பல உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் அணு ஆயுதங்களை தயாரித்து பரிசோதிக்கும் வடகொரியா அரசு ஒரு புதுவகையான மதுபானத்தை கண்டுபிடித்திருப்பதாக அறிவித்திருப்பது மதுபான பிரியர்களின் ஆவலை தூண்டியது மட்டுமல்லாமல் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த மதுபானத்தை குடித்தால் அடுத்தநாள் ஏற்படும் தலைவலி, மயக்கம் உள்ளிட்ட பக்க விளைவுகள் ( Hangover ) ஏற்படாது என வடகொரியா அடித்துக் கூறுகிறது. அதிகளவில் மருத்துவ குணங்கள் கொண்ட ஜிங்செங் மூலிகை, ஈரமில்லாத அரிசி ஆகியவற்றை கொண்டு இந்த ‘கோர்யோ’ ( Koryo ) மதுபானம் தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு வடகொரியா விஞ்ஞானிகள் ‘கும்டாங்-2’ என்ற ஊசி மருந்தை கண்டுபிடித்திருப்பதாகவும், அது எய்ட்ஸ், புற்றுநோய், போதைப்பொருள் அடிமை தன்மை, இபோலா உள்ளிட்ட பாரிய நோய்களை குணமாக்கும் என கூறியதும், இங்கு குறிப்பிடத்தக்கது.
-A.D.ஷான்-









0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.