மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


அன்னை தெரசாவிற்கு புனிதர் பட்டம் வழங்கப்பட உள்ளதாக போப் பிரான்சிஸ் அறிவிப்பு இத்தாலிய செய்தித்தாள் தகவல்.

அன்னை தெரேசாவை இரண்டாம் அற்புதமாக அங்கீகரித்து எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் திகதி புனிதர் பட்டம் வழங்கப்படவுள்ளதாக போப் பிரான்சிஸ் அறிவித்துள்ளாதாக இத்தாலிய கத்தோலிக்க செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யூகோஸ்லாவியா நாட்டில் ஸ்கோப்ஜி என்ற சிறு கிராமத்தில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர் தெரேசா. 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் நாள் திகதி பிறந்த இவர், இளம்வயதிலேயே தந்தையை இழந்தவர். 1929 இல் இந்தியா சென்று லொரேற்றா மடத்தின் கொல்கத்தா கிளையில் இருந்து கொண்டு பள்ளிக்கூடமொன்றில் ஆசிரியையாகப் பணியாற்றினார். ஆதரவற்ற முதியோர்களுக்கு அடைக்கலம் தந்திருக்கிறார். தொழு நோயாளிகளுக்காக `ப்ரேம் நிவாஸ்’ எனும் பெயரில் இல்லம் தொடங்கினார்.

1962 இல் பத்மஸ்ரீ விருது, 1962 இல் பிலிப்பைன்ஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதான `ராமோன் மக்ஸேஸே’ விருது, 1971 இல் போப் ஆண்டவரின் உலக சமாதானப் பரிசு, அமெரிக்காவின் `நல்ல சாமரியன்’ விருது, 1972 இல் சர்வதேச நேரு சமாதானப் பரிசு, 1976 இல் சாந்தி நிகேதனில் டாக்டர் பட்டம், இந்திய மத்திய அரசு அன்னை தெரேசாவிற்கு 1980 இல் `பாரத ரத்னா’ விருது வழங்கிக் கௌரவித்தது. அன்னை தெரேசாவின் பணியைப் போற்றும் விதமாய் உலக அமைதிக்கான நோபல் பரிசும் (1979) வழங்கப்பட்டது. இவை அன்னை பெற்ற விருதுகளில் குறிப்பிடத்தக்கவை.

வாழ்நாள் முழுவதையும் மற்றவர்களின் நலனுக்காகவே செலவிட்ட அன்னை 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் இயற்கை எய்தினார்.

Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.