ரஹ்மானின் கால்ஷீட்டுக்காக மற்றவர்கள் மாதக்கணக்கில் காத்திருக்கிறார்கள். ரஜினி ஸ்டைலே தனி. இதோ வருகிறேன் என்று செய்தி அனுப்பிவிட்டு பின்னாலேயே கிளம்பி வருவார். எத்தனை பிஸி என்றாலும் ரஹ்மானால் மறுக்க முடியாது. இதுவரை மறுத்ததுமில்லை.
ராணா படத்தைப் பொறுத்தவரை நான்கு டியூன்கள் ஏற்கனவே போட்டு வைத்திருக்கிறார் ரஹ்மான். பொதுவாக படப்பிடிப்பு தொடங்கி பாதி முடிந்த பிறகுதான் கம்போஸிங்கிலேயே உட்கார்வார். ராணாவுக்கு அப்படியே நேரெதிர். நான்கு டியூன்கள் தயார். ரஜினி ஓகே சொன்னால் அடுத்த டியூனுக்கு போய்விடுவார் இசைப்புயல்.
ரஜினி எல்லா வகையிலும் தனக்கு ஸ்பெஷல் என்றும், அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன் என்றும் தெரிவித்திருக்கிறார் ரஹ்மான்.
தடைபட்டு நிற்கும் ராணாவுக்கு இசைப்புயலின் இந்த வேகம் நல்ல சகுனம் என்று மகிழந்து போயிருக்கிறது ராணா யூனிட்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.