ராம்கோபால் வர்மா இயக்கியிருக்கும் முதல் தமிழ்ப் படம் ரத்த சரித்திரம். விவேக் ஓபராயின் பொறுப்பில்லாத செயலால் இந்தப் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவில் ரவுடியாக இருந்து பிறகு அரசியலில் நுழைந்த பரிட்டால ரவி என்பவரின் கதையை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வர்மா இயக்கியிருக்கிறார். பரிட்டால ரவியாக விவேக் ஓபராயும், அவரைக் கொன்ற சூரியாக சூர்யாவும் நடித்துள்ளனர்.
தெலுங்கு மற்றும் இந்தியில் இப்படம் இரண்டு பாகங்களாக வருகிறது. முதல் பாகத்தில் விவேக் ஓபராய் மட்டுமே வருகிறார். இரண்டாவது பாகத்தில் சூர்யா அதகளம் செய்கிறார்.
ஆனால் தமிழில் இந்த இரு பாகங்களையும் ஒன்றாக வெளியிடுகிறார் வர்மா.
இலங்கையில் நடக்கும் திரைப்பட விழாவில் இந்திய திரை நட்சத்திரங்கள் யாரும் கலந்து கொள்ளக்கூடாது, மீறினால் அவர்கள் படங்களை தென்னிந்தியாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என தமிழ் திரையுலகமும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கமும் எச்சரிக்கை செய்திருந்தது.
இதற்கு அமிதாப், ஷாருக்கான் உள்ளிட்ட பெரிய நடிகர்கள் மதிப்பளித்து இலங்கை செல்வதை தவிர்த்துள்ளனர். அதேநேரம் விவேக் ஓபராய் இலங்கை சென்றுள்ளார். அத்துடன் பாடல் ஒன்றுக்கு நடனமும் ஆடுகிறார்.
இந்த தமிழர் விரோத செயல் காரணமாக அவர் நடித்த ரத்த சரித்திரம் தமிழகத்திலும், ஆந்திராவிலும் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.