மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


திருமலை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நான்கு மாணவிகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில்‏.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 05:00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நான்கு மாணவிகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு நகர் பகுதியிலிருந்து வந்த மோட்டார் சைக்களுடன் பிரத்தியோக வகுப்புக்கு சென்று விட்டு வீடு திரும்பும் வழியில்  மாணவிகள் மஞ்சள் கோட்டில் வீதியை கடக்கும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கள் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக நான்கு பாடசாலை மாணவிகளும்  காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டத்துடன் அதில் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட  பொலிசார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.