சீனத் தலைநகர் பீஜிங்கில் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் , இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்று மண்டலம் மாசடைந்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் சுவாசிக்கத் தகுதியற்றதாக காற்று மாறிவிட்டதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரோக்கியமான வாழ்வுக்கு காற்றில் மாசின் அளவு 200 அலகுகளுக்கு அதிகமில்லாமல் இருக்க வேண்டும் என்பது உலக சுகாதார நிறுவனமான WHO இன் மதிப்பீடாக உள்ள நிலையில், கடந்த 8 ஆம் திகதி பீஜிங்கில் 256 அலகுகளாக இருந்த மாசின் அளவு படிப்படியாக உயர்ந்து இன்று 365 அலகுகளை எட்டியுள்ளதால் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது 2.5 மைக்ரான் அடர்த்திக்கு சமமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையால் பீஜிங் நகரில் மாசுக்களை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களின் இயக்கம் தற்காலிகமாக முடக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
300 அலகுகளைத் தாண்டிய காற்று மாசின் அளவு சுவாசிக்க தகுதி அற்றதாகவும், உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பேராபத்து நிறைந்ததாகவும் கருதப்படுகின்றது.
-A.D.ஷான்-
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.