மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கமலுக்குக் குட்டு – நியாயமா ?

'ஆங்கிலம் தெ‌ரிந்தவர்களுக்கு மட்டுமே திரைக்கதை எழுத்துப் பயிற்சி முகாம் நடத்திய தமிழ் சினிமா நடிகர் கமல்ஹாசனுக்கு இந்த வாரக் குட்டு.'

இரண்டு வாரங்கள் முன்பு பிரபல வார இதழில் விமர்சகர் ஞாநி எழுதிய வாசகங்கள் இவை. நடிகர் கமல்ஹாசனின் ரா‌ஜ்கமல் நிறுவனம் சென்னை ஐஐடி-யுடன் இணைந்து ஆறு நாள் திரைக்கதை பயிற்சி வகுப்பை நடத்தியது. இந்தியா முழுவதிலிருந்தும் மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். தமிழ் திரைப்பட இயக்குனர்கள் மட்டுமல்லாது, இந்திப்படவுலகைச் சேர்ந்த இயக்குனர்களும், திரைக்கதை ஆ‌சி‌ரியர்களும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தினர். முக்கியமாக பிரெஞ்சு திரைக்கதையாசி‌ரியர் ழான் க்ளாட் கே‌ரியர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களுடன் திரைக்கதை குறித்து பேசினார்.

இந்த திரைக்கதை பயிற்சி வகுப்பை நடத்தியதற்காக கமல்ஹாசனுக்கு ஞாநி வழங்கிய நாலுவ‌‌ரி விமர்சன குட்டுதான் நீங்கள் மேலே படித்தது. ஞாநியின் இந்த விமர்சனம் ச‌‌ரியா?

இந்தக் கேள்வியை காலம் கடந்து கேட்பதற்கு காரணம் இருக்கிறது. சில தினங்கள் முன்பு இந்த திரைக்கதை பயிற்சி வகுப்பின் தொடர்ச்சியாக நிரூபர்கள் சந்திப்பு ஒன்றை கமல்ஹாசன் நடத்தினார். இந்த சந்திப்பின்போது ழான் க்ளாட் கே‌ரியரும் உடனிருந்தார்.

சென்னை பற்றி 30 குறும் படங்கள் தயா‌ரிக்கயிருப்பதாகவும், பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களிடமிருந்து ஸ்கி‌ரிப்படுகள் பெறப்பட்டு இந்த குறும் படங்கள் எடுக்கப்படும் என்றும் அப்போது கமல்ஹாசன் தெ‌ரிவித்தார். பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பெ‌ரிய இயக்குனர்களும், மாணவர்களும் இந்த குறும் படங்களை இயக்குவார்கள்.

இந்த நிருபர்கள் சந்திப்பு நமக்கு உணர்த்துவது என்னவென்றால், கமல்ஹாசன் நடத்திய திரைக்கதை பயிற்சி வகுப்பு ஆறு நாட்களுடன் முடிந்துவிடவில்லை. அதனை தொடக்கமாக வைத்து மேலும் பல ஆக்கப்பூர்வமான வேலைகள் தொடர்ந்து நடக்கயிருக்கின்றன.

இந்த பு‌ரிதலின் அடிப்படையில் ஞாநியின் விமர்சனம் எத்தனை மேலோட்டமானது என்பதையும், அவசரத்தில் அள்ளித் தெ‌ளித்த விமர்சனம் அது என்பதையும் ஒருவர் எளிதாக பு‌ரிந்து கொள்ளலாம்.

ஞாநி தனது நாலுவ‌ரி விமர்சனத்தில் குறையாக சுட்டிக் காட்டியிருப்பது கமல்ஹாசன் திரைக்கதை பயிற்சி வகுப்பை ஆங்கிலம் தெ‌ரிந்தவர்களுக்கு மட்டுமே நடத்தினார் என்பது. திரைக்கதை பயற்சி வகுப்பில் என்ன நடந்தது என்பதை அறியாமல் ஞாநி இதனை எழுதியிருக்கிறார் என்பதே உண்மை.

ஐஐடி-யில் நடந்த திரைக்கதை பயிற்சி வகுப்பில் பாடம் நடத்தியவர்கள் சேகர் கபூர், அஞ்சும் ரா‌ஜ்பாலி, அதுல் திவா‌ரி போன்றவர்கள். இவர்கள் அனைவருக்கும் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே தெ‌ரியும். தமிழ் தெ‌ரியாது. ஆறு நாள் பயிற்சி வகுப்பில் வகுப்பு நடத்திய தமிழ் தெ‌ரிந்த இயக்குனாகள்; பாலுமகேந்திரா மற்றும் ஹ‌ரிஹரன் மட்டுமே. வீடியோ கான்பரன்ஸில் கலந்துரையாடல் நடத்திய ழான் க்ளாட் கே‌ரியரும் ஆங்கிலத்திலேயே தனது கலந்துரையாடலை நடத்தினார். ஆங்கிலம் தெ‌ரியாத ஒருவர் இந்த வகுப்பில் கலந்து கொண்டிருந்தால் அவரால் எதையும் பு‌ரிந்து கொண்டிருக்க முடியாது என்பதே உண்மை.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

3 நான் சம்பாதிச்சது:

  1. உங்கள் வலைப்பக்கம் இன்றுதான் என் கண்ணில் பட்டது பதிவுகள் அனைத்தும் அருமை தொடருங்கள்.....

    ReplyDelete
  2. எது பண்ணுனாலும் குத்தம் சொல்லும் இந்த அதி மேதாவி(ஞானி) அம்புட்டு அக்கறை இருந்தா ஒரு கிளாஸ் போய் எடுக்க வேண்டியதுதான

    ReplyDelete
  3. ஞாநி எல்லாம் ஹிட்டுக்காக எழுதுகிறார் மானம் ரோசம் எதுவுமில்லாமல் விகடனிலிருந்து குமுதத்திற்க்கு மாறியவர். ஞாநியை விட அந்தக் கட்டுரையை தீர ஆராயாமல் வெளியிட்ட குமுதத்திற்க்குத்தான் குட்டவேண்டும்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.