மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சிம்புவிடமிருந்து போன்... சிலிர்க்கும் அருண் விஜய்

கிட்டதட்ட 80 பிரிண்டுகள். அத்தனையும் சொந்த ரிலீஸ். மலை மலை படத்தின் மூலம் தனது மருமகனை மலை போல தாங்கி நிற்கிறார் அருண் விஜய்யின் மாமனார். இவர் எதிர்பார்த்ததை போலவே எல்லா இடங்களிலும் படத்திற்கு செம ரெஸ்பான்ஸ் என்கிறார்கள்.

சிம்புவிடமிருந்து முதல் பாராட்டு வந்ததாம் அருணுக்கு. மாப்ளே, இதே ரூட்டை பிடிச்சுக்கோடா. பெரிய இடத்தை பிடிப்பே என்று அவர் வாழ்த்த ஆர்யா, ஜீவன் என்று அடுத்தடுத்து வந்த போன் கால்களால் அசந்து போயிருக்கிறார் அருண். நாங்க எல்லாருமே ஒரே குடும்பம் மாதிரி பழகுற பிரண்ட்ஸ். எங்களுக்குள்ளே போட்டி இருக்குமே தவிர பொறாமை இருக்காது. முதல் நாளே படத்தை பார்த்திட்டு போன் பண்ணுற அவங்களோட அன்பு என்னை இன்னும் உற்சாகப்படுத்தியிருக்கு என்றார் அருண் விஜய்.

டைட்டிலில் இவருக்கு இளம் சூரியன் என்ற பட்டம் கொடுத்திருக்கிறார்கள். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள இதெல்லாம் தேவைப்படுது. என்ன நேரத்திலே இப்படி ஒரு பட்டப் பெயர் கொடுத்தாங்களோ, லைஃப் பிரைட்டா சூரியன் மாதிரி பிரகாசிக்க ஆரம்பிச்சிருக்கு. இனிமே இது மாதிரியே கமர்ஷியல் படங்களில் நடிக்கலாம்னு முடிவெடுத்திருக்கேன். அதுமட்டுமில்லே, இதே கூட்டணி அப்படியே அடுத்த படத்திலேயும் தொடருது என்றார் அருண் விஜய். ஆனால், முன்னணி நாயகி ஒருவரை ஜோடியாக நடிக்க சொல்லி அழைத்திருக்கிறார்களாம். முன்பு தயங்கிய சிலர், மலை மலை படத்திற்கு பிறகு கண்டிப்பா நடிக்கிறோம் என்று உத்திரவாதம் கொடுத்திருக்கிறார்களாம்.

பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா...!
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.