மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> அ‌ஜ்மல் நட்சத்திர பேட்டி - ஸ்கி‌ரிப்ட்தான் முக்கியம்.

அஞ்சாதேயில் அறிமுகமான அ‌ஜ்மல் இப்போது அனைவரும் அறிந்த நடிகர். கோ அவரது சினிமா க்ராஃபை உயர்த்தியிருக்கிறது. தெலுங்கிலும் இந்தப் படம் அழுத்தமான அறிமுகத்தை அ‌ஜ்மலுக்கு தந்திருக்கிறது. அவருடனான உரையாடலிலிருந்து...

ஒரு மருத்துவரான நீங்கள் சினிமாவை தேர்வு செய்தது எப்படி?

சின்ன வயசிலிருந்தே நடிகராக வேண்டுமென்பதுதான் என்னுடைய ஆசையாக இருந்தது. ஆனால் அப்பாவுக்கு நான் டாக்டராகவோ, இன்‌ஜினியராகவோ ஆகணுங்கிற பிடிவாதம் இருந்தது. என்னுடைய கசின்ஸ் எல்லோருமே வெல் எஜுகேட்டட். டாக்டர், இன்‌ஜினியர்னு பெ‌ரிய பொசிஸன்ல இருக்காங்க. அப்பாவோட ஆசையை நிறைவேற்ற நான் டாக்டருக்குப் படித்தேன். இப்போ என் விருப்பத்துக்காக சினிமாவில் நடிக்கிறேன்.

கேரளாவில் நிறைய மருத்துவக் கல்லூரிகள் இருக்கும் போது எதற்கு உக்ரைன் நாட்டில் எம்பிபிஎஸ் படித்தீர்கள்?

என்னுடைய இன்டர்மீடியட்டை - ப்ளஸ் டூ - முடித்த நேரம் ஆக்சிடெண்டில் கால் எலும்பு முறிஞ்சிடுச்சி. அதனால் கேரளாவில் அப்ளை பண்ண முடியாமப் போச்சு. அந்த நேரத்தில் என்னுடைய ஃப்ரெண்ட் உக்ரைன் நாட்டிலுள்ள மெடிக்கல் காலேஜுக்கு அப்ளை பண்ணியிருந்தான். ச‌ரி, நாமும் அங்கே அப்ளை பண்ணலாம்னு பண்ணினேன். சீட் கிடைச்சிடுச்சி.

மெடிக்கல் படிப்பு நடிப்புக்கு தடையா இருந்திச்சா?

இல்லை. படிக்கிறப்போ நான் மிஸ்டர் ஹேண்ட்ஸம் ஃபோஸாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். நிறைய விளம்பரங்களில் நடிச்சேன். இந்தியாவில் ரேமண்ட் விளம்பரத்தில் என்னை நீங்க பார்த்திருக்கலாம். மாடலிங்கும் செய்தேன்.

சினிமாவுக்கு எப்படி வந்தீங்க?

படிப்பு முடிந்த பிறகு கொஞ்ச காலம் மும்பையில் நடிக்க ட்ரை பண்ணினேன். சான்ஸ் ‌கிடைக்கலை. மும்பையிலிருந்து கேரளா வரும்போது ஃபிளைட்டில் புரொடியூசர் ஒருத்தரை மீட் பண்ணுனேன். அவர் என்னுடைய ஃபோட்டோஸை வாங்கிக் கிட்டார். கேரளா வந்த கொஞ்ச நாள்ல இயக்குனர் உதயன் அனந்தனிடமிருந்து ஃபோன் வந்தது. அவரோட படத்தில் அறிமுகமானேன்.

மலையாள சினிமா அதன் நிறத்தை இழந்துவிட்டதாகவும், அதனால் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் நீங்கள் ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்திருந்தீர்கள்...?

உண்மைதான். ஒருகாலத்தில் ப‌ரிசோதனை முயற்சிப் படங்கள் மலையாளத்தில் தொடர்ந்து எடுக்கப்பட்டு வந்தன. இப்போது கமர்ஷியலுக்கு அவர்கள் மாறிவிட்டார்கள். தமிழில்தான் இப்போது வெரைட்டியான படங்கள் வருகின்றன.

மிஷ்கின், கே.வி.ஆனந்த் என்ற இருவேறு இயக்குனர்களுடன் பணிபு‌ரிந்திருக்கிறீர்கள்...?

மிஷ்கின் என்னுடைய பிக் பிரதர். நடிப்பு பற்றி பல விஷயங்கள் எனக்கு சொல்லித் தந்திருக்கிறார். கே.வி.ஆனந்த் பெர்பெக்சனிஸ்ட். தான் விரும்பியது கிடைக்கும் வரை பொறுமையாக சொல்லித் தருவார். அவரைப் போல் ஒரு பொறுமைசாலியை நான் பார்த்தில்லை.

பிரசன்னா, நரேன், ‌ஜீவா... இவர்கள் மூவ‌ரில் யாருடன் மீண்டும் இணைந்து நடிக்க விரும்புறீங்க?

பிரசன்னாவும், ‌ஜீவாவும் என்னை விட சீனியர்ஸ். வொர்க்கிங் ஸ்பாட்டில் எனக்கு ‌நிறைய சொல்லித் தந்திருக்காங்க. நரேன் என்னுடைய ஃப்ரெண்ட். ஆனால் ஸ்கி‌ரிப்ட் என்ன கேட்குதே அதன்படி நடிக்கதான் எனக்கு விருப்பம். என்னுடைய விருப்பத்தைவிட ஸ்கி‌ரிப்ட்தான் முக்கியம்.

அடுத்து என்னென்ன படங்களில் நடிக்கிறீங்க?

கதிர்வேல் படப்பிடிப்பு இப்போது முடிஞ்சிடுச்சி. அடுத்து கருப்பம்பட்டியில் இரண்டு வேடங்களில் நடிக்கிறேன். பிரபு என்பவர் இயக்குகிறார். இதில் ஃபிரெஞச் நாட்டைச் சேர்ந்தவர் எனக்கு ஜோடியாக நடிக்கிறார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.