அடுத்த ஆட்டத்துக்கு ஷங்கர் தயார். ஆனால் ஆட்ட நாயகன் யார்?
நண்பன் என்ற ரிலாக்ஸ் படத்துக்குப் பிறகு மீண்டும் ஷங்கர் தனது ட்ரேட் மார்க் பிரமாண்டத்துடன் வருகிறார். பிள்ளையார் சுழி போட்டு கதையை எழுதத் தொடங்கிவிட்டார்.
ஷங்கர் படத்தில் அனேகமாக ஹீரோ யார் என்பது முதலிலேயே தெரிந்துவிடும். ஆனால் இம்முறை படுபயங்கர குழப்பம். கமல், ரஜினி, விக்ரம், அஜீத் என்று பல பெயர்கள் உச்சரிக்கப்படுகின்றன. ஆனால் உதட்டில் உட்காரப் போவது எந்தப் பெயர்?
கண்டிப்பாக கமல்தான் என்று ஆஸ்கர் ஃபிலிம்ஸ் வட்டாரத்தில் சலசலப்பு கேட்கிறது. என்றாலும் உலக நாயகன் விஷயமில்லையா... பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.