ஏவிஎம் ஸ்டுடியோவே குலுங்கிக் கொண்டிருந்தது. காரணம், தில்லாலங்கடி... ஜெயம் ரவி-தமன்னா நடிக்கும் இப்படத்தின் துவக்க விழாவுக்கு வாசலில் இருந்தே வரவேற்பு வைபோகத்தை துவங்கியிருந்தார்கள். இதற்கு முன்பே ரவியை வைத்து நாலு ஹிட் கொடுத்த ராஜா, முதல் பட பரபரபப்போடுதான் இருந்ததுதான் ஆச்சர்யம். என் ஒவ்வொரு படத்தையும் நான் செய்யுற முதல் படமாதான் நினைக்கிறேன். என்னுடைய முந்தைய படங்களை விட கொஞ்சம் காரமான படம் இது. சந்தோஷ் சுப்ரமணியம் படத்திற்கு பிறகு 15 மாதங்கள் நான் காத்திருந்தேன். அது வீண் போகவில்லை. இந்த படத்தின் ரீமேக் உரிமையை அப்பா வாங்கியதும் எனக்கு நிம்மதியாச்சு. பிரபு, சுஹாசினி, வடிவேலு, சந்தானம், இவர்களுடன் ரவியும் தமன்னாவும். இந்த நட்சத்திர கூட்டமே எனக்கு தனி உற்சாகத்தை கொடுக்குது.
டைரக்டர் ஷங்கரிடம் இன்விடேஷன் கொடுக்க போயிருந்தேன். தமன்னா நடிக்கிறார்னு தெரிஞ்சதும் “இப்போ அவங்கதான் டாப் ஹீரோயின் போலிருக்கே” என்றார். அவரே தமன்னாவை பற்றி அப்படி ஒரு சர்டிபிகேட் கொடுத்திருக்காருன்னா, எந்தளவுக்கு அவங்க எல்லாருடைய மனசிலேயும் இடம் பிடிச்சிருக்காங்கன்னு புரியும். என் படத்திலே ஹீரோவுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் இருக்குமோ, அந்தளவுக்கு ஹீரோயினுக்கும் இருக்கும். இந்த படத்திலேயும் அந்த உத்தரவாதத்தை என்னால தர முடியும் என்றார் ராஜா.
தெலுங்கில் வெளியான இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் ஷாம் நடித்திருந்தார். அதே கேரக்டரில் தமிழிலும் அவரே நடிக்கிறார். “உங்களை நம்பி ஒப்படைச்சிட்டேன். இனிமே உங்க பொறுப்பு” என்றாராம் ஷாம். அந்த நம்பிக்கையை காப்பாற்றுவேன் என்றார் ராஜா. அதுமட்டுமல்ல, தெலுங்கில் ஷாம் கேரக்டரில் இருந்த சின்ன சின்ன லாஜிக் மிஸ்டேக்கையும் இந்த படத்தில் சரி செய்திருக்கிறாராம்.
நானும் ஷாம் சாரும் நல்ல நண்பர்கள். இன்னும் சொல்லப் போனா சினிமாவுல என்னோட முதல் ஃபிரண்டுன்னா அவருதான். இந்த படத்திலே அவரும் நடிக்கிறாருங்கறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என்றார் ஜெயம் ரவி. தில்லாலங்கடி என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தமோ? ஆனால் துவக்க விழாவுக்கு வந்தவர்கள் பேசியதை கேட்டால், ஒன்று புரிகிறது. தில்லாலங்கடி என்றால் வெற்றி... சந்தோஷம்...
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.