மதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது. விமான நிலையத்தை ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால், போராட்டம் காரணமாக மதுரை விமான நிலையத்திற்கு செல்லும் பிரதான வீதி மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் விமான நிலையத்தை உரிய நேரத்தில் சென்றடைவதற்க்காக சாரதி ஒருவரின் உதவியுடன் மாற்றுவழியினை பயன்படுத்தி விமான நிலைய தடுப்புக்காக போடப்பட்டிருந்த முட்கம்பி வேலிக்கு உள்ளக புகுந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
மேலும், உரிய நேரத்தில் விமான நிலையத்திற்கு வந்தடைந்த ஊழியர்கள் தாமதிக்காமல் இலங்கையை நோக்கி புறப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.