மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> மம்முட்டி - நான் தமிழர் பக்கம்

இலங்கையில் நடக்கயிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்காத நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக‌ரித்து வருகிறது. தமிழர்களின் உணர்வை பு‌ரிந்து அதற்கு மதிப்பளிக்கும் அவர்களுக்கு முதலில் நமது நன்றிகள்.

சர்வதேச இந்திய திரைப்பட விழா என்ற பெய‌ரில் அறியப்பட்டாலும், இந்த விருது விழாவில் இந்திப் படங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இந்திப் படங்களுக்கும் அதில் பணியாற்றியவர்களுக்கும் மட்டுமே விருதுகள் வழங்கப்படும்.

அதேநேரம் விழாவின் மதிப்பை அதிக‌ரிக்கும் பொருட்டு இந்தி அல்லாத பிற மொழி கலைஞர்களுக்கும் விழாவில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்படும். அவர்களும் உற்சாகத்துடன் கலந்து கொள்வார்கள்.

ஒருமுறை இந்த விழாவில் கலந்து கொண்ட மம்முட்டி, இந்திய திரைப்பட விழா என்று பெயர் வைத்து இந்திப் படங்களுக்கு மட்டும் விருது கொடுப்பதை மேடையிலேயே சுட்டிக்காட்டி கண்டித்தார். ஆனாலும் விழா நடத்துகிறவர்களின் தடித்த தோலை அந்த கண்டனம் ஊடுருவிச் செல்லவில்லை.

இலங்கையில் நடக்கும் விழாவுக்கும் மம்முட்டிக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த அழைப்பை நிராக‌ரித்த மம்முட்டி, தமிழர்களின் உணர்வை தான் மதிப்பதாகவும், அவர்களின் மனதை புண்படுத்தும் ஒரு நிகழ்வில் நான் பங்கேற்பேன் என்று எப்படி எதிர்பார்க்கலாம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேபோல் அழைப்பு அனுப்பப்பட்ட மோகன்லால், புனித் ரா‌ஜ்குமார் போன்ற நடிகர்களும் விழாக் குழுவின‌ரின் அழைப்பை நிராக‌ரித்துள்ளனர்.

யார் எது செய்தாலும் விழாவில் பங்கேற்பேன் என்று கச்சைகட்டும் சல்மான் கான், ஹிருத்திக் ரோஷன், லாரா தத்தா ஆகியோ‌ரின் படங்களை புறக்கணிக்க தமிழர்கள் மட்டுமின்றி பாசிசத்தில் நம்பிக்கையில்லாத அனைவரும் ஒன்று திரள வேண்டும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.