இந்த தீபாவளிக்கு இரண்டே படங்கள். வெற்றி பெறப் போவது 7 ஆம் அறிவா, வேலாயுதமா என்று ஏக எதிர்பார்ப்பு. ஓபனிங்கை பொறுத்தவரை இரண்டுமே வெற்றி பெற்றிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.
இரண்டு படங்கள் ஓடும் திரையரங்குகளும் ரசிகர்களால் நிரம்பி வழிந்தன. போட்டி பலமானது என்பதால் விஜய் ரசிகர்கள் அளவுக்கு அதிகமாகவே வேலாயுதத்தை வரவேற்றார்கள். படம் வெளியான அனைத்துத் திரையரங்குகளிலும் இசைக்குழுவை இறக்கிவிட்டு காதுகளை இம்சித்ததை சொல்ல வேண்டும்.
அதே அரைத்த மாவு என்றாலும் சரியான விகிதத்தில் ஜெயம் ராஜா தந்திருப்பதால் வேலாயுதம் ரசிகர்களை ஏமாற்றவில்லை. 7 ஆம் அறிவு புதிய களம், புதிய முயற்சி. ஆனால் தொய்வான திரைக்கதை ரசிகர்களுக்கு பல நேரம் கொட்டாவியை வரவழைத்தது எதிர்பாராத ஏமாற்றம்.
7 ஆம் அறிவு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத அதேநேரம் வேலாயுதம் ரசிகர்களுக்குப் பிடித்துள்ளது. சுறா, வேட்டைக்காரனெல்லாம் ரசிகர்களையே முகம் கூளிக்க வைத்தவை.
அந்தவகையில் வேலாயுதத்தின் வெற்றி உறுதி என்கிறார்கள்.
sariyaaga sonneennga..
ReplyDeletenamma kitta irukira aaru arivaiyum veetula bureu vila vechutu elaam arivu and velayudham paaka ponga
ReplyDelete6 அறிவால 7 ம் அறிவின் ஸ்பெலை அறியமுடியல
ReplyDeleteவேலாயுதம் - அரச்ச மாவு
velayutham hit.........................,
ReplyDelete