மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> மனைவியிடம் மாட்டினாரா பிரபுதேவா ?

இது எல்லாம் டூப்பு பிரபுதேவா தான் டாப்பு

லவ் பண்ணி கல்யாணம் செய்து கொண்ட நிறைய சினிமா ஜோடிகளுக்கு இப்போதைய உடனடி தேவை, நாடோடிகள் க்ளைமாக்ஸ்தான்

போலிருக்கிறது. ஒரே ஃபிளைட்டில் ஹனிமூனுக்கு போகிற அநேக சினிமா ஜோடிகள், திரும்பி வரும்போது வெவ்வேறு ஃபிளைட்டில் வருவது நம்ம கோடம்பாக்கத்தில்தான்.

பிரகாஷ்ராஜ்-லலிதகுமாரி, ரமலத்-பிரபுதேவா காதல் திருமணம்தான் இப்போது டாப் 10 பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கிறது. நயன்தாராவுடன் லவ். கல்யாணமே முடிந்துவிட்டது என்றெல்லாம் கிசுகிசுக்கப்பட்டாலும், பிரபுதேவாவை விடாமல் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறாராம் ரமலத். இதற்கு பிரபுதேவாவின் அப்பா டான்ஸ் மாஸ்டர் சுந்தரமும் சப்போர்ட் என்கிறது இன்னொரு தகவல்.

கடந்த வாரம் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் பிரபுதேவா. நிர்வாகத்திடம் சொல்லி, “அப்படியே நயன்தாராவையும் கூப்பிடுங்களேன்” என்றாராம். சேனல் தரப்பிலிருந்து அழைப்பு போனது. வரவும் தயாரானார் நயன்தாரா. எப்படியோ விஷயம் ரமலத்துக்கு தெரியவர, பிரபுதேவா கிளம்பும்போது “நானும் வரேன்” என்று கிளம்பினாராம் ரமலத். அவ்வளவுதான். பயங்கர அதிர்ச்சி பிரபுதேவாவுக்கு.

நிகழ்ச்சிக்கு வர வேண்டாம் என்று நயன்தாராவுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி எஸ்கேப் ஆனாராம் பிரச்சனையிலிருந்து! உஸ்...அப்பாடி!
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.