இந்த வருடத்தின் மெகா ஹிட் மங்காத்தா என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஓபனிங் ஐந்து நாட்களுக்குப் பிறகு படத்தின் வசூல் சடாரென இறங்கியுள்ளது.
இந்த வருடத்தின் மட்டுமின்றி அஜீத் படங்களிலேயே மங்காத்தாதான் ஓபனிங் சாதனை படைத்திருக்கிறது. ரஜினி, கமல் படங்களுக்குப் பிறகு அதிக ஓபனிங் கலெக்சன் மங்காத்தாவுக்குதான். ஆனால் ஐந்து நாட்களுக்குப் பிறகு வசூல் கணிசமாக குறைந்திருக்கிறது. இத்தனைக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக இப்படம் பூர்த்தி செய்துள்ளது.
இணையதளத்தில் மங்காத்தா எளிதாக டவுன்லோட் செய்ய முடிவதால்தான் இந்த மாற்றம் என்கிறார்கள். அதேநேரம் மங்காத்தாவின் மாஸ் ஓபனிங்குக்கு அஜீத் ரசிகர்கள் இணையம் மூலமாக மேற்கொண்ட விளம்பர யுக்திதான் காரணம் எனவும் கூறுகிறார்கள். இதனை யு டிவி நிர்வாகி தனஞ்செயனே ஆச்சரியமாக குறிப்பிட்டிருக்கிறார்.
அறிவியலால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் என்பது இதுதானோ?
its beat endhiran collection.
ReplyDelete