அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இரண்டாம் நாள் அமர்வு இன்று 26 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலுள்ள டேர்பா மண்டபத்தில் இடம்பெற்றது.
மேற்படி இரண்டாம் நாள் அமர்வில் மட்டக்களப்பு பல்சமய கருத்தாடல் மையம், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ்,முஸ்லிம்,கிறிஸ்வத மதங்களைச் சேர்ந்த பொது அமைப்புக்கள்,மாணவர் இயக்கங்கள்,பொது மக்கள் ,புத்திஜீவிகள்,இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டு அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பான முன்மொழிவுகளை வழங்கினர்.
குறித்த அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பான முன்மொழிவுகளை அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் பிரதிநதிகளான என்.செல்வகுமாரன்,எஸ்.தவராஜா, எஸ்.சீ.சீ.இளங்கோவன்,கலாநிதி ஹரினி அமரசூரிய,கலாநிதி குமுடு குசும் குமார ஆகியோர் பதிவு செய்தனர்.
அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பில் மக்களிடமிருந்து வாய்மொழி மற்றும் எழுத்து மூல சமர்ப்பணங்களை பெறுவது அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைக்குழுவின் செயற்பாடாகும்.
உத்தேச அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை மக்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரத்துடன் இருபது உறுப்பினர்களை கொண்டதாக இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
பொது மக்களின் கருத்துக்களை அறிந்து இந்த குழு அமைச்சரவைக்கு அறிக்கையொன்றினையும், சிபாரிசுகளையும் தயாரித்து அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான அமைச்சரவை உப குழுவிற்கு சமரப்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-பழுலுல்லாஹ் பர்ஹான்-
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.