Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Tuesday, February 14, 2012

> சிறந்த நடிகருக்கான எடிசன் விருது விஜய்க்கு

எடிசன் பெய‌ரில் வருடம்தோறும் திரைத்துறையினருக்கு விருது வழங்கி வருகிறார்கள். இது ஐந்தாவது வருடம். இந்த வருடம் சிறந்த நடிகருக்கான விருதை பெறுகிறவர், விஜய்.

ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடித்த வேலாயுதம் படத்துக்காக விஜய் இந்த விருதை பெற்றுள்ளார். நண்பன் வெற்றியில் மகிழ்ந்துப் போயிருப்பவருக்கு இது கூடுதல் மகிழ்ச்சி.

வேலாயுதம் முழுமையான வெற்றியை பெறவில்லை, அது ஒரு கமர்ஷியல் சினிமா, விஜய் வழக்கம் போல பன்ச் வசனம் பேசி நடித்திருக்கிறார், மற்றபடி சிறந்த நடிப்பை அவர் வெளிப்படுத்தவில்லை என்று புரணி பேசியவர்களின் பிட‌ரியில் இந்த விருது ஒரு போடு போட்டிருக்கிறது.

சந்தோஷம்தானே தளபதியின் கோடானு கோடி ரசிகர்களே?
மேலும் அறிய

> மதுஷாலினி நட்சத்திர பேட்டி எல்லா கேரக்டர்ஸும் பண்ணக் கூடிய நல்ல நடிகைன்னு பெயர் வாங்கணும்.

ஷாலினியின் ஹோம்லி லுக்கும், மதுவின் போதை கிக்குமாக மதுஷாலினி எப்போதுமே புத்துணர்ச்சியின் புகலிடம். அவன் இவனுக்குப் பிறகு ஆளையே காணோம் என்று பார்த்தால் ராம்கோபால் வர்மாவின் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்திக்குப் போனதால் எந்த‌க் கனமும் இவரது தலைக்குள் ஏறாதது நல்ல விஷயம். தன்னைப் பற்றியும், தனது படங்கள் பற்றியும் மதுஷாலினியின் பேட்டியிலிருந்து.

முதலில் உங்களைப் பற்றி சொல்லுங்க?

எங்க குடும்பத்துக்கும் சினிமாவுக்கும் சம்பந்தம் இல்லை. நானும் பொறுப்பா எலக்ட்ரானிக் என்‌ஜினிய‌ரிங் படிச்சேன். நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனா எனக்கு சினிமாவில் நடிக்க ஆசை. சினிமா பின்னணி இல்லாததால் அப்பா, அம்மா முதலில் அனுமதிக்கலை. பிறகு என்னுடைய ஆசைக்காக சம்மதிச்சாங்க. முதல் படம் தெலுங்கில். அப்புறம் பதினாறுங்கிற படத்தில் நடிச்சேன். கொஞ்சம் போராடித்தான் சினிமாவுக்கு வந்தேன்.

பாலா படத்தில் எப்படி வாய்ப்பு கிடைச்சது?

பாலா சார் படத்தில் நடிக்கிறது பெ‌ரிய சேலஞ்ங்கிற விஷயம் எனக்குத் தெ‌ரியும். நானாகதான் போய் அவர்கிட்ட வாய்ப்பு கேட்டேன்.

அவன் இவனுக்குப் பிறகு உங்களை தமிழில் காணலையே?

இரண்டு காரணங்கள். அவன் இவனுக்குப் பிறகு எனக்கு வந்ததெல்லாம் அதேமாதி‌ரியான கேரக்டர்ஸ்தான். ஒரே மாதியான கேரக்ட‌ரில் நடித்து பாலா சார் படத்தில் கிடைச்ச பெயரை கெடுத்துக்க விரும்பலை. இரண்டாவது காரணம் ராம்கோபால் வர்மா சா‌ரின் படம்.

அதுபற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்...

வர்மா சா‌ரின் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கும்னு நான் நினைக்கவேயில்லை. அவ‌ரிடமிருந்து அழைப்பு வந்த நேரம் நான் அவரோட ரத்த ச‌ரித்திரம் மட்டும்தான் பார்த்திருந்தேன். அதற்கப்புறம்தான் அவ‌ரின் மற்றப் படங்களைப் பார்த்தேன். என்ன மேக்கிங்? என்ன பவர்ஃபுல்லான வசனங்கள். மிரண்டு போயிட்டேன்.

படத்தின் கதை, உங்க கேரக்டர்...?

அதை இப்போதைக்கு சொல்ல முடியாது. வர்மா சார் கதையின் அவுட்லைனை சொன்ன போதே மிரண்டுட்டேன். நிச்சயமா அவன் இவனை இந்தப் படம் தாண்டி நிற்கும்.

கிளாமர் ரோலில் நடிப்பீர்களா?

நடிக்க வந்த பிறகு கிளாமர், கேரக்டர் ரோல்னு பி‌ரிச்சுப் பார்க்கக் கூடாதுன்னு நினைக்கிறேன். கிளாமரா நடிக்கிற அனுஷ்கா தனி ஹீரோயினா அருந்ததியில் மிரட்டியிருந்தாங்களே. அதை மாதி‌ரி எல்லா வெரைட்டியான கதாபாத்திரத்திலும் நடிக்கணும்ங்கிறதுதான் என்னோட ஆசை. அதனால் படத்தோட கதை, என்னுடைய கேரக்டர் இரண்டை மட்டும்தான் பார்ப்பேன்.

சினிமாவில் உங்க லட்சியம் என்ன?

எல்லா கேரக்டர்ஸும் பண்ணக் கூடிய நல்ல நடிகைன்னு பெயர் வாங்கணும்.

மேலும் அறிய

Sunday, February 12, 2012

> மெ‌ரினா மீண்டும் வி‌ரிவாகிறது.

பாண்டிரா‌ஜின் மெ‌ரினா மீண்டும் வி‌ரிவாகிறது. சென்ற வாரம் வெளியான இந்தப் படம் சென்னையில் முதல் மூன்று தினங்களில் 40 லட்சத்திற்கு மேல் வசூலித்தது. படம் சுமார் என்று விமர்சனங்கள் வந்த போதிலும் இந்த வசூல் கிடைத்திருக்கிறது. படத்தைப் பார்த்த விநியோகஸ்தர்களுக்கு படத்தில் லாபக் கணக்கு தெ‌ரிந்ததால் புதுசாக பி‌ரிண்ட் வாங்கி வெளியிடயிருக்கிறார்களாம்.

சிவ கார்த்திக்கேயன், ஓவியா நடித்திருக்கும் இந்தப் படம் மெ‌ரினா கடற்கரையின் விளிம்புநிலை மனிதர்களைப் பற்றியது.
மேலும் அறிய

> விடுமுறையை கொண்டாடும் விஜய்.

பெப்சி, தயா‌ரிப்பாளர்கள் சங்க கருத்து வேறுபாட்டால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது நடிகர்களுக்கு பல வகையில் வசதியாகிவிட்டது. சிலர் ஓய்வு எடுக்கிறார்கள், சிலர் டூர் கிளம்பியிருக்கிறார்கள். விடுமுறையை ஆக்கப்பூர்வமாக செலவழிப்பது நடிகர் விஜய்.

நடிப்பதற்கு அடுத்து விஜய்க்கு சந்தோஷமான விஷயம் ரசிகர்களை சந்திப்பது. ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் விஜய் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளுக்கு விஜயம் செய்வார். ரசிகர்களை சந்திப்பார், ஏழைகளுக்கு உதவிகள் செய்வார்.

இந்தமுறை நண்பன் வெளியாகியிருக்கிறது. விஜய் கே‌ரிய‌ரில் முக்கியமான படம். அதனால் உற்சாகமாக தனது பயணத்தை தொடர்கிறார். பல்வேறு திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து நண்பன் பாட்டு பாடி அவர்களை மகிழ்வித்தவர் மதுரை தங்க‌ரீகல் திரையரங்குக்கும் சென்றார். ரசிகர்களை சந்தித்தார். மனவளர்ச்சி குறைந்தவர்களுக்கு உதவிகளும் வழங்கினார்.

விருதுநகர் அப்ஸரா திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் பேசியவர், சத்யராஜுடன் நடிக்க வேண்டும் என்ற தனது நீண்டநாள் கனவு நண்பன் மூலம் நிறைவேறியது என்றார். நண்பன் படமும், விஜய்யின் விஜயமும் அவரது இமேஜை மேலும் உயர்த்தியிருக்கிறது.
மேலும் அறிய

Saturday, February 11, 2012

> தமன்னா மகேஷ்பாபு ஜோடியாகிறார்

தமன்னாவிடம் என்ன இருக்கிறது? இப்படியொரு கேள்வி கேட்டால் நடிப்பு என்று மட்டும் யாரும் பதிலளிக்க மாட்டார்கள். கவர்ச்சி என்றும் சொல்ல முடியாது. இது இரண்டும் இல்லாமல் இவர் இன்னும் டாப்பில் இருப்பது எட்டாவது அதிசயம்.

தெலுங்கின் டாப் ஹீரோ மகேஷ்பாபுவின் புதிய படத்தில் தமன்னா ஹீரோயின். ஆந்திராவில் தமன்னாவின் ஆக்கிரமிப்பு குறைந்து வரும் நிலையில் இந்த புதிய வாய்ப்பு அவருக்கு புத்துணர்ச்சி தந்திருக்கிறது. தமன்னாவின் தமிழ் ஆர்வம் இதனால் மட்டுப்பட்டிருக்கிறது. பிப்ரவ‌ரி 12 ஆம் தேதி இந்தப் படம் பூஜையுடன் தொடங்குகிறது.
மேலும் அறிய

> காட்டுப்புலி முத்தத்துக்கு சென்சார் தடை

அர்ஜுன் டாக்டராக நடித்திருக்கும் காட்டுப்புலி படத்தில் இடம்பெற்ற முத்தத்துக்கு சென்சார் தடை விதித்திருக்கிறது.

அடர்ந்த காட்டுப் பகுதியில் சிலர் தொலைந்து போகிறார்கள். அதில் இரு இளம் ஜோடியும், அர்ஜுன், அவரது மனைவி, மகள் ஆகியோரும் அடக்கம். நர மாமிசம் சாப்பிடும் ஆதிவாசிகள் வசிக்கும் காடு அது. அங்கிருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை கவர்ச்சி நிரம்பிய த்‌ரில்லுடன் இயக்கியிருக்கிறார் டினு வர்மா. இவர் பாலிவுட்டின் பிரபல சண்டை இயக்குனர். அதனால் காட்டுப்புலி இந்தியிலும் வெளியாகிறது.

இந்தப் படத்தில் இளம் ஜோடிகளில் ஒன்றான ஜாஹன், ஜெனிஃபர் லிப் டு லிப் முத்தம் கொடுத்திருக்கிறார்கள். இந்த நீண்ட முத்தத்துக்கு சென்சார் ஆட்சேபம் தெ‌ரிவித்திருக்கிறது. இதனால் டினு வர்மா டோட்டல் அப்செட்.

17 டேக்கிற்குப் பிறகு ஓகே ஆன முத்தமாம் இது. வருத்தம் இருக்கத்தானே செய்யும்.
மேலும் அறிய

> சித்தார்த் வெற்றிமாறன் இயக்கத்தில்.

பாய்ஸ் படத்தில் அறிமுகமான சித்தார்த் தெலுங்கில் பெ‌ரிய நடிகர் என்றாலும் அறிமுகமான தமிழில் இன்றும் பையன்தான். இங்கேயும் பெ‌ரியவனாகணும் என்றுதான் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார். வரப்போகிற காதலில் சொதப்புவது எப்படி தெலுங்கில் லவ் ஃபெயிலியர் என்ற பெய‌ரில் வெளியாகிறது.

ஆனால் இதெல்லாம் கதைக்காகாது என்று அவருக்கே தெ‌ரியும். அதனால்தான் வெற்றிமாறன் போன்ற ஒரு இயக்குனரை பிடித்திருக்கிறார். வட சென்னை பற்றி அறிவிப்பு வந்த போது சித்தார்த்தின் பெயரும் அடிபட்டது நினைவிருக்கலாம். இப்போது மீண்டும் சித்தார்த்தின் பெயர்.

ஆனால் இது வட சென்னைக்காக அல்ல. வெற்றிமாறன் இயக்கும் அடுத்தப் படத்தில் சித்தார்த் நடிக்கிறாராம். இதாவது அவரை பெ‌ரியவனாக்குமா என்று பார்ப்போம்.
மேலும் அறிய

Friday, February 10, 2012

> நயன்தாராவின் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா அல்லது சிம்பு நீங்கள் தயாரா ?

நயன்தாரா காதல் நாடகம் கலவர எபிசோடுக்கு திரும்பியிருக்கிறது. பிரபுதேவாவும், சிம்புவும் நயன்தாராவுக்கு கல்தா கொடுத்ததுடன் கல்லாவிலும் கை வைத்தார்கள் என்று காட்டமாக புகார் எழுப்பியிருக்கிறது நயன்தாராவின் குடும்பம்.

சிம்பு - நயன், நயன் - பிரபுதேவா காதலும் மோதலும் அனைவருக்கும் மனப்பாடம் என்பதால் அடுத்த அத்தியாயத்துக்கு வருவோம். நயன்தாராவை மேலே உள்ள இருவரும் திட்டமிட்டு ஏமாற்றியதாக நயன்தாராவின் குடும்பத்தார் சொல்லத் தொடங்கியுள்ளனர். சிம்புவும், பிரபுதேவாவும் நயன்தாராவிடமுள்ள பணத்தை எடுத்துக் கொண்டு அவரை அம்போவென விட்டுவிட்டதாக அவர்கள் குற்றம்சாற்றியுள்ளனர்.

பிரபுதேவா தனது முன்னாள் மனைவி ரமலத்துக்கு தந்த ‌ஜீவனாம்ச பணம் யாருடையது என்பது அவரவருக்கு‌த் தெ‌ரியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். நயன்தாரா நடிக்க மாட்டேன் என்று சொன்னதாலேயே பிரபுதேவா அவரை விட்டுப் பி‌ரிந்ததாகவும் நயன்தாராவின் குடும்பத்தினர் நம்புகின்றனர்.

இந்த புகாருக்கு இதுவரை மாஸ்டர் பதிலளிக்காமல் வழக்கமான மவுனத்துடன் இருக்கிறார். சிம்புவிடமிருந்து இல்லாவிட்டாலும் டிஆ‌ரிடமிருந்து விரைவில் எதுகை மோனையில் ஒரு எக்ஸ்பிரஸ் மறுப்பு வரக்கூடும்.


மேலும் அறிய

> தனுஷின் 3ஐ பற்றி ஐஸ்வர்யாவின் மூன்று ரகசியங்கள்.

ஐஸ்வர்யாவின் 3 படத்தைப் பற்றிய சில மூடுபனி விவகாரங்களை அவரே தெளிவுப்படுத்தியிருக்கிறார்.

பிப்ரவரியில் வெளியாவதாகச் சொல்லப்பட்ட படம் தள்ளிப் போகிறது. பெரிய நடிகர்களின் படங்களை முக்கியமான நாட்களில் மட்டும் வெளியிட வேண்டும் என்று தயாரிப்ப்ப்பாளர்கள் சங்கம் கூறியிருப்பதால்தான் பிப்ரவரியில் 3 வெளியாகவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில்லையாம்.

3 படம் தமிழில் வெற்றி பெற்றதில் தெலுங்கில் டப் செய்து வெளியிடலாம் என்று நினைத்தார்களாம். கொலவெறி பாடல் 3 யை சர்வதேசப் படமாக்கியதால் தமிழில் படம் வெளியாகும் அதே நேரம் தெலுங்கிலும் படத்தை வெளியிடலாம் என்று டப்பிங் வேலைகளை தொடங்கியிருக்கிறார்கள். அதனால்தான் படம் வெளியாவது தாமதமாகிறது.

இரண்டாவது, 3 படத்தை தமிழ், தெலுங்கில் மட்டுமின்றி இந்தியிலும் வெளியிடப் போகிறார்கள். இதற்காக நல்ல இந்தி மொழிபெயர்ப்பாளர்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

மூன்றாவது மிக முக்கியமானது. தனுஷ் இந்தியில் அபிஷேக்பச்சனை இயக்குகிறார் என்றதெல்லாம் சும்மாவாம். விரைவில் இந்திப் படமொன்றில் தனுஷ் நடிக்கப் போகிறார் என்பதே உண்மையாம்.
மேலும் அறிய

> பிரபுதேவா சுருட்டியது போக தானே புயலுக்கு நயந்தாரா ரூ.5 லட்சம் நிதியுதவி.

தானே புயல் நிவாரண நிதிக்கு ஐந்து லட்ச ரூபாயை நயன்தாரா வழங்கினார்.

பிரபுதேவாவுடனான காதல் கான்ட்ரவர்சிக்குப் பிறகு பொது இடங்களுக்கு வருவதை நயன்தாரா தவிர்த்து வந்தார். இப்போது காதல் எனும் மாயையிலிருந்து விடுபட்டிருப்பவர் தெலுங்கிலும், தமிழிலும் தலா ஒரு படம் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். மேலும் முதல்வரை நேரில் சந்தித்தவர் தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண நிதிக்கு ஐந்து லட்ச ரூபாய் வழங்கினார்.

சிவகுமார், சூர்யா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்று திரையுலகில் நடிகர்கள்தான் அதிகம்பேர் நிவாரண நிதி அளித்துள்ளனர். பிரபல நடிகைகளில் நயன்தாராதான் பர்ஸ்ட்.

நயன்தாரா சகஜநிலைக்கு திரும்பியதற்கான அத்தாட்சியாகவும், அவரது மனிதாபிமானமாவும் இந்த நிதி அளிப்பைச் சொல்லலாம்.

வார்ம் வெல்கம் மேடம்.
மேலும் அறிய

> தெலுங்குப் படத்தை புறக்கணித்து சூட்டைக் கிளப்பிய பெப்சி.

வருகிற 9ஆம் தேதி வரை படப்பிடிப்புகள் ரத்து என பெப்சி அறிவித்துள்ளது. இந்த‌ப் போராட்டம் பக்கத்து மாநிலங்களிலும் பற்றிக் கொண்டுள்ளது.

ஹைதராபாத்தில் நீதானே என் பொன்வசந்தம் படத்தின் தெலுங்கு பதிப்பை இயக்கி வந்தார் கௌதம். தெலுங்குப் பதிப்புதானே பாதிப்பில்லை என்று நினைத்திருந்த நேரத்தில் ஆந்திராவைச் சேர்ந்த பெப்சி தொழிலாளர்கள் படப்பிடிப்பை புறக்கணித்தனர். இது தெலுங்குப் படம் என்று கௌதம் விளக்கிக் கூறியதையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. இதனால் படப்பிடிப்பு 9ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் இயக்குனர் என்பதால் அவ‌ரின் தெலுங்குப் படத்தையும் தொழிலாளர்கள் புறக்கணித்தது போராட்டத்தின் சூட்டை அதிகப்படுத்தியிருக்கிறது.
மேலும் அறிய

Thursday, February 9, 2012

> முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்துக்கு U சான்றிதழ்

முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

அதர்வா, தலைக்கன அழகி அமலா பால் நடித்திருக்கும் முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் காதல் படம் போல் தோன்றினாலும் ஒரு க்ரைம் த்‌ரில்லர். அதர்வாவின் மார்க்கெட் வேல்யூவை கணக்கில் கொள்ளாமல் கோடிகளை தண்ணி மாதி‌ரி செலவளித்திருக்கிறார் படத்தை இயக்கி தயா‌ரித்திருக்கும் எல்ரெட் குமார்.

வரும் 17ஆம் தேதி திரைக்கு வரும் இப்படத்தைப் பார்த்த சென்சார் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
மேலும் அறிய

> விஜயகாந்தின் இறங்குமுகத்தின் தொடக்கமா இது?

விஜயகாந்‌த் படிப்படியாக முன்னேறி வந்த காலகட்டம். அப்போது விஜயகாந்த் என்ற பெய‌ரின் வெற்றிக்குப் பின்னால் தூண் போல் ஒரு பெயர் ஒட்டிக் கொண்டிருந்தது. அது அவ‌ரின் ஆத்ம நண்பர் இப்ராஹிம் ராவுத்தர். விஜயகாந்துக்கு தளர்வு நேர்ந்த போதெல்லாம் தாங்கிப் பிடித்தவர்.

விஜயகாந்துக்கு திருமணமான பின்பு இவர்கள் உறவில் வி‌ரிசல் விழுந்தது. நண்பனுக்கு கொடுத்து வந்த முக்கியத்துவம் விஜயகாந்தின் கிச்சன் கேபினெட்டால் கொஞ்சம் கொஞ்சமாக துண்டிக்கப்பட்டது. ராவுத்தர் தனிமைப்படுத்தப்பட்டார்.

விஜயகாந்த், ஜெயலலிதா நேரடி மோதலில் இறங்கியிருக்கும் இந்த நேரத்தில் ஜெயலலிதாவை நே‌ரில் சந்தித்து தன்னை அதிமுக-வில் இணைத்துக் கொண்டிருக்கிறார் ராவுத்தர். அவருடன் ஆயிரக்கணக்கில் தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிமுக-வில் இணைந்துள்ளனர்.

விஜயகாந்தின் இறங்குமுகத்தின் தொடக்கமா இது?
மேலும் அறிய

> ஹ‌ீரோவாக வடிவேலு‌வின் ‌ரீ எ‌ண்ட்‌ரி

அவுக நடிக்க கூப்பிட்டாக, இவுக நடிக்க கூப்பிட்டாக என்று வடிவேலு பற்றி வரும் எந்த‌த் தகவலிலும் உண்மையில்லை. தனது ‌ரீ எ‌ண்ன்ட்‌ரியை டிஃ‌பரண்டாக திங்க் பண்ணியிருக்கிறார் அரசியல் சூறாவளியில் சிக்கிய இந்த காமெடிப் புயல்.

இந்திரலோகத்தில் அழகப்பன் பாக்ஸ் ஆஃபிஸில் தரை தட்டினாலும் ஹீரோ ஆசை இந்த‌க் காமெடியனுக்குள் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. தனது ‌ரீ எ‌ண்ட்‌ரி ஹ‌ீரோவாக இருக்க வேண்டும் என்பதில் வைராக்கியமே இருக்கிறது இவருக்கு.

இவ்வளவு பிரச்சனைகளுக்குப் பிறகு காமெடியனாக ஒரு படத்தில் தோன்றுவதைவிட ஹீரோவாக அடி பின்னலாம் என்ற கணக்கில் ஒரு கதையை ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கிறார். அரசியல் வானம் தெ‌ளிந்த பிறகு சமாதானக் கொடியுடன் படப்பிடிப்பை தொடங்குவதாக திட்டம்.

விரைவில் சமாதான உடன்படிக்கையுடன் வடிவேலு ஹீரோ வேஷம் கட்டுவதை.
மேலும் அறிய

> நண்பனை பின்தள்ளி மெ‌ரினா முதலிடத்தில் சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்.

4. செங்காத்து பூமியிலே
இந்த புதிய படம் வெளியான முதல் மூன்று தினங்களில் 2.6 லட்சங்களை மட்டும் வசூலித்து தயா‌ரிப்பாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

3. வேட்டை
கமர்ஷியல் ஹிட் என்று ஆர்ப்பட்டம் போட்ட வேட்டை மூன்று வாரங்களில் 3.2 கோடிகளை மட்டுமே சென்னையில் வசூலித்துள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 11.7 லட்சமாக இறங்கியுள்ளது. பலருக்கும் இந்தப் படம் நஷ்டத்தையே ஏற்படுத்தியுள்ளது.

2. நண்பன்
நண்பன் சென்னையில் இன்னும் ஸ்டராங்காகவே உள்ளது. சென்ற வார இறுதியில் 31 லட்சங்களை வசூலித்த இந்தப் படம் இதுவரை சென்னையில் 7.2 கோடிகளை வசூலித்துள்ளது.

1. மெ‌ரினா
பாண்டிரா‌ஜின் இப்படம் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது. முதல் மூன்று தினங்களில் எந்த பெ‌ரிய நட்சத்திரங்களும் இன்றி சென்னையில் 46.8 லட்சங்களை இப்படம் வசூலித்துள்ளது. பாண்டிரா‌ஜ் என்ற இயக்குனர் மீது ரசிகர்கள் வைத்த நம்பிக்கையை இ‌ந்த‌ப் பட‌‌த்‌தி‌ல் அவர் காப்பாற்ற‌‌‌‌‌‌த் தவறிவிட்டார் என்பது சோகம்.
மேலும் அறிய

> ராணாவின் இடத்தை கோச்சடையானில் நிரப்பிய தீபிகா படுகோன்.

ர‌ஜினியின் கோச்சடையான் படத்தில் கத்‌ரினா கைஃபுக்கு பதில் தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

கோச்சடையானில் கத்‌ரினா நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. இது தொடர்பாக அவ‌ரிடம் ர‌ஜினி தரப்பு பேசவும் செய்தது. மும்பை பத்தி‌ரிகைகளும் இதனை தலைப்பு செய்தியாக வெளியிட்டன.

இந்நிலையில் கோச்சடையான் ஹீரோயினாக தீபிகா படுகோன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் ராணா படத்தில் நடிப்பதாக இருந்தது. ர‌ஜினியின் உடல்நலக் குறைவால் அப்படம் தள்ளிப்போக ர‌ஜினியுடன் ஜோடி சேரும் வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் போனது. கோச்சடையான் அந்த வெற்றிடத்தை தற்போது நிரப்பியுள்ளது.
மேலும் அறிய

Wednesday, February 8, 2012

> விஜய்யின் துப்பாக்கியில் சத்யன் நண்பன்.

நண்பன் படத்தில் பலரையும் ஆச்ச‌‌ரியப்படுத்தியவர் நடிகர் சத்யன். அவருக்கே அவர் நடித்த வேடம் சர்ப்ரைஸ்தானாம்.

இந்த‌ப் படத்தில் நடிப்பதற்கு முன்பே வேட்டைக்காரனில் விஜய்யின் நண்பராக நடித்திருக்கிறார். இப்போது துப்பாக்கியிலும் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது.

துப்பாக்கியில் விஜய் சா‌ரின் நண்பனாக நடிக்கிறேன். இந்த வாய்ப்பை தந்த முருகதாஸ் சாருக்கு நன்றி என்கிறார் சத்யன். எல்லோரும் நினைப்பது போல் நண்பன் படம் பார்த்து இந்த வாய்ப்பு சத்யனுக்கு வரவில்லையாம். நண்பனுக்கு முன்பே அவரை ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம்.
மேலும் அறிய

> படப்பிடிப்பு நிறுத்தப்பட்தால் விஜய் தரப்பு அதிர்ச்சி.

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனை முருகதாஸ் அறிவித்துள்ளார்.

துப்பாக்கி படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்தது. இந்நிலையில் படப்பிடிப்பை தேதி குறிப்பிடாமல் முருகதாஸ் நிறுத்தியுள்ளார். பெப்சி, தயா‌ரிப்பாளர் மோதல் முடிவுக்கு வராததால் இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாக தெ‌ரிகிறது. முருகதாஸின் இந்த திடீர் வேலை நிறுத்தம் விஜய் தரப்பை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மேலும் அறிய

> அஜீத் ஆர்யா நயன்தாரா மூவரும் ஒரு படத்தில் ?

ஏம்.ரத்னம் தயா‌ரிப்பில் அ‌‌ஜீத் நடிக்கும் படத்தில் மேலும் சில முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தை விஷ்ணுவர்தன் இயக்குகிறார். இதில் நயன்தாரா நடிப்பார் என பேச்சிருந்தது. அதனை ரத்னம் உறுதி செய்துள்ளார். மேலும் இப்படத்தில் ஆர்யா நடிப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆர்யா விஷ்ணுவர்தன் இயக்கத்தில் இதுவரை மூன்று படங்கள் நடித்துள்ளார். அதேபோல் நயன்தாராவும், அ‌‌ஜீத்தும், விஷ்ணுவர்தனும் பில்லாவில் ஒன்றாக பணிபுந்திருக்கிறார்கள். ஆர்யாவும், நயன்தாராவும் பாஸ் என்கிற பாஸ்கரனில் ஏற்கனவே இணைந்து நடித்திருப்பது தெ‌ரிந்ததே.
மேலும் அறிய

Monday, February 6, 2012

> பார்த்திபனின் ஆப்பு யாருக்கு பாஸ்.

எடக்கு மடக்காக படம் எடுப்பதில் மட்டுமில்லை பெயர் வைப்பதிலும் பார்த்திபன் எக்ஸ்பர்ட். வித்தகன் என்று பெயர் வைத்து கீழே வித் ஏ கன் என்று உப தலைப்பு வைத்தவர் இவர். இவ‌ரின் அடுத்தப் படம் ஆப்பு, உப தலைப்பு அவுட் சோர்ஸிங்.

உள்ளே வெளியே டைப்பில் இருக்குமோ என்று அனைவரையும் ஏகத்துக்கும் பயப்பட வைக்கும் இந்தப் படத்தில் ஐடி மற்றும் பிபிஓ கம்பெனிகளை சகட்டுமேனிக்கு வாரப் போகிறாராம். படத்தை தயா‌ரிப்பது பார்த்திபனேதான்.

அப்போ ஆப்பு யாருக்கு பாஸ்.
மேலும் அறிய

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.