
இந்நிலையில் வர்மாவின் படம் சுமாராக அமைந்தால்...? ரத்த சரித்திரம் படத்தை அப்படிதான் போட்டுத் தாக்கிவிட்டார்கள்.
ஆந்திராவைச் சேர்ந்த பரிட்டால ரவியை பற்றிய கதை என்பதாலும், விவேக் ஓபராய் என்ற அனேகமாக யாருக்குமே பிடிக்காத நடிகர் நடித்திருப்பதாலும் சென்ற மாதம் 22ஆம் தேதி வெளியான ரத்த சரித்திரம் முதல் பாகம் படத்துக்கு எந்த வரவேற்பும் இல்லை. முதல் நாள் மும்பை மல்டிஃபிளிக்ஸ்களில் படம் பார்த்தவர்களின் எண்ணிக்கை ஐம்பதுக்கும் குறைவு என்கின்றன மும்பை பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்கள்.
இதன் காரணமாக நவம்பர் 19 ஆம் தேதி வெளியிடுவதாக இருந்த ரத்த சரித்திரம் இரண்டாம் பாகத்தை மேலும் சில வாரங்களுக்கு தள்ளி வைக்கலாமா என யோசித்து வருகிறார்கள். அதேபோல் தமிழில் 5ஆம் தேதி வெளியாவதாக இருந்த இந்தப் படம் நவம்பர் இறுதிக்கு தள்ளிப் போயுள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.