எனது கால்ஷீட்டை தனுஷ் படக் குழுவினர் வீணடித்து விட்டார்கள்.
அவர்கள் படத்தில் இனி எப்படி நான் நடிக்க முடியும் என்கிறார் நடிகை த்ரிஷா.
ஆடுகளம் படத்திலிருந்து த்ரிஷா விலகுவதாக சில தினங்களுக்கு முன் செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது தனது விலகலுக்கான காரணம் என்னவென்பதை த்ரிஷாவே வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
இந்தப்படத்துக்காக த்ரிஷா கொடுத்த கால்ஷீட்டில் 12 நாட்களை மட்டுமே பயன்படுத்தினார்களாம் ஆடுகளம் குழுவினர். அதன்பிறகு படப்பிடிப்பு நடக்கவே இல்லையாம். இதற்குள் த்ரிஷா இந்திப் படத்தில் கமிட் ஆகிவிட்டார்.
இன்னொரு பக்கம், அவர் ஏற்கெனவே ஒப்புக் கொண்ட தெலுங்குப் படங்கள் மற்றும் சிம்புவுடன் நடிக்கும் தமிழ்ப் படம் விண்ணைத்தாண்டி வருவாயாவையும் முடிக்க வேண்டிய கட்டாயம்.
"அக்டோபர் மாதம் இந்திப் படம் முடிவதற்குள் மற்ற அனைத்துப் படங்களையும் முடித்தாக வேண்டும் என்பதால் ஆடுகளம் படத்தில் நடிப்பது குறித்து யோசித்து வந்தேன். இனி இந்தப் படத்தைச் செய்ய முடியுமா என்பது சந்தேகமே. மற்றபடு அவர்களுடன் எனக்கு தனிப்பட்ட பிரச்சினை ஏதுமில்லை", என்கிறார் த்ரிஷா.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.