அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்களின் யோசனைகள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்துக்கான முதல் நாள் அமர்வு இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்களின் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான முதல் நாள் அமர்வு இன்று வியாழக்கிழமை 25ஆம் திகதி குழுவின் தலைவர் நாகலிங்கம் செல்வக்குமார் தலைமையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இன்று காலை 09.30 மணியளவில் ஆரம்பமான அமர்வில் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் , மாவட்ட மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், கல்விமான்கள், சமய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் தமது யோசனைகளை முன்வைத்தனர்.
இதன் போது இலங்கை மதசார்பற்ற நாடாக இருத்தல் வேண்டும், இலங்கையில் அனைவரும் தேசிய இனமாக மாற்றப்பட வேண்டும், நாட்டின் தேசிய கொடியில் உள்ள படிமங்கள் ஆக்கிரமைப்பையோ, வன்முறைகளையோ அடையாள படுத்தாக வகையில் தேசிய கொடி அமைய வேண்டும், இலங்கை அரசியல் யாப்பில் பெண்களின் அடிப்படை உரிமைகள் தனிபகுதியாக அமைய வேண்டும், மலையக மக்களின் நிலா உரிமைகள் அரசியல் அமைப்பில் உறுதி படுத்தல் வேண்டும், அரசியல் யாப்பில் விகிதாசார தேர்தல் முறையில் இருத்த வேண்டும் என பல யோசனைகள் இன்று இடம்பெற்று வருகின்ற அரசியலமைப்பு சீர்திருத்த அமைப்பில் முன்வைக்கப்பட்டன.
அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்களின் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இரண்டாவது நாள் அமர்வு 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
(லியோ)
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.