யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் வாழ்வாதாரத்தை விருத்தி செய்யும் நோக்குடன் புனர்வாழ்வு அதிகாரசபையினால் சுயதொழில் ஊக்குவிப்பு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு பயிற்சிகள் வழங்கும் கருத்தரங்கு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக விதாதா வள நிலையத்தில் புனர்வாழ்வு அதிகாரசபை நிறைவேற்று பணிப்பாளர் என்.புவனேந்திரன் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பயங்கரவாத வன்செயல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்களிளினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் வாழ்வாதாரத்தை விருத்தி செய்வதற்காக புனர்வாழ்வு அதிகாரசபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மெழுகுதிரி உற்பத்தி சம்பந்தமான பயிற்சி வழங்கும் கருத்தரங்கில் 20 குடும்ப பெண்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா, மாவட்ட செயலக புனர்வாழ்வு அதிகாரசபை உதவியாளர் இ.தினேஸ்குமார், மண்முனை வடக்கு விதாதா வள நிலைய விஞ்ஞான தொழில் நுட்ப உத்தியோகத்தர் திருமதி என்.வளர்மதி மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பயங்கரவாத வன்செயல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்களிளினால் பாதிக்கப்பட்ட குடும்ப பெண்கள் கலந்துகொண்டனர்.
(லியோ)
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.