மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


நாம் டேப்லட் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை விடயங்கள்.

டேப்லட் இன்றைய நாளில் அனைவரும் பயன்படுத்தும் சிறிய கணினி சாதனமாக உள்ளது. எங்கும் எந்நேரமும் அலுவலக மற்றும் கல்வி சம்பந்தமான விஷயங்களை பணிகளை செய்ய டேப்லட் உதவி புரிகிறது. டேப்லட் தற்போது அவரவர் பயன்படுத்தும் நோக்கில் வகைப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. ஆயினும் டேப்லட் வாங்கும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.

எத்தகைய பணிக்கு ஏற்ற டேப்லட்: அலுவலக பணிக்கான, அலலுவலகம் சார்ந்த, தொழில்முறை சார்ந்த தேவைக்கு எனும்போது முழு அளவு அதாவது 8.9 இன்ச் அல்லது அதைவிட பெரிய திரை கொண்ட டேப்லட் பயன்படும். இதில் கீ போர்டு வெளிப்புற இணைப்பாக இருப்பது அவசியம். ஒவ்வொரு டேப்லட் தயாரிப்பு நிறுவனமும் அலுவலக பணி சார்ந்த இணைப்புகளை கொண்டவாறு டேப்லட்டை உருவாக்கி தருகின்றன. உதாரணமாக, விண்டோஸ் 8.1, டேப்லட்- மைக்ரோ சாப்ட் ஆபீஸ் உடன் ஐ பேட் ஏர்-2வில் ஐ வொர்க் சூட் போன்றவையுடன் வருகின்றன. 

விளையாட்டிற்கு ஏற்ற டேப்லட்: 
ஆப்பிள் ஐபேடு விளையாட சிறந்த டேப்லட். அதுபோல் ஆண்ட்ராய்டு டேப்லட்டில் உள்ள ஸ்நாப்டிராகன் 805 மற்றும் டெக்ரா ரி1சிறிஹி சிறந்த கிராபிக்ஸ்க்கு உதவி புரிகிறது. டை- ஹார்ட் விளையாட விரும்புபவர்களுக்கு நிவிடியா ஷீல்டு டேப்லட் நல்ல பலனை தருகிறது.

குழந்தைகளுக்கு ஏற்ற பாதுகாப்பு அம்சத்துடன் நிறைய குடும்ப பகிர்வுகளை கொண்ட டேப்லட் சிறந்ததாக இருக்கும். அந்த வகையில் அமேசான் பையர் டேப்லட் நன்மை பயக்கும். அமேசான் பையர் 6 மற்றும் 7 பிஞி ரிவீபீs எடிஷன் அதிக வாரண்டி மற்றும் குழந்தைகளுக்கேற்ற பல சிறப்பம்சம் கொண்டது. 

டேப்லட் காட்சி திரை அளவுகள்:
நமக்கு எந்த அளவு காட்சி திரை வேண்டும் என்பதை தீர்மானித்திட வேண்டும். 7 இன்ச் என்பது நமது கையில் அடக்கிவிட கூடிய அளவு.  8 இன்ச் அளவு என்பிதல் அதிக ஆப்ஸ், கேம்ஸ் மற்றும் படங்கள் கொண்டதாக உள்ளது. 10 இன்ச் என்பது பெரிய அளவாக உள்ளது. எடை 1 முதல் 1.6 பவுண்ட் என்றவாறு இருப்பது டேப்லட். எடை குறைவான டேப்லட் எடுத்து செல்ல வசதியாக இருக்கும்.

இயங்கு தளங்களில் அணி வரிசை: ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் 8, விண்டோஸ் 8.1 என்ற இயங்கு தளங்களை கொண்டவாறு டேப்லட் வருகிறது. இதில் நமக்கு தேவையான இயங்குதளத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். இயங்கு தளங்களை கொண்டே சில டேப்லட்களின் விலையும் நிர்ணயிக்கப்படுவதுடன், புதிய தொழில்நுட்ப அம்சங்களும் நிறைய இருக்கும்.

எந்த வகையான ஆப்ஸ்கள் வேண்டும்:
ஆப்ஸ் ஸ்டோர்களை தேர்ந்தெடுப்பது நமது கையில் ஆப்பிள் ஆப்ஸ்டோர், கூகுள் பிளே ஸ்டோர், அமேசான் ஆன் டிமாண்ட் இவற்றில் எது நமது ஆப்ஸ் தேவைகளை பூர்த்தி செய்யுமோ அதனை கொண்ட டேப்லட்டை தேர்ந்தெடுங்கள்.

ரேம் வசதி:
டேப்லட்கள் 2ஜிபி ரேம் கொண்டு இருப்பது சிறந்தது. சில டேப்லட் 3 ஜிபி ரேம்-உடன் வருகின்றன. டேப்லட்களை தேர்ந்தெடுக்குபோது மேற்கூறியவைகளை கவனித்து வாங்கவும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.