
வளர்ந்து வரும் இளம் பேச்சாளர்களில் ரம்யாவும் ஒருவர். சமீபத்தில் சேனல் ஒன்றில் ஒளிபரப்பான சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளில் சாலமன் பாப்பையா தலைமையில் நடந்த பட்டிமன்றம் ஒன்றை கவனித்திருந்தால் ரம்யாவின் பேச்சை பற்றி அறிந்திருக்கலாம். சென்ற இடமெல்லாம் ‘செம கிளாப்ஸ்’ வாங்கும் நட்சத்திர பேச்சாளர் இவர். எத்திராஜ் கல்லூரியின் முன்னாள் மாணவி இவர். தமிழகம் முழுவதும் சுற்றி சுழன்று இலக்கிய மேடைகளிலும், பட்டிமன்றங்களிலும் பேசிவரும் ரம்யாவுக்கு த்ரிஷா அளித்த பரிசுதான் இந்த செய்தியின் சாராம்சம்.
இதே எத்திராஜ் கல்லூரியில் படித்தவர்தான் த்ரிஷாவும். சமீபத்தில் தங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவி என்ற முறையில் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள் த்ரிஷாவை. தடபுடலான வரவேற்பு. த்ரிஷாவே வெட்கப்படுகிற அளவுக்கு வரவேற்ற கல்லூரி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்ட கனவு தேவதை, அதே மேடையில் பேசிய ரம்யாவையும் கவனிக்க தவறவில்லை. இவ்வளவு அற்புதமான பேச்சாற்றலா என்று சந்தோஷப்பட்டவர், தனிப்பட்ட முறையில் ரம்யாவோடு நட்பை வளர்த்துக் கொள்ள விரும்பினாராம். அதுமட்டுமல்ல. அதே மேடையில், “இவ்வளவு அருமையாக பேசிய ரம்யாவுக்கு நான் ஒரு பரிசு கொடுக்க நினைக்கிறேன். அது பயனுள்ளதாக இருக்கணும் என்பதால் ஒரு ஸ்கூட்டி வழங்குகிறேன்” என்று உறுதியளித்தாராம்.
அடுத்த இரண்டு நாட்களில் ரம்யா வீட்டுக்கு டெலிவரி செய்யப்பட்டது ஸ்கூட்டி. இப்போதெல்லாம் முன்னிலும் சுறுசுறுப்பாக இலக்கிய மேடைகளில் காணப்படுகிறார் ரம்யா. அதற்கு காரணம் த்ரிஷா என்றால் நம்பவா முடிகிறது?
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.