இலவசமாக இமெயில் தரும் சேவையில் இன்று கூகுள் மெயிலின் இடத்தைப் பிடிக்க வேறு எந்த தளத்தினாலும் முடியவில்லை. அதிக பட்சம் சர்வரில் இடம் தருவதிலிருந்து அடிக்கடி ஏதேனும் புதிய வசதிகளைத் தொடர்ந்து இலவசமாக அளித்து வருவதால் பலரும் கூகுள் தளத்தில் தங்கள் இமெயில் அக்கவுண்ட்களை வைத்து இயக்கி வருகின்றனர்.
இது இலவசம் என்பதால் இந்த சேவை யை எந்த நேரமும் நிறுத்த கூகுள் நிறுவனத்திற்கு சுதந்திரம் உண்டு. கூகுள் நிறுவனத்திற்கு போட்டியாக உள்ள மற்ற நிறுவனங்கள் கூகுள் சர்வரை முடக்கிவிட்டால் என்ன செய்வது? ஏன், கூகுள் சர்வரிலேயே பிரச்சினை ஏற் பட்டு அது முடங்கிப் போய் நம் அக்கவுண்ட்கள் எல்லாம் காணாமல் போய்விட் டால்..?
நாம் கூகுள் சர்வரில் சேர்த்துவைத்த நம் மெயில்கள், அதன் இணைப்புகள் எல்லாம் காணாமல் போய்விடுமே. இப்போதே பலர் தங்கள் பைல்களைப் பத்திரமாகச் சேமித்து வைக்க தங்கள் அக்கவுண்ட்களுக்கு அட்டாச் செய்து அனுப்பி கூகுள் சர்வரில் வைத்துக் கொள்கிறார்கள்.
கம்பெனி ரகசிய ஒப்பந்தங்கள், கணக்கு வழக்குகள், பெர்சனல் கடிதங்கள் என கூகுள் சர்வரில் பலவகையான ரகசிய ஆவணங்கள் காக்கப்பட்டு வருகின்றன. இவை எல்லாம் சர்வர் இயங்காமல் போனால் நமக்குத்தானே நஷ்டம். அப்படியானால் என்ன செய்யலாம் என்கிறீர்களா?

கூகுள் மெயில்களை பேக்கப் எடுத்து உங்கள் சர்வரில் சேவ் செய்துவைக்க என ஒரு புரோகிராம் பைல் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.
இதனை முதலில் டவுண்லோட் செய்து பின் இன்ஸ்டால் செய்திடவும்.இன்ஸ்டால் செய்த பின்னர் புரோகிராம் லிஸ்ட்டில் இது இருக்கும் இடத்தைக் கண்டறிந்து இயக்கவும். கிடைக்கும் விண்டோவில் Gmail Login என்றுள்ள இடத்தில் கிளிக் செய்து அங்கு உங்கள் ஜிமெயில் முகவரியினைத் தரவும். கீழே பாஸ்வேர்ட் கேட்கும் இடத்தில் பாஸ்வேர்டைக் கொடுக்கவும். இதன் கீழே உங்களுடைய அஞ்சல்களை எங்கு சேவ் செய்திட முடிவெடுத்திருக்கிறீர்களோ அதைச் சுட்டிக் காட்டவும்.
அதற்கும் கீழாக எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரையில் உள்ள மெயில்களை சேவ் செய்வதற்கு தேதிகளை அமைக்கவும். உடன் நீங்கள் ஏற்கனவே சேவ் செய்வதற் கென குறியிடப்பட்ட டைரக்டரியில் இந்த மெயில்கள் அனைத்தும் சேவ் செய்யப்படும். நாட்களின் எண்ணிக்கை, மெயில்களின் அளவு ஆகியவை பொறுத்து இவை டவுண்லோட் ஆகும் கால நேரம் வேறுபடும்.
பேக் அப் ஆகும் போது இன்டர்நெட் இணைப்பு அறுந்து போனால், மீண்டும் இனைப்பு கிடைக்கும்போது ஏற்கனவே எதுவரை மெயில்கள் டவுண்லோட் செய்யப்பட்டதோ அந்த இடத்திலிருந்து மிச்ச மெயில்கள் பேக் அப் செய்யப்படும்.
கீழுள்ள ஏதாவது ஒரு முகவரியிலிருந்து தரவிறக்கி கொள்ளுங்கள்.
1.Softpedia : இங்கே கிளிக் செய்யவும்
2.Brothersoft : இங்கே கிளிக் செய்யவும்
3.Uptodown :இங்கே கிளிக் செய்யவும்
4.Google Solutions : இங்கே கிளிக் செய்யவும்
5.Slunecnice.cz : இங்கே கிளிக் செய்யவும்
அருமை சகோதரா.. நேற்றே படித்தேன்.. இன்று தான் நேரம் கிடைத்தது..
ReplyDeleteதொடர்ந்து பயனுள்ள பதிவுகள் படைக்கவும்..