மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பாரம்பரிய சித்த மருத்துவர்களை தெரிந்து கொள்வோம்


சித்தர்களின் ஆசி பெற்று குருவின் அருள் பெற்று சித்த வைத்தியம் செய்து வரும் மருத்துவர்களின் கருத்தரங்கு 2009 மார்ச் 8,9,10 தேதிகளில் தர்மா மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளையின் சார்பில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பூந்தோட்டத்தில் தர்மா வித்யாலயா பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் சித்த மருத்துவர்கள் பலர் தங்களின் மருத்துவ முறைகளை அனைவரிடமும் பகிர்ந்துகொண்டனர்.

பட்டதாரி மருத்துவர்களுக்கும், பரம்பரை மருத்துவர்களுக்கும் ஏற்பட்ட இடைவெளியினால் சித்த மருத்துவம் பயிலும் பட்டதாரி மாணவர்களுக்கு தேவையான பல மருத்துவ விபரங்கள் தெரியாமல் போய்விட்டன.

இந்த நிலைமாறி பரம்பரை மருத்துவர்களும், பட்டதாரி மருத்துவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் எதிர்காலத்தில் சித்த மருத்துவம் தழைத்தோங்கச் செய்ய முடியும் என்ற நோக்கத்தில் பரம்பரை சித்த மருத்துவர்களைப் பற்றியும் அவர்களின் மருத்துவ முறைகள் பற்றியும் ஒவ்வொரு இதழிலும் தெரியப்படுத்தி வருகிறோம்.


-----------


தேவூர் லயன் மரு.க.கோ. மணிவாசகம்
2-4 பி, கீழ் வேலூர் வட்டம், தேவூர் - 611109,
நாகை மாவட்டம்.

இவர் சித்த மருத்துவ நூல்கள் பல எழுதியுள்ளார். சித்த மருத்துவத்தின் தனிச்சிறப்பை அனைவரும் அறியவேண்டும், சித்த மருத்துவத்தின் பயனை அனைவரும் அடைய வேண்டும் என்ற நோக்கில் 2000 இலவச மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளார்.

திருச்சி தேசிய கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தவர். சித்த மருத்துவத்தின் பால் தீராத தாகம் கொண்டு கோவை பிரம்மானந்த சுவாமிகள், திருத்துறைப்பூண்டி சதா. பாலசுப்பிரமணியம் இவர்களிடம் சிஷ்யனாக இருந்து மருத்துவம் கற்றுத் தேர்ந்தார்.

இவரின், உணவே மருந்து, நீரிழிவை நீக்குவோம், இதய நோய்களுக்கு சித்த மருத்துவம், சளித்தொல்லை நீங்க, சூழல் காத்து நோய்கள் நீக்கும் மூலிகைகள், வள்ளலாரின் மூலிகை மருத்துவம் போன்ற மருத்துவ நூல்களை தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு மருதம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் அனைத்திந்திய அறிவியல் தமிழ் மன்ற உறுப்பினராக உள்ளார். இவரை முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் திரு ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் பாராட்டியுள்ளார். தொலைக்காட்சி, வானொலியில் பலமுறை மூலிகை மருத்துவம் பற்றி விளக்கமளித்துள்ளார். இவருடைய பயனுள்ள மருத்துவக் கட்டுரைகளை பத்திரிக்கைகள் பல வெளியிட்டுள்ளன. மேலும் மூலிகை விழிப்புணர்வை துண்டு பிரசுரங்கள் மூலம் பரப்பியும், மூலிகை புத்தகமும் வெளியிட்டுள்ளார். இவர் வலிப்பு நோயை குணப்படுத்தும் சிறப்பு மருத்துவராவார். வர்ம மருத்துவத்தின் சிறப்பு அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர். நினைவாற்றலைப் பெருக்கும் பயிற்சிகளையும், மூலிகை வகுப்புகளையும் நடத்தி வருகிறார்.


-----------


மரு. அ. பாண்டியன்
த.பெ. ப.அங்கப்பன்,
1/34 ஏ, ஆத்தூர் சாலை,
மங்களாபுரம் - 636 202.

சேலம் மாவட்டம் சித்த மருத்துவர்கள் நிறைந்த மாவட்டங்களில் இதுவும் ஒன்று. இந்த மாவட்டத்தில் மங்களாபுரம் என்னும் சிற்றூரில் மருத்துவம் செய்துவருகிறார். பாரம்பரிய தமிழ் முறை மருத்துவர் இவர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவம் செய்து வருகிறார்.

ஒவ்வாமை நோய்களை குணப்படுத்துவதில் சிறந்த மருத்துவர். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து அதன்மூலம் நோய்களின் பாதிப்புகளில் இருந்து விடுபடவைக்கும் மருத்துவ முறையை செய்து வருகிறார்.

ஒருசிலரிடம் முடங்கிக் கிடக்கும் சித்த மருத்துவத்தின் சிறப்பு குணங்களை வெளிக்கொணர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.

சித்தர்கள் மாநாடு எங்கு நடைபெற்றாலும் அதில் கலந்துகொண்டு தன்னுடைய ஆதங்கத்தை வெளியிடுவார்.

இவர் கல்வி நிலையங்கள் மற்றும் ஆர்வமுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடு இணைந்து சித்தர்களின் நெறிகளை மக்களுக்கு பரப்பும் வகையில் சீறிய முறையில் பணியாற்றிவருகிறார்.


-----------


மரு. ச. புகழேந்தி
புதிய எண் 78, பழைய எண் 55/2,
சுப்பிரமணிய சுவாமி கோவில் தெரு,
சைதாப்பேட்டை, சென்னை - 600 015.

சென்னை மாநகரில் சைதாப்பேட்டையில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பரம்பரை அறங்காவலராக இறைப்பணி செய்து வருகிறார்.

மரு. ச. புகழேந்தியின் முதாதையர் இறைப்பணியுடன் மருத்துவப் பணியும் செய்து வந்துள்ளனர். ஆன்மீகமும் மருத்துவமும் இரு கண்களாக கொண்ட குடும்பம். இவரது தாத்தா துரைசாமி அவர்கள் தன்னை நாடி வரும் மக்களுக்கு இலவச மருத்துவமும் செய்து குணப்படுத்தி வந்துள்ளார். அந்த வழியில் மருத்துவர் புகழேந்தி அவர்கள் கருப்புகோட் இராஜகோபால நாயக்கர் மகன் இராமச்சந்திரன் அவர்களை குருவாகக் கொண்டு மருத்துவத் தொழிலை சிறப்பாக கற்றுள்ளார்.

மேலும் போரூர் மரு. கு. சந்திரசேகர், சந்தான குருக்கள், மரு. பிரபாகரன் இவர்களிடமும் மருத்துவம் பயின்றுள்ளார். தலைவலி, கை கால்வலி, மூட்டுவலி, ரத்த சோகை, குதிகால் வலி, சர்க்கரை நோய்க்கு மருத்துவம் செய்து வருகிறார். பக்க விளைவுகள் இல்லாத மூலிகை மருந்துகள் மூலம் சிகிச்சை செய்து வருகிறார்.

மேலும் பல மருத்துவர்களைப் பற்றி வரும் இதழில் காண்போம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

2 நான் சம்பாதிச்சது:

Note: Only a member of this blog may post a comment.