திருமணமான பிறகு தனது ஓவர் நடிப்பை ஓரமாக மூட்டைக்கட்டி வைத்தார் ஜோதிகா. திருமணத்துக்குப் பிறகு நடிக்கக் கூடாது என்ற கண்டிஷனுக்கு ஒப்புக் கொண்டதால்தான் சிவகுமார் இந்தக் கல்யாலணத்துக்கே ஒத்துக் கொண்டார் என்றொரு செய்தியும் உண்டு.
போகட்டும். அதெல்லாம் பழங்கதை. குழந்தைகளை கவனிப்பதுதான் முக்கியம், அதனால்தான் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறேன். சூர்யா நான் நடிக்கக் கூடாது என்று சொன்னதில்லை என விளக்கம் தந்த ஜோதிகா இப்போது நடிக்கிற மூடுக்கு வந்திருக்கிறாராம்.
இதனை சூர்யாவே தெரிவித்திருக்கிறார். நடிப்பிலிருந்து அவராகவே ஒதுங்கியிருக்கிறார். நடிக்கிற ஆசை அவருக்கு இன்னமும் இருக்கிறது. சரியான தருணம் அமைந்தால் அவர் நடிக்கலாம்.
விளம்பரங்களில் நடித்துவரும் ஜோதிகா குழந்தைகள் வளர்ந்துவிட்டதாக கருதும் நாள் மீண்டும் சினிமாவுக்கு திரும்பலாம். அவர் நடிக்கத் தயார், நீங்க பார்க்கத் தயாரா?
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.