விளம்பர படங்களுக்கென்று தனி நடிகைகள் இருந்த காலம் மாறி, சினிமா நடிகைகளை பயன்படுத்தும் வழக்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. அடிக்கடி தொலைக்காட்சியில் இடம் பெறும் வாய்ப்பு, குறைந்த நாள் வேலை, தொடர்ந்து டி.வியில் ஒளிபரப்பாவதால் மக்கள் மனதில் தங்கள் முகம் பதியும் என்ற நிலை இவற்றால் ஆரம்ப காலத்தில் நடிகைகள் விளம்பர படங்களில் நடிக்கத் தொடங்கினார்கள்.
இதனால் அவர்களுக்கு ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை கூடுதல் வருமானமும் கிடைத்தது. ஆனால் இப்போது விளம்பர படங்களில் நடிப்பது வருமானத்தை பெருக்கும் வழியாக மாறியிருக்கிறது. இதனால் முன்னணியில் இருக்கும் நடிகைகள் காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளும் வகையில் அதிக விளம்பர படங்களில் நடித்து வருமானத்தை பெருக்க ஆர்வமாக இருக்கிறார்கள்.
சினிமாவில் நடிகர்கள் மட்டுமே கோடி கணக்கில் சம்பளம் பெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு முதல் நடிகைகளும் கோடிக் கணக்கில் சம்பளம் பெறுகிறார்கள். அசின், நயன்தாரா, இலியானா ஆகியோர் தற்போது கோடியை தாண்டி சம்பளம் பெறும் தமிழ் நடிகைகள்.
திரைப்படங்களில் நடிக்க சம்பளத்தை உயர்த்தியதைப் போலவே விளம்பர படங்களில் நடிக்கவும் தற்போது சம்பளத்தை உயர்த்தி விட்டார்கள். ஒரு விளம்பர படத்தில் 3 நாட்கள் வரை நடித்து கொடுக்க ஸ்ரேயா, சினேகா ஆகியோர் ரூ.20 லட்சம் வரையும், பிரியாமணி, லட்சுமிராய், மீரா ஜாஸ்மின் ஆகியோர் ரூ. 10 லட்சத்திலிருந்து 15 லட்சம் வரையும் கார்த்திகா, கீரத், சமிக்ஷா, சந்தியா, சாயாசிங், ஜோதிர்மயி போன்றவர்கள் ரூ. 3 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரையிலும் சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது.
விளம்பரம் தயாரிக்கும் நிறுவனத்தின் மதிப்பு, நடிகையின் தற்போதை மார்க்கெட், சினிமாவுக்கு வாங்கும் சம்பளம், இவற்றை பொறுத்தே சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. இதில் நயன்தாரவுக்கு, ஜவுளி கடை விளம்பரம் ஒன்றில் நடிக்க, 2 நாள் ஷ¨ட்டிங்கிற்கு ரூ. 50 லட்சம் வரை தர முன்வந்தார்கள்.ஆனால், மறுத்துவிட்டார் நயன்தாரா.
இரண்டு மற்றும் மூன்றாவது வரிசையில் உள்ள நடிகைகள் மட்டுமே தனி விளம்பரங்களில் நடிக்கிறார்கள். முன்னணியில் இருக்கும் நடிகைகள் தேசிய அளவிலான நிறுவனங்களின் விளம்பர அம்பாசிடர்களாக இருக்கவே விரும்புகிறார்கள். ஒரு வருடம் விளம்பர அம்பாசிடராக இருக்க ரூ. 75 லட்சம் முதல் ஒரு கோடி வரை சம்பளம் பெறுகிறார்கள். இந்த காலகட்டத்தில் அவர்கள் வேறெந்த விளம்பர படத்திலும் நடிக்க மாட்டார்கள்.
வருடத்துக்கு மூன்று அல்லது நான்கு முறை அவர்களை பயன்படுத்தி விளம்பர படங்களோ, புகைப்படங்களோ எடுத்துக் கொள்ளலாம். அறிமுக விழாக்களில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள வைக்கலாம் என்பது மாதிரியான விதிமுறைகளை வகுத்துக் கொள்கிறார்கள்.
அசின், த்ரிஷா, தமன்னா, சினேகா ஆகியோர் விளம்பர அம்பாசிடர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களது வருட சம்பளம் அசின் ரூ. 1.25 கோடி, த்ரிஷா, தமன்னா ரூ. 75 லட்சம் என்கிறார்கள்.
அதாவது வருடத்தில் மூன்று நாட்கள் விளம்பரங்களின் ஷ¨ட்டிங்கிற்காக கலந்து கொள்வார்கள். தங்களது சினிமா சம்பளத்துக்கு ஏற்ப அவ்வப்போது அம்பாசிடர்களுக்கான சம்பளத்தையும் உயர்த்திக் கொள்வார்கள்.
விளம்பர உலகத்தை நடிகைகளே ஆக்கிரமித்துக் கொள்வதால் மாடல்கள் விளம்பர படங்கள் பக்கம் வருவது குறைந்து வருகிறது.
முன்பு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சம்பளம் பெற்ற மாடல்கள் தற்போது ரூ.25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சம்பளம் கேட்பதாகவும் கூறப்படுகிறது. சினிமாவில் நடிகர்களுக்கு சம்பளம் அதிகம். விளம்பரத்தை பொறுத்தவரை நடிகைகளுக்கே சம்பளம் அதிகம்!
Subscribe to:
Post Comments
(
Atom
)
உங்கள் தகவல் அனைத்தும் அருமை , உங்கள் blog ஐ bookbark செய்துள்ளேன்
ReplyDeleteநன்றி
ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்