விஜய் தனது பிறந்த நாளில் கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனும் பேட்டியின் மூலம் அதை உறுதிப்படுத்தினார்.
ஆனால், விஜய் தனது பிறந்த நாளன்று இலவச மருத்துவ முகாம், இலவச கம்ப்யூட்டர் சென்டர் திறப்பு விழா என்று ஏகப்பட்ட கண் துடைப்புகளுக்கு பிறகு மைக் பிடித்தார்.
அப்போது, ‘’எனது ரசிகர்கள் எல்லோரும் நான் கட்சி ஆரம்பிப்பதை விரும்புகிறார்கள். அவர்கள் இப்போதே தொண்டர்கள் ஆகிவிட்டார்கள். அவர்கள் விருப்பத்தை நானும் ஏற்கிறேன்.
இப்போதைக்கு எனது ரசிகர் மன்றம் மக்கள் இயக்கமாக செயல்பட துவங்கும். நான் மக்களுக்காக வீதியில் இறங்கி போராடுவேன்(?), என்றெல்லாம் அள்ளிவிட்டவர், கடைசியில் ரஜினி பாணிக்கு வந்தார்.
எப்படி வருவேன் என்று தெரியும் ஆனால் எப்ப வருவேன் என்று தெரியாது என்பது மாதிரி.......அரசியல் கட்சி தொடங்குவேன். ஆனால் எப்போது என்று சொல்ல முடியாது என்று பேசினார்.
வருவேன் ஆனா வரமாட்டேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் ரஜினிக்கு போட்டியாக வந்துட்டாரய்யா விஜய் என்று நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் தோ.. நானும் வந்துட்டேன் என்கிறார் அஜீத்.
என் வேளையை நான் பார்க்கிறேன்..உங்க வேளையை நீங்க பாருங்க...எதற்கு வந்து என்னைப் பார்க்கனுமென்று நிற்கிறீங்க என்று ரசிகர்களிடம் எரிந்துவிழும் அஜீத், தனது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைக்க ஆரம்பித்துவிட்டார்.
தல..உங்களுக்கு மட்டும் என்ன குறைச்சல். நாமளும் கட்சி ஆரம்பிக்கனும் என்று அடம்பிடிக்கிறார்களாம், இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே தங்களை ரணமாக்கிக்கொள்ளும் ரசிகர்கள்.
அஜீத்தே இனி ரசிகர் மன்றத்தினரை நேரில் பார்த்து ஆலோசனை செய்யப்போகிறாராம். அதுமட்டுமல்ல, iyyakkam1971@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு ரசிகர்கள் மின்னஞ்சல் அனுப்பலாம். அதில் தங்களது விருப்பங்கள், கேள்விகள், கருத்துக்கள், எண்ணங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தலாம்.
என் நேரடிக்கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த இயக்கத்தின் மூலம் அன்றாடம் உங்களுடன் பேசிக்கொண்டிருப்பேன் மின்னஞ்சல் மூலம் என்று அஜீத் சொல்லியிருக்கிறாராம்.
ரஜினி பாணியில் விஜய்யும், அஜீத்தும் ரசிகர்களை தக்கவைத்துக்கொள்ள மக்கள் மன்றம்- இயக்கம் என்று கிளம்பிவிட்டார்கள் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.