
அப்துல் ரிஷாத் பதியுதீன் என்ற அந்த அமைச்சர், விடுதலைப்புலிகளின் பணம் இலங்கையை சேர்ந்த லண்டன் தமிழர் ஒருவரால் தமிழ் சினிமாவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ரஜினியை வைத்து அவர் எடுக்கும் படத்திற்கு இந்த தொகையிலிருந்துதான் அட்வான்ஸ் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார். இதுதான் தமிழ்சினிமா உலகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று ரஜினி ஒதுங்கிக் கொண்டாலும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன் கருத்து தெரிவித்திருக்கிறார். அதில், ரஜினி படத்தை தயாரிக்க விடுதலைப் புலிகள் பணத்தைப் பெற வேண்டிய அவசியம் இங்கு யாருக்கும் இல்லை. இப்படிப்பட்ட வழியில் படத்தில் நடித்துக் கொடுக்க வேண்டிய நிலையில் ரஜினியும் இல்லை.
அவரை வைத்துப் படம் எடுக்க எத்தனையோ தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது ரஜினி விடுதலைப் புலிகளின் பணத்தைப் பெற்றார் என்று கூறுவது அபத்தமானது, மலிவான விளம்பரமே தவிர வேறு ஒன்றும் இல்லை என்றார்.
அமைச்சர் சொல்லும் தயாரிப்பாளர் ஐங்கரன் கருணாஸ்தான் என்று பலரும் யூகிக்கிறார்கள். ஆனால் அவர்கள் தரப்பில் சொல்லப்படுவது என்ன? ரஜினியை வைத்து எடுப்பதாக சொல்லப்பட்ட அந்த படம் ஆரம்ப நிலையிலேயே கைவிடப்பட்டுள்ளது. உண்மை இப்படியிருக்க இதில் எங்களை சம்பந்தப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்கிறார்கள்.
ஆனால், ரஜினி பேரை சொன்னாலே போதும். படம் எடுக்க பணம் தானாக குவியும் என்ற நிலையில் அவர் விடுதலைப்புலிகளின் பணத்தில்தான் நடிக்க வேண்டும் என்று சொல்வது அபத்தத்திலும் அபத்தம்!
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.