மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> நித்யானந்தர்ரிடம் மாட்டாத விஜய்

கதவைத்திற காற்று வரட்டும் என பத்தி‌ரிகையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார் நித்யானந்தர். பக்தர்களில் ஒரு பாவி திறந்த கதவு வழியாக நித்யானந்த‌ரின் அந்தரங்கத்தை படம் பிடித்துவிட்டான். நேற்று வரை பரமஹம்ச நித்யானந்தராக பத்தி‌ரிகைகளில் வலம் வந்தவர் இன்று வெறும் நித்யானந்தனாகிவிட்டார். மனித கடவுளுக்கு நேர்ந்த மகத்தான சோதனை.

நித்யானந்த‌ரின் ரகசிய தோழிகள் பலர் திரையுலகில் இருப்பதாக வாரம் இருமுறை பத்தி‌ரிகைகள் செய்தி சொல்கின்றன. இன்னும் சில வாரங்களுக்கு கவர் ஸ்டோ‌ரிக்கு கவலையில்லை.

சில நாட்களுக்குமுன் நடிகர் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகரனும், ஷோபாவும் திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்த‌ரின் ஆசிரமத்துக்கு சென்றனர். அவர்களுக்கு நித்யானந்தர் நெற்றியில் தீட்சை கொடுத்து அருள்பாலித்தார்.

இந்த செய்தியை வெளியிட்டவர்கள், கிறிஸ்தவரான ஷோபா இங்கு வந்ததைப் பற்றி பக்தி மேலிட நெக்குருகியதுடன், விரைவில் விஜய்யை இங்கு அழைத்துவர அவர்கள் முடிவு செய்திருப்பதாக பக்தி ரசம் பிழிந்தனர்.

இந்த ரசம் மட்டும் உண்மையாகியிருந்தால்... ஐயகோ, அதை மட்டும் கற்பனை செய்யவே முடியவில்லை. நித்யானந்த‌ரின் கவர் ஸ்டோ‌ரிக்குப் பக்கத்தில் விஜய்க்கும் ஒரு பிட் இடம் ஒதுக்கியிருப்பார்கள்.

நல்லவேளை, இளையதளபதி கிரேட் எஸ்கேப்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.