மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> வடிவேலு வின் அடுத்த அதிரடி என்ன?

சிரிக்க வைக்க மட்டுமல்ல. சீரியஸ் ஆன கேள்விகளை கூட சிக்கல் இல்லாம அவிழ்க்க தெரியுது வடிவேலுவுக்கு. "உங்க கூட இருந்தவங்க இப்போ வரிசையா காலி பண்ணிட்டாங்க போலிருக்கே?" என்றால், "ஆமாங்க. எல்லாரும் நமக்கே ஆப்பு வச்சிட்டாய்ங்க"ன்னு பதில் சொல்வார் என்றுதானே எதிர்பார்ப்போம். நம்மை அப்படி நினைக்க வைக்கிற மாதிரியேதான் அமைந்தது வடிவேலுவுடன் இருந்தவர்கள் செய்த சில வேண்டாத காரியங்கள். ஆனால், ரொம்ப பக்குவமாகவே பதில் சொல்கிறார் வடிவேலு.

அவங்களும் வெளிச்சத்துக்கு வரணுமில்லையா? தெரிஞ்ச முகமாயிட்டாங்க. வேற வேற படங்களில் நடிக்க வாய்ப்பு வருது. போய் பண்ணுறாங்க. அவங்கள்ளாம் எனக்கு அறிமுகம் ஆகும்போது புதுசாதான் அறிமுகம் ஆனாங்க. அதே போல் இப்போ நிறைய புதுமுகங்களை நான் கொண்டு வர்றேன். புதிய காமெடிகளும் வந்துகிட்டேயிருக்கு. வேற வேற மாதிரி வெரைட்டியா நடிச்சதானே ஜனங்களை தொடர்ந்து சிரிக்க வைக்க முடியும். அழகர் மலையிலே என்னோட புது கூட்டணி போட்டிருக்கிற ஆட்டத்தை பாருங்க. என்னோட அடுத்த அதிரடி இந்த படம்தான்.

எல்லாம் அவன் செயல் படத்திலே நானும் ஆர்.கே வும் போட்ட காமெடிய பார்த்திட்டு இன்னும் வயிறு வலிக்க சிரிச்சிட்டு இருக்காங்க. இப்போ அழகர் மலை படத்திலே மறுபடியும் ஒரு புயலை கிளப்பியிருக்கோம் பாருங்க என்ற வடிவேலு சொன்ன இன்னொரு தகவல், ரொம்ப நெகிழ்ச்சிக்குரியது.

சேலத்தை சேர்ந்த ஒரு குழந்தை விபத்தில் சிக்கி கோமா ஸ்டேஜில் இருந்ததாம். டிவியிலே என்னோட காமெடி சீன்களை போட்டு கோமாவில் இருந்து எழுப்பியிருக்காங்க. இதை கேட்கும் போதே மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்திச்சு என்றார்.

வாங்கய்யா, வைத்தியாரய்யா... !
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.