மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> படத்தையே வேண்டாம் என்று மறுத்த நயன்தாரா

சிங்கம் சிங்கிளாதான் வரும். அடுத்த வார்த்தையை சொன்னா அடிதடியாகிவிடும் என்பதால் இதோடு நிறுத்திக் கொள்வோம். சிங்கிள் ஹீரோயினாக மட்டுமே நடிக்க பிரியப்படும் நயன்தாரா, மணிரத்னம் படத்தையே வேண்டாம் என்று மறுத்திருக்கிறார்.

எந்த நடிகர் நடிகைகளிடம் பேட்டியெடுத்தாலும், சம்பிரதாயமாக ஒரு கேள்வி கேட்கப்படும். நீங்க யாரு டைரக்ஷன்லே நடிக்க ஆசைப்படுறீங்க? மணி ரத்னம், ஷங்கர் என்று அவர்களும் கிளிப்பிள்ளை போல பதில் சொல்வார்கள். இதே கேள்விக்கு நயன்தாராவும் பலமுறை இந்த பதிலை சொல்லியிருக்கிறார். ஆனால் அவரே அழைத்தபோது, டேட்ஸ் இல்லையே என்று ஒதுங்கிக் கொண்டதை என்னவென்று சொல்வது?

ராவணா படத்தில் திருமதி ராவணனாக நடிக்கதான் நயன்தாராவை அழைத்திருந்தார் மணிரத்னம். சுஹாசினியே நயனிடம் பேசினாராம். யோசித்து சொல்கிறேன் என்று பதிலளித்த நயன், தனது பதிலை தெளிவாக கூறிவிட்டார். மணி சார் படத்திலே நடிக்கணும்ங்கிறது என்னோட லட்சியம். ஆனால் தமிழில் ஆதவன், தெலுங்கில் இரண்டு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டதால், இப்போ என்னால முடியாது. தயவு செய்து பொறுத்துக்கணும் என்றாராம்.

விக்ரமுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா, அவரை தொடர்ந்து ப்ரியாமணி ஆகியோர் இருக்கும் போது தனக்கான முக்கியத்துவம் எந்தளவுக்கு இருக்கும்? இந்த ஐயத்தில்தான் அவர் மறுத்தார் என்கிறது திரையுலக வட்டாரம். பேசாம இவங்களை திரைக் ‘கலக’ வட்டாரம்னுதான் அழைக்கணும் போலிருக்கு!
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.