு விளக்கமளித்துள்ளார் படத்தின் நாயகனான ஜெயம் ரவி.

படம் தாமதமானதற்கு பல காரணங்கள் உண்டு. இப்போது எல்லாம் ச‌ரியாகி வேகமாக படப்பிடிப்பும் மற்ற வேலைகளும் நடந்து வருகின்றன. சில படங்களுக்கு காலதாமதம் தவிர்க்க முடியாதது. அப்படியொரு படம்தான் இதுவும் என்றிருக்கிறார் ஜெயம் ரவி.

ஆதிபகவான் யார் என்ற கேள்விக்கு, ஆதி நான் பகவான் அமீர் என்று பதிலளித்திருக்கிறார் பவ்யமாக.

> 9 கோடியைத் தாண்டியது கூகுள் + பயனாளர் எண்ணிக்கை

உலகின் முன்னணி இணையதளச் சேவை நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் சோஷியல் நெட்வொர்க்கிங் சேவையான கூகுள்+ இன் பயனாளர் எண்ணிக்கை 9 கோடியைத் தாண்டியது.

சோஷியல் நெட்வொர்க்கிங் என்ற நட்பு வலைத்தளத்தின் மீதான வாசகர்களின் ஆர்வம் அதிகரித்துவருவதே இதற்குக் காரணம். கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி இது பொதுமக்கள் பங்கேற்ப்புக்கு திறக்கபட்டது.

ஆனால் கூகுளின் போட்டி நிறுவனமான ஃபேஸ்புக் இதே 9 கோடி பயனாளர் எண்ணிக்கையை எட்ட 4 ஆண்டுகள் தேவைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
2004ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஃபேஸ்புக் உலகம் முழுதும் இன்று 80 கோடி பயனாளர்களைக் கொண்டுள்ளது.

இது குறித்து கூகுள்+ இன் தலைமைச் செயலதிகாரி லாரி பேஜ் கூறுகையில், "நான் அதிகப்படியான மகிழ்ச்சியில் உள்ளேன், இன்று உலகம் முழுதும் 9 கோடி பயனாளர்கள் உள்ளனர். இது 3 மாதங்களுக்கு முன்பு நான் அறிவித்திருந்ததை விட இரு மடங்கு அதிகமாகும்" என்றார்.

Monday, January 23, 2012

> மீண்டும் தேதி மாறியிருக்கிறது அதர்வா படம்

அதர்வா, அமலா பால் நடித்திருக்கும் முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தின் ‌ரிலீஸ் தேதி தள்‌ளி‌ப் போயிருக்கிறது.

எல்ரெட் குமார் தயா‌ரித்து இயக்கியிருக்கும் இப்படம் டிசம்ப‌ரிலேயே திரைக்கு வருவதாக இருந்தது. சில காரணங்களால் பிப்ரவ‌ரி 14 காதலர் தினத்துக்கு தேதியை மாற்றினர். இப்போது தேதி மீண்டும் மாறியிருக்கிறது.

இறுதியாக பிப்ரவ‌ரி 17ஆம் தேதியை ஃபிக்ஸ் செய்திருக்கிறார்கள்.

> விழாவில் கலந்து கொள்வது எனக்குப் பெருமை த்‌ரிஷாவின் தமிழ் பற்று.

அமெ‌ரிக்க தமிழ் சங்கத்தின் 25வது ஆண்டு விழா வரும் ஜூலை மாதம் நடக்கிறது. இதில் த்‌ரிஷா கலந்து கொள்கிறார்.

சொந்த மகளின் காது குத்துக்குக்கூட காசு கொடுத்தால்தான் வருவேன் என்பவர்கள்தான் நமது சினிமாக்காரர்கள். விதிவிலக்கு ஒன்றிரண்டு இருக்கலாம். எந்த விழாவுக்கு என்றாலும் பயணப்படியுடன் லம்பாக ஒரு அமௌண்ட் வெட்டுவது இவர்களின் வாடிக்கை.

அமெ‌ரிக்க தமிழ் சங்கம் த்‌ரிஷாவை சீஃப் கெஸ்டாக அழைத்தபோது, பெ‌ரிய தொகை ஒன்றை அவர் கேட்பார் என்றுதான் நினைத்தார்களாம். ஆனால் த்‌ரிஷாவோ, இந்த விழாவில் கலந்து கொள்வது எனக்குப் பெருமை, அதனால் எனக்கு பணம் எதுவும் வேண்டாம் என்றிருக்கிறார்.

தமிளு தமிளு என்று பேசும் தலைவர்களைவிட இவர் எவ்வளவோ மேல்.

> ஷோபனா கோச்சடையானில்.

கோச்சடையான் படத்தில் ஷோபனா நடிக்கிறார்.

பரத நாட்டியம் மீதான காதலால் திருமணம் செய்யாமல் முழுநேர நடனக் கலைஞராக மாறிவிட்ட நடிகை ஷோபனா ர‌ஜினியின் கோச்சடையான் படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க சம்மதித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் ர‌ஜினி ஜோடியாக கத்‌ரினா கைஃபும் தங்கையாக சினேகாவும் நடிக்கின்றனர். இவர்கள் தவிர ஆதியும் பிருத்விராஜும் நடிப்பதாக‌த் தெ‌ரிகிறது. இந்நிலையில் புதிதாக ஷோபனாவும் இணைந்திருக்கிறார்.

3டி-யில் தயாராகும் இந்தப் படத்தை சௌந்தர்யா இயக்குகிறார்.

Sunday, January 22, 2012

> அனன்யா நட்சத்திர பேட்டி இளையராஜாதான் எனக்கு இஷ்டம்

அனன்யாவை அவருக்கு நெருக்கமான தோழிகள் தக்காளி என்றுதான் அழைக்கிறார்கள். தக்காளிப் போலவே தகதகக்கும் அழகு. கூடவே கொஞ்சம் சுட்டி. நாடோடிகளில் வரும் கதாபாத்திரத்தைப் போலவே நே‌ரிலும் துறுதுறுவென இருக்கும் இவர் இப்போது நான்கு மொழிகளில் பிஸி. அவருடனான நேர்காணலிலிருந்து.

தமிழுக்கு ஏன் அடிக்கடி லீவ் விடறீங்க?

நாடோடிகள் மு‌டித்த பிறகு கொஞ்சம் இடைவெளி விழுந்தது உண்மைதான். நாடோடிகள் மாதி‌ரியே கதை சொன்னால் எப்படி நடிக்கிறது? அதுதான் நல்ல கதைக்காக காத்திருந்தேன். அப்போதுதான் சீடன் வாய்ப்பு வந்தது. மலையாளத்தில் நந்தனம் என்ற பெய‌ரில் வெளியாகி விருதுகள் குவிச்சப் படம். அந்த கேரக்டருக்காகவே நடிச்சேன்.

ஆனா இந்தப் படங்களில் கிடைக்காத பெயரை எங்கேயும் எப்போதும் தந்திடுச்சி இல்லையா?

அதுவொரு அருமையான படம். அந்தப் படத்துக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வருது. தமிழில் மட்டும் இரண்டு படங்களில் கமிட்டாகியிருக்கேன். ஒரு படத்தில் அங்காடித்தெரு மகேஷ் நடிக்கிறார். இன்னொரு படம் ப்‌ரியத‌ர்ஷனின் அசிஸ்டெண்ட் அ‌‌ஜீத் மேனன் இயக்கும் படம்.

கன்னடத்திலயும் நடிக்கிறீங்க போலிருக்கிறதே?

நல்ல கதையும் கேரக்டரும் இருந்தால் நான் மொழி, ஹீரோ பார்க்க மாட்டேன். கன்னடத்தில் நான் கமிட்டாகியிருக்கிறது நல்ல கதை, எனக்கு அருமையான கேரக்டர். ஹீரோவும், இயக்குனரும் புதுமுகங்கள்தான்.

சமீபத்தில் விஜய்யை சந்தித்தீர்களே. என்ன பேசினீர்கள்?

ஒரு ஃபங்ஷனில் சந்திச்சேன். விஜய் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரைப் பார்த்ததும் உற்சாகமாயிடுச்சி. என்னை அறிமுகப்படுத்திட்டு, நான் உங்க ரசிகை சார்னு சொன்னேன். ஆனா ஒரே வார்த்தையில் தேங்க்ஸ்னு சொல்லி முடிச்சிட்டார். ஏமாற்றமா இருந்திச்சி. இப்போ அவர்கூட ஒரு படம் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துகிட்டிருக்கு.

மோகன்லாலிடம் நீங்க திட்டு வாங்கியது கேரளாவில் பரபரப்பா பேசப்பட்டதே?

ஆமா. ஒரு படத்தில் மிகப்பெ‌ரிய பள்ளத்தில் தொங்கிக் கிட்டிருக்கிற என்னை மோகன்லால் காப்பாத்துற மாதி‌ரி காட்சி. நானே தொங்குறேன்னு சொன்னதுக்கு மோகன்லால் கடுமையா சத்தம் போட்டார். ஆனாலும் நான்தான் அடம் பிடிச்சு அந்த ‌ரிஸ்க்கான காட்சியில் நடிச்சு மலையாள விஜயசாந்தினு அவர்கிட்டயே பாராட்டு வாங்கினேன்.

எங்கேயும் எப்போதும் படத்தில் உங்களுடன் நடித்த அஞ்சலியுடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறீர்களாமே?

ஆமா. அது மலையாளப் படம். திலீப் ஹீரோவாக நடிக்கிறார். இன்னும் படப்பிடிப்பு தொடங்கலை.

பெ‌ரிய ஹீரோக்களுடன் நடிக்கலைங்கிற வருத்தம் இருக்கிறதா?

நான் முன்பு சொன்ன மாதி‌ரி பெ‌ரிய ஹீரோன்னு எல்லாம் நான் பார்க்கிறதில்லை. கதையும், கேரக்டரும் நல்லாயிருக்கணும். நாடோடிகளில் பெ‌ரிய ஹீரோவா நடிச்சார்? படம் நல்ல பெயரை வாங்கியதே. மோகன்லால் கூட இரண்டு படங்களில் தொடந்து நடிச்சேன். அவர் பெ‌ரிய நடிகர்தானே.

உங்க ஹாபி?

பாட்டு கேட்கிறது. அதுவும் இளையராஜா பாட்டுன்னா அப்படியே உருகிடுவேன். இசையில் அவர்தான் என் இஷ்டம். அவர் பாட்டு கேட்டுதான் தூங்குறேன்.

Saturday, January 21, 2012

> 9 அயல்நாட்டுப் படங்கள் ஆஸ்கார் விருதுக்கு.

ஆஸ்கார் விருதுகளின் அயல்நாட்டுப் படங்களுக்கான ஆஸ்கார் விருதுக்காக 9 அயல்நாட்டு திரைப்படங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

இதில் ஈரானின் புகழ்பெற்ற இயக்குனர் அஸ்கர் ஃபர்ஹாதியின் "எ செபரேஷன்" என்ற திரைப்படம் உள்ளது. இந்தத் திரைப்படம் கடந்த வாரம் கோல்டன் குளோப் விருது பெற்றது.

விமர்சகர்களால் பெரிதும் பாரட்டப்பட்ட இந்தப் படம் இந்த முறை ஆஸ்கார் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெர்மானிய திரைப்பட இயக்குனரான விம் வெண்டர்ஸின் "பினா" என்ற திரைப்படமும் சிறந்த அயல்நாட்டுப் பட விருதுப் பரிசீலனனையில் உள்ளது. உலகின் தலை சிறந்த நடனக் கலை இயக்குனரான பினா பாஷ் என்பவரைப் பற்றிய இந்தத் திரைப்படம் முப்பரிமாணத் திரைப்படமாகும்.

இந்தத் திரைப்படம் சிறந்த ஆவண ஃபீச்சர் படப் பிரிவிற்கும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இவை தவிர பெல்ஜியம் திரைப்படம் "புல்ஹெட்", கனடாவின் "மான்ஸ்யூர் லஷார்", டென்மார்க்கின் "சூப்பர் கிளாசிக்கோ", இஸ்ரேலின் "ஃபுட்னோட்", மொராகோ நாட்டுத் திரைப்படமான "ஓமர் கில்டு மீ", போலந்தின் "இன் டார்க்னெஸ்", தைவானின் "வாரியர்ஸ் ஆஃப் தி ரெய்ன்போ" ஆகிய படங்களும் போட்டியில் உள்ளன.

ஆஸ்கார் விருதுகள் பிப்ரவரி 26ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

Friday, January 20, 2012

> வேட்டை விமர்சனம் நியூயார்க் டைம்சில்

எம்‌ஜிஆர் காலத்து கதையை சற்றே வெட்டி ஒட்டி எடுத்ததுதான் வேட்டை. ஆனால் கலெக்சன் என்னவோ கன்னா பின்னாவென்றிருக்கிறது. கூடுதல் கௌரவமாக அமெ‌ரிக்காவின் முன்னணி பத்தி‌ரிகையில் வேட்டை விமர்சனம் வெளிவந்திருக்கிறது.

தமிழ்ப் படங்களின் விமர்சனம் நியூயார்க் டைம்சில் வந்ததில்லை. ரா ஒன் போன்ற இந்திப் படங்களைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். முதல்முறையாக வேட்டையை பற்றி எழுதியிருக்கிறார்கள். ஹாலிவுட் சினிமாவின் சூப்பர் ஹீரோக்கள் செய்யும் வேட்டையை சாதாரண மனிதர்கள் - ஆர்யா, மாதவன் - செய்கிறார்கள். அந்த ஆச்ச‌ரியத்தில் விமர்சனம் எழுதியிருப்பார்களோ?

> 3 படத்தின் கொல வெறி இந்தியில் ?

இதெல்லாம் ஒரு பாட்டு... எதுக்கு இந்த கூத்துன்னு ஒரு பக்கம் கொல வெறிக்கு எதிராக கடித்துக் குதறினாலும் பல இடங்களில் பாராட்டுப் பத்திரம் வாசிக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக மும்பையில்.

அபிஷேக் பச்சனை மட்டுமின்றி அவரது குடும்பத்தினரையும் கொல வெறி கவிழ்த்துவிட்டது. அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யாவை அழைத்து கதை கேட்டிருக்கிறார். அவர் 3 படத்தின் கதையை சொல்ல, உடனே அந்தக் கதையில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெ‌ரிவித்திருக்கிறார் அமிதாப்பின் மகன். கொல வெறி பாடல் கண்டிப்பா அதில் இருக்கணும் என கண்டிஷனும் போட்டிருக்கிறாராம்.

தனுஷ்தான் அபிஷேக் பச்சனை இயக்குகிறார் என்றார்கள். சினிமா பரமபதத்தில் மனைவிக்கு அடித்திருக்கிறது யோகம்.

> பில்லா 2 படத்தின் வெளிநாட்டு உ‌ரிமை ஒரு மில்லியன் அமெ‌ரிக்க டாலர்கள்

பாக்ஸ் ஆஃபிஸ் ஹீரோவாக மாறிக் கொண்டிருக்கிறார் அ‌‌ஜீத். போகிற வேகத்தைப் பார்த்தால் இவரது படங்களின் பட்ஜெட்டை படம் வெளிவரும் முன்பே தயா‌ரிப்பாளர்கள் வசூலித்துவிடுவார்கள் என்றே தோன்றுகிறது.

பில்லா 2 படத்தின் போஸ்டரைதான் வெளியிட்டிருக்கிறார்கள். அதற்குள் படத்தின் வெளிநாட்டு உ‌ரிமை விலை போயிருக்கிறது. அதுவும் எப்படிப்பட்ட விலை?

மூச்சை இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள். அதிகமில்லை ஒரு மில்லியன் அமெ‌ரிக்க டாலர்கள். ர‌ஜினி, கமல் படங்கள்தான் இவ்வளவு பெ‌ரிய தொகைக்கு விலை போய்க் கொண்டிருந்தன என்பது முக்கியமானது.

Thursday, January 19, 2012

> நண்பன் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உ‌ரிமை விஜய் TV வசம்

இப்போதெல்லாம் நல்ல படங்களை போட்டிப் போட்டு வாங்குவதில் விஜய் டிவியும் முன்னணியில் இருக்கிறது. பொங்கலுக்கு தொலைக்காட்சி முன்னால் தவம் கிடந்தவர்களுக்கு இது தெ‌ரிந்திருக்கும். நல்ல படங்கள் என்றால் அது விஜய்யில்தான் ஒளிபரப்பாகிறது.

இந்தப் போட்டியில் ஒரு மெகா வெற்றியை விஜய் பெற்றிருக்கிறது. அது விஜய் நடித்திருக்கும் நண்பன். கடும் போட்டிக்கிடையில் நண்பன் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உ‌ரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளது.

இதற்காக பல கோடிகள் கொடுத்திருக்கிறது விஜய் டிவி.

> நண்பன் முதலிடத்தில் சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்

4. மௌனகுரு
சாந்தகுமார் இயக்கியிருக்கும் இந்தப் படம் சென்ற வார இறுதியில் 5.75 லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை சென்னையில் இதன் வசூல் 1.32 கோடிகள்.

3. கொள்ளைக்காரன்
விதார்த் நடித்திருக்கும் இப்படம் வெளியான முதல் மூன்று தினங்களில் 9.4 லட்சங்களை வசூலித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

2. வேட்டை
லிங்குசாமியின் இந்த மசாலா வெளியான முதல் இரு தினங்களில் 63.2 லட்சங்களை வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

1. நண்பன்
நண்பன் முதல் நான்கு தினங்களில் 1.37 கோடியை வசூலித்து பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. படம் நன்றாக இருப்பதால் வசூல் மேலும் அதிக‌ரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

> கோச்சடையான் பிப்ரவ‌ரி 15 முதல்.

பிப்ரவ‌ரி 15 ஆம் தேதி முதல் கோச்சடையான் படப்பிடிப்பு தொடங்கும் என கே.எஸ்.ரவிக்குமார் தெ‌ரிவித்துள்ளார்.

ர‌ஜினி நடிக்கும் எந்தவொரு படத்துக்கும் இப்படியொரு தேதி சிக்கல் வந்ததில்லை. ராணாவில் தொடங்கியது பிரச்சனை. ர‌ஜினியின் உடல்நலக் குறைவால் ராணா படம் தள்ளி வைக்கப்பட்டது. பிறகு இரண்டு மூன்றுமுறை படப்பிடிப்பு தொடங்கப் போவதாக அறிவித்தார்கள். அத்தனையும் அறிவிப்போடு நின்றது.

இந்நிலையில்தான் கோச்சடையான் அறிவிப்பு வெளியானது. மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தை சௌந்தர்யா இயக்க, கதை, வசனம் மற்றும் இயக்க மேற்பார்வையை ரவிக்குமார் கவனிக்கிறார்.

கோச்சடையானின் படப்பிடிப்பு பிப்ரவ‌ரி 15 ஆம் தேதி தொடங்கும் என அவர் அறிவித்துள்ளது ர‌ஜினி ரசிகர்களுக்கு புது உற்சாகத்தை அளித்துள்ளது.
உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.