<strong>ஐ.பி.எல். கிரிக்கெட்டை எதிர்நோக்கி கங்கூலி
வெள்ளி, 3 ஏப்ரல் 2009( 14:19 TST )
தலைமைப் பொறுப்பு குறித்து ஜான் புக்கானனுடன் ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நிலையில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஐ.பி.எல். இரண்டாவது கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடுவது பற்றி தற்போது தன் கவனம் இருப்பதாக கங்கூலி தெரிவித்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவரான கங்கூலி இது பற்றி கூறுகையில் "சர்ச்சைகள் கிரிக்கெட் உலகில் சகஜம்தான், இது விளையாட்டு உலகத்திற்கு புதிதல்ல, ஆனால் தொழில் பூர்வ கிரிக்கெட் வீரர்கள் இவற்றை பின்னுக்கு தள்ளி ஆட்டத்தில் கவனம் செலுத்துவதுதான் வழக்கம்" என்றார்.
கடந்த ஆண்டு துவக்கத்தில் வெற்றிகளைக் குவித்த கங்கூலி அணி பிறகு தோல்விகளை சந்திக்க துவங்கியது. இதனால் இந்த முறை இரட்டை கேப்டன் முறை கடைபிடிக்க வேண்டும் என்று பயிற்சியாளர் புக்கானன் கூறினார்.
அந்த பிரச்சனையை அணி நிர்வாகம் தற்போது ஒத்தி வைத்து தென் ஆப்பிரிக்காவிற்கு சென்ற பிறகு கேப்டன் மற்றும் அணிகளை அறிவிக்கலாம் என்று முடிவு செய்துள்ளது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.