"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற கருத்தரங்கில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பங்குபற்றினார்.
இந்த நிகழ்வில் போது காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்க்காக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது வழங்கப்பட்டது. இவ்விருதை அமெரிக்க வர்த்தக சங்கத்தின் பணிப்பாளர் சபையின் சார்பாக சங்கத்தின் தலைவர் ரவின் பஸ்நாயக்க வழங்கிவைத்தார்.
இந்த நிகழ்வின் பிரதான உரையை உயிர் பல்வகைமை மற்றும் சூழலியல் முறைமை சேவைகளுக்கான அரசாங்கங்களுக்கிடையிலான மன்றத்தின் தலைவர் பேராசிரியர் ரொபட் டோனி வொட்சன் நிகழ்த்தினார்.
அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் பேராசிரியர் மொஹான் முனசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வு இலங்கையில் உள்ள அமெரிக்க வர்த்தக சங்கத்தினால் (AmCham) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.