சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இன்று நாடளாவிய ரீதியில் சிறுவர்களை கௌரவிக்கும் பல விசேட நிகழ்வுகள் நடைபெற்றன . இதன் கீழ் இன்று மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் சிறுவர்களை கௌரவிக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வின் போது அண்மைகாலமாக இலங்கையில் இடம்பெற்று வருகின்ற சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகம் , பாலியல் வன்முறைகள் தொடர்பாக சமூக மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் இப்பாடசாலைகளில் மாணவர்களினால் பல விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டன .
இதன் ஒரு நிகழ்வாக மட்டக்களப்பு புதூர் விபுலானந்தா வித்தியாலயம் , தன்னாமுனை புனித வளனார் வித்தியாலயம் , மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயம், அமிர்தகழி மெதடிஸ்த பாலர் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் மாணவர்களினால் விழிப்புணர்வு நிகழ்வுகளும் மற்றும் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றது .
இதன் போது மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் யுனிசெப் நிறுவனம் மற்றும் சர்வோதயமும் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி .எஸ் .எம்.சார்ள்ஸின் வழிகாட்டலுக்கு அமைவாக சிறுவர் தினத்தை முன்னிட்டு இன்று மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் விபத்துக்குள்ளான மாணவிக்கு உதவி தொகை வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது .
இன்று நடத்தப்பட்ட சிறுவர் தின கௌரவிப்பு மற்று விழிப்புணர்வு நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்கள் கல்வி அலுவலக அதிகாரிகள் , ஆசிரியர்கள் , மாணவர்களின் பெற்றோர்கள் , சிறுவர் மற்றும் மகளீர் அமைப்புக்களின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
(நியூவற்றி அமிர்தகழி நிருபர்)
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.