அவன் இவன் படம் முடிந்ததும் தனது அடுத்தப் படத்தை தொடங்கினார் பாலா. அதர்வா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படம் மலையாள நாவல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. அந்த நாவலின் பெயரையே - எரியும் தணல் - படத்துக்கு பாலா வைத்திருப்பதாகச் சொல்லப்பட்டது.
இந்த பாஸிடிவ் அறிகுறிகளை வைத்து பாலா திருந்திவிட்டதாக ஒரு நிம்மதி பெருமூச்சு கோடம்பாக்கத்தில் நிலவியது. சுடுகாடு, வெட்டியான், காசி, அகோரி, அவன், இவன் என்று எல்லா அழுக்கையும் எரியும் தணல் எரித்துவிடும் என்ற நம்பிக்கையில் எழுந்த பெருமூச்சு. ஆனால் பாலா பாலாதான், அகோரி அகோரிதான்.
எரியும் தணல் என்று படத்துக்கு பெயர் வைத்தது நமது கற்பனை போலிருக்கிறது. பாலா அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கும் பெயர், பரதேசி. அய்யகோ... மீண்டும் ஒரு அகோரி படமா?
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.