Tuesday, November 3, 2009

> பையா தெலுங்கில்

ராம் சரண் தேஜாவை வைத்து தெலுங்கில் அடுத்தப் படத்தை இயக்கப் போவதாக ஏற்கனவே கூறியிருக்கிறார் லிங்குசாமி. அந்தப் படம் வேறு எதுவுமில்லை, கார்த்தியை வைத்து அவர் இயக்கி வரும் பையா படத்தின் ‌‌ரீமேக்.

தமிழின் முன்னணி இயக்குனர்கள் தெலுங்கில் படம் இயக்க ஆர்வம் காட்டுகின்றனர். தெலுங்கில் கிடைக்கும் மெகா சம்பளம் மற்றும் அங்கீகாரமே இதற்கு காரணம்.

சிம்புவை வைத்து விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இயக்கிவிரும் கவுதம், அதே கதையை நாகா சைதன்யாவை வைத்து தெலுங்கில் இயக்குகிறார். அவர் வழியில் தற்போது இயக்கிவிரும் பையாவை தெலுங்கில் ராம் சரண் தேஜாவை வைத்து இயக்கவிருக்கிறார் லிங்குசாமி.

தற்போது ஆரஞ்ச் படத்தில் நடித்துவரும் ராம் சரண் தேஜா அப்படம் முடிந்ததும் லிங்குசாமியின் படத்தில் நடிக்கிறார். ஹீரோயின் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.