![]() இயக்குநர் செல்வராகவனுடன் திருமண முறிவு மற்றும் விவாகரத்து குறித்த பரபரப்புச் செய்திகள் தொடர்ந்து வருவதால் மனம் உடைந்த நடிகை சோனியா அகர்வால் தற்கொலைக்கு முயன்றாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. |
![]() நடிகை சோனியா அகர்வாலுக்கும் இயக்குநர் செல்வராகவனுக்கும் கடந்த 2006ல் திருமணம் நடந்தது. ஆனால் இவர்கள் திருமண வாழ்க்கையில் திடீரெனப் புகுந்த ஆண்ட்ரியா, பெரும் பூகம்பத்தை உருவாக்கிவிட்டார். இவருக்கும் செல்வராகவனுக்கும் இடையிலான ரகசிய உறவு அம்பலமானதால்தான் சோனியா அகர்வால் விவாகரத்து வரை போனதாகக் கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்புதான் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெறுவதென்று முடிவு செய்து சென்னை முதன்மை குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்தச் செய்திதான் தற்போது மீடியாவை பிரதானமாக ஆக்கிரமித்துள்ளது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக நேற்று மாலை சோனியா அகர்வால் தற்கொலை செய்ய முயன்றதாக தகவல் பரவ, கோடம்பாக்கமே பரபரப்பாகிவிட்டது. ஆனால் இந்தச் செய்தியில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை என்றும், தங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். சோனியா அகர்வால் மற்றும் செல்வராகவன் குடும்பத்தின் தரப்பில் இதுகுறித்து யாரும் கருத்து தெரிவிக்கவில்லை. |
Subscribe to:
Post Comments
(
Atom
)
Hi
ReplyDeleteஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்