மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ரஜினியை திருமணத்திற்கு வரக்கூடாது என்று தடுத்த நடிகர்!

பைட் மாஸ்டரிடம் எடுபிடி வேலை பார்த்துக்கொண்டிருந்த ராகவாலாரன்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடன அசைவுகளை வெளிப்படுத்திக்கொண்டிருந்திருக்கிறார். நடன அசைவுகளிலும், பொதுவாகவே அவரது மேனரிசங்களில் ரஜினியின் ஸ்டைல் இருந்திருக்கிறது.

இதைக்கவனித்துவிட்ட ரஜினி ஷூட்டிங் முடிந்து காரில் கிளம்பும்போது லாரன்ஸிடம் நாளைக்கு வீட்டில் வந்து என்னைப்பாரு என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
வீட்டுக்குப்போய் பார்த்ததும் உனக்கு திறமை இருக்கு..நல்ல எதிர்காலம் இருக்கு. அதை வீணடித்துக்கொள்ளாதே என்று நடன இயக்குநரிடம் உதவியாளராக சேர்த்துவிட்டார்.அதிலிருந்து அவர் நடன இயக்குநராகி, நடிகரும் ஆகிவிட்டார்.

எடுபிடியாக இருந்த தன்னை புகழ் ஏணியில் ஏத்திவிட்ட ரஜினியிடம் சொல்லிவிட்டுத்தான் இன்றைக்கும் எந்த ஒரு காரியத்தையும் செய்துவருகிறார் லாரன்ஸ்.

இந்நிலையில் லாரன்ஸ் தம்பி காதல்விவகாரம் ஏடாகூடாமாக இருக்க, கல்யாணமும் ஏடாகூடமாக ரகசியமாக நடந்து முடிந்திருக்கிறதாம்.
தனது ஒவ்வொரு அசைவையும் அக்கறையுடன் கவனித்து வரும் ரஜினியிடம் சொல்லாமல் திருமணம் செய்யக்கூடாது என்று ரஜினிக்கு போன் போட்டாராம் லாரன்ஸ்.

ரஜினியிடம் தம்பியின் காதல், ரகசிய கல்யாணத்தை சொன்னதுமே அதனாலென்ன நான் வருகிறேன் எப்போ..எங்கே..என்று கேட்டாராம் ரஜினி. ஆனால் லாரன்ஸோ, ஸார்..நீங்க இந்த கல்யாணத்திற்கு வரனுமென்று உங்ககிட்ட சொல்லல..அதே நேரத்துல உங்ககிட்ட சொல்லாம இருக்கவும் முடியல. அதனாலதான் சொன்னேன்.

இது ரகசிய கல்யாணம்..கொஞ்சம் விவகாரமான காதல் கல்யாணம். அதனால் நீங்க வரவேண்டாம். உங்க இமேஜ் பாதிக்கும் என்று சொன்னாராம் லாரன்ஸ்.
‘இட்ஸ் ஓகே’ என்று ரஜினியும் போனை வைத்துவிட்டாராம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.