மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஆன்-லைனில் பணம் சம்பாதிக்க நம்பிக்கையான தளம்

திறமையுள்ளவர்களையும், ஏமாற்றாதவர்களையும் தேடும் நிறுவனங்களையும் இணைக்கும் விதமாக, புதிய வெப்சைட் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. சாப்ட்வேர், நிர்வாகத் திறமை உள்ளவர்களும், சிறிய, நடுத்தர நிறுவனங்களும், ஆன்-லைனிலேயே அனைத்து நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள உதவும் வகையில் தமிழ் இளைஞர்கள் குழு 8kmiles என்ற இணைய தளத்தை உருவாக்கி வழங்கியுள்ளது.

மேலும் இணைய தளம் மூலம் உங்கள் அலுவலகம் மற்றும் பிற வேலைகளுக்கான தகவல் தொழில் நுட்ப வசதிகளையும், திட்டங்களையும் குறைந்த செலவில் இந்த தளத்தில் பெற முடியும். இதனால் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களுக்கென கம்ப்யூட்டர், சர்வர் மற்றும் சாப்ட்வேர் தொகுப்புகளுக்கெனச் செலவழிக்கும் முதலீடு மிச்சமாகிறது. இவற்றை இந்த தளம் மூலம் பயன்படுத்துவதற்குத் தகுந்தாற் போல கட்டணம் செலுத்தினால் போதும். மற்றபடி தளத்தில் நம்மைப் பதிந்து கொள்வது, நம் தகுதிகளைப் பட்டியலிடுவது, நம்மைத் தேடிவரும் நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வது, வாடிக்கையாளர்களுடன் கான்பரசிங் செய்து முடிவெடுப்பது, அவர்களின் காண்ட்ராக்ட்களை மேற்கொள்வது, பணம் பெறுவது போன்றவற்றிற்கு எந்தவிதக் கட்டணமும் இல்லை என்பது இந்த தளத்தின் சிறப்பு.

நிர்வாக திட்டம் மற்றும் நிறுவனத் தேவைக்கான உயர்நிலை சாப்ட்வேர் தொகுப்புகளை, தேவைப்படும் நிறுவனங்கள் குறைந்த கட்டணத்தில், இத்தளத்திலிருந்து ஆன்-லைனிலேயே பெற்றுக் கொள்ளலாம். விண்டோஸ் மற்றும் லினக்ஸ் அடிப்படையில் அனைத்து அப்ளிகேஷன்களும் தரப்படுகின்றன.

சாப்ட்வேர் அப்ளிகேஷன் உருவாக்குதல்

கட்டடக் கலை

பொறியியல்

மல்டிமீடியா புரோகிராம் தயாரித்தல்

ஆடியோ, வீடியோ மற்றும் போட்டோ காட்சிகள் எடிட் செய்தல்

வர்த்தக நிறுவனங்களுக்கான ஆலோசனை வழங்குதல்

உட்பட பல பிரிவுகளில் திறமை உள்ளவர்கள், கல்வித் தகுதி, நிறுவனப் பிரிவு ஆகியவற்றுடன், வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், பான்கார்டு இதில் ஏதாவது ஒன்றை ஸ்கேன் செய்து, பதிவு செய்து கொள்ளலாம். இவை பரிசீலிக்கப்பட்டு, இவர்களின் தகுதிகள் வெளியிடப்படும். நிறுவனங்கள், வல்லுனர்கள் மட்டுமின்றி, புராஜக்ட் மேனேஜர்களும், இந்த இணைய தளம் மூலம், தேவைப்படும் நிறுவனங்களுக்கு, தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம். மேலும், பதியும் வல்லுனர், நிறுவனங்களுக்கு இமெயில் பரிமாற்றம், சாட் போர்டு, வீடியோ கான்பரன்சிங் வசதியை, இலவசமாக இந்த தளம் வழங்குகிறது.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

எழுதியவர் : கார்த்திக்

Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.