Sunday, June 3, 2012

> ஸ்டைலை பணமாக்கும் பவர் ஸ்டார்.

பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு ஏது ஸ்டைல்? மண்டையில் அடித்துக் கொள்ளும் வாசகர்களே... இது தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாண்.

பதினொரு வருஷத்துக்குப் பிறகு இப்போதுதான் ஒரு மெகா ஹிட்டை கொடுத்திருக்கிறார் பவன் கல்யாண். ஆனாலும் இவரது ரசிகர் பட்டாளம் குறையவில்லை. காரணம் பவனின் பெக்யூலியர் ஸ்டைல். இவர் அணியும் உடைகளுக்கு இளைஞர்கள் மத்தியில் ரொம்பவே வரவேற்பு. கப்பர் சிங் படத்தில் இவர் அணிந்து வரும் உடைகளை அப்படியே இமிடேட் செய்கிறது யூத் வட்டாரம்.

தனது ஸ்டைலை பிசினஸாக்கினால் கோடிகள் அள்ளலாம் என்பது பவனுக்கு தெ‌ரிந்திருக்கிறது. தனது பர்சனல் காஸ்ட்யூம் டிஸைனர் ராஜேஷ் மோரை வைத்து பவர் ஸ்டார் கலெக்சன் என்ற பெய‌‌ரில் துணிக்கடை தொடங்க திட்டமிட்டிருக்கிறார். இதில் உள்ள அனைத்து உடைகளும் ராஜேஷ் வடிவமைத்ததாக இருக்கும்.

திருமதி ர‌ஜினி பாபா கர்ச்சீஃப் விற்ற கதைதான் ஞாபகத்துக்கு வருது.
மேலும் அறிய

> ஹன்சிகா பள்ளி மாணவியாக மாற்றான் முடிந்ததும் சிங்கம் 2 படப்பிடிப்பு தொடங்குகிறது.

சத்யராஜ் நடித்த படமொன்றில் நடிகரான அவரிடம் சத்யன் கதை சொல்லப் போவார். முதல் காட்சியில் ஒரு மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்கும் என்பார் சத்யன். முதல் சீன்லயே ஹாஸ்பிடலா என்று முகம் சுழிக்கும் சத்யராஜிடம் சத்யன் சொல்வார், அந்த குழந்தையே நீங்கதான்.

நடக்கிற விஷயங்களைப் பார்த்தால் இந்த காமெடி சீன் நிஜமாகவே நடக்கும் போலிருக்கிறது.

ஹரியின் சிங்கம் 2 படத்தில் சூர்யா ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். இந்தப் படத்தில் இவருக்கு பள்ளி மாணவி வேடமாம். பம்பளிமாஸாக இருக்கும் ஹன்சிகா பள்ளி மாணவியா என்பது ஒருபுறமிருக்க, கடா மீசை போலீஸ் அதிகாரி சூர்யா பள்ளி மாணவியையா காதலிக்கப் போகிறார் என்றொரு அதிர்ச்சியும் இதில் சேர்ந்தே இருக்கிறது.

தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். மாற்றான் முடிந்ததும் சிங்கம் 2 படப்பிடிப்பு தொடங்குகிறது.
மேலும் அறிய

Saturday, June 2, 2012

> வடிவேலுவை பிடிக்கும் அவருடன் நடிக்க ஆசைப்படுகிறேன் உதயநிதி ஸ்டாலின்.

திமுக வுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ததன் பலனாக வனவாசம் அனுபவித்து வருகிறார் வடிவேலு. அந்த சோகம் இன்னும் வடியாத நிலையில் இன்னொரு அணுகுண்டை வீசி வடிவேலை அதிர வைத்திருக்கிறார் திமுக தலைவ‌‌ரின் பேரன் உதயநிதி ஸ்டாலின்.

ஒரு ஒல் ஒரு கண்ணாடி படத்தின் ஐம்பதாவது நாளை முன்னிட்டு கும்பகோணம் வந்தார் உதயநிதி. அப்போது அவர் உதிர்த்த எதிர்கால திட்டங்களின் ஒருபகுதிதான் இந்த அணுகுண்டு.

ஜனரஞ்சகமான காமெடி படங்களில் மட்டுமே நடிப்பேன். அதேநேரம் எனக்கேற்ற வித்தியாசமான ஆக் ஷன் படம் என்றாலும் ஓகே என்றவர், வடிவேலுவை பிடிக்கும் அவருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன் என்றார்.
மேலும் அறிய

Friday, June 1, 2012

> அ‌‌ஜீத் அதில் நடிக்கவில்லை. அ‌‌ஜீத் நடிப்பது ப்ரெஷ்ஷான ஸ்கி‌ரிப்ட் - சிவா.

விஷ்ணுவர்தன் இயக்கும் படத்திற்குப் பிறகு விஜயா புரொடக்சனுக்காக சிவா இயக்கத்தில் நடிக்கிறார் அ‌‌ஜீத். சிவா இயக்கிய தெலுங்குப் படம் ப்ளாப்பானதால் அ‌‌ஜீத் சிவா இயக்கத்தில் நடிப்பது கஷ்டம் என்றொரு பேச்சும் நிலவுகிறது.

இந்த இடியாப்ப குழப்பத்துக்கு நடுவில் ரவி தேஜா, தாப்ஸீ நடித்த 'Daruvu' படத்தைதான் அ‌‌ஜீத்துக்காக சிவா தமிழில் ரீமேக் செய்கிறார் என்றொரு செய்தியும் அடிபட்டது. இதனை ஐம்பது சதவீதம் மறுத்திருக்கிறார் சிவா.

Daruvu படத்தை தமிழ், இந்தியில் ‌ரீமேக் செய்யவிருப்பது உண்மைதான். ஆனால் அ‌‌ஜீத் அதில் நடிக்கவில்லை. அ‌‌ஜீத் நடிப்பது ப்ரெஷ்ஷான ஸ்கி‌ரிப்ட் என்று தெ‌ரிவித்துள்ளார்.

விஷ்ணுவர்தன் இயக்கும் படம் முடிந்ததும் சிவா இயக்கும் படம் தொடங்குகிறது.
மேலும் அறிய

> கோபத்தில் மிஷ்கினின் மேடையில் மூன்றெழுத்து கெட்டவார்த்தை சரளமாக பேசினார்.

கலைஞனுக்கு கோபம் இருக்க வேண்டியதுதான். அது கரை கடந்தால்...? நந்தா பெ‌ரியசாமியின் அழகன் அழகி படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த மிஷ்கினின் வார்த்தைகள் மேடை நாக‌ரிகத்தின் தோலை சிராய்த்தது அனைவருக்கும் அதிர்ச்சி.

நந்தா பெ‌ரியசாமியின் எந்தப் படத்தையும் பார்த்ததில்லை என்றுதான் ஆரம்பித்தார் மிஷ்கின். அவர் நூறு வயசு வாழணும் என்று வாழ்த்தியவர் அப்படியே பாலா‌ஜி சக்திவேலின் வழக்கு எண்ணுக்கு வந்தார். காரைக்குடியில் முகமூடி கிளைமாக்ஸ் ஷூட் பண்ணுன நேரம் போக மற்ற நேரத்தில் வழக்கு எண் படத்தின் வசூல் பற்றி பேசிக் கொண்டிருந்ததாகவும், பாலா‌ஜி சக்திவேலிடம் கலெக்சன் எப்படி என்று கேட்டதற்கு ஓகே என்று அவர் சொன்னதாகவும் மிஷ்கின் குறிப்பிட்டார்.

நல்ல படம் எடுங்கன்னு சொல்றீங்க, அப்படி எடுத்தா எவனாவது பார்க்கிறீங்களா என்பதுதான் அவ‌ரின் கோபம். படம் வெற்றி ஓகே. ஆனா டைட்டானிக் மாதி‌ரியான ஒரு வெற்றி இந்தப் படத்துக்கு கிடைச்சிருக்க வேண்டாமா... மாப்பிள்ளை பார்க்கிறப்போ நல்ல ஆளான்னு கேட்கறீங்க, படத்துக்கு போகும் போது மட்டும் ஏன் நல்ல படமான்னு கேட்க மாட்டேங்கிறீங்க... மிஷ்கினின் கோபத்தில் சென்னையின் மூன்றெழுத்து கெட்டவார்த்தை சரளமாக வெளிவர கேட்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி.

அடுத்த ஒரு வார சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் மிஷ்கின்.
மேலும் அறிய

> ர‌ஜினி K.V.ஆனந்த் இயக்கத்தில் ?

இப்படியொரு செய்தி கொஞ்ச நாட்களாக கால் இல்லாமல் கோடம்பாக்கத்தில் உலவி வருகிறது. தனது ராகவேந்திரா கல்யாண மண்டபத்துக்கு K.V.ஆனந்தை அழைத்து ர‌ஜினி பேசிய பிறகு வதந்திக்கு றெக்கை முளைத்தது.

இன்றைய தேதியில் கமர்ஷியல் விஷயங்களை பிரமாண்டமாகவும் மக்களுக்குப் பிடித்த மாதி‌ரியும் எடுப்பதில் ஷங்கருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் K.V.ஆனந்த். ஷங்கருடன் தொடர்ந்து இரு படங்கள் நடித்ததால் வேறொரு ஜோடி ர‌ஜினிக்கு தேவைப்படுகிறது. மேலும் கோச்சடையான் ச‌ரித்திரப் படம். அது முடிந்ததும் அதே பாணியில் அமைந்த ராணாவில் நடிக்க ர‌ஜினிக்கு விருப்பமில்லை. கோச்சடையானுக்கும், ராணாவுக்கும் நடுவில் வேறொரு படம் நடிக்க ர‌ஜினி ப்‌ரியப்படுவதாக‌க் கூறப்படுகிறது.

அந்தப் படத்தை இயக்க ச‌ரியான ஆள் K.V.ஆனந்த் என்பதால்தான் அவரை அழைத்து ர‌ஜினி பேசியதாகவும், சுபா ர‌ஜினிக்கேற்ற கதையை தயார் செய்து வருவதாகவும் பலமாகப் பேசப்படுகிறது. இதுகுறித்து முன்பு கருத்து தெ‌ரிவித்த K.V.ஆனந்த் முற்றாக இதனை மறுக்காதது குறிப்பிடத்தக்கது.
மேலும் அறிய

Thursday, May 31, 2012

> OK OK என பச்சை குத்திக் கொண்ட உதயநிதி.

ஆணோ பெண்ணோ மனம் கவர்ந்தவ‌ரின் பெயரை பச்சைக் குத்திக் கொள்வதுண்டு. மாஸ்டருடன் இணக்கத்தில் இருந்த போது காதல் கிறக்கத்தில் நயன்தாரா அவரது பெயரை பச்சைக் குத்திக் கொண்டார். இப்போது ஏண்டா அப்படி செய்தோம் என்றாகிவிட்டது அவருக்கு. ஆனால் உதயநிதி குத்திக் கொண்ட டாட்டூவால் அவருக்கு எந்த காலத்திலும் பிரச்சனை வரப்போவதில்லை.

அதிகமாக நடிக்கவே தெ‌ரியாமல் வெளிவந்த முதல் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி வசூலில் சாதனை படைத்திருக்கிறது. சென்னை வசூலில் எந்திரனை இந்தப் படம் தொட்டிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சென்னை சிட்டியில் தொடர்ந்து மூன்று வார இறுதி‌‌யி‌ல் ஒரு கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் படமும் இதுதான்.

இந்த வெற்றியை ஒருபோதும் மறக்கக் கூடாது என்பதற்காக படத்தின் முதல் எழுத்துக்களை - ஓகே ஓகே - பச்சைக் குத்திக் கொண்டிருக்கிறாராம் உதயநிதி. அடுத்தப் படமும் இப்படி சூப்பர்ஹிட்டானால் அதையும் பச்சை குத்திக்குவீங்களா?
மேலும் அறிய

> விக்ரம் நடிக்கும் டேவிட் படத்தில் லாரா தத்தா.

பிப்ரவ‌ரியில் குழந்தை பெற்றுக் கொண்ட லாரா தத்தா சில மாதங்கள் கழிந்தே நடிப்புக்கு திரும்புவேன் என்று கூறியிருந்தார். அதன்படி விரைவில் நடிப்புக்கு திரும்புகிறார். இவர் முதலில் கால்ஷீட் தந்திருக்கும் படம் டேவிட்.

சைத்தான் படத்தை இயக்கி அனைவ‌ரின் கவனத்தையும் கவர்ந்த பிஜாய் நம்பியா‌ரின் இரண்டாவது படம் டேவிட். விக்ரம் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் நீல் நிதின் முகேஷ், தபு, இஷா ஷர்வானி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இதில் முக்கியமான வேடத்தில் லாரா தத்தா நடிக்கிறார்.

படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கியிருந்தாலும் லாரா தத்தா சம்பந்தப்பட்ட காட்சிகள் ஆகஸ்ட் மாதமே தொடங்கப்பட உள்ளது. அப்போது லாரா சொன்ன சில மாதங்கள் கணக்கும் முடிவுக்கு வந்துவிடும்.
மேலும் அறிய

> தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயனுடன் ப்ரியாஆனந்த்

தனுஷ் தனது சொந்த‌த் தயா‌ரி‌ப்பு நிறுவனம் சார்பில் தயா‌ரிக்கும் முதல் படத்தில் சிவ கார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு எதிர் நீச்சல் என்று தற்காலிகமாக பெயர் வைத்துள்ளனர். வரும் நாட்களில் பெயர் மாற்றப்படலாம்.

இந்தப் படத்தை வெற்றிமாறனின் அசிஸ்டெண்ட் செந்தில் இயக்குகிறார். இது அவரது முதல் படம். இசை அனிருத், கேமரா வேல்ரா‌ஜ் என மொத்த டீமும் தயார். ஹீரோயின் யார் என்பது மட்டும் முடிவு செய்யப்படாமல் இருந்தது.

தற்போது 180 உள்ளிட்ட படங்களில் நடித்த ப்‌ரியா ஆனந்தை தனுஷ் தேர்வு செய்திருக்கிறார். விரைவில் படப்‌பிடிப்பு தொடங்க உள்ளது.

மேலும் அறிய

> சமந்தாவா ஷங்கர் ஹீரோயின் ?

ஆஸ்கர் ஃபிலிம்ஸில் ஷங்கர் இயக்கும் படத்தில் விக்ரம் ஹீரோ, இசை ரஹ்மான், படத்தின் பெயர் தேர்தல் என்று அடுக்கடுக்காக செய்திகள் வந்தாலும் தயா‌ரிப்பு தரப்போ, ஷங்கரோ இதனை இன்னும் உறுதி செய்யவில்லை. அதற்குள் அடுத்த செய்தி. ஹீரோயினாக நடிப்பது சமந்தா.

இது சமந்தா சீஸன் போல. கௌதம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தைத் தொடர்ந்து நீதானே என் பொன்வசந்தம் படத்திலும் சமந்தாவை ஹீரோயினாக்கியிருக்கிறார். மணிரத்னத்தின் கடல் படத்திலும் இவர்தான் ஹீரோயின். இந்நிலையில் ஷங்கர் படத்திலும் இவர்தான் ஹீரோயின், படத்தின் தெலுங்குப் பதிப்புக்கு எலெக்சன் என்று பெயர் வைத்திருப்பதாகவும், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்வதாகவும் எக்குதப்பாக தகவல்கள் குவிகின்றன.

இதில் எது உண்மை என்பதை ஷங்கர் கொஞ்சம் தெ‌ளிவுபடுத்தக் கூடாதா?
மேலும் அறிய

Wednesday, May 30, 2012

> பில்லா 2வில் வாலாட்டும் சிம்பு.

பெ‌ரிய படங்கள் வெளியாகும் போது வரப்போகும் படத்தின் டீசரை வெளியிடுவது இந்திப்பட உலகில் சகஜம். இதனால் டீசர் உடனடியாக பிரபலமடையும்.

இந்த மாதம் பில்லா 2 வெளியாகிறது. இந்தப் படத்தின் இடைவேளையில் தனது வாலு படத்தின் டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளாராம் சிம்பு. வேட்டை மன்னன், போடா போடி என்று இரு படங்களில் சிம்பு நடித்து வருகிறார்.

இவற்றை ஓரமாக வைத்து ஒருநாள் மட்டும் வாலு படத்துக்கான டீசருக்கு நடித்துத் தந்தார். வாலு படப்பிடிப்புக்கு முழு வீச்சில் கிளம்புவார்கள் என்பதே தெ‌ரியாத நிலையில் டீசரை மட்டும் பிரமோட் செய்ய நினைக்கிறார்.

வேட்டை மன்னன், போடா போடி ரொம்பப் பழசாயிடப் போகுது பாஸ்.
மேலும் அறிய

> கலகலப்பு முதலிடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸ்.

5. இஷ்டம்
விமல் நடித்திருக்கும் இந்த தெலுங்கு ‌ரீமேக் சந்தானம் இருந்த போதிலும் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 7 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது.

4. வழக்கு எண் 18/9
மூன்று வாரங்கள் முடிவில் இப்படம் சென்னையில் 3.09 கோடிகளை வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 8.5 லட்சங்கள்.

3. உருமி
சந்தோஷ் சிவனின் ச‌ரித்திரப் படமான உருமி சுமாரான ஓபனிங்கையே பெற்றிருக்கிறது. சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று நாட்களில் 9.1 லட்சங்களை வசூலித்துள்ளது.

2. ஒரு கல் ஒரு கண்ணாடி
ஆறு வாரங்கள் முடிந்த நிலையில் இப்படம் சென்னையில் 16.5 கோடிகளை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இதன் சென்ற வார இறுதி வசூல் 16.5 லட்சங்கள்.

1. கலகலப்பு
சுந்தர் சி-யின் படம் இந்த வாரமும் முதலிடத்தில். சென்ற வார இறுதியில கலகலப்பு‌வின் சென்னை வசூல் 69.2 லட்சங்கள். இதுவரை இதன் சென்னை வசூல் 4.04 கோடிகள்.
மேலும் அறிய

> சகுனி ஆடியோ ஜூன் 2 வெளியிடப்படுகிறது.

மே மாதம் திரைக்கு வருவதாகச் சொல்லப்பட்ட சகுனி அடுத்த மாதமே திரைக்கு வருகிறது.

அறிமுக இயக்குனர் சங்கர் தயாள் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் முதலில் சலீம் கௌஸ் வில்லனாக நடித்தார். அவரது நடிப்பு ச‌ரியில்லை என அவரை மாற்றி பிரகாஷ்ராஜை வைத்து ‌ரீஷூட் செய்தனர். இதனால் சகுனி வெளியாவது காலதாமதமானது.

இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாக ப்ரணீத்தா நடித்துள்ளார். ராதிகா, ரோஜா ஆகியோரும் நடித்துள்ளனர். இதன் ஆடியோ வரும் 2ஆம் தேதி வெளியிடப்படுகிறது. சகுனி இங்கு வெளியாகும் அதே நாள் தெலுங்கிலும் வெளியாகிறது. தெலுங்கு ஆடியோ 5ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

மேலும் அறிய

Sunday, May 27, 2012

> விஸ்வரூபத்தை IIFA வில் வெளியிடுகிறார் கமல்.

கமலின் விஸ்வரூபம் தமிழ், இந்தி இரு மொழிகளில் எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழில் எடுத்து இந்தியில் டப் செய்யாமல் தமிழுக்கு ஒருமுறையும், இந்திக்கு இன்னொருமுறையும் என்று இருமுறை ஷூட் செய்திருக்கிறார் கமல். இந்தியில் படத்தின் பெயர் விஸ்வரூப்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் விஸ்வரூபத்தை வெளியிட கமல் விரும்பினார். ஆனால் அது நிறைவேறவில்லை. இப்போது சிங்கப்பூ‌ரில் நடக்கும் ஐஃபா விழாவில் இந்திப் பதிப்பான விஸ்வரூப்பை வெளியிடுகிறார்.

ஆஸ்கருக்கு அடுத்து ஐஃபாவைதான் அதிக ரசிகர்கள் தொலைக்காட்சியில் ரசிப்பதாக ஒரு சர்வே சொல்கிறது. இந்த விழாவில் படத்தை திரையிட்டால் அனைவரையும் வெகு சுலபமாக அது சென்றடையும். அதனால்தான் கமல் ஐஃபாவை தோந்தெடுத்ததாக‌க் கூறுகிறார்கள்.

வரும் ஜூன் 8ஆம் தேதி விஸ்வரூப் சிங்கப்பூ‌ரில் திரையிடப்படுகிறது.
மேலும் அறிய

Saturday, May 26, 2012

> கார்த்திக் இசை கௌதம் படத்துக்கு.

பாடகராக இருந்த கார்த்திக்கை அரவான் இசையமைப்பாளராக்கியது. பாடல்கள் அனைத்தும் பேசப்பட்டது கார்த்திக்கிற்கு பிளஸ்ஸாக அமைந்தது. இப்போது அடுத்தப் படத்துக்கு கார்த்திக் தயார்.

கௌதம் தயா‌ரிப்பில் பிரேம் சாய் இயக்கும் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் படத்துக்கு கார்த்திக் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ஜெய், அபிநயா நடிக்கிறார்கள். படங்களின் வியாபார வேல்யூவை அதிகப்படுத்தும் சந்தானமும் படத்திலுண்டு. அவருடன் விடிவி கணேஷும் கலக்கயிருக்கிறார்.

இந்தப் படம் வெற்றி பெற்றால் அடுத்தடுத்தப் பாகங்களை உருவாக்கயிருப்பதாக பிரேம் சாய் தெ‌ரிவித்துள்ளார்.
மேலும் அறிய

> சல்மான்கான் தில்லாலங்கடி ‌ரீமேக்கில்.

தெலுங்கில் வெற்றிபெற்ற கிக் படத்தை தில்லாலங்கடி என்ற பெய‌ரில் தமிழில் எடுத்தனர். படம் சுமாராகதான் போனது. இதனை இந்தியில் ‌ரீமேக் செய்கிறார்கள். ஹீரோ சல்மான்கான்.

கான்கள் இந்திப் படத்தைப் பார்க்கிறார்களோ இல்லையோ தமிழ்ப் படங்களை விடாமல் பார்க்கிறார்கள். இங்கிருந்து செல்லும் சௌத் இந்தியன் மசாலாக்கள்தான் அங்கு பாக்ஸ் ஆஃபிஸில் தூள் கிளப்புகின்றன. இதனால் சுமாரான மசாலாக்களுக்கும் ராஜ ம‌ரியாதை.

அந்தவகையில் தில்லாலங்கடியையும் இந்தியில் ‌ரீமேக் செய்கிறார்கள். இயக்குனர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
மேலும் அறிய

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.