Thursday, September 2, 2010

> சூர்யா - கௌதம் கூட்டணி மீண்டும்

கௌதம் - சூர்யா கூட்டணியின் காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்கள் அனைவராலும் ரசிக்கப்பட்டது மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்கும் லாபமும் பெற்றுத் தந்தது. இவர்கள் மீண்டும் இணைகிறார்கள்.

கௌதம் நடுநிசி நாய்கள் படத்தை இயக்கி வருகிறார். பாடல்கள், பின்னணி இசை எதுவுமற்ற இப்படம் ஏறக்குறைய முடிவடைந்துவிட்டது. இதையடுத்து அவர் தெலுங்குப் படம் இயக்குவார் என்று தெ‌ரிகிறது. இந்த பிஸி ஷெட்யூல்களின் நடுவே விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்தி ‌ரீமேக்கையும் இயக்கி வருகிறார் கௌதம்.

இந்தப் படங்களுக்குப் பிறகு அவர் சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவார் என தெ‌ரிகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மதராசப்பட்டினத்தில் நடித்த இங்கிலீஷ் பியூட்டி எமி ஜாக்சன் நடிப்பார் என இப்போதே கிசுகிசுக்கிறார்கள்.
மேலும் அறிய

> பிரகாஷ்ரா‌ஜின் அடுத்த குறி

திருமணம் முடிந்த சந்தோஷத்தில் இருக்கிறார் பிரகாஷ்ரா‌ஜ். இனிது இனிது படத்தை ஏ‌ஜிஎஸ் வாங்கியது இரட்டிப்பு சந்தோஷம்.

நல்ல படங்களை பிற மொழிகளில் ‌‌ரீமேக் செய்வது பிரகாஷ்ரா‌ஜின் நல்ல வீக்னெஸ். அப்படிதான் தெலுங்கில் வெற்றி பெற்ற ஹேப்பி டேஸை தமிழில் ‌ரீமேக் செய்தார்.

பிரகாஷ்ரா‌ஜின் அடுத்த குறி, பிரஸ்தானம்.

சாய்குமார், த்‌ரிஷா நடித்திருந்த இந்த அரசியல் படத்தைதான் அடுத்து தனது டூயட் மூவிஸ் சார்பில் தமிழில் தயா‌ரிக்க முடிவு செய்துள்ளார். (ராதாமோகனின் பயணம் படத்தையும் டூயட் மூவிஸ்தான் தயா‌ரித்து வருகிறது).

பிரஸ்தானத்தின் தமிழ் ‌‌ரீமேக்கில் சாய்குமார் நடித்த வேடத்தில் பிரகாஷ்ரா‌ஜ் நடிக்கவுள்ளார். பிரஸ்தானத்தை அவர் ‌ரீமேக் செய்வதே இந்த வேடத்தின் மீதுள்ள காதலால்தான் என்கிறார்கள்.

தனி மனிதர்களின் முயற்சியே கலையை வளப்படுத்தும் என்பது பிரகாஷ்ரா‌ஜ் விஷயத்தில் மிக்க ச‌ரி.
மேலும் அறிய

> The International - விமர்சனம்

ரன் லோலா ரன் படத்தின் மூலம் உலக ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்த இயக்குனர் டாம் டைக்வெரின் மற்றுமொரு படைப்பு தி இ‌ண்டர்நேஷனல். 1996இல் வெளியான பெர்ஃப்யூம் - தி ஸ்டோ‌ரி ஆஃப் ஏ மர்டரர் படத்துக்குப் பிறகு 3 வருடங்கள் கழித்து தி இ‌ண்டர்நேஷனல் படத்தை டாம் டைக்வெர் இயக்குகிறார், முந்தையப் படங்களின் சாயல் துளியும் இன்றி முற்றிலும் வித்தியாசமாக.

இன்று அரசுகள் ஒரு நாட்டின் தலைவிதியை நிர்ணயிப்பதில்லை. பெரும் வர்த்தக நிறுவனங்கள்தான் ஒரு நாட்டின் கட்டுமானத்தை தீர்மானிக்கின்றன. அரசின் கொள்கைகள் எப்படி இருக்க வேண்டும், எதனை பிரதிபலிக்க வேண்டும் என்பதையெல்லாம் இவைதான் கட்டுப்படுத்துகின்றன.

இவற்றுள் முக்கியமானவை வங்கிகள். ஒரு நாட்டின் நிதி நிர்வாகத்தை கட்டுப்படுத்துவதில் வங்கிகளின் பங்கு அபாரமானது. ஒரு சர்வாதிகா‌ரிக்கு‌ரிய அதிகாரத்துடன் வங்கிகள் செயல்படுகின்றன. இந்த அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும், வரைமுறையின்றி அதிக‌ரிக்கவும் சில வங்கிகள் எந்த எல்லைக்கும் செல்ல தயாராகின்றன. கட்டுப்பாடற்ற இந்த பாய்ச்சல் ஆர்கனைஸ்டு கிரைம் எனப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்கு முகாந்திரம் அமைத்துக் கொடுக்கின்றன. டாம் டைக்வெர் தனது படத்தில் இதனை வெட்ட வெளிச்சமாக்குகிறார்.

உலகின் ஐந்தாவது பெ‌ரிய வங்கியான ஐபிபிசி போருக்கான ஆயுதங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறது. முக்கியமாக ஏவுகணைகள். இந்த ஏவுகணைகளை வாங்கி சி‌ரியா மற்றும் ஈரான் நாடுகளுக்கு வழங்க ஐபிபிசி ஒப்பந்தம் போட்டிருக்கிறது. அவர்களுக்கு ஆயுதம் சப்ளை செய்யவிருப்பது இத்தாலி ஆயுத வியாபா‌ரியான கால்வினி. இவர் இத்தாலியின் அடுத்த பிரதமராக வரக்கூடியவர் என கணிக்கப்பட்டிருப்பவர்.

வங்கியின் செயல்பாடுகளால் அதிருப்தியுறும் கால்வினி ஏவுகணை வழங்க தயக்கம் காட்டுகிறார். இந்நிலையில் வங்கியின் உயர் அதிகா‌ரி அகமது சுனாய் விபத்தில் இறக்கிறார். அவரது மரணத்துக்கு காரணம் விபத்தல்ல, வங்கியே என்பது கால்வினிக்கு தெ‌ரிய வருகிறது. ஐபிபிசி, கால்வினி ஒப்பந்தத்துக்கு காரணமாக இருந்தவர் கால்வினியின் நண்பரான சுனாய். தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் வங்கி ஏற்பாடு செய்த கொலையாளியால் கால்வினியும் கொல்லப்படுகிறார்.

கால்வினியின் மரணத்துக்கு காரணம் வங்கியே என்பது அவரது மகன்களுக்கு தெ‌ரிய வருகிறது. இதனால் வங்கிக்கு புதிய நெருக்கடி ஏற்படுகிறது. குறிப்பிட்ட காலத்தில் ஏவுகணைகளை சப்ளை செய்யாவிட்டால் வங்கி திவாலாகிவிடும். இதனால் வங்கி‌த் தலைவர் ஸ்கார்சன் கால்வினியின் போட்டி கம்பெனியின் உதவியை நாடுகிறார். துருக்கியைச் சேர்ந்த இந்தக் கம்பெனியின் பிரதான வாடிக்கையாளர் இஸ்ரேல். துருக்கி கம்பெனி வங்கிக்கு ஏவுகணைகள் சப்ளை செய்ய முன் வருகிறது. ஆனால் அந்த ஏவுகணைகளை எதிர்க்கக் கூடிய ஆயுதங்களை ஏற்கனவே அக்கம்பெனி இஸ்ரேலுக்கு விற்றுள்ளது.

இந்த விவரம் தெ‌ரிந்தால் சி‌ரியாவும், ஈரானும் ஏவுகணைகள் வாங்குவதில் இருந்து பின்வாங்கும். வங்கி மிகப்பெ‌ரிய இக்கட்டில் மாட்டிக் கொள்ளும். இந்த ரகசியத்தை அம்பலப்படுத்த இ‌ண்டர்போல் அதிகா‌ரி எடுக்கும் முயற்சி கைகூடாமல் போகிறது. கோபத்தில் வங்கி‌த் தலைவர் ஸ்கார்ஸனை அவர் துரத்த, இடையில் வரும் கால்வினியின் மகன்களால் நியமிக்கப்பட்ட கொலையாளி ஸ்கார்சனை சுட்டுக் கொல்கிறார்.

இந்த‌க் கதை இ‌ண்டர்போல் அதிகா‌ரி சேலிங்கர் நடத்தும் விசாரணையின் வழியாக சொல்லப்படுகிறது. ஒரு வங்கி எதற்கு தனது பணத்தை ஏவுகணை பிசினஸில் முதலீடு செய்ய வேண்டும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இன்டர்போல் அதிகா‌ரி சேலிங்கர் தனது விசாரணையை மேற்கொள்கிறார். வங்கியின் சட்டவிரோத போக்கை நிரூபிக்க அவருக்கு நம்பிக்கையான ஆள் ஒருவர் கிடைக்கிறார். ஆனால் மர்மமான முறையில் அந்த நபரும் அவரது குடும்பமும் கொல்லப்படுகிறது. சேலிங்க‌ரின் சந்தேகம் உறுதியாகிறது.

இந்நிலையில் தீவிரவாதிகளுக்கு பணம் வரும் வழிகளை ஆராயும் அமெ‌ரிக்க அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தை சேர்ந்த எலானர் விட்மேன் - சுருக்கமாக எல்லா - சேலிங்கருடன் இணைந்து வங்கியின் செயல்பாடுகளை கண்காணிக்கிறார். இதில் எல்லாவின் அலுவலகத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்படுகிறார்.

இந்த‌க் கொலையில் இருந்துதான் படம் தொடங்குகிறது. ரன் லோலா ரன் படத்தில் கேமராவை அதிவேகமாக பயன்படுத்திய டாம் டைக்வெர் இந்தப் படத்தில் ஆழ் கடலின் அமைதியுடன் காட்சிகளை விவ‌ரிக்கிறார். வழக்கமான ஹாலிவுட் கமர்ஷியல் படங்களின் கிளிஷேக்கள் இந்தப் படத்தில் இல்லை. ஆனால் அந்தப் படங்களைவிட மிக விறுவிறுப்பாக செல்கிறது தி இ‌ண்டர்நேஷனல். குறிப்பாக வங்கி ஏற்பாடு செய்யும் கொலையாளியை சேலிங்கரும் எல்லாவும் கண்டுபிடித்து பின் தொடரும் காட்சிகள்.

ஒரு வங்கி மலிவு ரக ஆயுதங்களை பிற நாடுகளுக்கும், போராளி குழுக்களுக்கும் சப்ளை செய்வதன் மூலம் எப்படி நிதி நிர்வாகத்தை கட்டுப்படுத்துகிறது என்பது இந்தப் படத்தில் தெ‌‌ளிவாக‌க் கூறப்பட்டுள்ளது. ஆப்பி‌ரிக்காவிலுள்ள ஒரு போராளிக்குழு தலைவருடன் வங்கியின் தலைவர் ஸ்கார்சன் பேசுகிறார். நாங்கள் உங்களுக்கு என்னவிதமான ஆயுத உதவிகளையும் செய்ய‌த் தயாராக இருக்கிறோம் பதிலுக்கு உங்களது அரசு அமைந்ததும் உங்கள் நாட்டின் நிதி நிர்வாகத்தை எங்கள் வங்கி கட்டுப்படுத்தும் என பேரம் பேசுகிறார்.

இந்தப் படத்தின் இரண்டாவது முக்கிய சேதி, இதுபோன்ற வங்கிகளை சட்டத்துக்கு உ‌ட்பட்டு எதுவும் செய்ய முடியாது என்பதும், வங்கியின் அதிகா‌ரிகளை சட்டத்துக்கு புறம்பாக தண்டிக்க முடிந்தாலும் வங்கியின் செயல்பாட்டை ஒருபோதும் தடை செய்ய முடியாது என்பதுமாகும்.

ஸ்கார்சன் கொல்லப்பட்டாலும் அவரது இடத்துக்கு வரும் புதிய தலைவரால் ஆயுத பரவலும், வன்முறையும் அதிக‌ரிக்கிறது. அப்படி அதிக‌ரிப்பதை சுட்டிக் காட்டும் பத்தி‌ரிகை செய்தியுடன் படத்தை முடித்துக் கொள்கிறார் டாம் டைக்வெர்.

ஆனால் ஒவ்வொரு பொறுப்புள்ள மனிதனின் சிந்தனையும் இந்த முடிவில் இருந்துதான் தொடங்க வேண்டும்.
மேலும் அறிய

Wednesday, September 1, 2010

> தொலைபேசியில் மிரட்டல் - வர்மாவுக்கு

தாவுத் இப்ராஹிம் பற்றியெல்லாம் படமெடுத்த போது கூட ராம்கோபால் வர்மாவுக்கு இப்படியான நெருக்கடிகள் ஏற்பட்டதில்லை. ஆனால் ஆந்திராவை சேர்ந்த ரவுடி கம் அரசியல்வாதி ப‌ரி‌ட்டால ரவியின் கதையை எப்போது படமெடுக்க தீர்மானித்தாரோ அப்போதே பிரச்சனைகள்.

எனது கணவரை ரவுடியாக சித்த‌ரிக்கக் கூடாது என முதலில் போர்க்கொடி தூக்கினார் ப‌ரி‌ட்டால ரவியின் மனைவி. படப்பிடிப்பை நடத்தவிடமாட்டேன் என்றெல்லாம் மிரட்டல்கள் வந்தன. அதையும் மீறி படப்‌பிடிப்பை முடித்து ‌ரிலீஸுக்கு படத்தை கொண்டு வந்திருக்கிறார் வர்மா.

இந்தமுறை அவருக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. விடுத்தது ப‌ரி‌ட்டால ரவியை கொன்ற சூ‌ரியின் சகோதரர். படத்தில் அவரை மோசமாக சித்த‌ரித்திருப்பதாக வந்த தகவலை அடுத்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தாவுத்தை பார்த்த வர்மா இந்த தாதாவையும் சமாளிப்பார்.
மேலும் அறிய

> குழப்பத்தை தீர்த்த 3 இடியட்ஸ் இயக்குனர்

3 இடியட்ஸ் படம் குறித்த குழப்பத்தை அதன் இயக்குனர் ராஜு ஹிரானி தீர்த்து வைத்தார்.

அமீர்கான், மாதவன், க‌‌ரீனா கபூர் நடித்த 3 இடியட்ஸ் படம் இந்திய அளவில் புதிய சாதனை படைத்திருக்கிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கில் ‌‌ரீமேக் செய்யப்படுகிறது. ‌‌ரீமேக்கை இயக்குகிறவர் ஷங்கர்.

3 இடியட்ஸின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகப் போவதாக சில நாட்களாக பரபரப்பு வதந்திகள். அதேபோல் தமிழ், தெலுங்கு ‌‌ரீமேக் கைவிடப்படுவதாகவும் சில விஷமிகள் செய்தி பரப்பினர். இந்த வதந்திகளுக்கெல்லாம் ராஜு ஹிரானி முற்றுப் புள்ளி வைத்தார். விழாவொன்றில் பேசிய அவர்,

3 இடியட்ஸ் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் திட்டம் இல்லை என திட்டவட்டமாக தெ‌ரிவித்தார். மேலும் 3 இடியட்ஸ் தமிழ் மற்றும் தெலுங்கில் ‌ரீமேக் செய்யப்படுவதை அவர் உறுதிபடுத்தினார்.

தமிழ் ‌ரீமேக்கில் விஜய்யும், தெலுங்கு ‌‌ரீமேக்கில் மகேஷ்பாபுவும் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அறிய

> வாய்ஸ் OF நயன்தாரா.

நயன்தாரா இப்போதெல்லாம் பேட்டியே கொடுப்பதில்லை. அதேநேரம் அவரைப் பற்றிய செய்தி இல்லாமல் எந்தப் பத்தி‌ரி‌க்கையும் வெளிவருவதுமில்லை. பேசாமலே பேச வைப்பதில் நயன் நம் சூப்பர் ஸ்டாரையே பீட் செய்துவிட்டார்.

நாம் சொல்ல வந்த வாய்ஸ், நயன்தாராவின் ஒ‌ரி‌ஜினல் வாய்ஸ். நடிக்க வந்து பல வருடங்கள் ஆனாலும் இதுவரை நயன்தாரா சொந்தக் குரலில் பேசியதில்லையாம். முதல் முறையாக ஒரு படத்தில் பேசியிருக்கிறார்.

தமிழ் ரசிகர்களுக்கு இதிலும் ஏமாற்றம்தான். நயன்தாரா சொந்தக் குரலில் பேசியிருப்பது மலையாளப் படமான எலெக்ட்ராவில்.

இந்தப் படத்தில் நயன்தாராவின் அம்மாவாக மனிஷா கொய்ராலா நடிப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அறிய

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.